Tuesday, March 24, 2009

மனித உரிமை மீறல்களும்- சிறையில் சில மனிதாபிமான சம்பவங்களும்!

மனித உரிமை மீறல்களும்- சிறையில் சில மனிதாபிமான சம்பவங்களும்!

முனைவர் ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு )
mdaliips@yahoo.com

“அரசியல் வாதிகளிடமிருந்து காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றுங்கள்” ‘அரசியல் வாதிகளிடமிருந்து காவலர்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற கோசத்தினை எழுப்பியது வேறு யாருமில்லை. இந்தியாவின் தலைசிறந்த சி.பி.ஐ. டைரக்டரகளாக இருந்த திரு. சி.வி. நரசிம்மன், வி.ஆர். லஷ்மிநாராயணன், சி.பி.ஐ. ரூபன் மற்றும் வக்கீல்கள், மனித உரிமைகள் அமைப்புகள்தாம். 16-3-07 நடத்திய கூட்டத்தின் எழுப்பிய குரல்தான் நான் சொன்ன வாசகம். இது டெக்கான் குரோனிக்கல், 10.3.07 தேதியிட்ட பத்திரிக்கை 5 ஆம் பக்கத்தில் வெளியாகி உள்ளது. கலைஞர் திரு. மு. கருணாநிதியினைச் சென்னை மேம்பால ஊழல் சம்பந்தமான வழக்கில் 29.6.01 அன்று கைது செய்ததன் மூலம் நானும், அரசியல் வாதிகளின் பலி கடா ஆக்கப்பட்டேன். 1861இல் ஆங்கிலேயர்கள் இயற்றப்பட்ட இந்தியன் போலீ° சட்டத்தினைத் திருத்துவது மூலம் சட்டத்தினைத் தங்களுடைய கைப்பாவையாக்கி அதிகாரிகளை ப்பழிவாங்குவதை அரசியல் வாதிகள் நிறுத்த வழி வகுக்க வேண்டும்.
‘சேவல் கூவுவதற்கு முன்பு எழுந்து நடந்தால்’ சிங்கத்தையும் எதிர் கொள்ளலாம்’ என்ற ‘செம்மொழி மூதறிஞர்’வாக்கிற்கிணங்க, 1-7-2004 அதிகாலை 5.30 மணிக்கு எழுந்து, ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு °பூன் தேன் கலந்து குடித்து விட்டு, 5.45 மணிக்குக் கையில் பிரம்புடன், நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நெஞ்சுடனும் மிடுக்கான நடையுடன் சென்னைக் கீழ்ப்பாக்கம் டெய்லர்° ரோடு அரசு அலுவலர் குடியிருப்பிலிருந்து வாக்கிங் கிளம்பி வெகு வேகமாக ஆர்ம்°ரோடு, சில்வன் காலணி, பர்னபிரோடு, லான்டன்° ரோடு வழியாக நடையைமுடித்து வீட்டினுள் 6.30 க்கு வேர்க்க விறுவிறுக்க நுழைந்து, சிறிது யோக பயிற்சி செய்தேன். வேர்வையில் நனைந்த ஆடைகளைக் களைந்து விட்டு, கைலியினைக் கட்டிக் கொண்டு மனைவி அளித்த சுடச்சுடக் காபியினை அருந்திக் கொண்டிருந்தேன் உள் அறையில் காலை 7மணியளவில் வீட்டில் காலிங் பெல்லை மூன்று தடவை வேகமாக அடித்து விட்டு கதவு திறந்திருந்ததால் 4,5 பேர் ஹாலில் வந்து நிற்பதாக , என் மனைவி பார்த்து வந்து சொன்னாள். நான் சட்டையினைப் போட்டுக் கொண்டு, அறையிலிருந்து ஹாலுக்குள் வந்த போது சி.பி.ஐ. எ°.பி. கபூர் என்பவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, வீட்டைச் சோதனை போட வேண்டும் என்றார்கள். பின்பு மூன்று நாட்களுக்குப் போலீ° க°டடி கொடுக்கப்பட்டது. அதன்பின்பே எங்களைச் சென்னை சென்ட்ரல் ஜெயிலுக்கு 5ஆம் தேதி மாலை கூட்டிக் கொண்டு சென்றார்கள். அடிஷனல் சூப்ரண்டெண்ட் அறையில் எங்களைச் சி.பி.ஐ. அதிகாரிகள்ஒப்படைத்தார்கள். அடிஷனல் எ°.பி.கோவிந்தராஜ், எங்கே எங்களுடைய பெர்ஷனல் ஐடெண்டிபிகேஷன் (அடையாள) மெமோ என்று கேட்டார். அதற்குச் சி.பி.ஐ. அதிகாரி கரம்யாள், எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நாங்கள் கைதிகளை ஒப்படைத்து விட்டோம். நீங்கள் எடுத்துக் கொள்ளவேண்டும் என ஆவேசமாகச் சொன்னார். அதற்கு ஜெயில் அடிஷனல் எ°.பி. அமைதியாக ஜெயில் மேனுவலைக் காட்டி, நீங்கள் மேஜி°திரேட்டிடம் மெமோ எழுதிக் கொண்டு வந்திருக்கவேண்டும் என்று ஆணித்தரமாகச் சொன்னார். இருந்தாலும், இப்போது நான் இவர்களை எடுத்துக் கொள்கிறேன். இனி மேல் நீங்கள் இதனைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சட்டத்தினை எடுத்துச் சொன்னது, “நீ நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே” என்று இயம்பிய தமிழ் இலக்கியத்தை ஞாபகப் படுத்தியது.
நான் எ.சி வண்ணாரப்பேட்டை வடக்குச் சட்டம் ஒழுங்கு டி.சி.யாக இருந்த போது, பல தடவை அலுவல் நிமித்தமாகச் சென்ட்ரல் ஜெயில் வந்துள்ளேன். ஏ.சி.யாக இருந்த போது, 1980ஆம் வருடம், ஒரு போராட்டம் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன், தி.மு.க. சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.டி. சீதாபதி, மு.க.°டாலின் ஆகியோர்களை- ஜெயிலிருந்து எழும்பூர் மற்றும் சைதாப்பேட்டை கோர்ட்டிற்கும் அழைத்துச் சென்றுள்ளேன். அதே ஜெயிலின் வாசலைக் கைதியாக மிதிக்கும் போது , ஒரு விதமான உடம்பு சிலிர்த்தது. எங்களை நேராகக் குவாரன்டெய்ன் செல்லுக்குக் கொண்டு சென்றார்கள். இந்தச் சிறைப்பகுதி தற்காலிகமாக ரீமாண்டுக்கு அழைத்து வருகிறவர்கள் வைக்கப்படுவார்கள். எங்களை அழைத்துச் சென்ற சிறை அதிகாரி, இந்த செல்லில் தான் முன்னாள், இன்றைய தமிழக முதல்வர்கள் வாசம் செய்த இடம் என்று அடையாளம் காட்டினார்கள். அந்தச் செல்லின் முன்புறம் ஒரு அரசமரம், அதன் கீழ் ஒரு சிறிய விநாயகர் கோவில், அதன் அருகில் ஒரு தென்னை மரம் இருந்தன. அதில் சிவப்பு இளநீர், காய்த்துக் குலுங்கியது. அந்தத் தென்னங்கன்றை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நட்டதாகச் சொன்னார்கள்.
நாங்கள் அடைக்கப்பட்ட கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய கட்டிடம். நான் தங்கியிருந்த காலத்தில் ஐந்து தினங்கள் மழை பொழிந்தன. அதன் சாரல் படுக்கையினை நனைத்தது. சுத்தம் செய்யாக் கூவம் ஆற்றின் கடுங்கொசு கடியின் கொடுமைக்கும், தூர்நாற்றத்திற்கும் அச்சப்படும் யாரும், சிறைக்கு மறுபடியும் வரமாட்டார்கள். ஆனால் அதையும் பொறுத்துக் கொண்டு அடிக்கடி வருகை தரும் சிறைப் பறவைகள், அங்கு ஏராளம், ஏராளம்!

போலி முத்திரைத்தாள் மோசடியில் 1-7-2004 கைது செய்த சி.பி.ஐ. 2-7-2004-இல் என்னையும், ஏசி.சங்கர், எல்.ஐ.சிஆபீசர் சாது ஆகியோரையும் அடிஷனல் சி.எம்.எம் பொறுப்பில் இருந்த மேஜி°திரேட் அலமேலு அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். கடப்பை பகுதியிலிருந்து வந்த சிறைவாசி மூர்த்தியினை இரண்டு மாதமாகப் பெயில் எடுக்க யாரும் வரவில்லை. ஒரு நாள் மாலை விநாயகர் கோயில் முன்பு நின்று விநாயகரைத் திட்டிக் கொண்டிருந்தார். நான் என்ன காரணம் என்று கேட்டேன். அதற்கு அவர், இரண்டு மாதமாகியும் யாரும் பெயில் எடுக்கவில்லை. இந்தக் கடவுள் இருந்து என்ன செய்கின்றார். நான் அதற்கு, உன் சொந்தக்காரர்கள், உடன்பிறந்தவர்கள், உதவாததிற்குக் கடவுள் என்ன செய்வார் என்றேன். மற்றொரு நாள், விநாயகர் நிலைப் படியில் தலை வைத்து அழுது கொண்டிருந்தார். நான் அவருக்கு ஆறுதல் சொன்னேன். ஐந்து நாட்களில் பெயில் கிடைத்ததும், விநாயகரிடம் கூடச் சொல்லாமல் சிட்டாய்ப் பறந்து விட்டார் அந்தச் சிறைவாசி.
சிறைவாசிகளைப் பார்ப்பதற்கு அவர்களுடைய உறவினர்கள் வருவதுண்டு. எங்களை ஜெயிலிருந்து கோர்ட்டுக்குக் கொண்டு செல்லும் போது, கண்ட காட்சி உருக்கமானதாக இருந்தது. ஒரு பெண் தன்னுடன் கைக்குழந்தையினைக் கொண்டு வந்து, தன் கணவனைப் பார்த்து விட்டுத் திரும்பிய போது, கைக்குழந்தை, அப்பாவிடம் கைநீட்டி அழுதது பரிதாபமானது. ஒரு நாள் ஒரு தடா குற்றவாளி தன் மனைவியினைப் பார்க்க வந்தவர், தன் மனைவியிடம் ஆண்டவனிடம் வேண்டிக் கொள், நான் ஏழு வருடமாக ஜெயிலில் இருந்தும், கருணை காட்டவில்லை, என்றது அவர்படும் வேதனையின் ஆழம் தெரிந்தது. ஆனால் எதற்கும் கவலைப் படாத தனிக்காட்டு ராஜாக்களும் சிறையில் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. காரணம் சிறையில் அவர்களுக்குத் தனி கவனிப்பு இருப்பதுதான் சில சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள் ஜெயிலிருந்து சென்ற பின்பும் அவர்களுடன் தொடர்பு கொண்டு இருந்ததை அறிந்தேன்.
கள்ளச் சாரயத்தினை அடியோடு அழித்து விடலாம் ஆனால் அழிக்க முடியாததிற்குக் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் ஊக்கம் கொடுப்பது தான் என்றும் அறிந்தேன். சாராயம் காய்ச்சுவதற்கு, விற்பதற்கு, வழிவகைகள் வகுத்துக் கொடுப்பது காவலர்கள் என்பதும், அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் காவல் நிலையத்தில் ஆகும் செலவுகளை ஈடு செய்ய ஒரே வழி பண வசூல் செய்வது என்றும், சாராயக் குற்றவாளிகள் விலாவரியாக விவரித்தார்கள். எப்போது தீவிர ரெய்டு என்று அறிவிக்கப் படுகிறதோ அப்போது சாராயக் குற்றவாளிகள் காவலர்களுக்குக் கொடுக்கும் மாமூல் அதிகப்படுத்தப்படுமாம் . இந்த ஊழலை ஒழிக்கத்தான் மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள், பாட்டிலில் அடைத்த சாராயத்தை விற்பனைக்குக் கொண்டு வந்தார்கள். சாராயக் கடை ஏலம் எடுத்தவர்கள், தங்கள் பகுதியில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கத் தனிபடைகளையே வைத்து, கள்ளச் சாராய விற்பனையைக் கட்டுக்குள்வைத்திருந்தனர். ஆனால் இப்போது அந்த நிலைமையில்லை. அரசே ஏற்று நடத்தும் இந்தியத் தயாரிப்பு மது விற்பனை நிலையம் மட்டுமே இருப்பதால், கள்ளச் சாராய வியபாரிகளுக்கும், அதனை மறைமுகமாக ஆதரிக்கும் காவல் துறையினருக்கும் தீபாவளிகொண்டாட்டமாக உள்ளது!
எனது கைது செய்தி கேட்ட என் மூத்தமகள், சௌதியிலிருந்து குழந்தைகளுடன் தனியாக இருக்கும் தன் தாய்க்குத் துணையாக வந்து விட்டது. சாதரணமாக என் பேரக்குழந்தைகள் வந்தால், அவர்களை மெரினாபீச்சு, கிண்டி குழந்தைகள் பூங்கா, வண்டலூர் மிருகக்காட்சிச் சாலை என்று அழைத்துச் செல்வேன். 6 வயது ஆன என் பேரன் இர்பான், சென்னை வந்த 5.7.2004 அன்று எங்கே ‘நன்னா’ (தாத்தாவை அவ்வாறு தான் அழைப்பது வழக்கம்) என்று கேட்டு இருக்கிறான் . அதற்கு என் மகளும் நன்னா ஆபீஸீக்குச் சென்றிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. அந்தி மயங்கும் வரை நான் வராததைக் கண்டு என் மனைவிக்கு நான் ஜெயிலில் இருப்பதைச் சொல்லியிருக்கிறாள். அன்று இரவில் திடீர், திடீர் என்று விழித்து அழுதிருக்கிறான். அடுத்த நாள் காலை அவனைக் கூட்டிக் கொண்டு என் மகள் மனைவி ஆகியோர் வந்தார்கள்.
அவனை ஜெயில் பார்வையாளர்கள் அறைக்குள் என்னைப் பார்க்க அழைத்துக் கொண்டு வந்தார்கள். பாசத்தோடு வரும் அவன் எங்கே கூண்டுக்குள் வைத்து விடுவார்களோ எனப் பயந்து வீல் என அழுதுவிட்டான். உடனே அவனை வெளியே தாயிடம் சேர்த்து விட்டார்கள் சிறை அலுவலர்கள் அவன் சௌதியில் இருக்கும் போது தான் நன்னா போன்று இருக்கப் போலீ° டிர° போட்டுக் கொண்டு ஒரு கைக் குச்சியும் வைத்திருப்பானாம். என்னிடம் அந்த டிரஸைக் காட்ட, அதனை போட்டு வந்தும் ஜெயிலில் உள்ள கம்பிகளையும் சிறையில் இருக்கும் வார்டர்களின் டிர°ஸையும் பார்த்துப் பயந்து விட்டான். தனக்கு வேண்டியவர்கள் ஜெயிலில் இருப்பது குழந்தைகளின் மனத்தினை எவ்வாறு பாதிக்கும் என்பது மட்டுமல்ல; கைது செய்யப் பட்டவர்களுக்கும் தங்கள் குடும்பம் குழந்தைகள் மேல் எவ்வாறு பாசப் பிணைப்பு இருக்கும் என்பதும் தெரிந்தது. என்னுடன் கைது செய்யப்பட்ட உதவி ஆணையர் திரு.சங்கர், திருமணம் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின்பு பெண் குழந்தையைத் தவமிருந்து பெற்றிருக்கிறார். அந்தக் குழந்தை 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தது. அவரைப் பார்க்க அவரது மனைவி வரும் போது, குழந்தையை அழைத்து வருவதில்லை பல நாட்கள் ஆனதால் அவரால் தன் மகளைப் பார்க்காமலும் இருக்க முடியவில்லை. ஒரு நாள் அவரைப் பார்க்க அவருடைய மனைவி, மகளையும் அழைத்து வந்திருந்தார்கள். அவர்களை பார்த்து விட்டு வந்த உதவி ஆணையர் சங்கர், மிகவும் சோகத்துடன் இருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லிப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதிற்கு மிகவும் சிரமமாக இருந்தது.
சிறைக்குள் இரவு நேரத்தில் நடமாடும் காவலர்களாகப் பூனைகளும், பெருச்சாளிகளும் இருக்கும். ஒருநாள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த போது, அறைக்குள் சர,சர என்ற சத்தம் கேட்டது. தூக்கம் கலைந்து எழுந்த போது , பூனை ஒன்று மாடர்ன் பிரட் பிளா°டிக் பையை எடுத்துக் கொண்டு ஓடியது. அதன் பின்பு ஒரு நாள் காலை அங்கு வந்த இன்சாhர்ஜ் சூப்பிரடெண்ட் ராஜேந்திரனிடம் பூனை, எலி தொல்லை கொடுக்க முடியாத வலை யினை, இரும்புக்கம்பி கதவில் பொருத்த முடியுமா எனக் கேட்டேன். அதற்கு அவர் அவ்வாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குக் கம்பிவலை போட்டு கொடுத்ததால் தான், தொலைவில் உள்ள சப்-ஜெயிலுக்கு தூக்கி எறியப்பட்டேன் என்ற கதையினைச் சென்னார். ஆகவே, போதுமடா சாமி என்று கும்பிட்டுப் போய் விட்டார். நான் சிறைக்குள் 3 மாதங்களாக இருந்தபோது, பல புத்தகங்கள் படிக்க முடிந்தது. சிறைக்கைதிகளுடன் சேர்ந்து, சில கவிதை, கானாப்பாட்டுகளையும் எழுதினேன். நான் படித்த புத்தகங்களின் முக்கியமானவை ராபார்ட் சொகுல்லர் எழுதிய ‘சக்ஸ° இ° நெவர் எண்டிங், பெயிலியர் இ° நெவர் பைனல்’, ‘டப் டைம்° நெவர் லா°ட், பட் டப் பீப்பிள் டு’, கண்ணதாசன் எழுதிய ‘ரத்த புஷ்பங்கள்’, உமர் கயாம் கவிதைகள், நா.காமராசனின் ‘சந்தோக்கனவுகள்’ மூவேந்தரின் ‘சுடர் விளக்கு’, குமரி அனந்தனின் ‘கடவுளை நோக்கி’, டாக்டர் அழகுகண்ணனின் ‘சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் சமுதாய வரலாறும்’ மற்றும் பல. அதிகாலை 41/2 மணிக்கு பெரியமேடு பள்ளி வாசல் தொழுகைக்கான அழைப்பு (பாங்கு) சொன்னதும் எழுந்து, காலைத் தொழுகை (பஜ்ர்) முடித்து விட்டு, நாலு சுவர் ஜெயிலுக்குள் உடற்பயிற்சி, யோகாவும் செய்வேன். அதனை முடித்ததும் காலை சிறைக் கதவு ரோல்காலுக்காகத் திறக்கப்படும். மாலை வேளையில் பூப்பந்து மற்ற கைதிகளுடன் சேர்ந்து விளையாடுவேன். இப்படியாக 90 நாட்களும் வசிக்கும் இடமே வாழ்க்கையானது. ஆனால் எங்களைப் போன்ற சிறைவாசிகளின் குடும்ப வாழ்வு நரகமாகி விடுகிறது என்பது தான் உண்மை!




---------- Forwarded message ----------
From: Mohamed Ali
Date: Mon, Feb 23, 2009 at 10:58 AM
Subject: jail life
To: hidayath


Assalamu allaikum Mr. Hidayath.
I have attached the chapter about prison life written in my book on"Oru Kakki Chattai Pesugiradu" as per request. If the article is useful to our brethren you may circulate. Good day.


AP,Mohamed Ali

இனிய பெருநாள் வாழ்த்துகள்

இனிய பெருநாள் வாழ்த்துகள்

முன்னவரின் கடமையது இரமளான் நோன்பு
...முஸ்லிம்கள் பேணுவதும் அதனைத் தானே
எண்ணமதைச் சுத்திசெய்யும் இந்த மாதம்
....இதயத்தில் ஒளிவீசும் விரதத் தூய்மை
விண்ணவரின் வாழ்த்துக்கு உரிய தாக
....விளங்குகின்ற வாய்ப்பளிக்கும்; உயர்வு நல்கும்
மன்னவரோ மற்றவரோ வயிறால் ஒன்றே!
....மண்ணுலகின் பசிபஞ்சம் மாய்த்தல் நன்றே!


வணக்கத்தை இறைவனுக்கே உறுதி செய்து
....வளமாகும் நல்லுணர்வும் வாய்க்கப் பெற்று
இணக்கத்தை வளர்க்கின்ற ஈகை மனங்கள்
....இன்பத்தை அதனாலே எடுத்துக் கொள்வார்
சுணக்கத்தை நற்செயலில் செய்து வந்தோர்
....சுறுசுறுப்பை செயல்தனிலே சேர்த்துக் கொள்வார்
பிணக்கென்றால் வேண்டாமே என்று சொல்லி
....பிள்ளைநிலா முழுமதியாய் பிரகா சிக்கும்.

ஒன்றுக்குப் பத்தேழாய் வழங்கும் நோன்பு
....உயர்வான வெற்றிக்கு வழியைச் சொல்லும்
நன்றாக ஏற்கின்ற நண்பர் யார்க்கும்
....நாளைக்கு நற்சாட்சி நோன்பில் உண்டு
மன்றாடும் இறையடியார் மன்னிப் படைவார்
....மகத்தான ஓரிறையின் மார்க்கம் கொள்வார்
அன்றாட வாழ்நாளில் நோன்பின் பயிற்சி
....அற்புதங்கள் வெளிப்படுத்தும் ஆன்ம மாட்சி.


மெய்யான இறையச்சம் மனதில் கொண்டால்
....மேற்படியான் சாத்தானும் தோற்றுப் போவான்
ஐயமில்லாப் பேருண்மை அரிய நோன்பில்
....அடைந்தாரே அடைகின்றார் அதுவே நோக்கம்.
வையத்தில் வைக்கின்ற விரத மெல்லாம்
.... வயிற்றுக்கே உணவுக்கே என்றி ருக்க
பொய்யில்லா இஸ்லாமின் இந்த நோன்பு
....புலனடக்கம் போதிக்கும் பேரா சானே!

இறைவேதம் அருளான இந்த மாதம்
....எண்ணத்தை வளமாக்கும்; ஓடிப் போகும்
விரைவாக மீண்டுவர உள்ளம் வேண்டும்
...விண்மதிகள் பதினொன்று முழுதாய் ஆகும்
பிறைபார்க்க பெருநாளும் பூத்து நிற்கும்
....பேரன்பை ஈகையிலே பார்த்தி ருக்கும்.
நிறைவான நேரங்கள் நோன்பில் என்றும்
....நிலையான வெகுமதியும் இறையின் நாட்டம்


இனிய பெருநாள் வாழ்த்துகள்

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com

பணம்

பணம்

பணம்
பொருளாதார
மின்சாரம்

அரசாங்கத்தின்
அலாவுதீன்
விளக்கு

பணமே !
கரன்ஸிநோட்டில்
நீ
பதிவு
செய்திருப்பது
கலையெழுத்து
அல்ல,
பலரின்
தலையெழுத்து

நேர்மையாய்
வியாபாரம்
செய்தால்
நீ
வெள்ளை

கணக்கில்
விபச்சாரம்
செய்தால்
நீ
கறுப்பு

ஸ்விஸ்வங்கியில்
ரகசியமாய்
உன்னைச்
சிறை
வைத்தாலும்,
உலகை
தொடர்ந்து
ஆள்பவன்
நீ

நீ
ஒரு
பாரபட்ச
பல்லாக்கு
ஏழை
உன்னை
சுமக்கிறான்

நீ
பணக்காரனை
சுமக்கிறாய்

வாழ்க்கை
நீ
இருந்தால்
துபாய்
இல்லாவிட்டால்
கிழிந்த பாய்

-எம்.ஏ.ஷாகுல் ஹமீது -

'ஓ' போடு

'ஓ' போடு





To read in English



'ஓ' போடு ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கம்



'ஓ' போடு என்றால் ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஓட்டு போடும்போது 49 ஓ பிரிவின் கீழ் ஓட்டு போட ஒவ்வொரு வாக்காளருக்கும் அரசியல் சட்டப்படி உள்ள உரிமையை தெளிவுபடுத்துவது எமது இயக்கத்தின் இன்னொரு நோக்கம்.

சராசரியாக எந்தத் தேர்தலிலும் 45 சத விகித வாக்காளர்கள் ஓட்டு போடுவதில்லை. வெற்றி பெறுவதாக அறிவிக்கப்படும் வேட்பாளர் பதிவான வாக்குகளில் 30 சதவிகிதம் வாங்கினாலும், அது மொத்த வாக்குகளில் 16 சதவிகிதம் மட்டுமேதான். ஓட்டு போடாதவர்களும் ஓட்டு போட வந்தால், பல தேர்தல் முடிவுகள் மாறிவிடும்.

ஏன் ஓட்டு போடுவதில்லை என்பதற்கு சொல்லப்படும் பல காரணங்களில் ஒன்று இருப்பதில் ஒருவருக்கு ஓட்டு போடவும் விருப்பமில்லை; எந்த வேட்பாளரையும் ஏற்க முடியவில்லை என்பதாகும்.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையையும் வாக்காளருக்கு சட்டப்படி கொடுத்திருப்பது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பாகும். தேர்தல் விதிகள் 1961ன் கீழ் 49 (ஓ) பிரிவு இந்த உரிமையை வாக்காளருக்கு வழங்கியிருக்கிறது. ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைத்த பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று வாக்காளர் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்யவேண்டும் என்பதே 49 (ஓ).

வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.

'ஓ' போடு இயக்கம் கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.

1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.

2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.

3. ரகசிய ஓட்டு என்பது அரசியல் சட்டப்படி வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் 49 ஓவை ரகசியமாகப் போடமுடியாமல் தேர்தல் ஆணையம் வைத்திருப்பது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பட்டனை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலிலேயே தேர்தல் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

4. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 'ஓ' போடு இயக்கம் பிரசாரம் செய்யும்.

ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.

ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.


Source : http://keetru.com/ohpodu/

இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கு இனிய செய்தி !

இஸ்லாமிய இலக்கியவாதிகளுக்கு இனிய செய்தி !

இனியவர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும்

தமிழில் எழுதும் முஸ்லிம் படைப்பாளிகளின் சிறுகதைகளில் சிறந்த சிறுகதைகளை தொகுத்து நல்ல சிறுகதை தொகுப்பு இதுவரை வெளிவரவில்லை என்ற குறை இஸ்லாமிய இலக்கியத்துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இலக்கியத்தரம் வாய்ந்த இஸ்லாமிய வரம்புகளுக்குட்பட்ட படைப்பிலக்கியத்துறையில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் எழுத்தாளர்களின் சிறுகதைகளில் ஒவ்வொரு எழுத்தாளர்களின் சிறுகதைகளில் மிகச்சிறந்த ஒரு கதையை தேர்வு செய்து “இதயத்தைக் கவர்ந்த இஸ்லாமிய இலக்கியக் கதைகள்” என்ற நல்ல சிறுகதை தொகுப்பு ஒன்று வெளியிட வேண்டும் என்பது என் கன்வு !

இத்தொகுப்பிற்காக... தாங்கள் எழுதிய சிறுகதைகளில் மிகவும் சிறந்த கதையாக தாங்கள் கருதும் கதையை அனுப்புங்கள் ! தங்கள் சக எழுத்தாளர்கள் எழுதிய கதைகளில் தங்களுக்குப் பிடித்த சிறுகதையையும் ( எழுதியவர் பெயரோடு ) அனுப்பி வைக்கலாம் ! வாசகர்கள் தாங்கள் படித்த கதைகளில் தங்கள் மனசுக்குப் பிடித்த சிறுகதையை ( எழுதியவர் பெயரோடு ) அனுப்பி வைக்கலாம் !

சகோதர சமுதாய மக்களும் இஸ்லாத்தின் மேன்மையை உணரும் வகையில் சிறுகதைகள் உணர்ச்சி பூர்வமாக இருக்க வேண்டும். பிற மதத்தவர்களின் மனதை காயப்படுத்தும் வகையில் கண்டிப்பாக கதை இருக்கக் கூடாது.

வியாபார நோக்கத்தோடு இந்நூலை தயாரிக்கவில்லை. இஸ்லாமிய இலக்கியம் பரவலாக்கப்பட வேண்டும். முஸ்லிம் படைப்பாளிகள் கௌரவிக்கப்பட வேண்டும் என்ற உயரிய இலட்சியத்துடனே இந்நூல் தயாராகிறது.

இன்ஷா அல்லாஹ் ........ வந்து சேரும் சிறுகதைகள் ஜே.எம்.சாலி, ஹிமானா சையத், ஜின்னாஹ் ஷரீபுத்தீன், சிராஜுல் ஹஸன் போன்ற இஸ்லாமிய இலக்கியவாதிகளின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் அழகிய நூல் வடிவில் மலரும். ஆண்டவன் நாடினால் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அணிந்துரையோடும், மானுட வசந்தம் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது அவர்களின் மதிப்புரையோடும் வெளிவரும் !

சிறுகதை நகலை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : trichysyed@yahoo.com

கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : 31.12.2009



மகிமையும், மேன்மையும் நிறைந்த அல்லாஹ் நம் முயற்சிகளுக்கு துணை நிற்பானாக !

தோழமையுடன்

திருச்சி சையது

அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி

அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி


சென்னை, மார்ச் 23: அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு ( AIEEE-2009 ),"எய்ம்ஸ் கல்வி நிறுவனம்” ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கிறது.

தேசிய தொழில்நுட்ப கழகங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக சி.பி.எஸ்.இ. சார்பில் ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 2 முடித்த சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொள்கின்றனர்.

நுழைவுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு எய்ம்ஸ் கல்வி நிறுவனம் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 14 முதல் 24 வரை பயிற்சி வகுப்பு நடத்துகிறது. உலகின் எந்த மூலையில் இருந்தும் மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். மேலும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளிப்பர்.

பயிற்சியின் முடிவில், முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப், ஐ-பாட் பரிசு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மேலும் விவரங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் காணலாம்.

www.topperlearning.com

இணையதள பாஸ்வேர்ட் ஜாக்கிரதை

இணையதள பாஸ்வேர்ட் ஜாக்கிரதை

இணையதளத்தில் உலகிலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் 123456 என்று தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இணையதள நிறுவனம் ஒன்று உலகத்திலேயே அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் குறித்த பட்டியலை ஆய்வுக்கு பின் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

உலகில் மிக அதிகம் பேர் தங்கள் இணையதள பாஸ்வேர்டாக 123456 ஐ உபயோகிக்கின்றனர்.
இதற்கு அடுத்ததாக பாஸ்வேர்ட் என்ற ஆங்கில வார்த்தையையே ரகசிய குறியீடாக பலர் உபயோகிக்கின்றனர். சிலர் பயங்கர கெட்டவார்த்தைகளையும் வேகமான கார்களின் பெயர்களையும் சினிமா படங்களில் வரும் ஹீரோக்கள் வில்லன்கள் பயன்படுத்தும் வாகனங்களின் எண்களையும் பயன்னடுத்துகின்றனர்.

ஸ்டார் டிரக்கில் வரும் என்சிசி 1701 என்பதையும் பாண்ட் 007 பேட்மேன் கோகாகோலா போன்ற வற்றையும் சிலர் பாஸ்வேர்டாக பயன்படுத்துகின்றனர்.

மேலே சொன்ன பாஸ்வேர்டுகளில் ஏதாவது ஒன்றை இணையதளம் பயன்படுத்துவோரில் 9 பேரில் ஒருவர் பயன்படுத்துவதாகவும் 50ல் ஒருவர் டாப் 20 பாஸ்வேர்டுகளில் பயன்படுத்துவதாகவும் அந்த இணையதளம் கூறியுள்ளது.

இணையதளத்தை பயன்படுத்தும் பெரியவர்களில் சராசரியாக 15 பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துள்ளதாகவும் 61 சதவீதம் பேர் ஒரே பாஸ்வேர்டையே தங்கள் அனைத்து இணையதள முகவரிக்கும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

எனவே நாம் நமது பாஸ்வேர்ட்களை எல்லோரும் அறிந்த ஒன்றை தேர்ந்தெடுப்பதை விட்டு தன் குடும்பத்தினர்களின் பெயர்களை அல்லது தான் உபயோகப்படுத்தும் வீட்டு பொருள்களின் பெயர்களையோ பாஸ்வேர்டாக தேர்தெடுத்துக் கொள்வது பிறர் ஞாபகத்துக்கு வராத ஒன்றாகஇருக்கும் எனவே பாஸ்வேர்ட்டில் மிக கவனமாக இருக்கவேண்டும்…இல்லையெனில் நமக்கே தெரியாமல் நமது இமெயில் கடிதங்கள் பிறரால் வசிக்கப்படும்…நமது வங்கி கணக்கில் உள்ள தொகைகள் மாயமாகிவிடும்…நமக்கு இரத்தஅழுத்தம் அதிகரித்துவிடும் …கவனம்தேவை…!


--
3/24/2009 02:20:00 AM அன்று கவி(மதி)வனம் இல் கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI ஆல் இடுகையிடப்பட்டது