Sunday, February 28, 2010

10 Principles for Peace of Mind

10 Principles for Peace of Mind

1. Do Not Interfere In Others' Business Unless Asked:
Most of us create our own problems by interfering too often in others' affairs. We do so because somehow we have convinced ourselves that our way is the best way, our logic is the perfect logic and those who do not conform to our thinking must be criticized and steered to the right direction, our direction. This thinking denies the existence of individuality and consequently the existence of
God.. God has created each one of us in a unique way.
No two human beings can think or act in exactly the same way. All men or women act the way they do because God within them prompts them that way. Mind your own business and you will keep your peace.

2. Forgive And Forget:
This is the most powerful aid to peace of mind. We often develop ill feelings inside our heart for the person who insults us or harms us. We nurture grievances. This in turn results in loss of sleep, development of stomach ulcers, and high blood pressure. This insult or injury was done once, but nourishing of grievance goes on forever by constantly remembering it. Get over this bad habit. Life is too short to waste in such trifles. Forgive and Forget, and march on. Love flourishes in giving and forgiving.

3. Do Not Crave For Recognition:
This world is full of selfish people. They seldom praise anybody without selfish motives. They may praise you today because you are in power, but no sooner than you are powerless, they will forget your achievement and will start finding faults in you. Why do you wish to kill yourself in striving for their recognition? Their recognition is not worth the aggravation. Do your duties ethically and sincerely.

4. Do Not Be Jealous:
We all have experienced how jealousy can disturb our peace of mind. You know that you work harder than your colleagues in the office, but sometimes they get promotions; you do not. You started a business several years ago, but you are not as successful as your neighbor whose business is only one year old. There are several examples like these in everyday life. Should you be jealous? No.
Remember everybody's life is shaped by his/her destiny, which has now become his/her reality. If you are destined to be rich, nothing in the world can stop you. If you are not so destined, no one can help you either. Nothing will be gained by blaming others for your misfortune. Jealousy will not get you anywhere; it will only take away your peace of mind.

5. Change Yourself According To The Environment:
If you try to change the environment single-handedly, the chances are you will fail. Instead, change yourself to suit your environment. As you do this, even the environment, which has been unfriendly to you, will mysteriously change and seem congenial and harmonious.

6. Endure What Cannot Be Cured:
This is the best way to turn a disadvantage into an advantage. Every day we face numerous inconveniences, ailments, irritations, and accidents that are beyond our control. If we cannot control them or change them, we must learn to put up with these things. We must learn to endure them cheerfully. Believe in yourself and you will gain in terms of patience, inner strength and will power.

7. Do Not Bite Off More Than You Can Chew:
This maxim needs to be remembered constantly. We often tend to take more responsibilities than we are capable of carrying out. This is done to satisfy our ego. Know your limitations. . Why take on additional loads that may create more worries? You cannot gain peace of mind by expanding your external activities. Reduce your material engagements and spend time in prayer, introspection and
meditation. This will reduce those thoughts in your mind that make you restless. Uncluttered mind will produce greater peace of mind.

8. Meditate Regularly:
Meditation calms the mind and gets rid of disturbing thoughts. This is the highest state of peace of mind. Try and experience it yourself. If you meditate earnestly for half an hour everyday, your mind will tend to become peaceful during the remaining twenty-three and half-hours. Your mind will not be easily disturbed as it was before.
You would benefit by gradually increasing the period of daily meditation. You may think that this will interfere with your daily work. On the contrary, this will increase your efficiency and you will be able to produce better results in less time.

9. Never Leave The Mind Vacant:
An empty mind is the devil's workshop. All evil actions start in the vacant mind. Keep your mind occupied in something positive, something worthwhile. Actively follow a hobby. Do something that holds your interest. You must decide what you value more: money or peace of mind. Your hobby, like social work or religious work, may not always earn you more money, but you will have a sense of fulfillment and achievement. Even when you are resting physically, occupy yourself in healthy reading or mental chanting of God's name.

10. Do Not Procrastinate And Never Regret:
Do not waste time in protracted wondering " Should I or shouldn't I?" Days, weeks, months, and years may be wasted in that futile mental debating. You can never plan enough because you can never anticipate all future happenings. Value your time and do the things that need to be done.
It does not matter if you fail the first time. You can learn from your mistakes and succeed the next time. Sitting back and worrying will lead to nothing. Learn from your mistakes, but do not brood over the past. DO NOT REGRET. Whatever happened was destined to happen only that way. Why cry over spilt milk?.

Saturday, February 27, 2010

அமைதி மட்டும் கானல் நீராய்.....

அமைதி மட்டும் கானல் நீராய்.....

எல்லா நாட்டிலும் குழந்தைகள்
பள்ளிக்குச் செல்லும்...
நாங்கள் மட்டும் மருத்துவமனையிலே!!


எழுதி படிக்க ஆசைதான் - ஆனால் எங்களுக்கு
எழுதவே கரம் இருக்காது!!


கல்வி ஞானத்தை நெஞ்சில் சுமக்க ஆசைதான்;
ஆனால்;
முந்திக்கொண்டு இடம்பிடித்துவிடும்
துப்பாக்கி தோட்டாக்கள்!!


அமைதி மட்டும் கானல் நீராய்
எங்கள் தேசத்திற்கு;
மாற்று வழி என்ன இந்த தோஷத்திற்கு?


அனைத்து கொடுமைகளையும்
அசராமல் பார்க்கும் அரபுலகம்;
உயர்ந்த கட்டிடத்திற்க்கு உண்டு நிதி- எங்கள்
உயிருக்கு மட்டும் இதே கதி!!


எங்களுக்கு இங்கே நிலமுண்டு
ஆனால் இடமில்லை !!
தப்பிச் செல்ல வழியில்லை - காரணம்
தடுத்து நிறுத்த மதிலுண்டு!!


பால் இல்லை;
படுக்க இடமில்லை;
அரவணைக்க அன்னை இல்லை;
தாவிக்கொள்ள தந்தை இல்லை;

எல்லாமுண்டு இஸ்லாத்தில்
கொடுக்கதான் எவருமில்லை;



- யாசர் அரஃபாத்

போர்வைக்குள் புகுந்து அழ!!

போர்வைக்குள் புகுந்து அழ!!


வசிக்கும் அறையினில் ஒருவர்
மாற்றி ஒருவர் சமைத்தாலும்
வரவில்லை உன் கை ருசி!!

அறையினில் களைப்புடன் வருவதால்
எரிச்சலுடன் சமையல் ;
காணாமல் போகும் பாசம்!!

கொதிகலனில் இருக்கும் என் இதயமோ
கொதித்துக் கொண்டிருக்க
உன்னை நினைத்துக் கொண்டிருக்க!!

மணமாகி மூன்று வருடத்தில்
இரண்டு மாதம் மட்டுமே நாம் இருவராக!!

எத்தனையோ முறை
உறக்கத்தில் உளறல்
உன் பெயரினை!!

தெரிந்தாலும் நகைப்பதில்லை என் நண்பர்கள்...
ஒவ்வொருவரின் மனதிலும்; ;
நாமும் உரைத்திருப்போமோ மறந்து!!

புதியதாய் கற்றுள்ளேன்
போர்வைக்குள் புகுந்து அழ!!

கசங்கிய இதயமும்
கசக்கிய கண்ணீருடன்
தண்ணீருக்காக எழுந்தேன்;
அத்துனை நண்பர்களின் முகமும் போர்வைக்குள்;

குலுங்கிய போர்வைக் கண்டு
எண்ணிக்கொள்வேன் நான்,
அவர்கள் இத்யம் மட்டும் என்ன
இரும்பினாலா உள்ளது!!!

- யாசர் அராஃப்த்
itzyasa@gmail.com

சுதந்திரம் பறிபோகிறது...?

தலையங்கம்: சுதந்திரம் பறிபோகிறது...?

27 Feb 2010

மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.
விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில்
ஈடுபடுகிறார். இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?
முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.

இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?
பாரதியின் பாஞ்சாலி சபதம்தான் நினைவுக்கு வருகிறது. ""கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல்போலும்...''

Thanks : Dinamani
சீச்சீ... சிறியர் செய்கை!

நாம் ஒருவருக்கொருவர் ...........

நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்

Wednesday, February 24, 2010

Media Mentor

Media Mentor is going to organize a free discussion seminar for entrance examination to IIMC, Jamia, IP (DU), Delhi University, M.L. Chaturvedi and all premier institutions (Journalism) on Saturday ( 27-02-2010) at 9.30 to 11.30 am.

Address- 28A/11, First floor,
(DIAS Premise), Jia Sarai,
Near IIT , New Delhi-16

For More Details Please Call - 9013500130

Interested Candidates Are Welcome To The Seminar

தமிழ் முஸ்லிம் பிரபலங்கள்.. Tamil Muslim Personalities

தமிழ் முஸ்லிம் பிரபலங்கள்.. Tamil Muslim Personalities

அன்பு சகோதரர்களே!

சமுதாயத்தில் உள்ள அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்கள் இணையத்தில் தேடும் பொழுது கிடைப்பது இல்லை. எனவே தங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் பற்றிய விபரங்களை தெரிவியுங்கள்..

குறிப்பாக தமிழ் முஸ்லிம் பத்திரிகையாளர்களின் விபரங்கள் பெயர், முகவரி, தொலைபேசி, மின் அஞ்சல், பனி புரியும் பத்திரிகை நிறுவனத்தின் பெயர் போன்ற விபரங்களை ஆவணபடுத்துங்கள்.

இணைய தளத்தை சமுதாயத்தின் வளர்சிக்காக பயன்படுத்துவோம்..



Rajaghiri Gazzali
www.rajaghiri.net
gazzalie@yahoo.com

Application form for Post Metric Scholarship for Muslim Minority

Application form for Post Metric Scholarship for Muslim Minority.


The last date for submission is extended,it' s now on 2nd march 2010.

For more details please visit the website http://www.dirhe. org.in/

Documents Required :
1. One copy of passport size photograph should be pasted on application form with across signature.
[ To be pasted on the Application Form. Do not attach seperate additional photo.]
2. Attested certificates of educational qualification as filled up in para 11.
[ para 11 displayed on Application Form.]
3.Income declaration - affidavit on non-judicial stamp paper of Rs. 10/- or revenue stamp of Rs.10/-and income certificate from the employer, if applicable.
4. Proof of permanent residence.



Note : Please fill the form and send it to address below or you can submit it to your respective schools/colleges. ....

Contact Details :



Director, Higher Education
Central Building,
Pune - 411001 M.S. (India)



Phone No. : 020-26130627
020-26051512
020-26122119
Fax No. : 020-26111153



Email : info@dirhe.org. in

job website

job website

www.akalinfosys.com
www.amkette.in
www.captronicsystems.com(freshers also apply)
www.aspiresys.com
www.compuageindia.com
www.qmaxtest.com
www.zensoftservices.com
http://recruitment.rolta.com

"காத்தமுன்" நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்.............

"காத்தமுன்" நபி(ஸல்) மீது காதல் கொண்டேன்.............

குர்- ஆன் என்னும் பேருரைக்கு
கோமான் நபிகள் வாழ்வேப் பதவுரையாம்
பெருமான் நபிகள் பிறந்ததினாலே
பேதமை யாவும் மறைந்தனவே
ஒருநாள் உலகம் முடிவு பெறும்;
உண்மைகள் அன்று விடிவு தரும்!!
வருநாள் மறுமையின் திண்ட்டாட்டத்திலே
வள்ளல் நபிகளின் மன்றாட்டத்தினாலே
தருவான் அல்லாஹ்வும் நிழலாகவே
தன்னிருக்கை அருகில் அழகாகவே
ஒருமுறை கனவில் தந்தீர் தரிசனம்;
உண்மையில் அதென் வாழ்விலோர் அதிசயம்!!!
மறுமுறை மீண்டும் வரவேண்டும் என்றே
மன்றாடிக் கேட்கின்றேன் இன்றே


-"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
00971-50-8351499
shaickkalam@yahoo.com
kalamkader2@gmail.com
adiraikalam@rediffmail.com

DIABETIC?

DIABETIC?

FINALLY GOOD NEWS FOR ALL DIABETICS
A woman (65) was diabetic for the last 20+ years and was taking insulin twice a day,
she used the enclosed homemade medicine for a fortnight and now
she is absolutely free of diabetes and taking all her food as normal including sweets ............................

The doctors have advised her to stop insulin and any other blood sugar controlling drugs.
I request you all please circulate the email below to as many people as you can and
let them take the maximum benefit from it.


AS RECEIVED :


DR. TONY ALMEIDA (Bombay Kidney Speciality expert ) made the extensive
experiments with perseverance and patience and discovered a successful treatment for diabetes.
Now a days a lot of people, old men & women in particular suffer a lot due to Diabetes.

Ingredients:
1 - Wheat flour 100 gm
2 - Gum(of tree) (gondh) 100 gm
3 - Barley 100 gm
4 - Black Seeds (kalunji) 100 gm

Method of Preparation Put all the above ingredients in 5 cups of water.
Boil it for 10 minutes and put off the fire. Allow it to cool down by itself.
When it has become cold, filter out the seeds and preserve the water in a glass jug or bottle.

How to use it?
Take one small cup of this water every day early morning when your stomach is empty.
Continue this for 7 days. Next week repeat the same but on alternate days. With these 2 weeks of treatment you
will wonder to see that you have become normal and can eat normal food without problem.

Water: A necessary requirement for us

Water: A necessary requirement for us

The human body is a water machine‚ designed primarily to run on water and minerals. Every life giving and healing process that happens inside our body… happens with water. In just the last decade medical science has begun to focus more on the tremendous healing ability our body has and how much that ability depends on water. Our body instinctively knows how and strives to sustain youthful longevity‚ and in its every effort… water is the key.

The human body is made up of over 70% water. Our blood is more than 80%‚ our brain … over 75%‚ and the human liver is amazing 96% water!

The function of every cell in our body is controlled by electrical signals sent through our nervous system from the brain. Our nerves‚ in reality‚ are an elaborate system of tiny waterways. If the fluid inside our nerves thickens due to dehydration‚ or is contaminated with synthetic chemicals or toxic heavy metals like lead‚ the vital signals can get distorted. Many experts now believe that the distortion of these signals may be the root cause of many degenerative diseases and neurological illnesses like Attention Deficit Disorder‚ Chronic Fatigue Syndrome‚ anxiety‚ depression and even Alzheimer’s disease

Considering the major role that water plays in the function of our brain and nervous system‚ its purity is possibly the most basic and essential key to healthy longevity. Proper digestion and nutrient absorption depend on a healthy intake of water. In order for our body to get the nutritional value from our foods and supplements‚ we must consume plenty of good water. Since sugars and carbohydrates are absorbed more rapidly‚ even a slight degree of dehydration can cause us to get the caloric intake without the nutrition from the foods we eat.

Our energy level is greatly affected by the amount of water we drink. It has been medically proven that just a 5% drop in body fluids will cause a 25% to 30% loss of energy in the average person… a 15% drop in body fluids causes' death! Water is what our liver uses to metabolize fat into useable energy. It is estimated that over 80% of our population suffers energy loss due to minor dehydration. An increased intake of healthy water will help metabolize and shed stored fat… resulting in more energy and less fat.

Detoxification is probably the single most important component to long-term health… and one that relies almost exclusively on an adequate intake of good water. Water is our body’s only means of flushing out toxins‚ the key to disease prevention. In our industrialized‚ chemical society‚ we are exposed to literally hundreds of harmful substances daily. Our air‚ our foods and everything we touch… contain traces of harmful chemicals. Unfortunately we can’t keep toxins from getting into our body‚ but we can help our body to get rid of them by drinking plenty of healthy water. The more water we drink… the more we allow our body to purify itself. Almost all-degenerative disease is the result of toxins building up in our body.
The quality of the water we drink is equally as important as the amount. If water already contains chlorine and other chemicals‚ it has less of an ability to carry toxins out of our body. If we consume water that contains traces of synthetic chemicals‚ then we force our liver and kidneys to be the filter… ultimately damaging or destroying two of our most vital organs. With an abundant intake of clean‚ healthy water we allow our body to perform all the healing processes that it is naturally capable of.

Tuesday, February 23, 2010

saad maulana

saad maulana

http://www.banglakitab.com/TongiIjtima/TongiIjtema2009/A-Friday-AfterMaghrib.mp3

all bayans
http://www.banglakitab.com/ijtima.htm

ameerali2005@gmail.com

A new blog on Seerah

A new blog on Seerah

Assalamu Alaikum

Happy to tell that i have released a new blog exclusively on Seerah in this month of rabi ul awwal.

http://www.muhammad-theideal.blogspot.com/

plz find time to browse it.

jazakallah.

Muqith

Tuesday, February 2, 2010

தமிழ் முஸ்லிம் பிரபலங்கள்.. Tamil Muslim Personalities

தமிழ் முஸ்லிம் பிரபலங்கள்.. Tamil Muslim Personalities

அன்பு சகோதரர்களே!

சமுதாயத்தில் உள்ள அரசியல் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், விளையாட்டு வீரர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் பற்றிய விபரங்கள் இணையத்தில் தேடும் பொழுது கிடைப்பது இல்லை. எனவே தங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் பற்றிய விபரங்களை தெரிவியுங்கள்..

குறிப்பாக தமிழ் முஸ்லிம் பத்திரிகையாளர்களின் விபரங்கள் பெயர், முகவரி, தொலைபேசி, மின் அஞ்சல், பனி புரியும் பத்திரிகை நிறுவனத்தின் பெயர் போன்ற விபரங்களை ஆவணபடுத்துங்கள்.

இணைய தளத்தை சமுதாயத்தின் வளர்சிக்காக பயன்படுத்துவோம்..



Rajaghiri Gazzali
www.rajaghiri.net

ஜமாதே இஸ்லாமியின் முதல் மாநில மாநாடு - ஒரு கள தொகுப்பு

ஜமாதே இஸ்லாமியின் முதல் மாநில மாநாடு - ஒரு கள தொகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

1941 துவங்கப்பட்ட ஜாமாதே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தில் தனது முதல் மாநில மாநாட்டை கடந்த வாரம் திருச்சியில் நடத்தியது, ஒரு நேரடி கள தொகுப்பு

சிறப்பம்சங்கள்

1. பெண்களே அதிகம் காணப்ட்டணர் (3:1), பெண்கள் 3 மடங்கு என்றால் ஆண்கள் 1 மடங்கு.

2. மேடையில் ஆண்களுக்கு சமமாக பெண் தலைவர்களையும் அமரவைத்தது, இது வரை தமிழகத்தில் நடந்த இஸ்லாமிய மாநில மாநாடுகளில் இதை கண்டதில்லை.

3. இடம் மிக பெரியது, தஞ்சை வல்லம் மாநாட்டைவிடவும், தாம்பரம் மாநாட்டு திடலைவிடவும் பெரியது.

4. மாநாட்டிற்க்கு வருபவர்கள் ஓய்வெடுப்பதெற்க்கென்றே மிக பிரம்மான்டமான இரண்டு அரங்குகள். (வல்லம் மாநாட்டில் இது மிஸ்ஸிங்.). பெண்கள் ஓய்வெடுக்கும் அரங்கு ஆண்கள் அரங்கைவிட பெரியது.

5. நெரிசலை குறைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட தனி மெயின் ஸ்டேஜ். மெடின் ஸ்டேஜ் அலங்காரமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. முதியவர்களுக்கென தனி இடம், பெண்கள் பகுதி ஆண்கள் பகுதியை விட பெரியது.

6. வருபவர்கள் ஒவ்வருவருக்கும் உணவு கூப்பன் (6 வேளை உணவு) ரூ.125 என வழங்கப்பட்டது. கூடவே ஒரு பிளேட், ஒரு டம்ளர்.

7. கழிப்பிட வசதி : ஆண்கள் பகுதியில் 300 டாய்லெட், 250 பாத்ரூம் .

8. கண்காட்சி : பீஸ் கண்காட்சி அளவிற்க்கு பெரியதாகவும், தகவல் உடனும் இருந்தது. (பீஸ் அளவிற்க்கு அலங்காரமாக இல்லை). பெண்களுக்கென தனி நேரம் , ஆண்களுக்கென தனி நேரம். கண்காட்ட்சியில் பெண் உரிமை சம்மந்தமாக பல பிரிவுகள்.

9. இலவச குடி தண்ணீர் இல்லை, (இருந்திருந்தால் தெரியும் படி இல்லை) குடிக்க கடையில் தான் வாங்க வேண்டும் 3 பாக்கெட் தண்ணீர் ரூ.5.

10. உணவு ஸ்டால்கள் ஏராளம், விலை நடுத்தரமான விலை, சில புத்தக கடைகளும் இருந்தன. (கடைகளுக்காக ஒதுக்கப்பட்ட இடமும் மிக பெரியது, நடுவில் ஓய்வெடுக்க தனி இடம்)

11. எங்குபார்த்தாலும் SIO ( Student Islamic Organization) மயம்.

12. தமுமுக, ததஜ , தவ்ஹீத் சார்ந்த அமைப்புகளை சேர்ந்த சகோதரர்களை காண முடிந்தது. உருது மொழியிலேயே அதிகமாக காதில் விழுந்தது.

13. தண்ணீர் பிரச்சனை இருக்கத்தான் செய்தது

அரங்க மைப்பு : ஒரு மெயின் ஸ்டேஜ், (ஆண்கள் பகுதி, பெண்கள் பகுதி). கண்காட்சி அரங்கம், ஓய்வெடுக்க மொத்தம் நான்கு இடங்கள் (இரண்டு அரங்கம் மிக பெரியது). ஆண்களுக்கு ஆண்கள் பகுதியை ஒட்டிய கழிப்பிட வசதி, பெண்களுக்கு பெண்கள் பகுதியை ஒட்டிய கழிப்பிட வசதி. உணவு ஸ்டால்கள் , புத்தக சிடி ஸ்டால்கள், காவல் துறைக்கு தனி இடவசதி, வாலன்டியர்களுக்கு ஓய்வெடுக்க தனி இடம். அவளவுதான். அனைத்து அரங்கங்களும் பெரியதாகவே அமைக்கப்பட்டிருந்தன.

இடம் : பெரம்பலூரில் இருந்து 20 கிலோமீட்டர். (பெரம்பலூர் எல்லையில் இருந்து (திருச்சி நோக்கி) 3 கிலோமீட்டர்). பெரம்பலூர் - திருச்சி நெடுஞ்சாலையில் நெடுங்கூர் என்னும் இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து 3 கிலோமீட்டர் உள்ளே உள்ளது இடம். பஸ்வசதி கிடையாது. மாநாடு குழுவின் சார்பாக ஒரு வேன் ( 20 நிமிடத்திற்க்கு ஒரு முறை) மக்களை மாநாட்டுதிடலுக்கு அழைத்து செல்லும். அதை தவிர மாநாட்டு திடலுக்கு போவதற்க்கு வேறு வழிகிடையாது. நடக்க முடியும் என்றால் 3 கிலோமீட்டர் நடந்து செல்லலாம்.


- இம்தியாஸ்

muhmed.imtiaz@gmail.com

Monday, February 1, 2010

"வைரமுத்துவும் இஜட் ஜபருல்லாவும்"

"வைரமுத்துவும் இஜட் ஜபருல்லாவும்" என்ற இந்த தலைப்பைப் படிக்கையில்
"அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?"
என்று கேட்கத் தோன்றும்.

நாகூர்க் கவிஞர் இஜட் ஜபருல்லாவுக்கும், நாடறிந்த கவிஞர்
வைரமுத்துவுக்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கப் போகிறது?

கவிஞர் ஜபருல்லா ஒரு இளம்பிறை. கவிஞர் வைரமுத்து ஒரு கறுப்புச் சூரியன்.

இவர் நாற்சுவருக்குள் இருப்பவர். அவர் நாற்திசையும் அறிந்தவர்.

இவர் கற்பனை செய்யத் தெரிந்தவர். அவர் கற்பனையோடு விற்பனையும் செய்யத்
தெரிந்தவர் - தன் எழுத்துக்களை.

“நமக்குத் தொழில் கவிதை” என்று மார்தட்டினான் பாட்டுக்கோர் புலவன் பாரதி.
அதே வசனத்தை இன்று யாராவது பேசினால் "அதுசரி! அடுத்த வேளை சோற்றுக்கு
என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று திருப்பிக் கேட்பார்கள்.

வெண்பாவை நல்ல விருத்தத்தை ஏற்றதமிழ்
என்பாவை மட்டுமென்ன ஏற்காதா - எந்தோழா
போதைதர வன்றுபுதிய விடியலுக்குப்
பாதையிட வல்லதே பாட்டு

என்று மரபு ரீதியில் வெண்பா படுகிறார் புதுக்கவிதை முன்னோடிகளில் ஒருவரான
கவிஞர் வைரமுத்து.

மேற்கூறிய இரு கவிஞர்களின் பாடல்களும், வெறும் வார்த்தை ஜாலங்கள்
மட்டுமின்றி வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாகவும் இருக்கிறன.

கவிதை என்றால் என்ன?

"கவிதை என்பது ஒரு தொழிலல்ல. அது ஒருவனின் ஆத்மராகம்" என்கிறார்
புகழ்பெற்ற சோவியத் கவிஞர் மிகாயில் சுவெத்லா.

கவிஞர் வைரமுத்துவுக்கு கவிதை தொழிலாக இருக்கிறது. ஜபருல்லாவைப்
பொறுத்தவரை அது வெறும் ஒரு ஆத்மராகம்.

ஜபருல்லா இதுவரை ஒரு கவிதை நூல்கூட வெளியிட்டு காசு பார்க்கவில்லை.
அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் சட்டைப்பையில் கசங்கிய காகிதங்களாக
பத்திரப்படுத்தி வைக்கப் பட்டிருக்கின்றன. அவ்வளவே. அவற்றில் சில
அதிர்ஷ்டவசமாக ஆபிதீன் வலைபூவிலும் காணக்கிடைக்கின்றன.

"கவிஞன் எப்போதுமே இரட்டை வேடம் போட முடியாது. அவன் தன் படைப்புகளில்
ஒருவனாகவும், வாழ்க்கையில் வேறு மனிதனாகவும் வாழ முடியாது. அவனது
படைப்பையும் வாழ்வையும் வெவ்வேறாகப் பிரிக்கவே முடியாது" என்பது ரஷ்யக்
கவிஞர் ராபர்ட் ராஷ்தெஸ்க் வென்ஸ்கியின் கூற்று.

ஆமாம். கவிஞர் வைரமுத்துவைப் போலவே கவிஞர் ஜபருல்லாவுக்கும் உள்ளொன்று
வைத்து புறமொன்று பேசத் தெரியாது.

"Great men think alike" என்பார்கள். இவர்களின் இருவரின் “Physiques”
ஒத்துப் போகா விட்டாலும்கூட "கெமிஸ்ட்ரி" ஒத்துப் போகிறது.

கையில் கொஞ்சம் காசு இருந்தால்
நீதான் உனக்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால்
அதுதான் உனக்கு எஜமானன்

என்று கவிஞர் வைரமுத்து பாடிய அதே கருத்தை சற்று வேறு விதமாக
சிந்திக்கிறார் கவிஞர் ஜபருல்லா.

பதவி -
இதன்மேல் நீ அமர்
உன்மேல் -
பதவியை அமரவிடாதே.. . இது ஜபருல்லாவின் சிந்தனையூற்று.

"முடியாது என்ற வார்த்தை என் அகராதியிலேயே கிடையாது" என்று நெப்போலியன்
சொல்லியதை என் நண்பன் பாரூக் ராஜாவிடம் சொன்னபோது "அதுக்கு என்ன இப்போ?
அவரோட அகராதி புத்தகத்துலே அந்த பக்கம் கிழிஞ்சு போயிருக்கும்" என்று
ஜோக்கடித்தான்.

"உன்னால் முடியும் தம்பி, தம்பி" என்று கவிஞர் வைரமுத்துவின் பாடலை
கேட்கும் போது நமக்கு தன்னம்பிக்கை பிறந்து வாழ்க்கையில் புத்துணர்ச்சி
ஏற்படும். இதே கருத்தை

‘முடியும்’ என்பதில்
நீ உறுதியாக இரு.
‘முடியாது’ என்பதை
சூழ்நிலை சொல்லட்டும்.

என்று இன்றைய இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார் கவிஞர் ஜபருல்லா.

நம்மைப் பொறுத்தவரை வெளிச்சம், விடியல் எல்லாமே ஒன்றுதான். இரண்டுமே
பிரகாசமாக இருக்கிறது. சற்றே சிந்தித்துப் பார்த்தால் வெளிச்சம் வேறு,
விடியல் வேறு என்ற வியாக்யானம் புரிகிறது. விடியலில் வெளிச்சம்
இருக்கிறது. ஆனால் வெளிச்சம் யாவும் விடியல் அல்ல என்று உணர்ந்துக் கொள்ள
முடிகிறது.

பூமி பொதுச் சொத்து
உன் பங்கு தேடி
உடனே எடு

ஒவ்வொரு முகத்திலும்
உன் துளி உண்டு

ஒவ்வொரு விடியலிலும்
உன் கிரணம் உண்டு

வானம் போலவே
வாழ்க்கையும் முடிவதில்லை

என்கிறார் கவிஞர் வைரமுத்து

உன் -
வாழ்க்கைப் பயணம்
துவங்கட்டும்..!
வெறும் வெளிச்சத்தை
நோக்கி அல்ல
விடியலை நோக்கி

என்கிறார் கவிஞர் ஜபருல்லா.

உதவி எப்படிப்பட்ட மனிதனிடம் எதிர்பார்க்க வேண்டும்?

பெரிய மனித
தரிசனமா?
அதிகாலை போ!
இல்லையேல் .. ..
அவனினும் பெரியோன் தேடி
அவன் போயிருப்பான்

என்று உலக வழக்கை ஒளிவு மறைவின்றி போட்டு உடைக்கிறார் கவிஞர் வைரமுத்து.

இதோ இஜட் ஜபருல்லா கூறுவதை கேளுங்கள்.

உதவி -
எல்லோரிடத்தும் கேட்காதே!
உதவி செய்பவர்களைத்
தேர்ந்தெடு..

என்கிறார் நம்ம ஊர் கவிஞர். அனுபவம் அவரைப் பேச வைக்கிறது போலும்.

“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை”
என்று சொல்கிறார்களே?
“காசேதான் கடவுளடா” என்று பாடுகிறார்களே?
பணம் தேடுவது மட்டும்தான் வாழ்க்கையா?

இது போன்ற கேள்விகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. இங்குதான் இரு
கவிஞர்களின் கருத்தும் மாறுபட்டு ஒளிர்கிறது.

நாற்பதுவரை
பணத்தை நீ
தேடவேண்டும்

நாற்பதின்பின்
பணம் உன்னைத்
தேட வேண்டும்

என்கிறார் வைரமுத்து.

ஏழை என்பதும்
பணக்காரன் என்பதும்
இருக்கின்ற
பணத்தினால் அல்ல
சுரக்கின்ற குணத்தினால்.

செல்வத்தினால்
வாழ்க்கையை
அளக்கிறவனை விட
நிம்மதியால் அளக்கிறவனே
நிலைப்படுகிறான்

என்று சாக்ரடீஸ் ஆக மாறி தத்துவம் பேசுகிறார் கவிஞர் ஜபருல்லா.

வாடிப்போயிருக்கும் மனிதனுக்கு நம்பிக்கையூட்டுவது என்பது ஒரு தனிக்கலை.
அது, கவிஞனுக்கு கைக்கூடி வருகின்ற அற்புதக் கலை. சொல்வதைச் சூசகமாகவும்
சொல்வான், நெத்தியடியாகவும் சொல்வான்.

"வாழ நினைத்தால் வாழலாம். வழியா இல்லை பூமியில்?" என்று கண்ணதாசன் பாடும்
போது, நிரந்தரத் துயிலுக்கு தயாராகும் மனமுடைந்த மனிதன் கூட,
கையிலிருக்கும் தூக்க மாத்திரையை தூக்கி எறிந்துவிட்டு வாழ்க்கையோடு
போராட ஆயத்தமாகி விடுவான்.

மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே !

நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்

சாகவில்லை
நீயே அழுகிறாய்

கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை

உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?

மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?

உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா

அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்

உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்

பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?

இஸ்லாம் கூறும் அதே கருத்தைதான் கவிஞர் வைரமுத்துவும் கூறுகிறார். இந்து
சாஸ்திரத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. ஒருவன் பொருளை மற்றவன்
அபகரிக்க இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. இறைவன் அளித்த உயிரைப் பறிக்க
மனிதனுக்கு உரிமையில்லை.

கவிஞர் வைரமுத்துவின் அபாரச் சிந்தனை, வார்த்தை ஜாலங்கள், கற்பனைத்திறன்
நம்மை அவர்மேல் காதல் கொள்ள வைக்கிறது.

இதே போன்று கவிஞர் இஜட் ஜபருல்லாவின் வரிகளும் படிக்கின்ற வாசகனுக்குக்கு
வாழ்க்கையில் ஒரு பிடிப்பை உண்டாக்குகிறது

வீணை -
தன்னைத்தானே
மீட்டிக்கொள்ள முடியாது..!
விரல்களே -
தந்திக் கம்பிகளின் ஊடே
மறைந்திருக்கும்
நாதத்தை வெளிப்படுத்தும்..!

என்கிறார் கவிஞர் ஜபருல்லா. மேலும் அவர் கூறுவதைக் கேளுங்கள்.

நீரால் உருவாகி
இருட்டிலிருந்து
காற்றால் உயிரேந்தி
வெளிச்சத்தில் விழுந்து
இருட்டுக்கும் ஒளிக்கும் நடுவே
உறங்கி விழித்து
இறுதியில் மரித்து
மண்ணில் புதைந்து
நடுவில்
கொஞ்சம் வாழ்க்கை!

வாழ்க்கை -
இது -
தத்துவமல்ல..
தனித்துவம்..!
இது -
பேசப்படுவதல்ல
பேணப்படுவது.

உன் வாழ்க்கை என்பது
உன்னை மட்டும்
சார்ந்தது அல்ல
உடன் இருப்பவர்களையும்
சூழ்ந்தது.

உதவு.. உதவு..!
வாழ்க்கையின்
கதவு திறக்கும்..!

உயர உயர
பறக்கும் பறவைக்கும்
உணவு என்னவோ
கீழேதான்..!

எண்ணமும் செயலும்
வாழ்க்கையின்
இரு சிறகுகள்..!
உயரப்பற
எனினும்
உள்ளம் என்ற அலகுதான்
உனக்கு
உணவைத் தரும்
மறந்து விடாதே..!

பட்டப்படிப்புக்கு
புத்தகங்களே போதும்
வாழ்க்கைப் படிப்புக்கு
அனுபவங்களே ஆசான்..!

என்கிறார் கவிஞர் ஜபருல்லா, உயர உயர பறந்தாலும் உணவுக்காக பருந்து
தாழ்ந்து வரவேண்டுமென்பது இயற்கையின் நியதி. எவ்வளவு பெரிய மனிதராக
இருந்தாலும் உழைப்பாளிகளுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் போனால்
என்னாகும்? "நாங்கள் சேற்றிலே காலை வைக்கா விட்டால் நீங்கள் சோற்றிலே
கையை வைக்க முடியாது" என்று பாட்டாளிகளின் மேன்மையை பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரம் பாடியதை நாம் மறக்கத்தான் முடியுமா? "உழைப்பாளிகளுக்கு
அவர்களின் வியர்வை உலரும் முன்பே அவர்களுக்கான ஊதியத்தை உடனே கொடுத்து
விடுங்கள்" என்று கூறிய நபிகள் நாயகத்தின் பொன்மொழி நம் நினைவில்
நிற்கிறது.

வாழ்க்கையின் மீது நம்பிக்கை இழந்த மனிதனுக்கு புத்தி வரும்படி இன்னும்
எத்தனையோ அறிவுரைகளைக் கூறுகிறார் கவிஞர் வைரமுத்து.

பூமியைக்
கைவிடப் பார்ப்பவனே

பூமி உன்னைக்
கைவிடவில்லையப்பா

காற்று உன்னை மட்டும்
விட்டுவிட்டு வீசியதா?

தன் கிரணக் கீற்றுகளை
நிலா உன் மீது
நிறுத்திக் கொண்டதா?

பூக்கள் உன்னைக் கண்டு
இலைகளின் பின்னால்
தலைமறைவாயினவா?

தன் சிகரங்களில் வசிக்க
வாழ்க்கை உன்னை
வரவேற்கிறது.

நீ ஏன்
மரணத்தின் பள்ளத்தாக்கை
நகங்களால் தோண்டுகிறாய்?

என்று கேள்விக் கணைகளை அடுக்கிக்கொண்டே போகிறார் கவிஞர் வைரமுத்து.

இதோ கவிஞர் ஜபருல்லாவின் அறிவுரைகளை காது கொடுத்து கேளுங்கள்.

வாழ்க்கையின்
வசந்தங்களை
வருங்கால கனவுகள் ஆக்காதே..!
நிகழ்காலத்தில் நிலைநாட்டு.

‘எனக்காக’
என்ற படியைவிட்டு
‘நமக்காக’
என்ற படியை நோக்கி
முன்னேறு..!

எண்ணங்களை
வார்த்தைகளால் வெளிப்படுத்தாதே..!
செயல்களால் நிரூபணம் செய்..!

உயர்ந்த
கோபுரங்களின் உறுதிப்பாடு
மண்ணுக்குள்ளேதான்
மறைந்து கிடக்கிறது..!
உன்-
உள்ள உறுதி
அரிய சாதனைகளுக்கு
அடித்தளம் ஆகட்டும்..!

உன்னை
வெளிப்படுத்தும்
சக்தியைத் தேடு..

அலைகள் -
ஆர்த்தெழுவது
கரையைத் தழுவத்தான்
உன் -
எழுச்சியால்
சொந்தங்களை சுகப்படுத்து..!

என்கிறார் ஊரறிந்த நம் கவிஞர்.

உலகறிந்த கவிஞரோ, சாகப் போகிறவனை எப்படியும் மரணவாயிலிருந்து மீட்டியேத்
தீருவது என்ற வைராக்கியத்தோடு எழுதித் தள்ளுகிறார். இப்போது அவருடைய
கோபம் (நாகூர் மம்முட்டி கடை டீயில் காணப்படும் சீனியைப் போன்று) சற்று
தூக்கலாகவே காணப்படுகிறது. அவரது கண்டிப்பும் விலைவாசியாய்
அதிகரிக்கிறது.

உயிரின் விலையை
உணர்த்த வேண்டும் உனக்கு

எழுந்திரு
என் பின்னால் வா

அதோ பார்!

உயிரில் பாதி
ஒழுகி விட்டாலும்
மிச்ச உயிரைக்
கோணிப்பையில் கட்டிவைத்துக்
கூனிக் கிடக்கிறானே கிழவன் - ஏன்?

அபாயம் அறிந்தால்
அங்குலப் புழு
மில்லி மீட்டர்களாய்ச்
சுருள்கிறதே - ஏன்?

பறவையாய் இருந்தும்
பறக்காத கோழி
பருந்து கண்டதும்
பறந்தடிக்கிறதே - ஏன்?

மரணம் என்ற
நிஜத்திற்கு எதிராய்
மருத்துவமனையெல்லாம்
பொய்யாக இன்னும்
போராடுவது ஏன்?

வலையறுந்து நிலை குலைந்தும்
அந்த
ஓரிழைச் சிலந்தி
ஊசலாடுகிறதே ஏன்?

வாழ்க்கையின்
நிமிஷ நீட்டிப்புக்குத்தான்

இத்தனை உரிமையான அறிவுறுத்தலுக்குப் பிறகு, சாவும் எண்ணம் - அதை மனிதன்
மூட்டைக் கட்டி வைத்து விடுவது திண்ணம்.

மரண விளிம்பிலிருந்து காப்பாற்றி வந்த ஒருவனுக்கு மேலும் நம்பிக்கையூட்ட
கவிஞர் ஜபருல்லாவின் இந்த வரிகள் பெரிதும் உதவும். அவனை சகஜநிலைக்கு
கொண்டு வந்துவிடும்.

வாழ்க்கையில் -
உயர்ந்த பீடத்தை
இலக்காக்கு..!
அதே சமயம்
இருக்கின்ற இடத்தையும்
இழந்து விடாதே..!
முன்னேற்றத்தின்
முதற்படி இதுதான்..!

உன் சிந்தனை
மற்றவர்களைச் சுற்றி
இருப்பதை விட
முதலில்
உன்னைப்பற்றி இருக்கட்டும்..!

நீ -
யார் என்பதை உணர்..!
யாராக மாற விரும்புகிறாய் என்பதை
வரையறை செய்..!
எந்த வழியில் என்பதை
திட்டமாக்கு..!

இடையில் வரும்
வெற்றிகளில் -
இறுமாந்து விடாதே..!
இலட்சிய எல்லையை எட்டமுடியாது..!
இறுதியில் சிரிப்பவனே
வெற்றி பெற்றவன்.

பணம் -
இதை ஒரு கருவியாகவே
பயன்படுத்து
வாழ்க்கையாக
மாற்றிவிடாதே..

புகழ் -
இதனால் புத்துணர்ச்சி பெறு.
போதை மயக்கமாய்
ஆக்கிவிடாதே..!

என்று உணர வைக்கிறார் கவிஞர் ஜபருல்லா,

தற்கொலைக்குத் துணிகிறவனுக்கு முடிவுரையாக இந்த வேண்டுகோளை முன்
வைக்கிறார் வைரமுத்து.

தம்பீ !

சாவைச்
சாவு தீர்மானிக்கும்

வாழ்க்கையை
நீ தீர்மானி

புரிந்துகொள்

சுடும் வரைக்கும்
நெருப்பு

சுற்றும் வரைக்கும்
பூமி

போராடும் வரைக்கும்
மனிதன்

நீ மனிதன்!!!

இப்படியெல்லாம் நம்பிக்கையளித்து விட்டு சாவுமுனயிலிருந்து காப்பாற்றி
வந்தவனை உட்கார வைத்து கவிஞர் ஜபருல்லாவின் கவிதையும் வாசித்துக்
காட்டினால் போதுமானது. இன்னொரு முறை ஒருபோதும் அந்த தவறான முடிவுக்கு
அவன் செல்லவே மாட்டான்.

இதோ ஜபருல்லாவின் அறிவுரை.

வாழ்க்கையில் -
வாய்ப்பு வரும்வரை
காத்திருக்காதே..!
நீ -
உருவாக்கு..

உன் பேச்சு
எல்லோரையும்
சுகப்படுத்துவதாகவே
இருக்கட்டும்
சோகத்தை வேண்டாம்.

வீணான
விமர்சனங்கள் செய்யாதே..!
அது -
உன்னைப்பற்றி
வேண்டாத விமர்சனங்களைத்
தோற்றுவிக்கும்..!

தேவையின்றி
வார்த்தைகளைச் செலவிடாதே..!
தேவையானபோது -
அது -
உனக்குக் கிடைக்காமலே
போய்விடும்..!

அறிவுரை சொல்பவர்களை
ஆராயாதே..!
அவைகளை -
உன்னுள் பொருத்தி
ஆராய்ந்து பார்..!

உன்னைச்சுற்றி
ஒரு -
வட்டத்தை ஏற்படுத்து..
அதன் அச்சாக
என்றும் நீ இரு..!

உன்
மனக்கதவை எப்போதும்
இல்லாதவர்களுக்கு திறந்து வை!
மறுமையில்
சுவனக்கதவு உனக்கு
திறந்தே இருக்கும்..!

ஆமாம் ! அப்துல் காதருக்கும் அமவாசைக்கும் சம்பந்தம் இருக்கத்தான்
செய்கிறது.


vapuchi@gmail.com
http://nagoori.wordpress.com