Wednesday, September 10, 2008

இஃப்தார் விருந்து வழங்கினார் குடியரசுத் துணைத் தலைவர்

இஃப்தார் விருந்து வழங்கினார் குடியரசுத் துணைத் தலைவர்

புது தில்லி, செப். 10: குடியரசுத் துணைத் தலைவர் எம்.ஹமீத் அன்சாரி, முக்கியப் பிரமுகர்களுக்கு தில்லியில் புதன்கிழமை இஃப்தார் விருந்து வழங்கினார்.

பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் விருந்தில் பங்கேற்றனர்.

அமீரகத்தில் லேசான நிலநடுக்கம்

அமீரகத்தில் லேசான நிலநடுக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பகல் மூன்று மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் துபாய்,அபுதாபி, ஷார்ஜா மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டது.

இதனையடுத்து பல்வேறு அலுவலகங்களில் உள்ள பணியாளர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ரமலான் மாதம் ஆகையால் பல்வேறு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், சில அலுவலகங்கள் ஆறு மணி நேரம் வேலை நேரத்திற்கு ஏற்ப செயல்படுவதால் மாலை 3 மணிக்கு முன்னரே முடிந்து விடுகிறது.

இதன் காரணமாக பாதிப்பு குறித்து இதுவரை தகவல் ஏதும் இல்லை.


http://www.muduvaivision.com/index.html