Sunday, June 1, 2008

சென்னையில் இஸ்லாமிய சொற்பொழிவு

இஸ்லாமிய சேவை மையமும் அல்-கவுஸர் கல்விக் கழகமும் இணந்து சென்னை ராணி
சீதை மண்டபத்தில் நடத்திய இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சியில்
ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த முனைவர் தவ்ஃபிக் சவுத்ரி, "21ம் நூற்றாண்டில்
நீங்கள் விரும்பும் மாற்றம் உங்களிலிருந்தே தொடங்க வேண்டும்" என்கிற
தலைப்பில ஓர் அற்புதமான் உரை நிகழ்த்தினார். ஆங்கிலமும், அரபியும் அவர்
நாவில் நர்த்தனம் ஆடின. திருக்குரானிலிருந்தும், நபி மொழியிலிருந்தும்
மேற்கோள்கம் சரமாரியாக வந்து விழுந்தன.

யாரையும் ஏசாமல், திட்டாமல், சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கிளப்பி நம்மைக்
குழப்பாமல், காரண காரியங்களோடு நிகழ்த்தப்பட்ட் ஒரு சொற்பொழிவு
மனதுக்கு நிறைவான் ஒரு மகிழ்வைத் தந்தது.

ஆஸ்த்ரேலியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர் பிறகு படிப்பதையே
தொழிலாகக் கொண்டு பல்வேறு விஷயங்களில் முதன்மையாகத்தேறி
பட்டங்கள் பெற்றிர்ருக்கிறார். என்றாலும் மதினா பல்கலைக் கழகத்தில்
இஸ்லாமிய ஷரியாவில் ஆய்வு நடத்தி சந்து ப்பெற்றதையே பெறுபேறாகக்
கருதுகிறார்.

இவர் நடத்தி வரும் அல்-கவுஸர் கல்விக் காழகம் இஸ்லாம் பற்றிய பல்வேறு
அம்சங்களை பாடத் திட்டமாக வகுத்து ப்ட்டம் மற்றும் பட்டயப் படிப்புக்கு
ஏற்பாடு செய்துள்ளது. இதை நீங்கள் அத்தனையையும் ஒன்றாகப் படித்து பட்டம்
வாங்கலாம். அல்லது இடைவெளி விட்டு ஒவ்வொன்றாகப் படித்து
பட்டயம் வாங்களாம்.

மே 31ம் தேதி மற்றும் ஜூன் முதலாம் தேதிகளில் சென்னை அம்பாசடர் பல்லவா
ஓட்டலில் இஸ்லாமிய ஷரியா பற்றிய வகுப்புகள் நடக்கின்றன.
உணவு மற்றும் பாட உபகரணங்கள் உட்பட நபர் ஒன்றுக்கு ரூபாய் 950/-- நிறையப்
பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.

சிராஜுல் மில்லத் மர்ஹூம் ஆ.க். அப்துஸ்ஸமது அவர்களின் புதல்வி ஜனாபா
ஃபாத்திமா முஸஃபர் ஆற்றிய தமிழ் உரையும் மிக நன்றாக இருந்தது.
அவரது கணவர் முஸஃபர் அஹ்மது தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.்


abjabin@gmail.com