Showing posts with label சமூக சேவகர். Show all posts
Showing posts with label சமூக சேவகர். Show all posts

Friday, August 22, 2008

திருச்சி : சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


திருச்சி, ஆக. 21: முதியோர் நலனுக்காக சேவை புரியும் சமூக சேவகர்களுக்கான விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2008-09 ஆம் ஆண்டுக்கான சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்பட இருப்பதையொட்டி, அவ்விழாவில் முதியோர் நலனுக்காக சேவை புரியும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் முதியோர் நலனுக்காக நடப்பாண்டில் சிறப்பாகப் பணியாற்றியவர்கள் இவ்விருதை பெற விண்ணப்பிக்கலாம்.

இவ்விருதுகளை பெற தங்களது பெயர், முதியோர் நலனுக்காக செய்துள்ள பணிகள் மற்றும் சாதனைகள் குறித்த விவரங்களை, மாவட்ட சமூக நல அலுவலர், எண் 11, அரபிக் கல்லூரித் தெரு, காஜாநகர், திருச்சி 20 என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கலாம்.