Thursday, July 10, 2008

ஷார்ஜா தப்லீக் மர்கஸில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு

ஷார்ஜா தப்லீக் மர்கஸில் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி சொற்பொழிவு


ஷார்ஜா தப்லீக் மர்கஸில் வாரந்தோறும் பல்வேறு மொழிகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.

வியாழன் மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹமது கீரனூரி சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார் என பரவலாக தகவல் கிடைத்ததும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் கூடத் தொடங்கினர். எனினும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழ் சொற்பொழிவு நிகழ்த்துவதற்குப் பதிலாக அரபி மொழியில் அரபியர்களுக்காக சொற்பொழிவு நிகழ்த்த பணிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஜமால் முஹம்மது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

வெள்ளிக்கிழமை காலை பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் மௌலவி கலீல் அஹ்மது கீரனூரி உரை நிகழ்த்தினார்கள். தியாகத்தின் மூலமே தீனை நிலைநாட்ட முடியும் என தனது உரையில் தெரிவித்தார்.

லெபனானின் தப்லீக் ஜமாஅத் சென்று இரண்டு மாதம் பணியாற்றிவிட்டு அமீரகத்தில் இரண்டு மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. லெபனானில் எழுநூரு வருட பழமை வாய்ந்த பள்ளியில் நடைபெற்ற தப்லீக் இஜ்திமாவில் பங்கேற்றனர்.

மேலும் இன்று வெள்ளிக்கிழமை மாலை அஸர் முதல் இஷா வரை நடைபெறும் நிகழ்ச்சியிலும் மௌலவி கலீல் அஹமது கீரனூரி உரை நிகழ்த்த உள்ளார்.