முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பு
இஸ்லாமிய சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
அழகிய முன்மாதிரி…
(முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளின் தொகுப்பு)
என்ற நூலை பத்திரிகையாளரும், சிறுகதை எழுத்தாளருமான திருச்சி சையது M.A., M.Phil., தயாரித்து வருகிறார்.
இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் மனதைக் கவர்ந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றிய அபூர்வமான செய்திகளையும், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி பிரபலமான அறிஞர்கள், தலைவர்கள் சொன்ன கருத்துக்களையும் அனுப்பி வைக்கும்படி கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் :
trichysyed@yahoo.com
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label நிகழ்ச்சி. Show all posts

Saturday, August 8, 2009
Thursday, August 6, 2009
துபாய் ஈமான் அமைப்பு நடத்திய புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சி

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு புனித பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சியினை ஹிஜ்ரி 1430 ஷ அபான் பிறை 15, 05.08.2009 புதன் மாலை லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) சிறப்புற நடத்தியது
மஃரிபு தொழுகைக்குப் பின்னர் நடத்திய முதல் அமர்வில் மூன்று முறை யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது. முதலாம் யாசீன் ஸலாமத்தான நீண்ட ஆயுளுக்காகவும், இரண்டாம் யாசீன் பலா முசீபத் கஷ்ட நஷ்டங்கள் நீங்கிடவும், மூன்றாம் யாசீன் ரிஸ்க் விஸ்தீரனம் வேண்டியும் துஆ செய்யப்பட்டது.
இரண்டாம் அமர்வு இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்றது. இச்சிறப்புமிகு நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் கத்தீம் தலைமை வகித்தார். ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி, மவ்லவி ஏ.எஸ். முத்து அஹ்மது ஆலிம் மஹ்ழரி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். விழாக்குழு செயலாளர் யஹ்யா முஹ்யித்தீன் நன்றி கூறினார்.
பயானுக்குப் பின்னர் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளியின் மேல்தளத்தில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துபாய் கோட்டைப் பள்ளி :
துபாய் கோட்டைப் பள்ளியில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற பராஅத் இரவு சிறப்பு நிகழ்வில் சேலம் ஜாமிஆ மளாஹிருல் உலூம் முதல்வர் மவ்லானா அனீசுர் ரஹ்மான் ஹஜ்ரத் காஸிமி, சொல்லின் செல்வர் செங்கோட்டை சிங்கம் மணிமொழி மவ்லானா ஆவூர் ஏ. அப்துஷ் ஷுக்கூர் மன்பஈ ஹஜ்ரத், கீழக்கரை முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
அஸ்கான் டி பிளாக் :
சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சியில் வடகரை மவ்லானா எம். மீரா முஹ்யித்தீன் பைஜி ஹஜ்ரத், ஏ. முஹம்மது மஃரூப் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
அபுதாபி அய்மான்
அபுதாபி அய்மான் அமைப்பின் சார்பில் அபுதாபி கலீஃபா மஸ்ஜிதில் பராஅத் இரவு சிறப்பு நிகழ்ச்சியினையொட்டி சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Labels:
ஈமான்,
துபாய்,
நிகழ்ச்சி,
புனித பராஅத் இரவு
Saturday, May 9, 2009
வி.களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்ட வி. களத்தூரில் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி 11.05.2009 திங்கட்கிழமை ஜும் ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு உயர்கல்வி கற்க வழிகாட்டுதல், எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு தொடரமுடியாத ஆண், பெண்களுக்கு மேற்கொண்டு பட்டப்படிப்பு தொடர வழிகாட்டுதல் மற்றும் உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு உள்ளிட்டவை வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்குகிறார்.
இந்நிகழ்வில் மாணவ, மாணவியர் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்திய முஸ்லிம் நல அறக்கட்டளை செய்துள்ளது.
குறிப்பு :
இதுபோன்ற கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை தங்களது ஊரில் நட த்த விரும்புவோர் முனைவர் பேராசிரியர் எஸ். ஆபிதீன் அவர்களை 9965892706. எனும் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

படிப்பு,
வழிகாட்டுதல்,
வி.களத்தூர்
Friday, March 20, 2009
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் மாதாந்திர கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு

துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் தமிழ்த்தேர் மாதாந்திர கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு 20.03.2009 வெள்ளிக்கிழமை காலை கராமா சிவ் ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் காவிரிமைந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். ஜியாவுதீன் முன்னிலை வகித்தார்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழக தலைவர் நீடூர் முனைவர் அய்யூப், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராமன், கவிஞர் ஷாகுல் ஹமீது, யுஏஇ தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தமிழ்த்தேர் மாதாந்திர கவிதை இதழை முனைவர் அய்யூப் வெளியிட முதல் இதழை அக்பர் அலி பெற்றுக் கொண்டார்.
முனைவர் அய்யூப் அவர்கள் தனது உரையில் பலரது பேச்சுக்களை பல்வேறு நிகழ்வுகளில் கேட்டதன் காரணமாக ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்ள காரணமாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் ராமன் தனது உரையில் எவர் ஒருவர் ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாக செலவழிக்கின்றாரோ அவர் வாழ்வில் உயர்நிலையினை அடைய முடியும் என்றார். வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் செயல்படுத்துவதன் காரணமாக உயர்வு பெறலாம். நாம் யோசனை செய்வதால் களைப்படையப் போவதில்லை. நல்ல சிந்தனைகள் நம்மை வாழ்வில் உயர்த்தும். பாராட்டுவதன் மூலம் மகிழ்வு அடையலாம். வாழ்வு மகிழ்வானதாய் இருக்கும் என்றார்.
அன்புடன் அல்லாவுக்கு எனும் கவிதை நூலாசிரியர் ஷாகுல் ஹமீது பாரதி, பாரதிதாசன், அவ்வையார், நாமக்கல் கவிஞர், கண்ணதாசன், கவிக்கோ அப்துல் ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்ட பலரது கவிதைகள் மற்றும் தத்துவங்களை திறனாய்வு செய்து பேசினார்.
பணம் மற்றும் உழவு எனும் தலைப்பில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர். தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கவிஞர்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
Subscribe to:
Posts (Atom)