A Quick preparation for RAMZAAN
1. Start reading Quran daily after Salat al-Fajr.
2. Spend some time listening to recitations from the Quran.
3. Train yourself to go bed early so that you can wake up for Salat al-Fajr.
4. Keep yourself in a state of Wudu (Ablution) most of the time.
5. Evaluate yourself daily before going bed.
6. Thank Allah for good deeds, and repent to Him for your mistakes and sins.
7. Start giving Sadaqah daily, no matter how little. Make it a habit like eating and drinking.
8. Find time to pray extras, such as Tahajjud prayers.
9. Spend more time reading Islamic books, especially the Quran, Hadith, and Fiqh.
10. Find time to help others with your wisdom, knowledge and other talents.
11. Try to write articles on Islam for Muslims as well as for non-Muslims.
12. Associate with Muslim scholars / ulama and other pious people so that you may learn from them.
13. Train yourself to do good, render free service to others to seek the pleasure of Allah.
What to avoid
1. Avoid/reduce watching TV/Online Movies etc.; instead spend more time reading the Quran and other Islamic literature.
2. Avoid looking at unlawful pictures, whether magazines, department store catalogs or otherwise.
3. Spend free time in Masajid, Islamic organizations and make that a daily habit.
4. If you smoke, try to reduce daily usage; otherwise Ramadan will be very difficult for you to observe.
5. If you have friends who do not practice the teaching of Islam, try to avoid socializing with them.
6. If you travel a lot on business, try to do more local business, so you can be more closer to your family and community.
7. If you are used to staying up till midnight, try to go to bed earlier, so that you will be able to wake up early for Salat al-Fajr and Tahajjud prayers as well.
To prepare ourselves before the month of Ramadan arrives is far better than waiting till it comes. To prepare ourselves for anything in life is a sign of wisdom and maturity. No one is assured of living one day more; tomorrow may not come. So hurry and benefit from blessings and rewards from Allah.
Remember: "Time is not money or gold; it is life itself and is limited. You must begin to appreciate every moment of your life and always strive to make the best use of it."
A Quick Checklist
1. Make a resolve to win the maximum favor of Allah by performing extra Voluntary prayers (Nawaafil), making frequent Dua and increased remembrance (Dhikr).
2. Try to recite some Holy Quran after every Prayer. In fact if you read 3-4 pages after every Prayer you can easily finish the entire Quran in Ramadan!
3. Study the Tafseer (commentary) every morning.
4. Invite a person you are not very close with or your relatives to your home for Iftaar, at least once a week (Weekend). You will notice the blessings in your relationships!
5. Bring life to your family! Everyday, try to conclude the fast with your family and spend some quality time together to understand each other better.
6. Give gifts on Eid to at least 5 people: 2 to your family members, 2 to your good friends, and 1 to a person whom you love purely for the sake of Allah.
7. Make commitment to join Islamic study circles to learn more about Islam and improve your own life.
8. Donate generously to the Masajid, Islamic organizations, and any where people are in need or oppressed. "Because Ramadan is a month of sharing!"
9. Share month of Ramadan and its teachings of peace and patience with your neighbours.
10. Sleep little, eat little! Make sure you do not defeat the purpose of fasting by over-indulging in food and being lazy.
11. Seek the rare and oft-neglected rewards of the night better than 1000 months (Laylatul-Qadr / Shab-e-Qadr).
12. Weep in private for the forgiveness of your sins: Ramadan is the month of forgiveness and Allah's Mercy! It's never too late.
13. Learn to control your tongue and lower your gaze. Remember the Prophet's (pbuh) warning that lying, backbiting, and a lustful gaze all violate the Ramadan fast!
14. Encourage others to enjoin and love goodness, and to abandon everything that Allah dislikes. Play the role of a Da'ee (one who invites to Allah) with zeal, passion, and sympathy.
15. Experience the joy of Tahajjud prayers late at night and devote yourself purely and fully to Allah in the Itekaaf retreat during the last 10 days of Ramadan
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Tuesday, September 2, 2008
KSU researchers discover lung cancer biomarker

Arab News
http://www.arabnews.com/?page=1§ion=0&article=111897&d=17&m=7&y=2008&pix=kingdom.jpg&category=Kingdom
V. Masilamani
RIYADH: King Saud University yesterday announced the discovery of a new lung cancer biomarker by a team of scientists and students led by V. Masilamani of the College of Science.
KSU Rector Abdullah Al-Othman told reporters at a press briefing that the research team headed by Masilamani would bring international fame to the university.
Cancer biomarkers are certain proteins found highly elevated in blood plasma due to the abnormal metabolic activity of cancer cells. Examining biomarkers can be useful in diagnosing cancer.
Masilamani said using the procedure cancer could be diagnosed by testing 5ml blood and 5ml urine. He added that an expert committee set up by the Indian Council of Medical Research has validated this particular protocol. The procedure can be used to diagnose different kinds of cancer.
"We want to become a world class university for research and development," Al-Othman said, adding that the university would recruit more professionals for its research department in the near future.
He said SR350 million had been collected as part of a major research and development program that is being carried out with the support of businessmen to boost the Kingdom's scientific and technological progress.
"It received tremendous support from businessmen and philanthropists, paving the way for launching academic chairs for important topics. The university is also planning to set up an endowment fund worth SR500 million," he said.
— Ghazanfar Ali Khan & Mohammed Rasooldeen

காஷ்மீர் நிலவரம்
காஷ்மீர் நிலவரம் - புத்தியே வராதா?
பிறைநதிபுரத்தான்
pirainathipurathaan@gmail.com
கடந்த 150 ஆண்டுகளாக நடந்துவரும் காஷ்மீரிகளின் வீரமிக்க விடுதலைப் போராட்டத்தை - பிரிவினைவாதமாக சித்தரித்து இந்திய ஹிந்து மதவாத அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. காஷ்மீரின் வரலாறு தெரியாத இந்திய இந்து - முஸ்லிம்களிடையே பிரிவினையை வளர்க்க, காஷ்மீரிகளின் போராட்டத்தை இந்திய முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி, அவர்களையும் தேசதுரோகிகளாக சித்தரித்து வருகின்றனர் 'தேசபக்தர்கள்' சிலர். அந்த தேசபக்தர்கள் யார் தெரியுமா? ஆங்கில ஆதிக்க சக்திகளின் மிரட்டலுக்கு பணிந்து ‘சரனாகதி' கடிதாசி கொடுத்த ‘வீரர்' களை 'முன்னோடிகளாக' கொண்டவர்கள். சரி விஷயத்துக்கு வருவோம்.
ஹிந்துத்வ இயக்கங்களும், இந்தியாவும் தோன்றுவதற்கு முன்பே காஷ்மீர் விடுதலை போராட்டம் தொடங்கி விட்டது, மஹாராஜா ஹரிசிங்கின் பொறுப்பற்ற ஆடம்பர வாழ்க்கையால் பாதிக்கப்பட்டு பொருளாதரத்தில் பின் தங்கிய காஷ்மீரிகள், டோக்ரா மன்னரின் அத்துமீறல்-ஜமீன்தாரிய முறையை எதிர்த்து 1931-லேயே கலகக் குரலெழுப்பினர். காஷ்மீரிகளின் முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாக விளங்கிய மன்னரை - 'மூட்டை கட்டி' அனுப்புவதற்காக, காஷ்மீர் சிங்கம் என்று பின்னாளில் அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தலைமையில் 1932-ல், 'முஸ்லிம் மாநாட்டு கட்சி' தொடங்கப்ப,ட்டது. ஆனால், முஸ்லிமல்லாத காஷ்மீரிகளின் ஆதரவை திரட்ட இயலவில்லை. இதற்கிடையில், 1931-ல் நடந்த கிளர்ச்சியை தொடர்ந்து உஷாரான மன்னர், ‘குறைகளை கண்டறியும் கமிஷன்' ஒன்றை ஆங்கிலேயர் தலைமையில் அமைத்து,. அக்குழுவின் பரிந்துரைப்படி 'ப்ரஜா சபை' அமைக்க அனுமதித்தார். இச்சபையில், அனைத்து மத மக்களையும் பிரதிநிதிக்கும் வகையில் நியமிக்கப்பட்ட 44 உறுப்பினர்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட 33 உறுப்பினர்களையும் கொண்ட அதிகாரமில்லாத, பொம்மை ‘ப்ரஜா சபை'யாக இது விளங்கியது.
1938-ல் தேசிய மாநாட்டு கட்சி என்ற பெயர்மாற்றத்துக்கான தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டு, காஷ்மீரிகளின் அடிப்படை தேவைகளை-உரிமைகளை வலியுறுத்தும் கோரிக்கைகளின் முன்வரைவை உருவாக்குவதில் அனைத்து காஷ்மீரிகளும் ஈடுபட்டனர். இந்த முயற்சியை, சுதந்திரத்திற்கு பிறகு உருவாகப்பொகும் ‘நயா காஷ்மீருக்கான (புதிய காஷ்மீருக்கான) முன்னோட்டமாக அமைந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இறுதி வடிவம் கொடுக்கப்பட்ட காஷ்மீர் கோரிக்கைகள் - மன்னர் ஹரிசிங்கால் நிராகரிக்கப்பட்டது, இம்முயற்சியை முன்னெடுத்து சென்றதற்கு தண்டனையாக ஷேக் அப்துல்லாவும் அவரின் சகாக்காளும் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து ஆயிரக்கணக்கான் காஷ்மீரிகள் சிறைச் சென்றார்கள். - இந்த நிகழ்வுகள், காஷ்மீரிகள் தங்களை இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ ஒருபோதும் இணைத்து பார்த்ததே இல்லை என்பதை மிகத் தெளிவாக்குகிறது, மன்னராட்சி காலத்திலேயே காஷ்மீரிகளிடம் இருந்த் சுதந்திர உணர்வை - இந்துத்வவாதிகள், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு எழுந்ததாக கூறுவது அம்பட்டமான பொய். காஷ்மீரிகளின் வீரமிக்க போராட்டம், சுயநலமிக்க அரசர் மூலம் - இந்திய ஹிந்துத்வ சார்பு அரசியவாதிகளின் உதவியோடு திரிககப்பட்டது.
ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 562 ராஜாக்களும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் நிலப்பரப்பை இணைத்துக்கொள்ளவோ அல்லது தனித்திருக்கவோ அவரவர் விருப்பம்போல முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர் ஆங்கிலேயர். தனித்திருக்க விரும்பிய ஹைதராபாத் நிஜாமை (முஸ்லிம்) பிரிவினைவாதியாக சித்தரிக்கும் ஹிந்துத்வ சக்திகள், நிஜாமைப்போலவே தனித்திருக்க விரும்பிய காஷ்மீரின் உயர் சாதி ஹரி சிங் (இந்து) பற்றி வாயை திறப்பதே இல்லை. அது மட்டுமல்ல, இந்து அரசனான ஹரி சிங் தன் ஆட்சியையும் பதவியையும் துறக்க மனமில்லாததால், முதலில் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளப் பேரம் பேசினார். தன் அரசப் பதவியையும் அதிகாரத்தையும் இழக்காத வகையில் அந்த இணைப்பு இருக்க வேண்டும் என்பதே அவரது நிபந்தனை. 1947 ஆகஸ்டில், பாகிஸ்தானுடன் அதற்கான ஒப்பந்தமும் செய்துகொண்டார். ஆனால், அரசனின் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான இந்து அதிகாரிகள் (முஸ்லிம்களுக்கு அரசு பணி அப்பொழுதிலிருந்தே அம்பேல்) அதை எதிர்த்தனர். காஷ்மீர் சுதந்திர நாடாக இருப்பதே மேல் என்பது அவர்கள் நிலைப்பாடு. இதுவும் வரலாற்று நிக்ழ்வு.
1947 -ல் இந்திய-பாகிஸ்தான் சுதந்திரத்திற்கு பிறகுதான் காஷ்மீரை ‘ஏழரை நாட்டு சனி' வேறு ரூபத்தில் பிடித்து கொண்டது. 1947ல் நடந்த மதக்கலவரத்தின் தாக்கம் காஷ்மீரையும் விட்டு வைக்கவிலை. மன்னருக்கெதிராக அங்கும் கலவரம் வெடித்தது. காஷ்மீர் பிரச்சனைக்கு மூல கர்த்தாக்களாக இருவரை கூறலாம். ஒருவர் காஷ்மீர் பண்டிட்டான ஜவகர்லால் நேரு, மற்றொருவர் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் இந்துமத வெறியறான சர்தார் வல்லபாய் பட்டேல். நேரு தன்னுடைய பூர்வீக பூமியான இந்தியாவில் இருக்க வேண்டும் என நினைத்தார் மதவெறியரான சர்தார் வல்லபாய் பட்டேலோ காஷ்மீர் பாக்கிஸ்தான் வசமோ அல்லது தனி நாடாக உருவாவதை தீவிரமாக எதிர்த்து வந்தார்.இந்த இருவரின் தனிபட்ட விருப்பையும்-வெறுப்பையும் அடைப்படையாகக்கொண்டு இயங்கிய இந்திய அரசுகளும் மற்றும் இந்துத்வ சார்பு சக்திகளும்தான் இன்று வரை தொடரும் காஷ்மீர் பிரச்சனைகளுக்கும், காஷ்மீரிகளின் இன்னல்களுக்கும் காரணமாக அமைந்து - இன்று காஷ்மீரிகளின் விடுதலை போராட்டத்தை தீவிரப்படுத்த வைத்திருக்கிறது.
பெரும்பான்மை காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு முரனாக அதை ஆக்ரமித்தது பாகிஸ்தான் மட்டுமல்ல, ந்மது இந்தியாவும்தான், ஆனால் இந்த உண்மை திட்டமிட்டு மறைக்கப்பட்டதன் விளைவாக காஷ்மீரின் பின்னணி தெரியாத நமது இன்றைய தலைமுறையினருக்கும், வெளிநாட்டினருக்கும் 'ஆக்ரமிப்பு' சக்திகளை எதிர்த்து காஷ்மீரிகள் நடத்தும் விடுதலை போராட்டம் பிரிவினைவாத போராட்டாமாக தெரிகிறது.
காஷ்மீரின் தற்போதைய கட்டுப்பாட்டு கோடு (LoC) என்பது காஷ்மீர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்ல அது இந்திய, பாகிஸ்தானிய, ஆக்ரமிப்பு சக்திகளால் வலிந்து திணிக்கப்பட்டது.. காஷ்மீரின் மொத்தப்பகுதியில் இந்தியா 39,146 சதுர மைல்களையும், பாகிஸ்தான் 33,145 சதுர மைல்களையும் எஞ்சியுள்ள 14,500 சதுர மைல்களை சீனாவும் ஆக்ரமித்துள்ளது.
காஷ்மீர் பெரும்பான்மையான இஸ்லாமியர்களை கொண்டிருந்தாலும், அதன் மன்னர் காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தாக கூறி ஒட்டு மொத்த காஷ்மீரும் தனக்கு தான் என இந்தியா வாதிடுகிறது. ஆனால், பாக்கிஸ்தானோ, இந்திய பிரிவினையின் பொழுது, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதி பாக்கிஸ்தானுக்கும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதி இந்தியாவுக்கும் என பிரிந்த நிலையில் பெரும்பான்மையாக முஸ்லீம்களை (80%) உள்ளடக்கிய காஷ்மீரை இந்தியாவுடன் மன்னர் இணைத்தது தவறு, அதனால் காஷ்மீர் தனக்கு சொந்தம் என கூறுகிறது. இந்த பிரச்சினை சம்பந்தமாக, 1948 -ல், ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் சேர்வதா அல்லது சுதந்திர நாடாக இயங்குவதா என்று சுயமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற தீர்மானம் இரண்டு நாடுகளாலும் கிடப்பில் போடப்பட்டது. அதைத்தொடர்ந்து 1951 ல் நடைப்பெற்ற தேர்தலில் சேக் அப்துல்லா தலைமையில் வெற்றி பெற்ற தேசிய மாநாட்டு கட்சி இந்தியாவுடன் இணைவதாக அறிவித்தது, அதற்கு உபகாரமாக, இந்திய அரசு 1954 ல் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் மூலம் காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கியது. அன்றிலிருந்து, இந்தியா காஷ்மீரில் ‘பொம்மை' அரசுகளை நிறுவி ஆக்ரமித்து வருவதுபோலவே, பாகிஸ்தானும் தான் ஆக்ரமித்த பகுதிக்கு ‘சுதந்திர காஷ்மீர்' என்று பெயரிட்டு தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது, உண்மை நிலைமை இவ்வாறிருக்க, காஷ்மீரை ஆக்ரமித்ததாக இந்தியா - பாகிஸ்தான் மீதும், பாகிஸ்தான் இந்தியா மீதும் குற்றம்சாட்டி காலம் கழித்தே, காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை போட்டி போட்டுக்கொண்டு இரண்டு நாடுகளும் குழி தோண்டி புதைத்து விட்டது, காஷ்மீரிகளை பொறுத்தவரை தங்களது தாய் மண்ணை, இந்திய ஆக்ரமிப்பிலுள்ள காஷ்மீர் - பாகிஸ்தான் ஆக்ரமிப்பிலுள்ள காஷ்மீர் என்றே அழைக்கின்றனர்.
அரசியல்வாதிகளின் சுயநலன் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக இந்திய ஐக்கியத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவைக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு ஒரே நம்பிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது இந்த 370வது சட்டப் பிரிவுதான். அந்தப்பிரிவின் மூல கொடுக்கப்பட்ட சலுகைகள் ஒவ்வொன்றாக - திட்டமிட்டு பறிக்கப்பட்டு, காஷ்மீர் அரசை இந்தியா கலைக்காலாம் என்ற சட்டமும் 1964-65 ல் இயற்றப்பட்டுவிட்டது.
இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரிகளின் விடுதலை போராட்டம் நீர்த்துப்போகாமல் கவனமாக பார்த்துக்கொண்டது இந்திய ஹிந்துத்வா கும்பல்தான். காஷ்மீரிகளின் தனித்தன்மையை பாதுகாக்க வகை செய்யும் இந்திய அரசியல் சாசனம் 370ம் பிரிவை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. மேலும், காஷ்மீரிகள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், இந்தியாவில் முஸ்லிம் மதக் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்கள், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள், இவர்களை நல்வழிப்படுத்த இந்திய அரசு கோடி கோடியாகச் செலவழிக்கிறது என்று தவறான தகவல்களை தந்து குழப்பியோதோடு மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி திரைப்படங்களின் மூலமும் காஷ்மீரிகளை தீவிரவாதிகளாக சித்தரித்து மக்களை பயமுறுத்தி வரும் சுயநலவாத சுயம்சேவக் கும்பலுக்கு உறுதுனையாக இருந்து வந்தது இந்திய அரசு..
370வது சட்டம் அளித்த சலுகைகளில் எஞ்சியிருப்பது, இந்தியாவின் பிற மாநிலத்தவர்கள் காஷ்மீரில் குடியேறுவது மற்றும் நிலம் வாங்குவது தடுக்கப்பட்டிருப்பதுதான். பிற மாநிலத்தினரின் குடியேற்றம் நிகழ்ந்தால் தங்களுடைய பெரும்பான்மையை குறைக்கப்படுமோ என்ற நியாயமான அச்சம் காஷ்மீரிகளில் பலருக்கும் உண்டு. ஏனென்றால், 'வந்தேறிகளால்' - தங்களது பெரும்பான்மை குறைந்து, தனித்தன்மை அழிந்து, இரண்டாம் தர குடிமக்களாகிய பல தேசிய-திராவிட இனங்களின் வரலாறை காஷ்மீரிகள், நம்மை விட மிக நன்றாக அறிந்திருக்கிறார்கள், அது மட்டுமல்லாது,. விடுதலையை முன்னெடுக்கும் இனங்களின் பெரும்பான்மையை குறைக்க கீழ்த்தரமான முறையில், ஏதாவது சாக்கு-போக்கு சொல்லி, ஆதிக்க-அதிகார மையங்கள் முன்வைத்த இலங்கை, பாலஸ்தீன குடியேற்றத்தைப்பற்றியும் காஷ்மீரிகள் அறிந்திருப்பதால் அன்னியர்களுக்கு தங்களது மண்ணில் இடம் கொடு'க்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
காஷ்மீரிகளின் தனித்தன்மையை அழிக்க இந்திய இந்துத்வ கும்பலின் ஒரு 'தொ(ல்)லைநோக்குள்ள' மறைமுகமான முயற்சியாகவே - அமர்நாத் கோவிலுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை காஷ்மீரிகள் பார்க்கிறார்கள். உருகும் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக கொடுக்கப்படும் இடத்தில் நிர்வகிப்பவர்கள் என்ற போர்வையில், சங்பரிவாரிகளை, காஷ்மீர் மண்ணில் குடியேற்றம் செய்யும் வாய்ப்பிருப்பதாக காஷ்மீரிகள் அஞ்சுகிறார்கள். காஷ்மீரிகளின் அச்சத்தை மேலும் பற்றியெரிய வைத்தவர் ஸ்ரீ அமர்நாத் கோவில் வாரியத்தின் நிர்வாக அதிகாரி அருண்குமார், ‘நிரந்தரமாக எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை, நாங்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வதை யாராலும் தடுக்க முடியாது' என திமிர்த்தனமாகப் பேசியதுதான் காஷ்மீரிகளை கொந்தளிக்க வைத்துவிட்டது. தங்கள் சந்தேகம் சரியானது என அவர்கள் போராட்டத்தில் குதித்து விட்டனர்
1950லிருந்து, காஷ்மீரிகளின் அடையாளத்தை அழித்து, அவர்களை சிறுபான்மையாக்க, இந்திய இந்துத்வ கும்பலின் கைப்பாவையாக செயல்பட்ட கவர்னர்கள், காஷ்மீரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் விருப்பத்திற்கெதிராக திணிக்கப்பட்டனர். அம்மாநிலத்தின் ஆளுநரை அதன் சட்டமன்றம் தான் தேர்வு செய்ய வேண்டும் சட்ட வழைகாட்டல் இருந்தாலும், முன்னாள் பிரதமர் நேரு, அப்துல்லாவை நிர்ப்பந்தித்து முப்பது வயதான கரண் சிங்கை - எந்த அரச வம்சத்தின் கொடூர ஆட்சியை எதிர்த்துக் காஷ்மீர் மக்கள் போராடினார்களோ அதன் வாரிசை, ஜனாதிபதியாக்கினார். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட காஷ்மிர் அரசு இந்தியாவின் நிர்பந்தத்திற்கு அடங்க மறுத்தபோதெல்லாம் கலைக்கப்பட்டிருக்கிறது. காவி எண்ணம் கொண்ட கவர்னர்கள் ஆட்சியில், குழந்தையையும் கிள்ளிவிட்டு - தொட்டிலையும் ஆட்டுவதுபோல, காஷ்மீரிகளை உணர்வுகளை தூண்டி - அடக்குமுறையை ஏவி, அவர்களின் மனதில் பிரிவினை வாதம் வளர்க்கப்பட்டது.
காஷ்மீரிகளின் முன்னேற்ரத்திற்கு, இந்திய அரசு நியாயமான பங்களிப்பை செய்யவில்லை. பெரும்பான்மையான மண்ணின் மைந்தர்கள் 'முகமதியர்கள்' என்ற ஒரே காரணத்திற்காக அரசு வேலைகளில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு, உயர் சாதி ஹிந்துக்களுக்கு மட்டும் வழங்கி - சொந்த மண்ணிலேயே அவர்களை அனாதைகளாகவும் - இரண்டம் தர மக்களாக ஆக்கப்பட்டனர். அவர்களில் சிலர் பாகிஸ்தானின் ‘கைக்கூலிகளாக' மாறினர். இதை எதிர்பார்த்து காத்திருந்த ஹிந்துத்வ அமைப்புக்கள் காஷ்மீர் விடுதலை போராட்டத்திற்கு மதச்சாயம் பூசி அவர்களை இந்திய மக்களிடமிருந்து அன்னியப்படுத்துவதில் வெற்றிகண்டிருக்கின்றனர்.
இந்திய இரானுவமும் - போலிசும் இந்துத்வாவின் கைக்கூலிகளாக மாறி நடத்திய மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டது காஷ்மீர் முகமதியர்கள்தான், இந்திய அரசாங்கத்திற்கும் - பாகிஸ்தான் ஆதரவு, பயங்கரவாதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல்களில் படுகொலைகள் செய்யப்பட்டது காஷ்மீர் முகமதியர்கள்தான், பதவி உயர்வுக்காக தீவிரவாத முத்திரைக்குத்தப்பட்டு இரானுவ-போலீஸ் அதிகாரிகளால் போலி என்கவுண்டர்கள் மூலம் தீர்த்துக்கட்டப்பட்டதும் காஷ்மீர் முகமதியர்கள்தான், காணாமல் போய்விட்டதாக கணக்கு எழுதிவிட்டு - கதை முடிக்கப்பட்டதும் காஷ்மீர் முகமதியர்கள்தான், உண்மை இவ்வாறிருக்க பிரச்சினையை திசை திருப்பும் விதமாக 'ஜம்மு' வில் வசிக்கும் உயர்சாதி இந்துக்கள் பாதிக்கப்பட்டதாக மதவாத சக்திகள் திசை திருப்புகின்றன,
வருகிற பாராளுமன்ற தேர்தலில் மதவாத சக்திகள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக, இந்திய அமர்நாத் நில ஒதுக்கீடு பிரச்சினையை ஊதி பெரிதாக்கி வருகிரது. அதை வைத்து, காஷ்மீரிகளின் பொருளாதரத்தை நசுக்கி - 'ஹிந்துஸ்தானத்தின்' வழிக்கு கொண்டு வரலாம் என்ற எண்ணம்தான் காஷ்மீரிகளை - பாகிஸ்தானை நோக்கி மீண்டும் திருப்பியிருக்கிறது.
காஷ்மீர் பிரச்னை தனக்கு அவமானமென்பதை உணராமல் தன் தார்மீக கடமையை மறந்து உலகின் முன் அசிங்கப்பட்டு நிற்கிறது இந்தியா. இந்துத்வ சக்திகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து - அவர்களை ‘முகமதியர்களாக' கருதி இரும்புக்கரம் கொண்டு அடக்கியாளவும் - புறக்கணிக்கவும் முயற்சித்ததன் விளைவுதான் இந்தியா - காஷ்மீரிகளிடமிருந்து அன்னியப்படுத்தப்பட்டிருக்கிறது.
காஷ்மீர் பிரச்சினையை நமது நாடு இந்தியாவாக அனுகினால் மட்டுமே சுமூக தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது - அதை விட்டு வகுப்புவாதக் கும்பல் சொல்வது போல ‘ஹிந்துஸ்தானாக' அனுகினால் இந்தியாவே மீண்டும் காஷ்மீர் மட்டுமல்ல இந்தியாவின் மற்றப்பகுதிகளும் சமஸ்தானங்களாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது.
http://en.wikipedia.org/wiki/History_of_the_Kashmir_conflict
http://news.bbc.co.uk/2/hi/south_asia/2739993.stm
http://www.kalachuvadu.com/issue-92/page14.asp
http://www.un.org/Depts/dpko/missions/unmogip/background.html
http://www.kashmirobserver.com/
http://blog.tamilsasi.com/2008/08/kashmir-independence-amarnath.html

21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் ஒரு கண்ணோட்டம்
21 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் ஒரு கண்ணோட்டம். - டாக்டர் A.P. முகமது அலி Ph. D. IPS(Retd)
mdaliips@yahoo.com
வானத்தையும் பூமியையும் கடலையும் படைத்தது அதன் அதிசயங்களை நமக்கு குர் ஆனில் அல்லாஹ் காட்டியுள்ளான்.வானத்தின் கோளங்கள், அதன் செயல்பாடுகள், கடலுக்குள் புதைந்து கிடக்கும் அற்புதங்கள் பிரம்மிக்கவைப்பவையாகும். பூமி உருண்டை என்று உலக மக்களுக்கு எடுத்து இயம்பி,மனிதன்,மிருகம்,பறவை, பூச்சி போன்றவைகளுக்கு உணவினைக் கொடுத்து, மனிதனின் செயல்கள் அத்துமீறினால் அந்த பூமியினை பூகம்பத்தால் புரட்டிப்போடும் செயல்கள், சூறாவளியால்,கடல் சீற்றத்தால் அழிக்கும் பாடம்
குர் ஆன் கற்பிக்கிறது. மனித உடல் செயல்பாடுகள், மனதின் மாற்றங்கள், மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் போன்ற தகவலும் குர் ஆனில் இல்லாமலில்லை. அவை உண்மை இல்லை எனில் எப்படி சந்திரனில் முதல் காலடி வைத்த நீள் ஆம்ஸ்ட்ராங்கும், உலக குத்துச் சண்டை கொடிகட்டிப் பறந்த கிளேசியஸ் கிளே என்ற முஹம்மது அலியும் மற்றும் பல அறிஞர் இஸ்லாத்தை தழுவ முடியும். ஆகவே உலக மக்கள் இஸ்லாத்தை அனைத்துக் கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றால் மிகையாகாது.
இஸ்லாமிய சமுதாயம் முன்னேற வேண்டுமென்றால் பல நடவடிக்கைகளை கையாள வேண்டும்
1) கல்வி
உம்மி நபியாக இருந்த பெருமானார் அவர்களுக்கு ஓதுக என்ற தாரக மந்திர பெட்டகமான குர் ஆணை இறக்கி அல்லாஹு அக்பர் என்ற அதிகாலை பாங்கை கீழை நாட்டில் ஆரம்பித்து மறுநாள் காலை பாங்கு மேலை நாட்டில் முடிய செய்துள்ளான் என்றால் ஏக இறை தத்துவ கல்வியினையின் மகிமையே என்றால் சாலபொருந்தும் சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை என்றது இஸ்லாம், வெளிநாடுகளுக்கு சென்று தான் பொருளீட்ட வேண்டும் என்பதில்லை, இருந்த இடத்திலிருந்தே பொருள் சேர்க்கும் E-பிசினஸ் என்ற வியாபார உக்தி உள்ளது, கம்ப்யூட்டர் இஸ்லாமியருக்கு புதிது அல்ல, விப்ரோ சேர்மன் அசிம் பிரேம்ஜி தன் தந்தை கவனித்து வந்த எண்ணை தொழிலை விட்டு அமெரிக்கா நிறுவனமான IBM இந்தியாவை விட்டு வெளியேறிய போது அதன் இடத்தை நிறைவு செய்து பெருமை சேர்த்துள்ளார் என்றால் ஏன் நம்மால் முடியாது. ஒவ்வொரு குடும்பமும் ஒரு நல்ல பல்கலை கழகமனால் நிச்சயம் முடியும், முதலில் பெண் கல்விக்கு வித்திட வேண்டும். ஒரு பிராமின் குடும்பத்தில் தன் மகன் IIT யிலோ IIM மிலோ சேருவதர்கோ பயிற்சியினை எட்டாவது அல்லது ஒன்பதாவதிலோ ஆரம்பித்து விடுகின்றனர். ஏன் நாமும் நம் பிள்ளைகளுக்கு TOFEL, GRE, IELTS, CAT, போன்ற பயிற்சிகளை கொடுக்க கூடாது, பெண் கல்விக்கு நாம் எப்போது முக்கியத்துவம் கொடுகிறோமோ அப்போது தான் நம் சமுதாயம் முன்னேற முடியும், கொஞ்சம் படித்தால் போதும் வளைகுடா நாடுகளில் சென்று தன் பிள்ளை நாலு காசு சம்பாதித்தால் போதும் என்று இருக்கக்கூடாது, அங்கு நம்மவர் படும் துன்பங்களை பெற்றோர் சென்று பார்த்தால் நிச்சயமாக தம் பிள்ளைகளை அனுப்ப மாட்டார்கள். இந்தியாவிலே ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினியர் வருடத்திற்கு ஒரு கோடியே 18 லட்சம் என்பது எத்தனை முஸ்லிம்களுக்கு தெரியும்.
2) பள்ளி வாசல் ஒரு நூலகமாக வேண்டும்
ஒவ்வொரு பள்ளி வாசலிலும் மார்க்க சம்பந்தமான நூல்கள் இருப்பதினை காணலாம் ஆனால் அதனை படிப்பவர்கள் குறைவு தான். பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வீட்டுக்கு அல்லது வியாபாரஸ்தாபனங்களுக்கு செல்லாது பள்ளிவாசல் தின்னயே கத்தி என்றும் வெட்டி பேச்சில் ஆர்வமும் காட்டுவதை நிறுத்த வேண்டும், இமாம்கள் வருங்கால இளைஞர் மனதில் எழும் சந்தேகங்களை நீக்கும் ஆசானாக வேண்டும், அதற்கு இமாம்கள் நிறைய பொது அறிவு சம்பந்தமான விசயங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இளைஞர்கள் நஜ்ஜாஜ் கூட்டத்திற்கு பலியாவதை தடுக்க முடியாமல் போய் விடும். என்னுடைய கல்லூரி தோழன் அப்துர் ரஹ்மான் ஹாபிஸ் பட்டம் பெற்று, இமாமாக இருந்து கொண்டு பின்பு புது கல்லூரி உதவி முதல்வராகவும் பணிபுரிந்தார். எல்லா இம்மாம்களும் பள்ளி இறுதி ஆண்டு வரையிலாவது பொது அறிவு பெற்றிருக்க வேண்டும்.
3) அரசு வேலைகளில் ஆர்வம் காட்ட வேண்டும்.
பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் அரசு வேலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை, அரசு வேலைகளில் நமக்கு இட ஒதுக்கிடு கட்டாயம் என்ற நிலை வரும் போது அந்த சந்தர்பத்தை நழுவ விட கூடாது, ஏனென்றால் அரசு வேலைகளில் கீழ்க்கண்ட பலன்கள் பெறலாம்.
a) வேலை உத்திரவாதம்
b) பல்வேறு சலுகைகள், நிலம், வீடு, வாகன லோன்கள், பெற்று அதன் சொந்தகாரர் ஆகலாம்.
c) மருத்துவ சலுகைகள், குடும்ப பென்சன், வாரிசுக்கு வேலை, போன்றவைகள் பெறலாம்.
d) அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளான முதியோர் பென்சன், வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை, ஏழை பெண்களுக்கு திருமண உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை, வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா கிடைக்க செய்தல் போன்ற உதவிகளை செய்யலாம்.
e) இராணுவம், காவல் துறையினில் பணியாற்றினால் அப்பாவி முஸ்லீம் மக்கள் கொல்ல படுவதை, கோவையில் வீடுகள், வியாபார ஸ்தலங்கள் தீக்கிரையாகபடுவதை தவிர்கலாம்.
4) தற்காப்பு கலைகளை தெரிந்து வைத்தால்
ஜாதி வெறி நிறைந்த இந்நாளில், ஒவ்வொரு இஸ்லாமிய ஆண், பெண் என்ற வித்தியாசம் பாராது, சிலம்பம் , மல்யுத்தம், குத்துசண்டை, கராத்தே, குங்பூ போன்ற தற்காப்பு கலைகளில் பயிற்சி எடுத்தால் தான் குஜராத் போன்ற கொலை வெறியர்களிடமிருந்து நம்மை காக்க முடியும். முன்னாள் மலேசியா பிரதமர் மஹாதிர் முஹம்மத் இஸ்லாமிய நாடுகள் வல்லரசாக அணு ஆயுதம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றது இக்காலத்தில் எவ்வளவு பொருத்தமானது.
5) அரசியலில் பங்கு
ஒவ்வொரு தேர்தலிலும் பல அரசியல் கட்சிகளுக்கு முதுகை கொடுக்கும் ஏணியாக இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறோம். நம்மவர் வழிய சென்று ஆதரவு கொடுக்கும் நிலை மாற வேண்டும். பா.ம.க கட்சி நிறுவனர் போராட்டம் நடத்தி 20 சதவிகித ஒதுக்கீடு பெற முடிகிறது. ஏன் நம்மால் முடியவில்லை. ஏன்என்றால் கேரளா போன்ற ஒற்றுமையான சமுதாயத்தினை நாம் தமிழகத்தில் உருவாக்கவில்லை. வருங்கால இளைஞர்கள்கள் அவ்வாறான சூழ்நிலையினை உருவாக வேண்டும். அப்போது தான் இஸ்லாமியர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்
AP,Mohamed Ali

நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம்! தினமலர் விஷமத்தனத்தைக் கண்டித்து பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. அறிக்கை!!
நபிகள் நாயகம் பற்றிய கார்ட்டூன் படம்! தினமலர் விஷமத்தனத்தைக் கண்டித்து பேராசிரியர் அறிக்கை!!
தினமலர் வேலூர் பதிப்பில் இணைக்கப்பட்டிருந்த கம்ப்ய+ட்டர் மலரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை பற்றி கார்ட்டூன் படம் வெளியிடப்பட்டது.
தினமலரின் இந்த விஷமத்தனதுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தலைவரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தினமலர் நாளேட்டின் வேலூர் பதிப்பில் முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலாக நேசிக்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கார்ட்டூன் படத்தை வெளியிட்டு முஸ்லிம்களுடைய உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களிடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர் போன்ற பத்திரிகைகள் அவ்வப்போது இதுபோன்று உணர்வுகளை தூண்டும் செய்திகளையும், படங்களையும் வெளியிட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களுடைய புனித ரமளான் மாத நோன்பு காலத்தின் முதல் நாளில் இந்த விஷமத்தனத்தைச் செய்து பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்பு வேலூரில் உள்ள நாராயணி சக்தி அம்மா கோவில் சக்தி மருத்துவமனை திறப்பு விழாவில் நானும், முஸ்லிம் லீகினுடைய முன்னோடிகளும், சமுதாயப் பிரமுகர்களும் சென்று வாழ்த்து சொல்லிவிட்டு வந்தோம்.
காலை உணவு அமர்ந்து சாப்பிட்டுவிட்டு எழும்போது, கையை ஊன்றி எழுந்த காட்சியை படம் பிடித்து, காதர் மொய்தீன் சாமியார் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் காட்சி என்று பிரசுரித்து பெரிய குழப்பத்தையும், பிரச்சினையையும் தினமலர் ஏற்படுத்தியது.
இது என் சொந்த விவகாரம் என்று அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் வழிகாட்டி... இறைவனின் திருத்தூதர். அவர்களைப் பற்றிய படங்களும், தவறான செய்திகளும் வெளிவருவதை இந்த சமுதாயம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. இதற்கு எதிர்ப்புக் குரல் எழுவதை யாராலும் தடுக்கவும் முடியாது.
வேலூரில் அனைத்து சமய மக்களிடையே சமய நல்லிணக்கம் நிலவி வருகிறது. இதனைக் கெடுப்பதற்கு தினமலர் காரணமாகிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மை முஸ்லிம்களின் மத உணர்வுகளைக் கிண்டி கிளறிக்கொண்டிருக்கும் போக்கு நல்லதல்ல என தெரிவிக்கிறேன்.
தினமலர் வேலூர் பதிப்பில் வருத்தம் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளதாக அறிகிறேன். இதுபோன்ற உணர்ச்சிகளை தூண்டும் செய்திகளை இனி வெளியிடமாட்டோம் என்ற உத்தரவாதத்தை தினமலர் வெளிப்படுத்த வேண்டும்.
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இதுபற்றி நானும் பேசி, முறையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியுள்ளேன்.
-இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Subscribe to:
Posts (Atom)