Showing posts with label புதுக்கோட்டை. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை. Show all posts

Sunday, April 26, 2009

மாறாத சொந்தம் !

மாறாத சொந்தம் !
கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, புதுக்கோட்டை

சிந்தனையில் தேன் சுரக்க
செந்தமிழின் மேலினிக்க
வந்தருளும் நாயகமே
வழிபார்க்கும் வையகமே!


முன்யாரும் கண்டதுண்டா
முஹம்மதரைப் போன்றவரை?
பின்னேனும் அவர்போலாம்
பேறுடையார் எவருமுண்டா?


ஓரழகு! சீரழகு!
ஒப்பில்லாப் பேரழகு!
யாரழகு முஹம்மதினும் –
யாதான போதிலுமே?

சொல்லழகு செயலழகு
சோர்வறியாத திறமழகு!
நல்லழகு மாதிரிபோல்
நானிலத்தில் ஏதழகு?

பொறுமைக்கோர் இலக்கணமாய்,
புகழுக்கும் இலக்கியமாய்
வறுமையிலும் செம்மையுடன்
வழிகாட்டும் வாழ்வழகு!

புண்சிரிப்போ முழுநிலவு!
பூப்போன்ற மென்மைமுகம்!
கண்பார்வை, அருள்வெள்ளம்
காண்பவர்கள் தமைவெல்லும்!

முத்தொளிரும் பல்தெரிய
முறுவலுடன் அவர்திருவாய்
சத்தியத்தைப் பேசிடுமே!
சாந்தஒளி வீசிடுமே!

அடியெடுக்கும் நடைநேர்த்தி
அணிந்திருக்கும் உடைநேர்த்தி
வடிதேனாம் அவர்மொழிகள்,
வையகத்தில் தனிநேர்த்தி!

கண்ணியத்தின் சின்னமவர்
கஸ்தூரி வாசமவர்
பொன்பொதிந்த வெள்ளியெனப்
பொலியும் அவர்திருமேனி!

குற்றங்கள் கூறாதார்
குறைகூறிப் பேசாதார்!
மற்றெவரே ஆனாலும்
மதிக்கின்ற மாண்பாளர்!

சொர்க்கத்தின் மாமன்னர்!
சோபனங்கள் கூறுபவர்!
வர்க்கமெனும் மானுடம்நாம்,
வைத்திருக்கும் மணிமகுடம்!

மாறாத சொந்தமிவர்
மறவாத பந்தமிவர்
ஆறாத துயரினிலும்
ஆறுதலாம் அண்ணலிவர்

ந‌ன்றி : ம‌ணிச்சுட‌ர் த‌மிழ் நாளித‌ழ்

Sunday, July 13, 2008

அமீரகத்தில் அடி, உதையுடன் பணிபுரியும் தமிழக இளைஞர்

அமீரகத்தில் அடி, உதையுடன் பணிபுரியும் தமிழக இளைஞர்

புதுக்கோட்டை அருகேயுள்ள ஊரைச் சேர்ந்தவர் ஷேக் முஹைதீன். பணியின் நிமித்தமாக ரூ.50,000 செலுத்தி கடந்த மாதம் பல்வேறு கனவுகளுடன் துபாய் வருகை புரிந்தார்.

இவர் 50,000 ரூபாய்க்காக தனது சகோதரியின் நகைகளை வட்டிக்கு வைத்து பயணச்செலவைக் கட்டியுள்ளார். வட்டிக்கு வட்டி ஏறிக்கொண்டு போகிறது. இவரது பணி ஈரானி ஒருவர் நடத்தும் குறைந்த விலைக்கடையில்.

துபாயில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உம்முல் குவைனில் வெல்ட் கிஃப்ட் டிரேடிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வேலை நேரம் காலை 7 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை. பின்னர் 2.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை. சில நேரம் வேலை சரிவர செய்வதில்லை என அடிப்பது. வெள்ளிக்கிழமை கூட சரியான நேரத்திற்கு தொழுகைக்கு செல்ல அனுமதிப்பதில்லை.

ஒரு மாத காலமே ஆன இவர் திடீரென விசாவைக் கேன்சல் செய் எனக்கூறியதும் சரி போ. பணம் கிடைக்காது என்றார். குடும்ப சூழலின் காரணமாக அடி,உதையினை தாங்கிக் கொண்டு இத்தகைய துன்பத்தை அனுபவித்து வருகிறார் தமிழக இளைஞர் ஷேக் முஹைதீன். இவர் பணிபுரிந்து வரும் நிறுவன தொடர்பு எண் : 06 764 7114 / 050 3352515


இதனைப் படிக்கும் தமிழ் அமைப்புகள் இவருக்கு உதவ முன்வருமா ?