Sunday, January 3, 2010

நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)

நாளை நமதா? - ஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)


http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=208


நேற்று, 27.10.09 அன்று எனது முன்னாள் தமிழ் பேராசிரியருமும்-தற்போதைய ‘புதிய வாணிகம்’; ஆசிரியரான ஜனாப். முகம்மது ஹ_சைன் அவர்கள் தன் மகன் அப்துல் ரகீம் திருமணத்திற்கு அழைப்புக் கொடுப்பதிற்காக வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் கொடுத்த செய்தி அதிர்ச்சி தரும்படி இருந்தது. அது என்ன? தனது பத்திரிக்கைக்கு விளம்பரம் வாங்கச் செல்லும் போது 90 சதவீத முஸ்லிம்கள் வியாபாரியாகவே உள்ளனர். சுமார் பத்து சதவீதம் தான் உற்பத்தியாளர்களாகவும், தொழிழ் முனைவர்களாகவும் உள்ளனர் என்றார்.

அவர் சொன்ன தகவலை வைத்து எண்ண அலைகளை ஓட விட்டபின்பு-நம்மவர் சம்பாதிக்கச் சொல்லும் பழமொழி, “திரை கடலோடியும் திரவியம் தேடு” என்பது தான். ஆனால் அயல் மன்னில் சென்றவர்கள் படகு போன்ற கார்களில் பவனி வந்து-பங்களாக்களில் குடியிருப்பவர் சிலரே. நரம்பில் ஓடும் குருதியினை வேர்வையாக்கி வீடுகளில் கார் ஓட்டுதலும், கிளீனிங் வேலையிலும், கட்டிட வேலை, லிப்ட் ஆப்பரேட்டர், எலக்ட்ரிஷன், ஹோட்டல் சர்வர் போன்ற அடிமட்ட வேலை செய்யும் படிக்காத இளைஞர்கள் தான் அதிகம் என்றால் மிகையாகாது? நான் 1979 ஆம் ஆண்டு சிங்கப்பூர் சென்றபோது எனக்குத் தெரிந்தவர் ஒரு ஹோட்டலில் மீன் கழுவிக் கொண்டிருந்தார். பின்பு மலேசியா சென்றபோது இன்னொரு தெரிந்தவர் தனது தலைக்கு ஒரு தலையணை கூட இல்லாது உட்காரும் மரக்கட்டையினை வைத்து படுத்திருந்தார். இனனொரு நிகழ்ச்சி என்னை உண்மையிலே ஒரு கணம் உலுக்கி விட்டது. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஊரில் மலேசியா சபுர்ஆளி என்று பெருமையோடு வலம் வந்தவர்-அவர் சொந்த பந்தங்கள் எல்லாம் வசதியோடு வாழ்பவர்கள்;. அவருக்கு சுகர் வந்து ஒரு காலை முனங்காலுக்குக் கீழே எடுக்கப்பட்டதால் ஊருக்கு வருவதிற்கு கூச்சப்பட்டு வாழ்வதிற்காக ஒரு சாப்பிங் காம்ளக்ஸ் அருகில் கையேந்திக் கொண்டிருந்தார்.

அதே போன்று நான் 2001 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றபோது பிரிமாண்ட்டில் நான் கல்லூரி ஆசிரியனாக இருந்த அதிராம்பட்;;டணத்தினைச்சார்ந்த ஒருவரைச் சந்தித்தேன். அவர் பி.எஸ்.ஸி படித்தவர், மனைவியும் வசதியானக் குடும்பத்தில் பிறந்தவர். அவரிடம் என்ன வேலை செய்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர் அங்குள்ள உடுப்பி ஹோட்டலில் சர்வராக இருப்பதாகவும் ஆயிரம் டாலர் கொடுப்பதாவும் கூறினார். முனைவி வுற்புறுத்தலால் இந்த வேலை பார்ப்பதாகச் சொன்னார். இவைகளை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் மனிதனுக்கு மானத்தோடு வாழும் நம்பிக்கைக் குறையும் போது இது போன்ற பரிதாபமான நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தியாவில் கூட எத்தனையோ நபர்கள் ஊனமுற்றாலும் படித்து டாக்டர்-என்ஜினியர்-முதுகலை பட்டம் பெற்றுமு;-இன்னும் கூடை-சேர் பின்னும் தொழில் முனைவர்களாகவும் இருக்கும் போது நாம் நம்பிக்கை இழக்கலாமா? ஆகவே நம்பிக்கை பழமொழிகளான தன் கையே தனக்குதவி-உன்னால் முடியும் தம்பி-வாழ்க்கை ஒரு எதிர் நீச்சல் அதில் நீந்தி வந்தவன் தான் வாழ்வான் போன்றவைகளை வருங்கால இளைஞர்களுக்குப் போதிக்க வேண்டும்.


படித்த இளைஞர்களுக்கு உலகில் வேலை வாய்ப்பு வருங்காலங்களில் மிகவும் பிரகாசமாக இருப்பது கடிணம். இப்போது கூட துபாய்-சிங்கப்பூர் போன்ற இடங்களில் வேலை பார்த்த நமது இளைஞர்கள் வேலையின்றி ஊருக்கு வந்து வேலை தேடும் படலத்தினைத் தொடங்கி உள்ளனர். அவர்களுக்க நான் சொல்லுவதெல்லாம் ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலைப்படாமல் வாழ்ந்து கொள்’ என்பது தான. எங்கள் ஊர் இளையாங்குடியில் தோலில் மணிபர்ஸ், பைகள், கேன்வாஸ் சூட் கேஸ்கள் செய்யும் தொழில் குடிசைத்தொழில் போல இருந்தது. ஆனால் அவைகளையெல்லாம் எப்படி வெளிநாடுகளுக்கு போட்டிகளுக்கிடையே ஏற்றுமதி செய்வது என்ற வழிவகை தெரியாததால் அவைகளெல்லாம் நலிந்து விட்டன. ஆனால் அதே தொழிலை இன்று சென்னையில் செய்து வெளிநாட்டு ஏற்றுமதியினைப் பெற்றவர்கள் லாபகரமாக நடத்தி வருகிறார்கள் என்றால் மறுக்க முடியாது. திண்டுக்கல்லில் தோல்வியாபாரம் கொடிகட்டி பறப்பதினை அனைவரும் அறிவர். ஆனால் அதே தேலை பதப்படுத்தி செருப்புகளாகவும், ஸ_க்களாகவும், கைப்பைகளாகவும், சூட் கேஸ்களாகவும், பெல்ட்களாக செய்யும் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் யுக்தி வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விசாரம், பேரணாம்பேட், ராணிப்பேட்டை போன்ற ஊரில் உள்ளவர்கள் அறிந்து ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை கொடுப்பதோடுமட்டுமல்லாமல்-ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அன்னியச்செலவாணியை அள்ளிக் குவிக்கின்றனர். ஏன் அதே தொழிலை திண்டுக்கலில் இருக்கும் தோல் வியாபாரிகள் சிந்திக்கக் கூடாது.

ஊதாரணததிற்கு நாடார் ஜன மக்களை எடுத்துக் கொள்ளுங்கள. பழைய பேப்பர்கள்-இரும்புகள் வாங்க இரு சக்கர-மூன்று சக்கர வண்டிகளிலும் தெருத் தெருவாக அளைவதினைப் பார்க்கிறேம். ஆனால் அவர்கள் பழைய பொருட்களை வாங்குவதோடு நின்று விடுவதில்லை. அதனை தரம் பிரித்து பழைய பேப்பர்களை அட்டை செய்யும் இயந்திரத்தில் கொடுத்து அட்டைகளாக்கி விடுகின்றனர். பழைய இரும்புகளை உருக்கி-ஸ்டீல் பட்டறையில் கொடுத்து பாத்திரம் செய்யும் தொழிலும் ஈடுபட்டு தொழில் செய்கின்றனர். ஏன் அரேபியாவிற்கு நாம் பல்வேறு வேலைக்காகவும்-புனித கடமை நிறைவேற்றுவதற்காகவும் சென்று விதவிதமான பேரீத்தம் பலங்களை வாங்கி வந்து உற்றார்-உறவினருக்குக் கொடுத்து மகிழ்கிறோம். ஆனால் அதே பேரீத்தம் பழத்தினை இறக்குமதி செய்து தரம் பிரித்து பாக்கட்டிலும்-ஜூசாகவும் விற்பனை செய்யும் தொழிலையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

நான் அதிராம்பட்டிணக் கல்லூரியில் வேலையில் இருக்கும் போது எங்கு திரும்பினாலும் தென்னைத் தோப்புகளைக் காண்பேன். அதில் விளையும் தேங்காயை லாரிலாரியாக பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவர். ஆனால் தென்னை மரம் அதிகல்லாத தூத்துக்குடியில் தேங்காய் எண்ணெய் தயாரித்து பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் வி.வி.டி.தொழிற்சாலைகள் அதிகம். அதே தென்னை நாறுகளை கயிறுகளாகத் திரித்தும்-விரிப்புகளாவும்;-கால் மிதிகளாகவும் செய்யும் தொழில் ஈரோடில் அதிகம். அவைகளையே ஏன் அதிராம்பட்டிணத்தில் தென்னந்தோப்பு அதிபர்கள செய்து அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடாது? கடற்கரை ஊர்களில் மீன்-கருவாடு விற்கும் வியாபாரிகளாகத்தான் உள்ளனர். அந்த மீன்களை வெளிய+ர்களுக்கும்-கேரளா மாநிலம் போன்று அனுப்பாமல் அந்தந்த ஊர்களிலே ஏன் மீன் பதனிடும் ஆலை ஏற்படுத்தி அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கக்கூடாது. சீனாவில் ஒரு பழமொழி உண்டு. ‘பசித்தவனுக்கு வறுத்த மீனைக் கொடுக்காதே-மாறாக அவன் மீன் பிடித்து அதன் மூலம் வாழ்வு நடத்த ஒரு தூண்டில் முள் கொடுத்து மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடு’ என்று. ஆகவே பண்டிகை காலங்களில் தானம், தர்மம் செய்வதினை விட இது போன்ற தொழில்களில் அவர்களுக்கு வேலை கொடுத்து ஏழைகளுக்கு நிரந்தர வருமானத்தினைத் தரலாம்.

கோவை தொழில் அதிபர் ஜி.டி. நாயுடு ஒரு சாதாரண விவசாயி. அவர் எப்படி கார் மெக்கானிக் வேலை பார்த்து பலவேறு கார்-மோட்டார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழில் அதிபரானார் என்று அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒரு மருந்துக் கம்பெனி அதிபரானது பெரும்பாலானோருக்குத் தெரிந்திராது. ஒரு தடவை அவர் வயலில் உழுது கொண்டு இருந்தபோது லேபிலோடு கூடிய ஒரு மருந்து காலி பாட்டிலினைக் கண்டார். நாமாக இருந்தால் அதனை தூர எறிந்து விடுவோம். ஆனால் அவர் அதை எடுத்து அந்த மருந்துக் கம்பெனி விலாசத்திற்கு கடிதம் எழுதி அதனை தயாரிக்கும் உரிமமும் பெற்றார். ஏன் ஜப்பானியர் பொம்மை வியாபாரத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்றால்-தூக்கி வீசப்பட்ட காலி டப்பாவைக் கூட விடாமல் அதில் தங்கள் கை வண்ணங்களால் அவைகளை அனைவரும் ரசிக்கும் பொம்மைகளாக ஆக்கி விற்று விடுகின்றனர்.

எங்கள் ஊரைச்சுற்றி ஏராளமான அரிசி ஆலைகள் அதிகம். ஆனால் நெல்லிலிருந்து பிரிக்கப்படும் தவிடு-உமியினைக் கொண்டு ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை போன்ற மாவட்டங்களில் மாட்டுத் தீவணம், கோழித் தீவணம், ஆயில், சோப், வனஸ்பதி தயாரிக்கிறார்கள் என்பதினை சில காலங்களுக்கு முன்னர் தானே அறிவர். இருந்தாலும் இன்னும் தாங்களே அந்தத் தொழிலைத் தொடங்காது அவர்களுக்கு தவிடு, உமிகளை விற்கும் வியாபாரியாகவே உள்ளனர் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

முஸ்லிம்கள் வாழும் ஊர்களில் எழைகள். வுpதவைத் தாய்மார்கள் இட்லி, இடியாப்பம் சுட்டு விற்பதினையும், தோசை, இட்லி மாவாட்டி அதனை விற்வதினையும் அறிவோம். அதேபோன்று நமது தாய்மார்கள் மீன் மசாலா, கரி மசாலா, அப்பளம், ஊறுகாய் தயாரிப்பதில் சிறந்தவர்கள். ஆனால் அவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சக்தி மசாலா போன்ற நிறுவனம் ரெடிமிக்ஸ் உணவு பண்டங்களைத் தொடங்கி ஏன் நமது பெண்களுக்கு வேலையினைக் கொடுக்கக் கூடாது. சுய தொழில் தொடங்கக்கூட அரசு மானியம் அளிக்கப் படுகிறதே.

நம்மில் சிலர் பம்பாய், குஜராத், டெல்லி போன்ற நகரங்களில் ரெடிமேட் துணிகளை வாங்கி ஏற்றுமதியில் ஈடுபடுகின்றனர். ஏன் அவர்களே துணிகளாக வாங்கி தையல் இயந்திரங்களால் பெண்கள் உதவியால் தைத்து வெளிநாட்டுக்கு அனுப்பக் கூடாது. அதுபோன்று உற்பத்தியில் ஈடுபட்ட திருப்ப+ர் இன்று செல்வும் கொழிக்கும் நகரமாகத் திகழ்கிறதே. மும்பையில் ஆயல் தொழிலில் ஈடுபட்ட தன் தந்தையினை விட பல படிக்கு மேல் சென்று மின்பொருள் தயாரிக்கும் விப்ரோ நிறுவனத்தினை ஆஸிம் பிரேம்ஜி நிறுவி 2008-2009 ஆம் ஆண்டு 19 சதவீத லாபத்தினை ஈட்டி ரூபாய்1162 கோடி சம்பாதித்திருக்கிறார் என்றால் பாருங்களேன்.. என் கல்லூரி நண்பர் அமீர் அப்துல் காதர் கடந்த வாரம் தன் சொந்த ஊரான கீழக்கரை சென்று வந்தார் அவரை நலம் விசாரிக்கும் போது, அவர் சொன்னார.; தனதூரில் அறிவித்த மின்வெட்டு இரண்டு மணிநேரம்-அறிவிக்காத மின்வெட்டு பல தடவை என்றார். கடற்கரை நகரங்கள் காற்றும் வெயிலும் அதிகமாக இருக்கும். ஆகவே மின் பற்றாக் குறையினைப் போக்க ஏன் சோலார் கருவிகளை உற்பத்தி செய்து மின் விசிறி. வுpளக்கு, ஏன் மோட்டாரில் தண்ணீர் இறைக்கக் கூட வழிவகுக்கக் கூடாது. அரசே மானியம் வழங்குகிறதே. கடலூர் மாவட்டத்தில் காரியமங்கலம் என்ற ஊர் பஞ்சாயத்தின் மின் தேவைகளை சோலார் எனர்ஜி ழூலம் கிடைக்கப் பெற்ற இந்தியாவில் முதல் கிராம பஞ்சாயத்தாகத் திகழ்ந்து ஜனாதிபதியின் பரிசையும் தட்டிச்சென்றதே. பணம் படைத்தவர்கள் தான் மட்டும் இன்வெர்ட்டர், ஜென்ஜெட் போட்டுக் கொண்டு வாழ்வதினை விட்டு ஏழைகளுக்கும் உதவுமாறு செய்யலாமே1

நமதூரில் மாட்டு வண்டிகளிலும், தள்ளு வண்டுகளிலும் சுத்திகரிக்காத தண்ணீர் சப்ளை செய்வதைப் பார்க்கலாம். அதனால் பயோரியா போன்ற தண்ணீர் சம்பந்தமான நோய்கள் பரவ வழிகள் ஏற்படும். ஆகவே வாட்டர் சுத்திகரித்து பொதுமக்களுக்கு சப்ளை செய்யும் ஆலைகளை நிறுவலாம். நம்மில் சிமிண்ட் தொழில் அதிபர்கள் மானாமதுரை யாசின் சிமிண்ட்ஸ் போன்ற ஒரு சிலர் இருக்கலாம். ஆனால் அந்தத் தொழிலைத் தொடங்கிய ராம்கோ, இந்தியன் சிமிண்ட்ஸ், சங்கர் சிமிண்ட்ஸ் போன்றவர்களெல்லாம் சாப்ட்வேர் தொழில் இறங்கியள்ளனர். ஏன் அரசியல் வாதியாக இருந்து கல்வியாளராக மாறிய ஜேப்பியார் ரெடி கிராவல் மிக்ஸ் தொழில் செய்கிறார். நான் அதிராம்பட்டிணம் கல்லூரியில் வேலை பார்த்தபோது இருந்த தமிழ் பேராசிரியர் நாகர்கோவிலைச்சார்ந்தவர் அசன் அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் கன்யாகுமரி பகுதியில் மீன் பிடிப்பதிற்கான வலைகள் சென்னையிலிருந்து தான வாங்கினார்கள். ஏன் நாமும் அதேபோன்ற மீன் பிடி வலையினை தயாரிக்கக் கூடாது என்று யோசித்து மீன் வலை தயாரிககும் தொழில் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் தொடங்கியுள்ளேன்-அதில் அந்தப் பகுதியினைச் சார்ந்த 20 நபர்களுக்கு வேலை கொடுத்துள்ளேன்-அங்கிருந்து சென்னைக்கு விற்பனையும் செய்கிறேன் என்றார். அதேபோன்று சென்னை மின்ட் அரசு பிரஸ் எதிர்புறம் நர்சரி செடிகள் உள்ளதாக அறிந்து அங்கு செனறேன். அதனை நடத்தி வருபவர் முபீன் ராஜா என்ற 30வயது இளைஞர். அவரிடம் எப்படி இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்றேன். தான் தேனியைச் சார்ந்தவன் என்றும், நர்சரிச் செடிகள் வாங்கி விற்று வருந்ததாகவும், அதன் பின்பு அவை பெங்களுரிலிருந்து வரகிறது என்று அங்கே சென்றதாகவும். அங்கே சென்றால் நரசரி செடிகளெல்லாம் தமிழ்நாட்டில் ஒசூரிலிருந்து வருகிறது என்றும் அறிந்தேன். ஆககே ஒசூருக்கு சென்றதாகவும் அங்கே தளி என்ற இடத்தில் நர்சரி செடிகள் பயிடப்பட்டதினை அறிந்து அங்கேயே இரண்டு ஏக்கரை லீஸ் எடுத்து தானே நர்சரிச் செடிகள் பயிருட்டு இன்று மதுரை, தேனி, பெங்களுர், சென்னை போன்ற இடங்களில் நர்சரி கார்டன்கள் நடத்துவதாகச்சொன்னார்.(தளியினை லிட்டில் இங்கிலாந்து என்று ஆங்கிலேயர் அழைத்தார்கள் என்று நான் அங்கு எஸ்.பியாக இருந்தபோது அறிவேன்). இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேனென்றால் எந்தத்தொழிலும் கேவலமில்லை-அது சொந்தத்தொழிலாக அமைய வேண்டும். கருவாடு விற்ற காசு நாறாது என்பதினை அனைவரும் அறிவர். அதேபோன்று மாந்தோப்புகளை வைத்திருப்பவர்கள் மாம்பழங்களை விற்கும் வெறும் வியாபாரிகளாக அல்லாது-மாம்பழ ஜூஸ்-மாங்காய் ஊறுகாய் போன்றவைகள் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தயாரிப்பது போல தயாரிப்பில் ஈடுபடலாம். ஏன் வெறும் கார்ட்வேர் வியாபாரத்தினை காலங்காலமாக செய்யாது அந்தக் கார்டுவேர்-பெயின்ட் போன்றவைகளைத் தயாரிக்கும் தொழிலும் ஈடுபடவேண்டும்.

ஏன் வறண்ட மாவட்டங்களில் காட்டுக் கருவை முள்மரத்தினை வெட்டி கரிமூட்டம் போட்டு அதனை விற்பனைக்கு வெளிய+ர்களுக்கு அனுப்புவது அந்த மாவட்டத்தினைச் சார்ந்தவர்கள் அறிவர். ஆனால் அந்தக் கரியினை பயன்படுத்தி மின்சாரம்;, கிராபைட,; பென்சில் எழுதும் பொருளுக்கும,; மில்களுக்கு எரி பொருளாகவும் உபயோகிக்கிறார்கள் என்பதினை அறிந்தவர் சிலரே. மதுரையினைச்சார்ந்த ஓருவர் தெர்மல் எனர்ஜி சொலுசன் டிரங்க் பெட்டி போன்ற கரி அடுப்பினை கண்டு பிடித்துள்ளார். அதில் புகையே வராது என்ற தகவலும் உள்ளது. ஏன் அந்தப் பகுதியினைச்சார்ந்த நம்மவர் அதேபோன்ற தொழில்களில் ஈடுபடக்கூடாது? சிறிய தொழில் தொடங்குவதிற் டிக்(தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்) சிட்பி(சிறு தொழில் முன்னேற்ற வங்கி) போன்ற நிறுவனங்கள் பொருள் உதவி செய்கின்றனர். சில தொழில்களில் சப்சைடி என்ற அரசு சலுகைகளும்-ஏற்றுமதி பொருள்களுக்கு டிராபேக் என்ற சலுகைகளும் உள்ளன. உலகிலேயே சீனா நாடு 12 சதவீத ஏற்றுமதியினை எட்டி முதல் இடத்திலும் அதற்கு அடுத்த படியாக இந்தியா 10.8 சதவீத ஏற்றுமதியினையும் தொட்டு விட்டது.

இறைவன் நமக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுக்கவில்லை-மாறாக அந்தக் கைகளில் பத்து விரல்களையும் கொடுத்தது போல-மனிதன் முன்னேற்றம் அடைவதிற்கு பல வழிகள் உள்ளன. அவைகளில் பலருக்கு உதவக்கூடிய தொழில்களை அந்தந்த பகுதிற்கேற்ப ஆரம்பித்தால் நிச்சயமாக நாளை நமதாகாதா?

வருமுன் காப்போம்

அன்பு நண்பர்களுக்கு,
முன்னால் காவல்துறை அதிகாரியிடமிருந்து மிகவும் பயனளிக்கக்கூடிய அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.

அன்புடன்
அப்பாஸ் ஷாஜஹான்
செயலாளர்
ரியாத் தமிழ்ச் சங்கம்

Abbas Shajahan | Mobile: +966 50 528 2791

From: Mohamed Ali
Date: Fri, Nov 13, 2009 at 4:49 PM
Subject: crime and prevention


Assalamu allaikum
I am sending a write up about the crime scenerio which is happening around us in order to educte them to be carefull. I hope it will be useful to circulate to our brothers in overseas in India to beware of crimes and criminal. Good day

AP,Mohamed Ali

வருமுன் காப்போம்

4.11.09 ந்தேதி அனைத்து பத்திரிக்கைகளும் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியிட்டன. அது என்ன? நூறு கோடிக்கு மேல் முதலீடு கொண்ட ஹிந்துஸ்தான் நேசனல் தொழிற் நிறுவனத்தின் இயக்குனர் சஞ்சய் சோமானியை டெல்லி விமான நிலையத்தில் தன்னுடன் மும்பை விமானத்திற்காக காத்துக் கொண்டிருந்த எம்.கே. ப+ரி என்பவரின் ‘பிளாக் பெரி’ செல்போனை திருடி விமானத்தின் டாய்லெட்டில் ஒளித்து வைத்திருந்ததினை சி.சி.டி.வி; கேமரா மூலம் கண்டு பிடித்து கைது செய்துள்ளனர் எனபது அதிர்ச்சியாக இல்லையா?
5.11.09 ந்தேதி பத்திரி;கைகள் இன்னொரு அதிர்ச்சியான தகவலையும் தந்தன. ஏம.பி.ஏ பட்டதாரியான அனாமிக்கா ஜோசி தன் கனவருடன் பெங்களுரில.; வசித்து வருகின்றார் இருவரும் வௌ;வேறு கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஏழு மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. அதனை பராமரிக்க ஒரு பெண்ணை நியமித்திருந்தார்கள. காலையில் வேலைக்குச் சென்றால் அருவரும் மாலையில் தான் வீடு திரும்பும் மெக்கானிக்கல் வாழ்க்கை. ஒரு நாள் தாய் அனாமிக்கா சீக்கிரமே வேலையை முடித்து மாலையே வீட்டுக்கு வந்திருக்கிறாள். அப்போது வேலைக்காரி வீட்டில் உள்ள டி.வி. பெட்டிக்கு முன்பு அமர்ந்து வழக்கம் போல கண்ணீர் விடும் டிராமா சீரியழை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள். ஆனால் குழந்தையினைக் காண வில்லை. தாய் கேட்டதிற்கு வேலைக்காரி சரியான பதில் சொல்லவில்லை. உடனே அதட்டிக் கேட்டவுடன் அந்த வேலைக்காரி, ‘குழந்தையை தினமும் ரூபாய் 100க்கு வாடகைக்கு பிச்கை எடுப்பதிற்காக விட்டு சம்பாதிப்பதாகவும்’ சொல்லியுள்ளார். பதறிய தாய் குழந்தையினை மீட்டாள். அப்போது குழந்கை மயக்கத்தில் இருந்திருக்கிறது. விசாரித்ததில் அந்தக்குழந்தைக்கு பிச்சை எடுக்கும் போது மயக்க மருந்து கொடுத்து குழந்தை உடல் சவுகரியமில்லாதது போல் படுக்க வைத்து பிச்சை போடுபவர்கள்; மனம் இளகி அதிகமாக பிச்கை கொடுப்பதிற்கு வழிசெய்திருக்கிறார்கள்.
2) முதல் சம்பவம் எவ்வளவு வசதியில் வாழ்ந்தாழும் சிறுபொருளான செல்போனுக்காக தன் மான மரியாதை மட்டுமல்லாது பலர் வேலை செய்யும் பெரிய நிறுவனத்திற்கும் இழுக்கினைத் தேடித் தந்து விட்டார் சோமானி.
இரண்டாவது சம்பவம் பெற்ற சிறு பாலகனை பராமரிக்கக் கூட நேரமில்லாது பணத்திற்காக சுழன்று வருகின்ற நவீன உலகில் ஒரு வேலைக்காரி குற்றம் செய்ய உறுதுணையாக இருந்தது பரிதாபத்தின் காலகட்டம் எனறால் மிகையாகுமா?


மண்ணில் பிறக்கும் போது அனைத்துக் குழந்தைகளும் நல்லவர்களே. ஆனால் அந்தக் குழந்தைகளில் சிலர் வளரும்போது தங்கள் பழக்க வழக்கங்களாலும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளாலும், நவீன மோகம், நாகரீக வாழ்வு, கானல் நீரான காதல் போன்றவைகளால் ஈர்க்கப் பட்டு குற்றங்களில் தள்ளப் படுகின்றனர் இளைஞர்கள் என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு நேப்பிள் நாட்டு இளவரசி ஒரு தடவை லண்டன் நகருக்கு வருகை தந்தபோது ஒரு சூப்பர் மாரக்;கட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கேயிருந்த வேலைப்பாடு நிறைந்த ஒரு சில்வர் கரண்டி அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. உடனே அதனை எடுத்து தன் உள் பாவாடையில் ஒளித்துக் கொண்டு செல்வதினை சி.சி.டி.வி காட்டிக் கொடுத்து பிடிபட்டது கேவலமான செய்தியாகத் தெரியவில்லையா? ஆகவே தான் சில பழக்க வழக்கங்களால் குற்றங்கள் செய்வதினை சிலர் தொடர்கின்றனர். ஆகவே குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே அடுத்தவர் பொருளைத் தொடக்கூடாது, ஆசையும் வைக்கக்கூடாது என்று போதனை செய்ய வேண்டும்.
3) வீடுகளை கூட்டுக்குடும்பம், தனிக்குடித்தனம் என இரண்டாகப் பிரிக்கலாம். கூட்டுக்குடும்பங்களில் இருப்பவர்களிடையே கருத்து வேறுபாடு, பொறாமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவைகளினால் குற்றங்கள் நிகழ்கின்றன. உதாரணத்திற்கு சகேதர சகோதரிகளுக்குள்ளும், அவர்களுடைய குழந்கைகளுக்குள்ளும் உள்ள கருத்து வேறுபாடுகளினாலும் பழக்க வழக்கங்கினாலும் குற்றங்கள் நடக்கலாம். ஒருவருடைய நகையினையயோ-பணத்தினையோ எடுத்து மறைத்துக் கொண்டு அடுத்தவர் மீது பழிபோடும் சம்பவங்களினால் குடும்பக் குழப்பம் வந்த சம்பவங்கள் ஏராளம். அதுபோன்ற குற்றங்களை கண்டுபிடிக்க சிலர் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் துணையையும் நாடுகின்றனர். ஆனால் விலையுயர்ந்த பொடுட்களை பத்திரப்படுத்தி வைப்பதே ஒவ்வொருவரின் கடமையாகும். தங்கம் பவுனுக்கு ரூபாய் 12500க்கு விற்கும் போது அதனை பத்திரப் படுத்துவதிற்கு ஏன் ரூ 10000 செலவில் ஒரு திண்டுக்கல் இரும்புப் பெடடியினை அந்தக்கால வீடுகளில் வைத்து பராமரிப்பது போல நகைகளையும், ரூபாயையும் பாதுகாக்கக் கூடாது.. வங்கி லாக்கரில் நகைகளை வைக்க வேண்டுமென்றாலும் வருடத்திற்கு ரூபாய் 20000 செலவாகுமே!
4) விசேசங்களுக்கு அல்லது வெளியூர்களுக்குச் செல்லும் போது அருதிலுள்ளவர்களிடமோ அல்லது சொந்தக்காரர்களிடமோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களிளோ சொல்லி ‘லாக்குட் ஹவுஸ் ரிஜிஸ்டரில்’ பதிவு செய்து போலீஸ் பீட் போடச்சொல்லவேண்டும். அப்படிச் செல்பவர்கள் வீட்டில் ஒரு விளக்கினை எரியச்செய்ய வேண்டும.;. வீடுகளை பார்த்துக் கொள்ள வயதானவர்களை மட்டுமோ அல்லது தனியாக பெண்களயோ பார்த்துக் கொள்ளச் சொல்லி வெளியூர்களுக்குச் செல்வது அவர்களை குற்றவாளிகளுக்கு பலியாக்குவது போன்ற நடவடிக்கையாகும்.
நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற கள்ளிக்கோட்டை பல்கலைக்கழக வைஸ் சான்சிலர் மாலிக் முகம்மது அவர் மனைவி ஆகியோர் தனியான பங்களாவில் இருக்கும் போதே கொலை செய்யப்பட்டு அவர்கள் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட செய்தியினை நீங்களெல்லாம் படித்திருப்பீர்கள். அதேபோன்றுதான் அசோக் நகரில் வசித்த நான் மாநிலக் கல்லூரியில் படித்தபோது விக்டோரி விடுதி வார்டனாக இருந்தவரும், பின்பு மாநில அரசில் கனிதவள மேம்பாட்டு சேர்மனாக பதவி வகுத்தவருமான பேராசிரியர் சரவணன் மற்றும் அவர் மனைவியும் பங்களாவில் கொலை செய்யப்பட்டு அவர்கள் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆகவேதான் பெரியவர்கள் சொல்வார்கள், ‘வாழும் போது சுற்றம் சூழ வாழ்’ என்றால் அது எவ்வளவு சரியானது என்று அறியலாம்.
5) பல லட்சம் செலவு செய்து பலர் ரசிக்க அழகிய வீடுகளைக் கட்டுகிறோம். ஆனால் வீட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளான கதவு-ஜன்னல்களுக்கு கிரில் கேட் போடுவது, வெளி நபர்களை கண்காணிக்க தேவையான ஆடியோ-விசுவல் கேமரா மற்றும் சி.சி.டி.வி கேமரா போன்ற சாதனங்களை அமைக்க மறந்து விடுகிறோம். அவ்வாறு அமைப்பதின் பிரதிபலனை சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் இங்கே சொல்வது உகந்தது என எண்ணுகிறேன். ஒரு அமெரிக்கர் வேலை சம்பந்தமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச்சென்றார். அங்கே அவருக்கும் அந்த நாட்டு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செயது கொண்டனர். அமெரிக்கர் மட்டும் அமெரிக்கா திரும்பி தனது புது மனைவியினை அமெரிக்கா அழைக்க விசாவிற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இருவரும் தங்கள் அன்பை சி.சி.டி.வி. மூலம் பரிமாரிக் கொண்டனர். அவ்வாறு ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் தன் அமெரிக்க கணவர் வீட்டில் திருடன் ஒருவன் ஜன்னல் வழியாக நுழைவதினைக் கண்டார். உடனே தன் கணவரை உசார்படுத்தினார். அவரும் போலீஸ_க்கு தகவல் சொல்லி அந்தத் திருடனைப் பிடிக்க உதவி செய்தார் பல ஆயிரம் மைலுக்கப்பாலுள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு மனைவி என்றால் எப்படி சி.சி.டி.வி குற்றத்தினை தடுக்க உதவியாக இருக்கிறது என்பதினை நினைக்கும் போது நம் வீட்டிலும் அது போன்ற சாதனங்களைப் பொருத்தி குற்றங்களை ஏன் தடுக்கக் கூடாது.. 6) சில வசதி படைத்தவர்கள் வீடுகளில் போலீஸ்-கஸ்டம்ஸ்-இன்கம்டாக்ஸ்-என்போர்ஸ்மென்ட் அதிகாரிகள் என்ற போர்வையில் போலி ஆசாமிகள் வீடுகளில் நுழைந்து கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுவதினைக் காணலாம். சுpல கறுப்புப்பண ஆசாமிகள் அதனை காவல் நிலைத்திற்குச் சொல்லாததால் அவர்களின் குற்ற வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது அவ்வாறு வருபவர்களிடம் சோதனையிடுவதிற்கு முன்பு படித்த உறவினருக்கும், அருகிலுள்ள வக்கீலுக்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து அவர்கள் உண்மையான அதிகாரிகள் என்று தெரிந்த பின்பு நம்பிக்கையான சாட்சிகள் துணையுடன் தான் சோதனை போட அனுமதியளிக்க வேண்டும். அப்படி சோதனை போட்ட பின்பு அவர்கள் எடுத்துச்செல்லும் ஒவ்வொரு பொருளுக்கும் அவர்கள் கையெழுத்திட்ட ரசீது கேட்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.
7) படிக்கும் வளர்ந்த பிள்ளைகள் செயல்படும் முறைகளை கண்காணித்து அவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். அதிக நேரம் கம்ப்ய+ட்டரில் செலவழிக்கும் விதத்தினையும், செலபோனின் உரையாடலையும், எஸ்.எம்.எஸ்ஸின் பரிவர்த்தனைகளையும் அவைகளெல்லாம் உண்மையிலேயே அவர்கள் படிக்கும் படிப்பிற்கு அல்லது அவர்கள் பார்க்கும் பணிக்கு சம்பந்தப்பட்டதா என்றும் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அவர்கள் குற்ற பின்னணிக்கு திரும்பும் போக்கிற்கு நாமும் துணை போனவர்கள் ஆக மாட்டோமா? கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்-மாணவியர் புத்தகப் பைகளை சோதனையிட்டு தேவையில்லாத கடிதங்களோ-தகவல்களோ இருக்கிறதா என்று பார்த்து, அப்படி சோதனையில் தேவையில்லாத நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டால் அதனை தடுப்பது பெற்றோர்கள்-உடன் பிறந்தோர் கடமையாகும். இல்லையென்றால் அவர்கள் காதலென்ற மாயையில் வீழ்வதையும், போதை மருந்துக்கு அடிமையாவதையும், தீவிரவாத போதனைகளுக்கும் அவர்கள் பலியாவதை யாராலும் தடுக்க முடியாது..
8) என் கவனத்திற்கு வந்த இரண்டு தகவல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம் என நினைக்கிறேன்:
முதலாவது: சுமார் 10 வருடத்திற்கு முன்பு சென்னையில் எட்டாவது படிக்கும் வயதிற்கு வந்த முஸ்லிம் சிறிமிக்கு கல்ல}ரியில் முதலாமாண்டு படிக்கும் பையன் ஒருவன் காதல் கடிதங்களை அந்த அறியாத சிறிமிக்குக் கொடுத்து தன் காதல் வலையில் வுPழ்த்தி ஒரு நாள் காலையில் பள்ளிக்குச் சென்ற சிறுமி வீட்டுக்கு மாலை வரவில்லை. பெற்றோர் பதறியடித்துக் கொண்டு தேடாத இடமில்லை. இரவில் என்னிடம் தகவல் சொன்னார்கள். நானும் திருவல்லிக்கேனி காவல் நிலையத்தினை உசார் படுத்தித் தேடச் சொன்னேன். அவர்கள் நடு ராத்திரியில் போக வழி தெரியாமல் மெரினா பீச் லேபர் சிலையின் பின் பக்கம் உட்கார்ந்திருந்தது தெரிந்து அவர்களை அழைத்து வந்தார்கள். ஆனால் எந்த தவறும் நடக்குமுனபு சிறிமி மீட்கப்பட்டாள். அவளை விசாரித்த போது காலையில் பள்ளி செல்லும்போதே மாற்று உடையினை பள்ளி பேக்கில் எடுத்துச் சென்றது தெரிந்தது.
அடுத்தது: 1995 ஆம் ஆண்டு நான் போதை தடுப்பு கண்காணிப்பாளராக இருந்தபோது நடந்த சம்பவம். சேன்னை கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் மகன் ஜெகன் 1993 ஆம் ஆண்டு பி.டெக் படிப்பினை முடித்து விட்டு ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் பரீட்சை முதல்நிலையில் வெற்றி வெற்று முதன்மை தேர்வில் தோல்வியடைந்திருந்தான். பின்பு அவன் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் என்ஜினியராக வேலை பார்த்தான். அப்போது அவன் இலங்கை கூட்டாளிகளுடன் சேர்ந்து போதைக்கு அடிமையானான். தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அவன் சென்னை திரும்பி மறுபடியும் ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்ட்டரில் 1995 ஆம் ஆண்டு சேர்ந்தான. அவனுடைய தந்தை மகனுக்கு தன் வீட்டின் மேல் மாடியில் ஏ.சி, கம்ய+ட்டர், .இன்டர்நெட் வசதியையும் செய்து கொடுத்திருந்தார். ஆனால் மகன் அந்த அறையில் ஒழுங்காக பரீட்சைக்குப் படிக்கிறானா என்பதினை கவனிக்கத் தவறி விட்டார். எங்களுக்கு தேனாம்பேட்டையில் உள்ள ஒரு எஸ்.டி.டி. ப+த்திலிருந்து கெஹராயின் போதை பொருள் கடத்தப் படுவதாக அறிந்து அந்த ப+த்தினை தணிக்கை செய்யும்போது ஜெகனும் பிடிபட்டான். அவனை மறுபடியும் இலங்கை வாலிபர்கள் தொடர்பு கொண்டு போதைக்கு அடிமை ஆக்கியதோடு மட்டுமல்லாது போதைப் பொருள் கடத்துவதிற்கும் அவனை பயன்படுத்தியுள்ளனர். ஜெகன் வீட்டில் அவன் அறையினை தந்தையின் முன்பு சோதனையிட்டபோது தந்தையே ஆச்சரியப்படும் அளவிற்கு பெத்தடின், மர்ஜூனா என்ற போதை மருந்து ஊசிகளும், மது பாட்டில், சிகரட் போன்ற பொருள்களைப்பார்த்து தந்தை அதிர்ந்து விட்டார். ஆகவே தான் நான் குறிப்பிட்டது போல் மாணவர்கள், இளைஞர்களை தண்ணீர் தெளித்து விடாது அவர்களின் நல்ல நண்பர்களாக பெற்றோர்-உடன் பிறந்தோர் இருந்து வழிநடத்த வேண்டும். தவறு செய்வதினை ஒரு போதும் கண்டிக்கத் தவறக்கூடாது. எப்படி சீனி அதிகமாக சாப்பிட்டால் சீக்கிரத்தில் சக்கரை நோய்க்கு நம்மை தொற்றிக் கொள்கிறதோ-தங்க ஊசியானாலும் கண்ணில் குத்திக் கொள்வதில்லையோ அதேபோன்று பெற்றோரோ அல்லது பாட்டி-பாட்டனாரோ இளைஞர்களுக்கு செல்லம் கொடுப்பது எதிர்கால வாழ்வினை பாழடித்துவிடும.;.
9) தனிக்குடித்தனம் இருக்கும் தம்பதியினர் தங்களுடைய துணைக்கு பெரியோர்களை வைத்துக் கொள்வது நல்லது. அவ்வாறு இல்லையெனில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக மேற்கொள்வது சாலச் சிறந்ததாகும்.
வீட்டில் அத்யாவசிய வேலைகளுக்கு வருகின்ற கார் டிரைவர், பிளம்பர், கார்பெண்டர், பெயிண்டர், பால், பேப்பர், குடிதண்ணீர,; கேஸ் ஆகியவைகளை வினியோகிப்பவர்களை வீட்டின் கதவிலுள்ள ‘மேஜிக்’ ஐயின் வழியாக பார்த்துத்தான் அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கும்போது அவர்கள் வேலையினை முடித்து விட்டு வெளியேறும்வரை அவர்கள் குற்றம் செய்ய வந்திருக்கிறார்கள் என்ற மனப்பான்மையினை உருவாக்;கி அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும் வரை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்தக் காரணத்தினையும் கொண்டு அவர்கள் குடிக்க தண்ணீர் கேட்கிறார்கள் என்று வீட்டின் ஹாலுக்குள் அனுமதிக்கக் கூடாது. ஏன் கூடாது என்று இரண்டு சம்பவங்கள் கொண்டு விளக்க விரும்புகிறேன்.
முதலாவது: 1997ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தினைச் சார்ந்த கீழக்கரை தொழில் அதிபர் தன் மகள் திருமணத்திற்காக வீட்டில் மெசைக் தரை பாலிசிங்கிற்கு விட்டு விட்டு பக்கத்து உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். பாலிஸ் போடுபவர்களை தன் டிரைவரை வைத்து கவனிக்கச் சொல்லியிருந்தார். ஒரு வாரம் பாலிஸ் நடந்தது. ஒரு நாள் தற்செயலாக பீரோவில் உள்ள கல்யாண நகை பத்திரமாக இருக்கிறதா என்று பார்த்தபோது அந்த நகைகளைக் காணாது அதிர்ச்சியடைந்தார். உடனே என் உதவியினை நாடினார். நானும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் சொல்லி விசாரிக்கச் சொன்னேன். போலீசாரும் வீட்டின் உரிமையாளரின் கார் டிரைவர் மற்றும் அங்கே பாலிஸ் போடுபவர்களை அழைத்து விசாரித்தார்கள். ஆனால் வீட்டின் உரிமையாளர் தன் டிரைவரை விசாரிக்க வேண்டாம் அவன் பல வருடங்களாக வேலை பார்ப்பதாகவும்-நல்லவன் என்றும் சொன்னார். கடைசியில் போலிஸ் விசாரணையில் அந்த டிரைவர் தான் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பீரோவில் இருந்த நகைகளை எடுத்துள்ளான். அத்துனை நகைகளும் மீட்டு அவருக்கு கொடுக்கப்பட்டது. திருமணமும் சிறப்பாக அமைந்தது என்று அவர் சொன்னார். அவர் உங்களை திருமணத்திற்கு அழைத்தாரா என்று கேட்பீர்கள். இல்லை என்று சொல்வதுடன்; அது தான்.மனிதர்களின் நன்றி-காவலர் கடமையுமாகும் என்பேன்.
இரண்டாவது: இரண்டு மாதங்களுக்கு முந்தைய சம்பவத்தினையும் உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். பெங்களுரில் வேலை பார்க்கும் சுப்ரமணியம் என்பலர் தன் இரண்டு பிள்ளைகள் படிப்பிற்காக தன் மனைவி அன்னலட்சுமியையும், குழந்தைகளையும் சென்னை வளசரவாக்கத்தில் விட்டிருந்தார். ஒருவர் அவர்களுக்கு அப்பப்ப உதவி செய்வது போல அந்தப் பெண்மனி வீட்டிற்கு வந்திருக்கிறார். ஒரு நாள் அந்தப் பெண்மனி பாங்கிலிருந்து ருபாய் நாற்பது ஆயிரம் செலவிற்காக எடுத்து வீட்டில் வைத்திருக்கிறார் என அறிந்து அதனை அபகரிக்க தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த வீட்டிற்கு வந்து அந்த பெண்மனியை மட்டும் கொல்லாது அவள் சிறிய மகனையும் கொன்று பணத்தையும் எடுத்துக் கொண்டது மட்டுமல்லாது அவள் அனிந்த நகைகளையும் அபகரித்து தப்பி விட்டார்கள. பின்பு அவர்கள் பிடிபட்டு செலவு போக மீதப் பணமும் நகையும் மீட்கப்பட்டது. மேலே சொல்லப்பட்டவை சில எடுத்துக்காட்டு தான். இது போன்ற சம்பவங்கள் ஏராளம்.
பேண்கள் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் தனியாக இருக்கும்போது தற்காப்பிற்கு தேவையான மிளகாய் பொடி பாக்கட், சிறிய அரிவாள், உருட்டுக் கட்டை போன்ற உபகரணங்களை தங்கள் கண்ணுக்குப் படும் அளவிற்கு வைத்துக் கொள்ளவேண்டும். இரவில் வீட்டில் திருடர்கள் நுழையும் அறிகுறி தெரிந்தால் உடனே லைட்டைப் போடாமல் அபாய ஒலியினை எழுப்பக்கூடிய காலிங் பெல்;;;;லையோ, ஒலிப்பானையோ, காரின் ரிமோட் ஒலிப்பானையோ உபபோகித்து ஒலி எழுப்பி மற்றவர்களை அழைக்க வேண்டும். தெரிந்தவர்களுக்கு தொலைபேசியிலும் தகவல் கொடுக்கவும். அவசர போலீஸ_க்கு போன் போடவும் தயங்கக் கூடாது. தங்கள் கற்புக்கு களங்கம் ஏற்படும்போது எதிரியின் உயிர் உறுப்பில், நெஞ்சில், கண்ணில், முனங்காளில்; தன் கை, கால்களை உபயோகித்து பலமான காயங்கள ஏற்படுத்த ஆண்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போது தான் பெண்கள், ‘வருமுன் காக்கும்’ பயிற்சியினை பெற்றவர்களாவர.; குழந்தைகளிடம் பள்ளியில் இருக்கும்போது உங்கள் பெற்றேர் ஆக்ஸிடண்ட் ஆகி விட்டார்கள் அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறார்கள் உன்னைக் கூட்டிக் கொண்டு வரச்சொன்னார்கள் என்று அறிமுகமில்லாதவர் கூப்பிட்டால் பள்ளிக் கூடத்தினை விட்டு செல்லக்கூடாது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் பிள்ளைகளை கூட்டிச் சென்று நகைகள அபகரித்து விடுவார்கள்.

பஸ், மோட்டார் சைக்கிள், கார், ரயில், விமானம் போன்ற பயணங்களில் ஏற்பட்டும் குற்றங்கள் அதற்கான தற்காப்பு நடவடிக்கைகளினைக் காணலாம்:
நகரங்களில் பஸ்ஸில் பயணம் செல்வது ‘நைட்மேரிஸ்’ (திக்குமுக்காடும்) செயல் என்றால் மிகையாது.. ஏனென்றால் நகரங்களில் கூட்ட நெரிசல் ஒரு பக்கமிருக்கும்போது மறுபக்கம் பிக்பாக்கட் திருடர்களின் அட்டூழியம் தாங்கமுடியாது.. பிக்பாக்கட் அடிப்பவர்கள் பெரும்பாலும் ஒன்றுக்குமேற்பட்டவர்கள் தான் வருவார்கள. அவர்கள் நீங்கள் வைத்திருக்கும் பணத்தினையும். புர்சினையும் பஸ்ஸில் ஏறும்போதோ அல்லது பஸ்ஸில் நிற்கும்போதோ உங்கள் மீது உராய்வதின் மூலம் அறிந்து கொண்டு தங்கள் வாயினுள்ளோ அல்லது கையிடுக்கினுள்ளோ வைத்திருக்கும் பிளேடினை உபயோகித்து பேண்ட், சர்ட், கைப்பையில ஓட்டை போட்டு பணத்தினையும் நகைகளையும் எடுத்து தன் கூட்டாளிகளிடம் கொடுத்து தப்ப விடுவார்கள். அதேபோன்று பெண்கள் குழந்தைகளுடனோ, தனியாகவோ உட்கார்ந்து இருக்கும் போதோ நின்று பயணம் செய்யும் போதோ பெண்திருடர்கள் மூலம் சங்கிலி, சரடு, பிள்ளைகளின் கொழுசு ஆகியவைகளை திருடிவிடுவார்கள். நாம் அபாயக்குரல் எழுப்பினால் வாயில் போட்டு முழுங்குவதுடன், தங்கள் ஆசனவாய்-பெண்உறுப்பில் கூட கண்டு பிடிக்காத அளவிற்கு மறைத்து விடுவார்கள். ஆகவே பணத்தினை கொண்டு செல்பவர்கள் தங்கள் உள்ளாடையில் மறைத்தும்-நகைகளை தாவணிகொண்டு கழுத்தில் மறைத்தலும் வேண்டும். அதேபோன்று அந்தியரிடம் தங்கள் உடமையினைக் கொடுத்துவிட்டு பாத்ரூமுக்கோ, ஹோட்டலுக்கோ, தெரிந்த நபரிடமோ பேசிக்ககொண்டு இருந்தால் உங்கள் உடமையினை நீங்கள் இழக்க நேரிடும்.
ரயில் பயனங்களில் செல்லும்போது தங்களுடைய பெட்டிகளை இணைப்புச் சங்கிலியால் ப+ட்டிவிடபேண்டும். விலையுயர்ந்த பொருட்கள்-பணம் இருந்தால் தங்கள் கையிலேயோ-தலைமாட்டிலோ வைத்து படுத்துக் கொள்ளவேண்டும். அறியாதவர் கொடுக்கும் உணவுப்பொருட்களை எந்தக் காரணம் கொண்டும் வாங்கிச் சாப்பிடுவதோ அல்லது குடிப்பதோ கூடாது. ஏனன்றால் மயக்க மருந்தினை தடவிய சாப்பாடு-அல்லது குடிக்கும் பானங்களைக் கொடுத்து குடிக்கச் சொல்லி நீங்கள் மயங்கிய நிலையில் உங்கள் உடமைகளை அபகரித்து விடுவார்கள். பிரான்சு நாட்டு சக்கரவர்த்தியாக திகழ்ந்த நெப்போலியன் போன்பார்ட் போரில் தோல்வியடைந்து சிறைப்பட்ட சமயத்தில் அவனுக்கு உணவில் சிறுக சிறுக அர்சனிக் விசம் கொடுத்து அதனால் சாவு ஏற்பட்டது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம். உங்கள் செல்போனையோ-கடிகாரத்தையோ-மணிபர்சையோ-பேனாவையோ திருடர்கள் கண்படி நம் படுக்கை அருகேயுள்ள பலகையில் வைக்க வேண்டாம். நான் 5 மாதத்திற்கு முன்பு என் துணைவியுடன் இளையாங்குடி சென்று விட்டு ராமேஸவரம் எக்பிரஸ் ரயிலில் சென்னைக்கு ஏ.சி. கோச்சில் பயணம் மோற்கொண்டேன். என் கோச்சில் இராமநாதபுரம் எம.எல்.ஏ அசன்அலியும் பயனம் செய்தார். அவர் இரவு வெகுநேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சத்தம் எங்களுக்குக்கேட்டது.. அதிகாலை ஆறு மணிக்கு ரயில் தின்டிவனத்தினை தாண்டும் போது அவசரமாக என்னை எழுப்பி, ‘ சார் என் இரண்டு செல்போன்களை இரவு உணவுப்பொருள்-தண்ணீர் வைக்கும் மரப்பலகையில் வைத்திருந்தேன,; அவை விலையுயர்ந்தது என்றும் அவைகளைக் காணவில்லை என்றும் பதறினார். நாங்கள் ரயில் பெட்டியின் அடியில் தேடினோம் கிடைக்கவில்லை. டி.டி.இ மற்றும் ரயில்வே காவலர் உதவி கொண்டும் உடன் பயணம் செய்தவர்கள் பெட்டிகளில் தேடினோம் அப்போதும் கிடைக்கவில்லை. அப்போதுதான் ரயில் அட்டண்டன்ட் சொல்கிறான் நேற்றும் இதுபோன்று செல்போன் திருடு போனதாக. பின்;பு அவர் டி.டி.இடம் ஒரு எழுத்துப்ப+ர்வமான புகார் கொடுத்துதோடு சரி இதுவரையும் கண்டு பிடிக்க முடியவில்லையென்று சில தினங்களுக்கு முன்பு அவரை சந்தித்தபோது சொன்னார். திருடுகிறவனுக்கு பதவியெல்லாம் கண்ணுக்குத்தெரியாது. அவன் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பான். பேண்கள் கழிவறைக்குச் செல்லும்போது கண்டிப்பாக ஆண்கள் துணைக்குச் செல்லவேண்டும். ஏனென்றால் சில ஆண்கள் சில்மிசம் வேலை செய்வார்கள். அத்துடன் சில திருடர்கள்-டிக்கட் எடுக்காதவர்கள் டாய்லெட்டில் ஒளிந்திருப்பார்கள். பெண்கள் சென்றதும் அவர்களை மயக்கம் வருமளவிற்கு காயம் ஏற்படுத்தி பொருட்களை அபகரித்து ரயிலிலிருந்து குதித்து தப்பித்து விடுவர்.
மோட்டார் சைக்கிளில் பயணம் செல்லும்போது பணம், நகையுள்ள கைப்பைகளை ஹோண்ட்பாரில் தொங்கவிட்டுக் கொண்டு சென்றால் வழிப்பறிக் கொள்ளையர் பறித்துக் கொண்டு ஓடுவதிற்கு சுலபமாகி விடும். ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் தான் பணம் கொண்டு செல்பவர் செல்லவேண்டும். அத்துடன் உங்கள் கவனத்தினை வேறு பக்கம் சிறு ரூபாயினையோ-நரகளையோ போட்டு திருப்பி உங்கள் பொருளை அபகரிக்க முடியும். வங்கியில் பணபரிமாற்றத்தினை அன்னியர் அறியும் படி செய்யக்கூடாது. உங்கள் சேமிப்பில் எவ்வளவு பணம் இருக்கிறது என்றும் அடுத்தவர் அறியக்கூடாது. ஏனென்றால் உங்களைக் கடத்தி அல்லது உங்கள் கிரிடிட் கார்டை பயன்படுத்தி பேங்கிலிருந்து பணம் எடுத்து விடுவர். நீங்கள் வாகனங்களில் செல்லும்போது உங்கள் வண்டியினைத் எந்த வாகனமும் பின் தொடர்கிறதா என்று சைடு கண்ணாடியில் பார்க்க வேண்டும். அப்படி பின்தொடர்ந்தால் உடனே கூட்டம் நிறைந்த பகுதிக்கோ-காவல்நிலைய பகுதிக்கோ உங்கள் வண்டியினை திருப்பிச் செல்லவேண்டும். விமானப்பயணங்களில் உங்கள் ஹேண்ட் லக்கேஜினை உங்கள் பார்வையிலே வைத்துக் கொள்ளவேண்டும் இல்லையென்றால் உங்கள் ஹேண்ட்பேக்கில் உங்களுக்குத் தெரியாமல் தடைசெய்யப்பட்ட பொருட்கள் வைக்கப் படலாம். வுpமான பயத்திற்கு முன்பு யாராவது ஒரு பையினைக் கொடுத்து தெரிந்தவர்களிடம் கொடுத்து விடுங்கள் என்றால் நன்றாக அறிமுக ஆனவரிடம் மட்டும் தான் அதுவும் அவர் பையினை சோதனையிட்டு தடைசெய்யப்பட்ட பொருள் ஏதுவுமில்லை என்றால் தான் வுhங்கவேண்டும். இல்லையெனில் பாவம் அவர் பக்கமும்-பழி உங்கள் மீதும் விழுவதினை நீங்கள் தடுக்க முடியாது. அது போல விமான நிலையத்தில் இறங்கி உடன் இரவோடு இரவாக டாக்ஸயினைப் பிடித்து ஊர்போய் சேரவேண்டும் என முயற்சிக்காதீர்கள். ஏனென்றால் அறிமுகமில்லாத டாக்சியில் செல்லும்போது உங்கள் பொருட்கள் கொள்ளையடிக்கப் படலாம். ஏன் உங்கள் உயிருக்குக்கூட ஆபத்து நேரலாம். நீங்கள் அவ்வாறு அவசரமான காரியங்களுக்கு ஊர் செல்லவேண்டுமென்றால் விமான நிலையத்தில் இயங்கும் லைசன்ஸ் பெற்ற டாக்ஸிகளை அமர்த்திக் கொள்ளலாம். இல்லையென்றால் ஏதாவது லாட்ஜிலோ அல்லது தெரிந்தவர்கள் இல்லத்திலோ தங்கி செல்வதுதான் சாலச்சிறந்ததாகும்.
திருமண வைபவங்களுக்குச் செல்லும் போது தங்களுக்கும்-தங்கள் குழந்தைகளுக்கும் அடுத்தவர் தங்கள் செல்வகொழிப்பை அறிந்து கொள்ளவேண்டும் என்று ஏராளமான நகையறிந்து வருவதைப் பார்க்கலாம். அதனால் இல்லாதவர் மனதிலும் குற்ற நடவடிக்கைக்கு தூபம் போடும் காரியத்தில் அவர்களை ஈடுபடுத்தும் நிலைக்குத் தள்ளுவோம். விசேச நிகழ்ச்சிகளில் அறிமுகமில்லாத நபர்களிடம் அதிக பேச்சில் ஈடுபடக்கூடாது. நகையணிந்த பெண்களோ அல்லது குழந்தையோ தனியாக பாத் ரூமுக்கு அனுப்பக்கூடாது. ஏனென்றால் அவ்வாறு தனியாக நகையணிந்த 5 வயது சிறிமிளை பாத்ரூம் காட்டுகிறேன் என்று அறிமுக மில்லாதவர் எழும்ப+ர் இம்பீரயல் ஹோட்டலில் பைஸ் மஹாலில் உள்ள பழைய பொருட்கள் வைத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்று அந்தச் சிறிமியின் காதனி-சங்கிலியினைப் பறித்து விரட்டிவிட்டதும் நடந்திருக்கிறது. அது என் கவனத்திற்கு வந்தபோது நான் எழும்ப+ர் காவல்நிலையத்தில் சொல்லி கண்காணிக்கச் செய்தபோது இதுபோன்ற திருமண வைபங்களில் நகை பறிக்கும் 45 வயது ஆணை கைது செய்தனர்.; ஏன் எங்சள் ஊரின் அருகேயுள்ள சாலைய+ரில் சுமார் 35 வருடங்களுக்கு முன்பு கோல்ட் கவரிங் சங்கிலி அணிந்து தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டே வயதான சிறுமியின் கழுத்தினை நெரித்துக் கொன்று அருகிலுள்ள வைக்கோல் போரில் ஒளித்து விட்டு கவரிங் சங்கிலைக் தங்கமெனக் கருதி கொள்ளை யடித்த பெண் ஒருவர் பின்பு பிடிபட்டு தண்டிக்கப் பட்டார.; ஆகவே இதனை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
நீங்கள் நடந்து செல்லும்போதோ-வாகனத்தில் பயணம் செய்யும்போதோ உங்களை கடத்தி உங்களுக்கு ஆபத்து ஏற்பட முற்படலாம். ஆகவே வாக்கிங் செல்லும்போது விடிந்த பின்பு எல்லோராலும்; உபயோகிக்கும் பாதையில் துணையுடன் செல்லவேண்டும். 2001 ஆம் ஆண்டு கடைசியில் சென்னையில் அதிகாலையில் தனியாக வாக்கிங் சென்ற முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே. பாலன் சென்றபோது வாகனத்தில் மடக்கி கடத்தி சென்று கொல்லப்பட்ப பரபரப்பான செய்தியினை அனைவரும் அறிவர். வாக்கிங் செல்லும்போது வாக்மேன், ஐ போன் போன்றவைகளை உபயோகித்து மிய+சிக் கேட்டுக் கொணடோ அல்லது செல்போன் பேசிக் கொண்டே சென்றால் உங்களை கடத்துவது சிரமமில்லை என நினைக்க வேண்டும். உங்கள் வாகனத்தினை மறித்து ஏதும் வண்டி வந்து நின்றால் உடனே வண்டி சைரனையோ அல்லது டோர் ரிமோட் கண்ட்ரோலை இயக்கியும், அதிக சப்தம் எழுப்பி உங்கள் உதவிக்கு அபாயக் குரல் எழுப்பலாம். நீங்கள் கடத்தப்படும் நேரம் சில நிமிடங்களேயானதால், நீங்கள் முடிந்த மட்டும் அவர்கள் உங்களைக் கடத்தாமல் கைகளாலும்-கால்களாலும் உதைத்துப் போராட வேண்டும்.
குற்ற சம்பவங்கள் நடந்தபின்பு எவ்வாறு சினிமாவில் வரும் காட்சிகளை ஒன்று விடாது அடுத்தவரிடம் விவரிக்கிறோமோ அதேபோல குற்றம் சம்பந்தமான விவரங்களை நம் கண்முன் நிறுத்தி ஒன்று விடாமல் காவல் துறையினருக்குச் சொல்லுவதின் மூலம் குற்றவாளிகளை பிடிக்க நீஙகள் பெரிதும் உதவுவீர்கள். குழந்தைகள,; பெரியோர்களிடம் தெரிந்தவர், அவசர போலீஸ் ஆகிபோருக்கு எப்படி போன் செய்யது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆங்கிலத்தில், ‘பிரிவன்ஸன் இஸ் பெட்டர் தேன் கீய+ர் என்பார்கள்’ குற்றம் நடந்த பின்பு காவல்துறையினர் பின்னால் பொருள் செலவித்து அலைவதினை விட குற்றம் நடவாது தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதின் மூலம் வுருமுன் நம்மைக் காப்போம் என்று அனைவரும் சூழுரைப்போம்.