Thursday, April 2, 2009

துபாயில் க‌ல்வி வ‌ழிகாட்டி நூல் வெளியீடு ம‌ற்றும் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

துபாயில் க‌ல்வி வ‌ழிகாட்டி நூல் வெளியீடு ம‌ற்றும் க‌ருத்த‌ர‌ங்க‌ம்

துபாயில் தேரிழ‌ந்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் சார்பில் க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்க‌ம் ம‌ற்றும் க‌ல்வி வ‌ழிகாட்டி நூல் வெளியீட்டு விழா 02.04.2009 வியாழ‌க்கிழ‌மை மாலை அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து.

க‌ருத்த‌ர‌ங்கிற்கு ஸ்கை சீ குரூப் இய‌க்குந‌ர் செய்ய‌து எம். அப்துல் காதர் ( சி.த‌. ) த‌லைமை வ‌கித்தார். அவ‌ர் த‌ன‌து உரையில் த‌ன‌து க‌ல்லூரிக் கால‌த்தில் ந‌டைபெற்ற‌ நிக‌ழ்வுக‌ளை நினைவு கூர்ந்தார். ஜ‌ப்பானிய‌ர்க‌ள் இந்தியாவை பிடித்து விடுவார்க‌ள் என நினைத்து சில‌ர் ஜ‌ப்பானிய‌ மொழியைக் க‌ற்றுக் கொண்ட‌ன‌ர். அந்த‌ அள‌வு க‌ல்வியின் மீது எதிர்கால‌ சூழ‌லை க‌ருத்தில் கொண்டு ஆர்வ‌ மிகுதியில் க‌ற்கும் திற‌னை வ‌ள‌ர்த்துக் கொள்ள‌ கேட்டுக் கொண்டார். மேலும் வேலை செய்யும் இட‌ங்க‌ளில் அந்நிறுவ‌ன‌ முத‌லாளியிட‌ம் நேர‌டியாக‌ தொட‌ர்பு இருக்குமாறு ப‌ணிபுரிந்தால் மிக‌வும் ந‌ல‌மாக‌ இருக்கும். கும‌ரி அன‌ந்த‌ன‌னின் ச‌கோத‌ர‌ர் த‌ற்போதைய‌ ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர் வ‌சந்த் குறைந்த‌ ச‌ம்ப‌ள‌த்தில் விஜிபியிட‌ம் ப‌ணிபுரிந்து அவ‌ர‌து அனுப‌வ‌த்தை கேட்ட‌றிந்து வாழ்வில் உய‌ர்வு பெற்ற‌தைக் குறிப்பிட்டார்.

முன்ன‌தாக‌ ம‌வ்ல‌வி ஜெய்னுலாபுதீன் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கின் ஒருங்கிணைப்பாள‌ரும், அமீர‌க‌த்தின் தீனிசை வேந்த‌ருமான் தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் துவ‌க்க‌வுரை நிக‌ழ்த்தினார். அவ‌ர் க‌ல்விக் க‌ருத்த‌ர‌ங்கின் நோக்க‌ம் தாய‌க‌த்தில் ஒரு க‌ல்வி நிறுவ‌ன‌த்தை துவ‌ங்குவ‌து என்ற‌ க‌ருத்தினை வ‌லியுறுத்திப் பேசினார். இதுபோன்ற‌ க‌ல்விப் ப‌ணிக‌ளுக்கு அனைவ‌ரும் த‌ங்க‌ள‌து முழு ஒத்துழைப்பினை த‌ருமாறு கேட்டுக் கொண்டார்.

இஸ்லாமிய‌ இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ பொதுச்செய‌லாள‌ர் எஸ்.எம்.இதாய‌த்துல்லா அவ‌ர்க‌ள் த‌ன‌து உரையில் க‌ழ‌க‌த்தின் மூல‌ம் க‌ல்வி உத‌வி நிதி, அர‌சுத் தேர்வுக‌ளுக்கு ப‌யிற்சி வ‌குப்புக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ ப‌ணிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌. க‌ல்வி விழிப்புண‌ர்வு நிக‌ழ்வுக‌ள் த‌மிழ‌க‌மெங்கும் ந‌டைபெற்று வ‌ருகின்ற‌ன‌. இதில் க‌விக்கோ அப்துல் ர‌ஹ்மான், கேப்ட‌ன் அமீர் அலி, முன்னாள் துணைவேந்த‌ர் சாதிக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்று வ‌ருகின்ற‌ன‌ர்.
இளையான்குடி டாக்ட‌ர் சாகிர் உசேன் க‌ல்லூரி பேராசிரிய‌ர் முனைவ‌ர் எஸ். ஆபிதீன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ என்ன‌, எங்கே, எப்ப‌டி ? ப‌டிக்க‌லாம் என்ற‌ நூலை எஸ்.எம். இதாய‌த்துல்லா வெளியிட‌ முத‌ல் பிர‌தியை தொழில‌திப‌ர் செய்ய‌து எம். அப்துல் காதர் பெற்றுக்கொண்டார்.

நிக‌ழ்ச்சியில் ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் க‌விஞ‌ர் அப்துல் க‌த்தீம், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வை இணைச்செய‌லாள‌ர் கீழ‌க்க‌ரை ஹ‌மீதுர் ர‌ஹ்மான், சுன்ன‌த‌ வ‌ல் ஜ‌மாஅத் பேர‌வை ஒருங்கிணைப்பாள‌ர் முஹ‌ம்ம‌து மஃரூப், பொறியாள‌ர் வி. க‌ள‌த்தூர் ஷேக், பொறியாள‌ர் சீர்காழி அப்துல் மாலிக் உள்ளிட்டோர் உரை நிக‌ழ்த்தின‌ர்.
நிக‌ழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் ஏ. லியாக்க‌த் அலி, வ‌ளைகுடா த‌மிழ‌ர் பேர‌வை நிறுவ‌ன‌ர் எஃப்.எம். அன்வ‌ர் பாஷா, ஏ. அஷ்ர‌ஃப் அலி, ஆவூர் ம‌வ்லவி ஏ. முஹ‌ம்ம‌து இஸ்மாயில் ஹ‌ஸ‌னி, எமிரேட்ஸ் அப்துல் ல‌த்தீப்,உம்முல் குவைன் த‌மிழ்ச் ச‌ங்க‌ த‌லைவ‌ர் அப்துல் காத‌ர், ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ ஒருங்கிணைப்பாள‌ர் ஜாப‌ர் சித்தீக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை தேரிழ‌ந்த்தூர் தாஜூத்தீன், முதுவை ஹிதாய‌த், ர‌பீக் உள்ளிட்ட குழுவின‌ர் செய்திருந்த‌ன‌ர். ஊட‌க‌த்துறை ஏற்பாட்டினை முதுவைவிஷ‌ன்.காம் இணைய‌த்த‌ள‌ம் செய்திருந்த‌து.












































வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள பெயர்கள் சேர்க்க...

வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள பெயர்கள் சேர்க்க...

March 23-2009
நீதியின் குரல்


தமிழக தேர்தல் ஆணையத்தின் இணையத்தில் http://www.elections.tn.gov.in/pdfs/acwise_pdf.asp சென்று உங்கள் மாவட்டம் மற்றும் தொகுதி விபரங்களை அளித்து உங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியளை பார்வையிட்டு பெயர் விடுபட்டிருந்தால் உடனடியாக வாக்காளர் பட்டியளில் ‍சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கும் படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.



இணையத்திலேயே http://www.elections.tn.nic.in/forms.htm படிவங்கள் அணைத்தும் உள்ளன இணையிறக்கம் செய்து ‍கொள்ளவும்.



வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு 10 நாள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான விண்ணப்ப மனு கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் அளிக்கும் மனுக்களை பெற்று தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.


இதனால் வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி நெருங்கும் வரையில் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தங்கள் பெயரைச் சேர்க்கலாம்.