Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

Monday, February 23, 2009

ஜித்தாவில் எம்.எஸ்.எஸ். சேல‌ஞ்ச் 2009 வாலிபால் போட்டி

ஜித்தாவில் எம்.எஸ்.எஸ். சேல‌ஞ்ச் 2009 வாலிபால் போட்டி

ஜித்தாவில் எம்.எஸ்.எஸ். சேல‌ஞ்ச் 2009 வாலிபால் போட்டி த‌லால் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை 4.30 ம‌ணி முத‌ல் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இப்போட்டியில் ஜித்தா எஸ்.டி.கார்கோ அணியும், முஸ்லியார‌ங்காடி ந‌க‌ர் அணியும் மோத‌ இருக்கின்ற‌ன‌.

ஜித்தாவில் வ‌சிக்கும் அன்ப‌ர்க‌ள் இப்போட்டியைக் காண‌வ‌ருமாறு அன்புட‌ன் கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

Thursday, February 14, 2008

கீழக்கரை கல்லூரி நிகழ்ச்சியில் துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவன மேலாண்மை இயக்குநர்



கீழக்க்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில தடகள போட்டியை விளையாட்டு வீராங்கனை சைனி வில்சன் துவக்கி வைக்கிறார். அருகில் துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் மேலாணமை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் மற்றும் பலர்.

Friday, January 18, 2008

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை காண வாய்ப்பு

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை காண வாய்ப்பு

29 வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.
இப்போட்டியை நேரில் காணும் வாய்ப்பை சீன வானொலி நிலையம் ஏற்படுத்தியுள்ளது. இவ்வானொலி நிலையம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்புப் பரிசுகளையும் பெறும் வாய்ப்புள்ளது.

சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு தினமும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒலிபரப்பாகிவருகிறது.
மேலும் விபரங்களுக்கு

http://tamil.cri.cn/other/contest2008/