Tuesday, December 9, 2008

முரண்பாடுகளை முறியடிப்போம்

முரண்பாடுகளை முறியடிப்போம்


உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;
விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;
நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;
பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;
நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;
பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;
நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;
அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;
மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;
உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;
அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;
வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;
ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;
விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;
வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;
காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;
அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?
உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;
அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;
இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;
"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;
வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;
இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்;
அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;
காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;
தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை.......................!!!!!
மேல காணும் முரண்பாடுகளை மாற்ற
சாலச் சிறந்த சான்று உண்டு;
அதுதான் இறைவனின் இறுதி வேதம்
"அல்-குர் ஆன் " என்னும் அற்புத போதம்......!!!!!!!!!!!!!!!


-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்.

shaickkalam@yahoo.com