Tuesday, December 2, 2008

தியாகத் திருநாள்

தியாகத் திருநாள்;
ஹஜ்ஜுப்பெருநாள்
வாழ்த்து கவிதை


"தீயகம் களைவதே தூயநற் றியாகம்;
ஐயமில் அன்பெனில் அதுவே நியாயம்"-
என்றே உணர்ந்து ஏகனை வணங்கி;
ஒன்றே மைந்தரை ஓரிறைக் கிணங்கி
அறுத்திடத் துணிந்தனர்; அருமை பக்தி
பொறுத்தனர் புதல்வர்- பொறுமை சக்தி

இச்சை துறந்து; இம்மை மறந்து
ஹஜ்ஜை நாடி அருளைத் தேடி
கூடிடும் மக்கள் கோடானு கோடி
பாடிடும் "தல்பியா" பரவசம் ஒலிக்கும்
தேனினும் இனிய "தக்பீர்" முழக்கம்
காற்றினில் கலந்து காதுகட்கு எட்டும்-
போற்றிடும் பெருநாளில் பெருமகிழ்வு திக்கெட்டும்

இனித்திடும் இன்னாளின் இனியநல் வாழ்த்து;
கனியினும் இனிதாய் கவிதையாய்க் கோர்த்து........

-கவியன்பன்கலாம்

லெமூரியாக் கண்டம்.

லெமூரியாக் கண்டம்.

கடலில் மூழ்கிப் போன பண்டைத் தமிழகத்தின் நீளம் மட்டும் 2000 கல் தொலைவு எனலாம். அன்றைய குமரி முனைக்குத் தெற்கிலிருந்து, குமரியாறு வரை அமைந்த நிலப்பகுதி நீரில் மூழ்கிற்று அதனால்தான், அந்த ஆற்றின் பெயர் எஞ்சிய நிலப்பரப்பின் இறுதிக்குப் பெயராகக் குமரிமுனை என வருகிறது.

மேலும் விவரங்களுக்கு:

http://unarvukal.com/lofiversion/index.php?t1380.html

http://www.thule.org/lemuria.html


message from
minjamal@gmail.com