Friday, January 2, 2009

உங்களுக்கு விருப்பமா?

உங்களுக்கு விருப்பமா?

Posted By மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி On January 1, 2009 (3:21 pm) In அல்ஹதீஸ்

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் ஒரு நாளில் நூறு தடவை
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி' என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?

யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?

ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?

ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?

அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?

ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)

ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?

ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?

நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)

அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?

விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?

யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என ரும்புகின்றீர்களா?


لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله

லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?

சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Article taken from இஸ்லாம்கல்வி.காம் - Portal - http://www.islamkalvi.com/portal
URL to article: http://www.islamkalvi.com/portal/?p=1205





--~--~---------~--~----~------------~-------~--~----~
தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் குழுமம் குறித்து:
http://groups.google.com/group/tamilmuslimbrothers?hl=en

To unsubscribe from this group, send email to
tamilmuslimbrothers+unsubscribe@googlegroups.com
-~----------~----~----~----~------~----~------~--~---

துபாயில் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் இளையான்குடி ஜ‌மாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

துபாயில் சிவ‌கெங்கை மாவ‌ட்ட‌ம் இளையான்குடி ஜமாஅத்தின‌ர் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 01.01.2009 வியாழ‌க்கிழ‌மை முஸ்ரிஃப் பூங்காவில் ந‌டைபெற்ற‌து.

இச்ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சிக்கு செல்வ‌ முஹ‌ம்ம‌து த‌லைமை வ‌கித்தார். துவ‌க்க‌மாக‌ மாண‌வ‌ர் ஒருவ‌ர் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார்.

செல்வ‌ முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் த‌ன‌து த‌லைமையுரையில் இதுபோன்ற‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள‌ அனைவ‌ரையும் பாராட்டுவ‌தாக‌த் தெரிவித்தார்.
ப‌ரீத் அஹ‌ம‌து வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.இச்சந்திப்பு நிக‌ழ்ச்சியின் நோக்க‌ம் குறித்த‌ அறிமுக‌வுரையினை ஜ‌லால் நிக‌ழ்த்தினார்.

அத‌னைத் தொட‌ர்ந்து க‌லிஃபா செய்ய‌து ஹுசைன் த‌ன‌து வாழ்த்துரையில் முப்ப‌த்தைந்து ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் இளையான்குடியில் டாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரி துவ‌க்க‌ விழாவில் ப‌ங்கேற்ற‌ க‌ல்வி வ‌ள்ள‌ல் அல்ஹாஜ் பி.எஸ்.அப்துல் ர‌ஹ்மான் இத்த‌கைய‌ க‌ல்விப்ப‌ணிக்கு தூண்டுகோலாக‌ இருந்த‌ அனைவ‌ரையும் பாராட்டினார். இளையான்குடி ந‌க‌ரின் பெருமைக‌ளை க‌விதை ந‌டையில் எடுத்திய‌ம்பினார்.

அஹ்ம‌து க‌பீர் த‌ன‌து சிற‌ப்புரையில் இளையான்குடி ந‌க‌ர் குறித்த‌ ம‌ல‌ரும் நினைவுக‌ளை நினைவு கூர்ந்தார். தொழிற்துறையில் நாம் ஈடுப‌ட‌ வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌ம் குறித்து வ‌லியுறுத்தினார். வாழ்விய‌லின் நோக்க‌ங்க‌ளை உண‌ர்ந்து செய‌ல்ப‌ட‌க் கேட்டுக் கொண்டார். க‌ல்விச்சேவையில் இளையான்குடி ப‌ங்க‌ளிப்பை எடுத்துரைத்தார். இளையான்குடியில் 25 க்கும் மேற்ப‌ட்ட‌ க‌விஞ‌ர்க‌ள‌து இல‌க்கிய‌ச் சேவை குறித்து விவ‌ரித்தார். அர‌சிய‌ல், ச‌மூக‌ம், பொதுச்சேவை, ஆராய்ச்சித்துறை, அர‌சுப்ப‌ணி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு துறைக‌ளிலும் இளையான்குடி ம‌க்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு குறித்து விள‌க்கினார். தொட‌ர்ந்து ந‌ம‌தூரின் பெருமையினை நிலைநாட்ட‌ அனைவ‌ரும் த‌ங்க‌ள‌து ஒத்துழைப்பினை ந‌ல்கிட‌ கேட்டுக் கொண்டார்.


ப‌ஷீர் த‌ன‌து உரையில் த‌ற்பொழுதுள்ள‌ தொழில்நுட்ப‌த்தைப் ப‌ய‌ன்ப‌டுத்தி ந‌ம‌க்கிடையே த‌க‌வ‌ல் ப‌ரிமாற்ற‌ம் எளிதாக‌ செய்ய‌க்கூடிய‌ ப‌ணியினை மேற்கொள்ள‌ வேண்டும். ப‌ணிவாய்ப்பு தேடி அமீர‌க‌ம் வ‌ரும் ந‌ம‌தூர் ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கு உத‌விட‌ முய‌ற்சிக‌ள் செய்ய‌ வேண்டும்.

அத‌னைத் தொட‌ர்ந்து அஷ்ர‌ஃப் அலி, அயூப் அலி, புரோஸ்கான், குத்புதீன், சுக‌ர்னோ, அப்துல் காத‌ர், லியாக்க‌த் அலி, நிஹ்ம‌த்துல்லாஹ், அமானுல்லாஹ், சுல்தான், செய்ய‌து, சாதிக், பாசித்,த‌மீம் அன்சாரி, செய்ய‌து, தாஹிர், சேட், ஹ‌மீதுல்லாஹ், சுல்தான், பைச‌ல், யாச‌ர், காத‌ர் சுல்தான், சுபைர், ப‌ரீத் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் உரை நிக‌ழ்த்தின‌ர்.

ரோஸ்லான் ந‌ன்றியுரை நிக‌ழ்த்தினார். நிக‌ழ்ச்சியினை சுல்த்தான் தொகுத்து வ‌ழ‌ங்கினார்.

இந்நிக‌ழ்வில் க‌ல‌ந்து கொள்ள‌ இய‌லாத‌ இளையான்குடி ச‌கோத‌ர‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து பெய‌ரினை
050 745 0359 / 055 975 9919 ஆகிய‌ எண்க‌ளில் ப‌திவு செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்




















Civil Site Engineers & Project Engineer required for Dubai projects

For a large project, in Dubai, 3 site engineers are required along with 1 project engineer. Degree or Diploma in civil engineering with relevant experience may apply.
Those with previous experience in UAE building construction industry would get preference.

Those with driving UAE driving licence would be preferred.

Those who have recently lost jobs would be prefefred along with those visit visa.
Send you CVs to Mr. Iqubal Haidar on his email address: equbal@tawazunconstruction.ae

Fax: +971-6-5730037

மஞ்சை மயிலன்

தமிழ் நாட்டின் தொழில் துறைமுகமான கோயம்புத்தூர் அருகில் உள்ள பொள்ளாச்சி என்ற இடத்தில் பிறந்து எல்லா பணிகளிலும் மிகத்தான பணியான 'கல்விப் பணியினை' கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாநிலத்தில் பணியாற்றி இன்றும் மக்கள் மனதில் 'கல்விச் சேவைக்கு ஒரு மனிதனாக' இடம் பெற்றுள்ள மாமனிதர், தமிழாசிரியர், கல்வித் தந்தை மஞ்சை மயிலனின் கவிதை 'எது இனிது' என்ற பாடல் வரிகளை இந்த மடலுடன் இணைத்துள்ளேன். இவரைப் பற்றிய முழு விவரம் மற்றும் இவரது கவிதைகள் அனைத்து தொகை நூல்களையும் பெற, எமது இந்த சேவையின் 'கருப்பொருளாகவும்' மற்றம் ஐயாரின் குடும்பத்தினருமான கிருஷ்ணப் பிரியாவை தொடர்பு கொள்ளவும். (மின்னஞ்சல் – priyarajeswari@gmail.com, அலைபேசி - +91-98809-60332, வலைப்பூ - http://www.drcet.org/board_member.html).

துபாயில் ஜின்னாஹ் ஷ‌ரிபுத்தின்னின் "வேர‌றுந்த‌ நாட்க‌ள்" சிறுக‌தை நூல் வெளியீடு

துபாயில் ஜின்னாஹ் ஷ‌ரிபுத்தின்னின் "வேர‌றுந்த‌ நாட்க‌ள்" சிறுக‌தை நூல் வெளியீடு

துபாயில் ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சியின் ஆத‌ர‌வுட‌ன் இல‌ங்கையைச் சேர்ந்த‌ க‌விஞ‌ர் ஜின்னாஹ் ஷ‌ரிபுத்தின்னின் "வேர‌றுந்த‌ நாட்க‌ள்" என்னும் சிறுக‌தை நூல் வெளியீட்டு விழா 02.01.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை க‌ராமா சிவ் ஸ்டார் ப‌வ‌னில் ந‌டைபெற்ற‌து.

க‌ராமா மெடிக்க‌ல் சென்ட‌ரின் டாக்ட‌ர் வில்லிய‌ம்ஸ் த‌லைமை தாங்கினார். பாப‌நாச‌ம் அப்துல் ஹ‌மீது முன்னிலை வ‌கித்தார். ந‌ளாயினி ஜின்னாஹ் ஷ‌ரிபுத்தீன் குறித்து அறிமுக‌வுரை நிக‌ழ்த்தினார்.

தீனிசைத் தென்ற‌ல் தேரிழ‌ந்தூர் தாஜுத்தீன் க‌விஞ‌ர‌து இலக்கிய‌ச் சேவை குறித்து பாட‌ல் பாடினார். க‌விஞ‌ர் கிளிய‌னூர் இஸ்ம‌த் சிறுக‌தை நூல் குறித்த‌ விம‌ர்ச‌ன‌ உரை நிக‌ழ்த்தினார்.
க‌விஞ‌ர் ஜின்னாஹ் ஷ‌ரிபுத்தீன் "வேர‌றுந்த‌ நாட்க‌ள்" நூலை வெளியிட‌ முத‌ல் பிர‌தியை டாக்ட‌ர் வில்லிய‌ம்ஸ் பெற்றுக் கொண்டார். அத‌னைத் தொட‌ர்ந்து பாப‌நாச‌ம் அப்துல் ஹ‌மீது உள்ளிட்ட‌ ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் பெற்றுக் கொண்ட‌ன‌ர்.

அமீர‌க‌ த‌மிழ்க் க‌விஞ‌ர்க‌ள் பேர‌வைத் த‌லைவ‌ர் அப்துல் க‌த்தீம், எஸ்.எம். ஃபாரூக், எஃப்.எம். அன்வ‌ர் பாட்சா, தேனிசைச் சுட‌ர் ஏ. அஷ்ர‌ஃப் அலி, தாய்ம‌ண் வாச‌க‌ர் வ‌ட்ட‌ அமைப்பாள‌ர் செ.ரெ.ப‌ட்ட‌ண‌ம் ம‌ணி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் வாழ்த்துரை வ‌ழ‌ங்கின‌ர்.

ச‌ங்க‌ம‌ம் தொலைக்காட்சி இய‌க்குந‌ர் க‌லைய‌ன்ப‌ன் நிக‌ழ்ச்சியினைத் தொகுத்து வ‌ழங்கினார். நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற‌வ‌ர்க‌ளை உற்சாக‌ப்ப‌டுத்தும் வித‌மாக‌ ப‌ல்வேறு போட்டிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌து.

நிக‌ழ்வில் ப‌ல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர்.