Thursday, January 8, 2009

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை

மேல்நிலைத் தேர்வில் 80% பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை
மத்திய அரசு உத்தரவு


சென்னை, ஜன.9: தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதாமாதம் உதவித் தொகை வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.

கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

மேல்நிலை வகுப்பில் 80 சதவிகித மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. மேல்நிலைப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரிகளில் டிகிரி படிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.1000 என 10 மாதங்கள் தரப்படுகிறது. முதுகலை மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 என இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இன்ஜினியரிங் படிப்பவர்களுக்கு 4வது மற்றும் 5வது ஆண்டுகளில் மட்டும் மாதம் ரூ.2000 வழங்கப்படும்.

விஞ்ஞானம், வணிகவியல் மற்றும் சமூகவியல் படித்தவர்களுக்கு 3:2:1 என்ற விகிதத்தில் வழங்கப்படும். மத்திய அரசின் இட ஓதுக்கீடு முறையான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர், இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்ற சாதியினர் என்ற இட ஓதுக்கீட்டில் உள்ள சதவிகிதங்கள் பின்பற்றப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை இணை இயக்குநர்(மேல்நிலை வகுப்பு), பள்ளிக் கல்வித் துறையில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இந்த மாதம் 28ம் தேதிக்குள் இணை இயக்குநருக்கே அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து உம்ரா ப‌ய‌ண‌ம் செய்ய‌..........

துபாயிலிருந்து உம்ரா ப‌ய‌ண‌ம் செய்ய‌..........

துபாயிலிருந்து உம்ரா ப‌ய‌ண‌ம் செய்ய‌ விரும்புவோர் கீழ்க்க‌ண்ட‌ உம்ரா ப‌யண முக‌வ‌ரை அணுக‌லாம்.

இன்ஷா அல்லாஹ் ர‌பியுல் அவ்வல் முத‌ல் ர‌ம‌ளான் மாத‌ம் இறுதி வ‌ரை ஒவ்வொரு மாத‌மும் உம்ரா செய்வ‌த‌ற்கு த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு டீல‌க்ஸ் ப‌ஸ், உண‌வு வ‌ச‌தியுட‌ன் த‌மிழ் வ‌ழிகாட்டியுட‌ன் பிர‌த்யோக‌ ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

ப‌ய‌ண‌த்தேதி ஹிஜ்ரி 1430 ர‌பியுல் அவ்வல் பிறை 21, 18.03.2009

மேலும் விப‌ர‌ங்க‌ள் அறிய‌ தொட‌ர்பு கொள்ள‌

டி.எம்.ஐ. அப்துல் ஸ‌லாம் 050 695 3197
டி.ஏ. மிஸ்பாஹுதீன் 050 5152721

தொலைபேசி : 04 2251047 / 04 2260252

அமீர‌க‌த்தில் வாழும் இந்திய‌ர்க‌ளுக்கு 2009 ல் ஹஜ் செய்ய‌ முன்ப‌திவு செய்ய‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா

மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா

விருதுநகர், ஜன.8.

இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், காந்தீயமும், நேருவின் பொருளாதாரக் கொள்கைகள்தான் உலக அளவில் நிலைத்து நிற்கக்கூடியவை என்று கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகமயமாதலில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசிய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.


ஸ்ரீவில்லி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இலக்கிய வட்டம் சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு பல்கலைக்கழக வேந்தர் தி.கலசலிங்கம் தலைமை தாங்கினார். துணை வேந்தர் டாக்டர் செல்லையாதங்கராசு, டாக்டர் எம்.ஜெயகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேணுகா வரவேற்புரையாற்றினார். சந்தியா நன்றி கூறினார். இந்து லட்சுமி அறிக்கை வாசித்தார். கருத்தரங்கில் உலகமயமாதலில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டாக்டர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் பேசும்போது கூறியதாவது இன்டர்நெட்டில் இந்த தலைப்புக்கு 2 கோடியே 22 லட்சம் அர்த்தமுள்ள சொற்றொடர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கணியன் ஞீங்குன்றனர் என்ற புலவர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறியதை அன்னை இந்திராகாந்தி ரஷியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது குறிப்பிட்டார். அதையே நேரு டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற தனது நூலில் குறிப்பிட்டார். மாணவர்களாகிய ஞிங்கள் உங்கள் கவனத்தை திசை திருப்பிச் செல்லும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஞிங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வல்லுநர்களாக மாற முடியும்.

உலகம் முழுவதும் உங்கள் திறமைகளை அறிவுக்கூர்மையை பயன்படுத்த நாடுகள் தயாராக உள்ளன. உலகில் உள்ள 193 நாடுகளில் 151 நாடுகள் உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் எந்த நாடும் எந்த நாட்டிலும் வாணிபம் செய்யலாம்.

பணத்தை வங்கியில் போடலாம். உங்கள் திறமையை 151 நாடுகளில் காட்டி முன்னேற முடியும். டெக்னாலஜிக்கு எல்லை கிடையாது. இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவிலும், சைனாவிலும் தான் மனித வலம் கொட்டிக்கிடக்கிறது. எனவேதான் இங்கிருந்து ஆட்களை வெளிநாடுகளுக்கு அழைத்துப்போகின்றன.

1995_ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு உருவானது. இன்டர்நெட் உலகில் வாழ்கிறீர்கள். சந்தையில் எது தேவைப்படுகிறதோ அதை உருவாக்குங்கள். வெளிநாட்டவர் இங்கே முதலீடு செய்கிறார்கள்.

உங்களுக்கு இங்கேயே நிறைய வாய்ப்புள்ளது. இப்போது வந்தது போல் பொருளாதாரப் பாதிப்பு சில துறைகளில் வரலாம். ஐ.டி. போல் நமது நாட்டில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நேருவின் பொருளாதாரக் கொள்கையும், காந்தீயக்கொள்கையும் தான் உலகில் நிலைத்து நிற்கும் சக்தி வாய்ந்தவை. நமது பொருளாதாரம் நல்ல ஸ்திரத்தன்மையோடு விளங்குகிறது. உள்ள இருப்பையும் சேர்த்தால் பல லட்சம் கோடி இருப்பு ஆதாரம் உள்ளது. நமது ரிசர்வ் வங்கி சட்டங்கள் பாதுகாப்பானவை.

இப்போதுதான் இதுபோல் (ஆர்பிஐ) நாமும் செய்யலாமா என்று அமெரிக்கா ஆய்வுசெய்கிறது. மிகப்பெரிய கம்பெனிகளுக்குத்தான் ரிஸ்க் அதிகம். நமது பொருளாதாரம் ஒரு மிக்ஸ்டு எக்கனாமி. இப்போதெல்லாம் எம்.பி.ஏ. வகுப்புகளில் யோகா, பகவத்கீதை போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே உலகமயமாதலில் உங்கள் பங்கு இந்த நாட்டிற்கு பயன்படுவதாக இருக்கட்டும் என்றார்.

விழா நிகழ்ச்சிகளை ராஜேஸ்சர்மா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரா.யவனராணி, டாக்டர் சக்திவேல் ராணி செய்திருந்தனர்.

சென்னை இன்றிய‌மையாத் தேவை தொலைபேசி எண்க‌ள்

சென்னை இன்றிய‌மையாத் தேவை தொலைபேசி எண்க‌ள்

சென்னை

மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் 2522 8025
மாவ‌ட்ட‌ வ‌ருவாய் அதிகாரி 2522 9454
ஆட்சிய‌ரின் நேர்முக‌ உத‌வியாள‌ர் ( பொது ) 2526 8323

வ‌ட்டாட்சிய‌ர்க‌ள்

த‌ண்டையார்பேட்டை 2538 8978
புர‌சைவாக்க‌ம் பெர‌ம்பூர் 2537 5131
எழும்பூர் நுங்க‌ம்பாக்க‌ம் 2836 1890
மாம்ப‌ல‌ம் கிண்டி 2489 164
ம‌யிலாப்பூர் திருவ‌ல்லிக்கேணி 2433 1291


காவ‌ல்துறை த‌லைமை இய‌க்குந‌ர் 2844 7777/2844 7755
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( ச‌ட்ட‌ம் ஒழுங்கு ) 2844 7799
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( நிருவாக‌ம் ) 2844 7705
காவ‌ல்துறை கூடுத‌ல் த‌லைமை இய‌க்குந‌ர் ( த‌லைமை அலுவ‌ல‌க‌ம் ) 2844 7706

தீய‌விப்புத்துறை இய‌க்குந‌ர் 2855 4156
தீய‌விப்பு க‌ட்டுப்பாட்டு அறை 2855 4176

தீய‌விப்பு நிலைய‌ங்க‌ள்

திருவான்மியூர் 2440 1213
கொருக்குபேட்டை 2554 4662
ஜெ.ஜெ.ந‌க‌ர் 2656 3629
கோய‌ம்பேடு 2479 2610
ஆளுந‌ர் மாளிகை 2235 4835
எழும்பூர் 2575 0633
ம‌ண‌லி 2594 1147
அத்திபட்டு 2795 0080

சென்னை பொது ம‌ருத்துவ‌ம‌னை முத‌ல்வ‌ர் 2530 5111
இருப்பிட‌ ம‌ருத்துவ‌ அதிகாரி 2530 5555

நூல் அறிமுக‌ம்

நூல் அறிமுக‌ம்

நூல் : இந்தியாவில் இஸ்லாமிய‌ இய‌க்க‌ம்
ஆசிரிய‌ர் : ஷேக் முஹ‌ம்ம‌து கார‌க்குன்னு
ப‌க்க‌ம் : 64
விலை : ரூ. 20
வெளியீடு : இஸ்லாமிய‌ நிறுவ‌ன‌ம் டிர‌ஸ்ட்
எண். 138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012

www.iftchennai.org

பொங்கல் வாழ்த்து"

பொங்கல் வாழ்த்து"

சோற்றிலே நாம் கை வைத்திட-
சேற்றிலே கால் வைத்து;
ஏற்றமுடன் ஏர் பிடித்து;
ஆற்றலுடன் தான் உழைத்திடும்
போற்றுதலுக்குரிய உழவர்களின்
உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க
இல்லத்தில் செல்வம் பொங்க
இனிவரும் காலமெல்லாம்
இனிய கரும்பாய் வாழ்வில் சுவை தங்க
சக்கரைப் பொங்கலாய்
எக்கணமும் இன்பமே பொங்கட்டும்....................!!!!!!!!!!!!

கவிதைப் பொங்கல் சமைத்து
"கவியன்பன்" கலாம் தருகின்றேன் வாழ்த்து.

-"kavianban"kalam, Adirampattinam
00971-50-8351499
shaickkalam@yahoo.com

Government of India has an online Grievance forum

Government of India has an online Grievance forum at http://www.pgportal.gov.in

Dont think like """Can you imagine this is happening in INDIA ? ""

I mistale lies with us, the people 75%..That we should agree open heartedly.....

The govt. wants people to use this tool to highlight the problems they faced while dealing with Government officials or departments like Passport Office, Electricity board, BSNL/MTNL, Railways etc.

Many of us say that these things don't work in India .
Couple of months back, the Faridabad Municipal Corporation laid new roads in his area and the residents were very happy about it. But 2 weeks later, BSNL dug up the newly laid roads to install new cables which annoyed all the residents. A resident used the above listed grievance forum to highlight his concern. To his surprise, BSNL and Municipal Corporation of Faridabad were served a show cause notice and the guy received a copy of the notice in one week. Government has asked the MC and BSNL about the goof up as it's clear that both the government departments were not in sync at all.

So use this grievance forum and educate others who don't know about this facility.
This way we can at least raise our concerns instead of just talking about the 'System' in India .

உண்மையான தேசத் தலைவர்

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.

கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.
உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”

பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”

பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்.

“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.

குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.. அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.
உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”. அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!

உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.
கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன். அதனால்தான்.”

வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.

மனிதர்களே!

இதனால் சகலமானவர்களுக்கும்’. புத்தகத்தின் முன்னுரை…

மனிதர்களே!

இருபத்தோராம் நூற்றாண்டின் கருக்கலில் நாம் இருக்கிறோம்.
இனி நம் பகலுக்குச் சூரிய வெளிச்சம் மட்டும் போதாது.
இந்த ஞாலம் துலங்க ஞாபதீபம் ஏற்றுங்கள்.
உதிரும் பழமைகள் உதிரட்டும்.
துளிர்க்கும் புதுமைகள் துளிர்க்கட்டும்.

ஆனால், பழமைகளை ஆவேசமாய்த் துறக்கும் அவசரத்தில் ஆடைகளையும் அவிழ்த்தெறிந்து விடாதீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் சிந்தி விழுகிற சிலமணி நேரங்களை அறிவுக்காகச் சேமியுங்கள்.
எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள்.

பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச் சங்கீதமில்லை.
துயரங்களை ஜீரணித்துவிடுங்கள்.

தங்கள் மீது விழும் வெயிலை ஜீரணிப்பதால்தான் மண்ணுக்கு நிழல் தருகின்றன மரங்கள்.
அவசரப்படாதீர்கள்

அங்கீகாரம் அவ்வளவு எளிதில்லை.
இங்கே மலர்களுக்குதான் முதல் மரியாதை.
வேர்கள் வெளிவருவதேயில்லை
தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல.
தென்னங்கீற்றின் வீழ்ச்சிதான் தென்னை மரத்தின் வளர்ச்சி.
சுறுசுறுப்பாயிருங்கள்.

ஓடிக் கொண்டேயிருக்கும் நீரில்தான் ஆக்சிஜன் அதிகம்.

எல்லோரையும் மதியுங்கள்.
சமுத்திரத்தில் எந்தத்துளி முதல் துளியோ -
எவருக்குத் தெரியும்.

உங்கள் பெருமைகளை நீங்கள் அல்ல -ஊர் பேசட்டும்.
பூக்களின் புகழ் பரப்பும் பொறுப்பைக் காற்றுதானே ஏற்றுக் கொள்கிறது.
இந்த உலகமென்னும் கிண்ணத்தில் இயற்கை இன்பத்தை மட்டுமே ஊற்றி வைத்திருக்கிறது.
மகிழ்ச்சி…மகிழ்ச்சி…மகிழ்ச்சியைத் தவிர இந்த விரிந்த பிரபஞ்சத்தில் வேறில்லை.
துன்பம் என்பது அறியாமை.
துன்பம் என்பது அறிவின்மை.
அறிவில் நிமிருங்கள்.
அன்பில் நெகிழுங்கள்.
உழைப்பில் உயருங்கள்.
பிறகு பாருங்கள்.

இந்தப்பூவுலகமே புறாச்சிறகடியில் கண்ணயரும் குஞ்சைப் போல உங்களுக்குக் கதகதப்பாய் இருக்கும்.

- வைரமுத்து