Wednesday, December 30, 2009

சமுதாயம் சிரிக்கிறதே-சாத்தானின் வேத ஓதல் கண்டு!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி. ஐ.பீ.எஸ்(ஓ)

http://www.mudukulathur.com/Katturaiview.asp?id=231

சில மாதங்களுக்கு முன்பு தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திரு.
கணேசன் இதய ஆப்ரேசன் செய்து வீட்டுக்கு வந்தவரை முஸ்லிம் லீக் கட்சி
பொதுச் செயலாளர் ஜனாப் காதர் முகைதீன் மற்றும் முஸ்லிம் லீக்
பிரமுகர்கள் சென்று நலம் விசாரித்ததினை பத்திரிக்கை செய்திகளாக
வெளியிட்டிருந்தன. நான் கூட இதுவல்லவோ தமிழ் கலாச்சாரம் போதித்த
மனித நேய உணர்வு என்று மகிழ்தேன். என்னைப் போல பல முஸ்லிம்களும்
சந்தோசப் பட்டிருப்பார்கள் என்றால் மிகையாகாது.

சில தினங்களுக்கு முன்பு முன்னாள் உச்ச நீதி மன்ற தலமை நீதிபதி
சிறுபான்மை நலன் பற்றி விசாரித்த கமிஷன் அறிக்கையினை இந்திய
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டது என்பதினை அனைவரும் அறிவர். அந்த
அறிக்கையில் மத அடிப்படையில் முஸ்லிம் மக்கள் 73 சதவீதம்
இருப்பதாகவும் ஆகவே 10 சதவீத வேலை வாய்ப்பு முஸ்லிம்களுக்கு
கொடுக்க வேண்டும் என்றும், மற்ற மைனாரிட்டிகளுக்கு 5 சதவீதம் கொடுக்க
வேண்டும் என்றும், அவ்வாறு முஸ்லிம் மைனாரிட்டி வேட்பாளர்கள்
வேலைக்கு கிடைக்காத பட்சத்தில் அந்த வேலையினை மற்ற
மைனாரிட்டிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.
அத்துடன் 50 சதவீத ரிசர்வேஷன் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்ற
நிறுவனங்களிலும், 15 சதவீதம் முஸ்லிம் அல்லாதவர் நடத்தும்
நிறுவனங்களிலும் அமல் படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த
ஒதுக்கீடு முஸ்லிம்-கிறித்துவ மதத்திற்கு மனமாற்றம் கொண்டு இணைந்த
தலித் மக்களுக்கும் பொருந்தும். அவர்கள் விரும்பினால் தங்கள் பழைய
சாதிச் சான்றிதழிலேயே ரிசர்வேஷன் பெற தடையில்லை என்றும்
சொல்லியுள்ளார். அவருடைய அறிக்கை நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி
அளித்த அறிக்கைக்கு பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும்
மத்திய அரசு சாரபில்; பிரதமர் தெரிவித்தார். நீதிபதி சச்சார் அறிக்கையின்
சாராம்சம் என்ன? முஸ்லிம் படிப்பிலும்-வேலை வாய்ப்பிலும் தலித்களை
விட மிகவும் தாழ்ந்திருக்கிறார்கள் இந்திய நாட்டில் சுதந்திரம் அடைந்து 62
ஆண்டுகள் ஆன பின்னரும் என்று தான் சொல்லியுள்ளார். ஆகவே அவர்கள்
முன்னேற அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்
விட்டுள்ளார் என்பதினை அனைவரும் அறிந்ததே.

திரு. இல. கணேசன் அவர்கள் 23.12.2009 ஆம் தேதி வெளியிட்ட
அறிக்கையில், ‘நீதிபதி ரங்கநாத மிஸ்ராவின் இந்த அறிக்கை இஸ்லாமிய,
கிறிஸ்துவ மத குருமார்கள் தூண்டிதலின் பேரில் கொடுக்கப்பட்ட
அறிக்கையென்றும், இந்த குருமார்கள் தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்கள் வாழும்
பகுதிகளுக்கு சென்று, ‘நீ இந்துவாக இருப்பதால்தான் சாதிக் கொடுமை
நீடிக்கிறது, என் மதத்திற்கு வந்து விட்டால் சாதி ஒழியும், சமத்துவம்
நிலவும்’ என்று ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றினார்கள். இப்போதோ
மதம் மாறிய பின்னும் சாதி நீடிக்கிறது என்றும் சொல்லி சலுகை
கேட்கிறார்கள், ஆகவே அந்த அறிக்கையினை நிராகரிக்க வேண்டும்,
இல்லையென்றால் மத ரீதியான பின் விளைவுகள் உண்டாக்கி விடும்’
கூறியிருக்கிறார்.

ஆனால் உண்மையென்ன? நாடெங்கிலும் தாழ்த்தப்பட்டவர் முற்பட்ட,
ஆதிக்க சாதிகளின் முன்னால் சட்டையணிக்கூடாது, காலணி அணியக்கூடாது,
டீக்கடையில் ஒரே டம்ளரில் டீ வழக்கக் கூடாது, பிணங்கள் எரிப்பதிற்கு தனி
சுடுகாடு, அவர்கள் மேல் ஜாதி வீதிகளில் நடமாடக்கூடாது, கிணற்றில்
தண்ணீர் மேல் ஜாதியினர் பிடிக்கும் போது தண்ணீர் பிடிக்கக்கூடாது,
குளத்தில் ஒன்றாக குளிக்கக்கூடாது, கோயில்களில் ஒன்றாக சேர்ந்து
வணங்கக்கூடாது, மனமாற இரு ஜோடிகள் வௌ;வேறு ஜாதியினராக
இருந்தாலும் இணையக்கூடாது போன்ற கடுமையான கட்டுப்பாடுகளினால்
மனம் நொந்து கடலை நோக்கி ஓடி வரும் சிறு ஆறுகள் போல சமத்துவம்
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதம் நோக்கி ஓடி வருகிறாரகள் இந்து
மதத்திலுள்ள தலித் மக்கள். அவர்களுக்கு ஆசை வார்த்தை கொடுத்து யாரும்
அழைப்பதில்லை என்பதுதான் உண்மை. எப்போது ஒருவன் ‘லாயிலாக
இல்லல்லாஹ் முகம்மதுர் ரஸீலல்;லாஹ’; என்று இஸ்லாமிய மதத்தினை
ஏற்றுக் கொண்டானோ அப்போது ஜாதி வேறுபாடுகள் அறுத்ததெறிந்து
வீசப்படுகின்றன. இந்த நவீன உலகத்திலும் ஜாதி இந்துக்கள் தலித் மக்கள்
தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று சுவர் எழுப்பிய அதிசயம் பல
வருடங்களுக்கு முன்பு தென்ஆப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி நடந்தபோது
இருந்தது. அதன் பின்பு நெல்சன் மண்டேலா 27 ஆண்டு தனிமை சிறையில்
இருந்தாலும் போராடி கறுப்பின மக்கள் உரிமை காத்ததோடு மட்டில்லாமல்
அதன் ஜனநாயக அரசின் ஜனாதிபதியாகவும் இருந்தார். ஆனால் தமிழகத்தில்
மதுரை மாவட்டத்தில் உத்தமபுரத்திலும் அது போன்ற சுவர் சமீபத்தில் அரசு
முயற்கியால் இடிக்கப்பட்டாலும் இன்னும் உரிமை மறுக்கப்படுகிறது என்று
தகவல் கிடைத்து பார்வையிட வந்த மார்க்கிஸ்ட் கம்ய+னிஸ்ட் பொலைட்
பீரோ மெம்பர் பிரிந்தா கரட் கூட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்
என்றும் அது சம்பந்தமாக விசாரணை நடந்தது என்பதினையும் அனைவரும்
அறிந்ததே.

ஏன் சிவகங்கை மாவட்டம் ஊஞ்சனை கிராமத்தில் கோயில் தேர்
இழுக்க தலித்துகள் மறுக்கப் பட்டு அதனை தட்டிக்கேட்ட ஒன்பது தலித்
கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த கிராமத்தைப் பார்ப்பதிற்காக
1988ஆம் ஆண்டு பாரத பிரதமர் ராஜீவ் சென்றதினையும் அனைவரும் மறந்து
விடவில்லை. ஜனநாயக நாட்டில் ஒரு தலித் முருகேசன் மதுரை மாவட்டம்
கீழையூர்பஞ்சாயத்து தலைவராக வந்துவிட்டார் என அறிந்து அவரை
பணியாற்ற விடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல,; அவர் உள்பட ஆறு
தலித்துகள் மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு பஸ்ஸில் வரும்
போது கொடூரமாக கொலை செய்யப்பட்டதையும் அந்த வழக்கில்
உச்சநீதிமன்றமும் குற்றவாளிகளின் தண்டனையினை உறுதி செய்ததினையும்
அனைவரும் பத்திரிக்கையில் படித்திருப்பீர்கள். விவசாய கூலி உயர்வு கேட்ட
தலித் விவசாயிகள் மிராசுதார்களால் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
25ந்தேதி மிருகத்தனமான செயலில் தஞசை மாவட்டம் கீழ் வெண்மணி
கிராமத்தில் 40 பேர் பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்பட உயிருடன்
எரித்து கருக்பட்டனர் என்பதினை கல்லூரி மாணவானாக இருந்த
காலத்திலிருந்து இன்னும் பசுமையாக நெஞ்சில் உள்ளது. அன்றை முதல்வர்
பேரரிஞர் அண்ணா கூட அந்த செய்தி கேட்டு துடி துடித்து, ‘ என் நெஞ்சில்
பாய்ச்சிய ஈட்டியாக கருதி வேதனையடைந்து இரவு முழுவதும் உறங்காது
அல்லல் பட்டேன் என்று சொன்னதினை எல்லோரும் படித்திருப்பீர்கள.

சென்ற மாதங்கூட திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் தலித்
மக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, நீதித் துறையின்
உத்திரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் போலீஸ் துணையோடு அவர்களை
பஸ்ஸில் அணியாக அழைத்துச் செல்லும் போது கல், தடி கொண்டு
தாக்கப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆகவே தான் கம்ய
+னிஸ்ட்டுகள் ஆலய நுழையும் போராட்டத்தினை அறிவித்துள்ளார்கள்.
பழைய புராணத்தில் நந்தன் என்ற தலித் ஆண்டவனை தரிசிக்க கோவிலுக்கு
சென்றதாகவும் இறைவனை தரிசிக்க விடாமல் நந்நி போன்றவர்கள்
மறைத்துக் கொண்டு இருந்ததாகவும் ஆகவே அவன் இறைவனிடம், ‘சற்றே
விலகியிரும் பிள்ளாய், சன்னிதானம் மறைக்கிறது, என்றும் நந்தன்
முறையிட்டதாகவும், இறைவன் செவிசாய்த்து ‘நந்தாய் உள்ளே வா’ என்று
அழைத்து நந்தன் உள்ளே சென்று இறைவனை வழிபட்டதாகவும் புராணம்
சொல்கிறது. ஆகவே ஆண்டவனே சொன்னால் தான் தலித்களுக்கு உரிமை
கொடுக்கும் நிலையிருப்பதால் தானே தலித் மக்கள் சமத்துவம்-
சகோதரத்துவம் போற்றும் இஸ்லாம் மதத்திற்கு ஓடோடி வருகிறார்கள்
என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏற்கனவே நீதியரசர் சச்சார்
அறிக்கையில் படிப்பில்- வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் தலித் போன்று
இருப்பதாலும், இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மதம் மாறிய
தலித்கள் பொருளாதாரம்-கல்வியில் பின் தங்கியிருப்பதாலும் நீதியரசர்
ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தலித்கள் அனுபவித்த அரசு சலுகைகளை அவர்கள்
மதம் மாறினாலும் வழங்க வேண்டும் என்று பரிந்திருக்கிறாரே தவிர எந்த
முஸ்லிம் மத குருமார்களும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா போன்ற
அப்பழுக்கற்ற நீதிபதியினை யாரும் வசியப்படுத்தி அறிக்கை தயாரிக்கச் செய்ய
முடியாது.

பி.ஜே.பியில் தலித்-பிற்பட்ட தலைவர்கள் தலை தூக்க முடியுமா?
அவ்வாறு தமிழக தலைவராக வந்த டாக்டர் கிருபாநிதி வடநாட்டில் நடந்த
மாநாட்டில் எவ்வாறெல்லாம் அவமானப்படுத்தப் பட்டார் என்று அறிக்கை
விடுத்து ராஜினாமா செய்யவில்லையா? பிற்பட்ட சமுதாய தலைவர்களான
உமாபாரதி-கல்யான்சிங்-ஏன் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் போன்றோர்
பி.ஜே.பியில் இருந்து ஏன் விலகினார்கள் என்பது அவர்கள் விலகும் போது
கொடுத்த அறிக்கையினைப் பார்த்தாலே அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
அங்கு தலித்-பிற்பட்ட சமூதாய மக்களுக்கு உரிமை மறுக்கப் படுகிறது
என்பதே உண்மை. அவருடைய வீட்டினை ஒழுங்கு படுத்துவதிற்கு பதில்
கண்ணாடி மாளிகை போன்று இருக்கிற இஸ்;லாம் மதத்தினை ஜாதி உணர்வு
இஸ்லாத்திலும் இருக்கிறது போன்ற மாயையை நிலை நிறுத்தப் பார்க்கிறார்.
ஆகவே தான் பி.ஜே.பி கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக
சென்ற பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகுத்தினார்கள் மக்கள்.
முன்னாள் அதிமுக அமைச்சர் திருநாவுக்கரசர் பி.ஜே.பியிலிருந்து விலகும்
போது, ‘பி.ஜே.பியில் சேர்ந்ததால் நான் நல்ல இஸ்லாமிய நண்பர்களை
இழந்தேன், தமிழகத்தில் பி.ஜே.பி என்ற கட்சி என்ற அமைப்புக்கு மக்கள்
ஆதரவு இல்லை என தெரிந்து கொண்டதாக’ வருத்தத்துடன் அறிவித்து விட்டு
விலகி இன்று காங்கிரசில் சேர்ந்துவிட்டார்.

ஆகவே தான் மக்கள் ஆதரவே இல்லாத ஒரு அமைப்பில் இருந்து
கொண்டு தன் பெயர் தினந்தோரும் பத்திரிக்கைகளிலும்-தொலைக்காட்சியிலும்
வரவேண்டுமென்று ஓதும் வேதத்தினை சாத்தான் ஓதும் வேதமாக
இஸ்லாமிய சமுதாயம் மட்டுமல்லாது-ஒட்டுமொத்த தமிழக சமுதாயமும்
நினைத்து சிரிக்கிறது என்றால் அது உண்னைதானே?

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு... (கவிதை)

இல்வாழ்வில் இணைந்த தங்கைக்கு... (கவிதை)

சின்னச்சின்ன விடயத்திற் கெல்லாம் தினமும்
சின்னப்பெண் போல்நீ சிணுங்காதே!-உன்
சிரிப்பை மறந்து சிறிது நேரம்-சுடும்
நெருப்பாய் நீயும் மாறாதே!

இருக்கும் நேரத்தை மகிழ்வாய்க் கழித்து
ஒருவருக் கொருவர் அன்பினைப் பகிர்ந்து
இன்ப நுகர்ச்சி கொள்வதே- இனிய
இல்லற வாழ்க்கை யாம்!

பெண்-ஆண் உரிமையில் சமமே யாயினும்
பெண்ணைவிட ஆண் ஒருபடி மேலேயாம்.
நுண்ணிய மொழிசொல்லும் திருமறையின்
உண்மைக் கூற்றினை உணராயோ?

ஆகாரம்தேடி உனைக் காக்க நாளும்
ஆண்மகன் வெளியில் செல்வானே-அவன்
ஆயிரமா யிரம்பிரச் சினையுடனே-தன்
ஆருயிர் மனைவிதேடி வருவானே.

இல்லம் நுழைந்ததும் எங்கே, ஏன் எனும்
பொல்லாக் கேள்வியைக் கேட்காதே!-அவனுக்கு
தொல்லைகள் தந்து துன்பமிழைத்து-நீ
அல்லல் பட்டு வாழாதே!

அண்டை வீட்டுப் பெண்டிரோடு-வீண்
சண்டை ஏதும் போடாதே!-அவரோடு
தேவையற்ற பேச்சு வார்த்தையில்-காலமதை
பாவையேநீ வீண் செய்யாதே!

மாமியாரே உன் அன்னை யாவார்
மாமனாரே உன் தந்தை யாவார்.
மாசற்ற மனதுடனே பணிவிடைகள் செய்துநீ
மாநிலத்தில் மகிழ்ச்சியாய் வாழ்வாயே!

செய்யும்செயலைச் சிறப்பாய் செம்மையாய்
செவ்வனே செய்திடப் பழகிக்கொள்-நீ
பொய்யான, நிலையற்ற தரணி யதில்
மெய்யான வாழ்க்கை வாழ்வாயே!

நடப்பவை யாவும் இறைவன் விதிப்படி
நலிந்து சோர்ந்து போகாதே!-இனி
நடப்பவை யாவும் நலவாய் நடக்கும்-இறை
நம்பிக்கை நாளும் துறவாதே!

நாயன் உனக்கு நலவாய் எழுதிட்ட
நன்மை யாவும் கிடைத்துவிடும்-ஏக
நாயன் அருளுடன் நானிலத்தில் நாளும்
நன்றாய் நலமாய் வாழ்வாயே!
………………………………………………………………………

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டு எங்களைக் காப்பாற்றுவாயாக!”
காரீ நூ அப்துல் ஹாதி பாகவி
ஆலங்குடி

kindly visit:
www.hadi-baquavi.blogspot.com
www.hadibaquaviar.blogspot.com
www.hadi1977.wordpress.com
www.baquaviarvideo.magnify.net
Sent from Chennai, TN, India

--

இராம‌ன் வ‌ர‌மாட்டான் ......!

இராம‌ன் வ‌ர‌மாட்டான் ......!

நெல்லை ஆ. க‌ண‌ப‌தி

இராம‌ர் கோயில் அவ‌சிய‌மா ?
நாட்டின் அமைதி அவ‌சிய‌மா ?
பாப‌ர் ம‌சூதி இடித்த‌ பாவ‌மும்
ப‌ழியும் நீங்கிட‌ வேண்டாமா ?

க‌ல்விதான் க‌ற்க‌ இள‌மையிலும்
கைகேயிவ‌ர‌த்தால் வ‌ள‌மையிலும்
ப‌ல்வேறு ஆண்டுக‌ள் காடுக‌ளில்
ப‌ழ‌கியே வாழ்ந்த‌வ‌ன் இராம‌பிரான் !

கானில் ப‌ட‌கோட்டி குக‌ன் த‌னையே
கண்ட‌தும் சோத‌ர‌ர் ஐவ‌ர் என‌
மானிட‌ன் ஆன்வ‌ன் பிற‌ இன‌த்தை
ம‌திப்ப‌தே பெருமை என்றுரைத்தான்

அயோத்தியில் வாழ்ந்த‌ அர‌ண்ம‌னையும்
ஆர‌ண்ய‌ வாழ்வும் ச‌ம‌ம் என்றான்
வ‌யோதிக‌ன் த‌ச‌ர‌த‌ன் த‌ந்தையினால்
வ‌ன்வாச‌ம் சென்ற‌வ‌ன் புண்ணிய‌வான் !

ம‌ன்ன‌வ‌ன் இராம‌ன் பிற‌ர் உண‌ர்வை
ம‌திப்ப‌தே ப‌ண்பு என‌ வாழ்ந்தான் !
என்ன‌வோ கோயில் கட்டுகிறோம்
இங்கு இரு என்றால் இருப்பனோ ?

இராம‌ர் இருக்கும் இட‌ம் அயோத்தி
எல்லோரும் அறிந்த‌ உண்மை இது !
பாப‌ர் ம‌சூதி கோயிலையே
ப‌டைப்பினும் இராம‌ன் வ‌ர‌மாட்டான்
அடுத்த‌வ‌ர் ம‌னைவியை அப‌க‌ரித்த‌
அதைக் க‌ண்டு கொதித்த‌வ‌ன் இராம‌பிரான்
அடுத்த‌வ‌ர் ம‌சூதியை அப‌க‌ரித்தே
அமைத்திடும் கோயிலில் புக‌மாட்டான் !

நெற்றியில் நாம‌ம் போடுவ‌தும்
நெஞ்சினில் ராம‌னைத் தேடுவ‌தும்
க‌ற்ற‌வ‌ர் போடும் திருக்கோயில்
க‌ற்கோயில் ந‌ம‌து நெஞ்ச‌மதே !

பாப‌ர் ம‌சூதியும் தாஜ்ம‌காலும்
ப‌ழ‌ம்புக‌ழ் போற்றும் பொக்கிஷ‌மே !
யாவ‌ரும் அறிந்த‌ உண்மை இது !
இத‌னை ம‌ற‌ப்ப‌து ச‌ரிதானோ ?

ந‌ன்றி : ச‌ம‌ர‌ச‌ம் டிச‌ம்ப‌ர் 16 31, 2009