Showing posts with label பெருநாள். Show all posts
Showing posts with label பெருநாள். Show all posts

Thursday, September 9, 2010

யாருக்குப் பெருநாள்?

யாருக்குப் பெருநாள்?

உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.
பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.
காலையில் எழுந்து டீ அல்லது காஃபி
குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும்...
என்ற பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.
புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும்
என்ற நிலையிருந்தும் புகை பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!
தன் ஆணவத்தை அடக்கி
அலட்சியப் போக்கை அழித்து
பகலில் பட்டினி கிடந்து
இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு
பசி, தாகத்தால் இச்சையை வென்று
இறை கடமைகளை நிறைவேற்றி
தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்...!
வறியவர்களின் தேவைகளை கவனித்து
பட்டினியையும், பசியையும் அடக்கி,
நோன்பினால் ஈமானை பலப்படுத்தி
ஆன்மிக பலத்தை நிலை நாட்டி
ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று
இறைவனுக்காக நோன்பிருந்த
இறைமறையை ஓதி உணர்ந்த
இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்...!

ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து
கருமித்தனத்தை அடியோடு ஒழித்து
சிறியவர்களை போற்றி - பாராட்டி
பெரியவர்களை மதித்து நடந்து
அறிஞர்களுடன் பண்புடன் நடந்து
செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு
இனி பாவமே செய்யமாட்டேன்
என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!
எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!
எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!
எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!
எனது மரணம் அல்லாஹ்வுக்கே!
என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்...!

உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!


பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,
அலைபேசி: (+965) 66 64 14 34
மின்னஞ்சல்: abkaleel@gmail.com / abkaleel1@gmail.com / abkaleel@yahoo.com / khaleel_baaqavee@yahoo.co.in
பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
கௌரவ தலைவர், குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)
இணை ஆசிரியர், K-TIc பிறை செய்தி மடல், குவைத்
ஆசிரியர் குழாம், www.mypno.com / www.k-tic.com
நிறுவனர், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய அறக்கட்டளை (PIT)
வலைப்பூக்கள்: www.khaleel-baaqavee.blogspot.com / www.khaleelbaaqavee.blogspot.com / www.ulamaa-pno.blogspot.com / www.608502.blogspot.com / www.mypno.blogspot.com / www.lalpetexpress.blogspot.com / www.pinnaijaffar.blogspot.com / www.ppettai.blogspot.com / www.ulamaa-chidambaram.blogspot.com / www.aimaan-pno.blogspot.com / www.news-portonovo.blogspot.com / www.mammsm.blogspot.com / www.ismailpno.blogspot.com

அன்பு சகோதரனுக்கு ஒர் பெருநாள் செய்தி

அன்பு சகோதரனுக்கு ஒர் பெருநாள் செய்தி



திருச்சி.A.M.அப்துல் காதிர் ஹஸனி M.A.,





மகிழ்ச்சி பொங்குக

பெருநாள் காலை

அன்பு சகோதரனே



உன்னை பார்க்க

ரொம்பவே வியப்பு எனக்கு

ரமளான் முழுவதும்

உனக்குள்

அத்தனை மாற்றம்



ஃபஜர் தொழுகைக்கு

கூட எழாமல்

போர்த்திக்கொண்டு

உறங்கும் நீ

தஹஜ்ஜத் கூட

தவறவிட வில்லையே



சாப்பாடு

சற்று தாமதமானாலும்

கூப்பாடு போடும்

நீயா முப்பதுநாள்

நோன்பிருந்தாய்



நீ திருமறை ஒதி

நான் பார்த்ததில்லையே

பள்ளியிலேயே அமர்ந்து

ஒதிக்கொண்டிருந்தது

நீதானா



வறியோர் தேடிவந்தால்

ஆயிரம் கேள்வி

கேட்கும் நீயா

வாரி வழங்கினாய்



சிறிதாய்

சீண்டினாலும்

சீறிப்பாய்வாயே நீயா

சகிப்போடு

நடந்து கொண்டாய்;;;;;;;;;;;;;



திக்ரென்ன..

துஆவென்ன …

நம்பவே முடியவில்லை

என்னால்

இதுவெல்லாம்

நீதானா



எனக்கு தெரியும்..

யாரின் முகத்திற்காகவும்

இதை நீ

செய்யவில்லைஸ



அல்லாஹ்வின்

அருளை நாடி மட்டுமே

செய்தாய்

அவனின்

அன்பை தேடி மட்டுமே

செய்தாய்



மகத்தான

இரட்சகனின்

மன்னிப்பை

தேடிமட்டுமே

செய்தாய்





நன்கு மாறியிருக்கிறாய்

நல்ல நிலைக்கு

தேறியிருக்கிறாய்



அன்பு சகோதரனே

ஈமான்?

தொழுகை?

நோன்பு?

கொடை?

நல்லமல்கள்

இதுவெல்லாம்

ஒருமாதத்திற்கு

மட்டுமே உரியதல்ல



இறைவனுக்காக

எதையும்

செய்ய பழகுவற்குதான்

ரமளான்



ஒரு மாதத்தோடு

விலகுவதற்கல்ல



ரமளானில்

உன்னை பார்த்தது

போன்று

எல்லோரும் பார்க்க

வேண்டும்



பெருநாளோடு

முடியவில்லை

உனது கணக்கு



ரமளான்

நடத்திய பாடத்தை

வாழ்வில்

இனிபடிக்கத்

தொடங்கு

juharazi@gmail.com

Saturday, July 3, 2010

இஸ்லாமிய பெருநாட்கள்

இஸ்லாமிய பெருநாட்கள்

உலகத்திலுள்ள மதங்கள் அனைத்தும் பெருநாட்கள் கொன்டாடுகின்றன. ஓவ்வொரு பெருநாளுக்கும் காரனங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. பல்வேறு தத்துவங்கள் கூறப்படுகின்றன. காலம் காலமாக இவை தொடர்ந்து கொண்டாடப்படுகின்றன. ஒன்று மதத் தலைவர்கள் அல்லது தீர்க்கதரிசி அவதரித்த நாளாக இருக்கும் அல்லது அந்த மதத் தலைவர் முக்தி பெற்ற நாளாகவோ, மரித்த நாளாகவோ இருக்கும். ஊலகத்தில் அநீதி தலை தூக்கி நின்ற போது அதை சம்ஹாரம் செய்ய பகவான் உலகத்திற்கு அவதாரமெடுத்து வந்த நாளாக இருக்கும் இப்படி சொல்லிக்கொன்டே போகலாம். வுpழா எடுப்பதற்கு ஒரு காரணம் அல்லது பின்னணி கற்பிக்கப்பட்டு அந்தந்த விழாக்களை எடுத்து அந்தந்த மதவாதிகள் மகிழ்வதைப் பார்க்கிறோம்.

ஓவ்வொரு பெருநாளும் ஒவ்வொரு விதமாக கொன்டாடபடுகிறது. அப்பெருநாளுக்குக் கற்பிக்கப்பட்ட காரணங்களையொட்டி விழா எடுக்கப்படுகிறது. அவைகளையொட்டிய முறைகள் கையாளப்படுகின்றன. ஒவ்வொரு பெருநாளுக்கும் புத்தாடைகள் - அதற்கு தகுந்தாற்போல் தின்பண்டங்கள் - சடங்குகள், சம்பிரதாயங்கள், களியாட்டங்கள் போன்ற அம்சங்கள் வகுக்கப்பட்டு முறையோடு இயக்கப்படுவதைப் பார்க்கிறோம். இத்தகை விழாக்கள் இங்கு மட்டுமல்ல, எல்லாப் பிரதேசங்களிலும், நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றன. ஒரே விழா எல்லைக்கு எல்லை மாறுபட்ட கருத்துக்களோடும் மாறுபட்ட டுறைகளோடும் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாத்தில் இரு பெருநாட்கள் வருகின்றன. ஒன்று ரம்ஜான் மற்றொன்று பக்ரீத். இவ்விரு பெருநாட்களையும் உலகத்தில் கொண்டாடப்படும் எந்த பெருநாட்களோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இத மற்ற பெருநாட்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை – காரணங்களில், தத்துவங்களில், நடைமுறைகளில் எல்லாம் தனித்து நின்று உலகத்துக்கு ஒரு புதுதத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.

வுpழா எடுப்பதில் ஒரு வெற்றி பொதிந்திருக்கும் - தம் பாரம்பரியத்தில் ஒரு வெற்றிக்கு அறிகுறியாக விழா அமைந்திருக்கும். இதுதான் நடப்பு. ஆனால் இஸ்லாமிய பெருநாட்கள் உலக மாந்தர்கள் எல்லாம் பெருமிதம் கொள்ளும் வகையில் தியாகப் பிழம்புகளாக தம்மை ஆக்கிக் கொள்வதற்கும், ஆயத்தப்படுத்தி கொள்வதற்கும் ஓர் முன்னோடி போன்றதுதான் என்பது 1429 ஆண்டுகளாக நீருபிக்கப்பட்டுவிட்டது. தம்மையும், தம் செல்வத்தையும், தாம்பெற்ற அனைத்தையும் இவ்வுலகில் நம்மை படைத்து, பாதுகாத்து பரிபாலித்து வரும் அல்லாஹ்வுக்காக தியாகம் புரியத் துணிந்துவிட்டதின் பின்னர் ஏற்படும் ஆத்ம திருப்தியும், மகிழ்ச்சியும் இருக்கிறதேத அதை வெளிப்படுத்திக் காட்டுவதுதான் பெருநாள்.

காலம் காலமாக குழந்தை இல்லாமல் காலம் கடந்து முதுமையில் ஒரு அழகான ஆண்மகவைப் பெற்றெடுக்கிறார் நபி இப்ராகிம் (அலை) அவர்கள். உலக ஆசைகளையெல்லாம் அக்குழந்தையின் மீது கொட்டிப் பாசத்தால் நெஞ்சில் இருத்தி வளர்க்கிறார். அத்திருமகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களை அத்தகையக் குலக்கொழுந்தை ஒரே குழந்தையை பருவமடையாத அந்த பாலகனைக் கழுத்தை அறுத்துத் தனக்காக குர்பானி – தியாகம் செய்யும்படி கூறுகிறான் அல்லாஹ். உலகம் அதுவரை கண்டிராத சோதணையின் உச்சக்கட்டம், தன்னால் படைக்கப்பட்ட மனிதன் - ஒரு நபி – தன்னை விட மற்றதை மதிக்கிறானா என்று சோதிக்க நாடிய அல்லாஹ் ஆணையிடுகிறான் அப்படி.

‘நான் என்ன, என் குழந்தை என்ன, என் குடும்பம் என்ன, நான் பெற்ற அனைத்தையும் உனக்காகத் தியாகம் புரிவேன்’ எனக்கூறி தான் பெற்ற பாலகனை, பாசங்கொட்டி வளர்த்த மழழைக் குழந்தையை கீழே கிடத்தி கூர்மையான தன் வாளை – கழுத்தின் மேல் செலுத்தத் துனிந்துவிட்ட அவரின் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். அதன் மூலம் உலகத்துக்கு ஒரு படிப்பினையை அருளிவிட்டான். நரபலியை தடுத்தது மட்டுமல்ல, மனிதன் பிரபஞ்சங்கள் அனைத்தையும் படைத்து இயக்கி வரும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வுக்காக அனைத்தையும் தியாகம் புரிய சித்தமாக இருக்கக் கூடியவனே அடியான் எனக்கோடிட்டுக் காட்டிவிட்டான். அந்த வழிவந்த நாம், இத்தியாகத்தில் வெற்றிபெற்ற நாம், பக்ரீத் பெருநாளைக் கொன்டாடுகிறோம்.

அடுத்து ரம்ஜான் பெருநாள். இம்மாதத்தின் முப்பது நாட்களும் மனிதன் பகல் நேரத்தில் உண்னாமலும், பருகாமலும், புணராமலும் இருக்க கடமைப்பட்டவன். பகல் முழுவம் பசித்திருந்து, தாகித்திருந்து இச்சைகளை கட்டுபடுத்தி தன்னைத் தானே வருத்திக்கொள்வதன் மூலம், அல்லாஹ்வின் நல்லடியார்களின் கூட்டத்தில் தன்னை இனைத்துக்கொள்ள முயல்கிறான் மனிதன். இரவு பகல் விழிதிருந்து இறைவனை தொழுது, பொய் பேசாமல், புரம் பேசாமல் மட்டுமல்ல மனதார எண்ணாமலும் கூடத் தனனைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு அல்லாஹ் விதித்துள்ள கட்டளைகளை மேற்கொண்டு பொறுமையின் பிம்பமாய் அதே நேரத்தில் தியாகத்தின் சின்னமாய் முப்பது நாட்களையும் வெற்றிகரமாக கழிக்கின்றானே அதை எண்ணிப் பெருமைப்பட்டவனாக, அத்தகைய தியாகத்தில் வெற்றி பெற்றவனாக பெருநாளை கொன்டாடுகிறான் ஒரு முஸ்லிம். தனக்கென வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற அடிப்படை தத்துவத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுவான் வேண்டி, தான தர்மங்களைச் செய்தவனாக அதிலும் அனைத்தையும் சர்வ வல்லமை பொருத்தி அல்லாஹ்வுக்காக எதையும் செய்யமுடியும் என பக்குவத்தை அடைந்தவனாகப் பெருநாளை கொன்டாடுகிறான் முஸ்லிம்.

ஆக இந்த இரு பெருநாட்களையும் மற்ற பெருநாட்களோடு ஒப்பிட முடியாது - கூடாது. இப்பெருநாட்கள் தியாகத்தின் தியாகத்தின் அடிப்படையிலேயே, அத்தியாகத்தை செய்ததில் வெற்றி பெற்றவர்கள் என்ற அடிப்படையிலேயே முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றன என்ற உண்மையைப் நாம் புரிந்துக்கொன்டால் நம் பெருநாட்களின் தத்வங்கள் நமக்கு புரிந்துவிடும்! புரிந்து கொன்ட அந்த தத்துவத்தின் அடிப்படையிலே நாம் நடைபோட ஆரம்பித்தால் தியாக உணர்வு நம்மை வழி நடத்தும். அந்த வழியிலே நாம் செல்வோமானால் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் நம்மை நேரான பாதையில் சீராக நடத்திவிட்டான் என்பது புரிந்துவிடும். ஆதன் மூலம் இம்மையிலும் மறுமையிலும் நாம் வெற்றி பெற்றவர்களாவோம்.

Tuesday, March 24, 2009

இனிய பெருநாள் வாழ்த்துகள்

இனிய பெருநாள் வாழ்த்துகள்

முன்னவரின் கடமையது இரமளான் நோன்பு
...முஸ்லிம்கள் பேணுவதும் அதனைத் தானே
எண்ணமதைச் சுத்திசெய்யும் இந்த மாதம்
....இதயத்தில் ஒளிவீசும் விரதத் தூய்மை
விண்ணவரின் வாழ்த்துக்கு உரிய தாக
....விளங்குகின்ற வாய்ப்பளிக்கும்; உயர்வு நல்கும்
மன்னவரோ மற்றவரோ வயிறால் ஒன்றே!
....மண்ணுலகின் பசிபஞ்சம் மாய்த்தல் நன்றே!


வணக்கத்தை இறைவனுக்கே உறுதி செய்து
....வளமாகும் நல்லுணர்வும் வாய்க்கப் பெற்று
இணக்கத்தை வளர்க்கின்ற ஈகை மனங்கள்
....இன்பத்தை அதனாலே எடுத்துக் கொள்வார்
சுணக்கத்தை நற்செயலில் செய்து வந்தோர்
....சுறுசுறுப்பை செயல்தனிலே சேர்த்துக் கொள்வார்
பிணக்கென்றால் வேண்டாமே என்று சொல்லி
....பிள்ளைநிலா முழுமதியாய் பிரகா சிக்கும்.

ஒன்றுக்குப் பத்தேழாய் வழங்கும் நோன்பு
....உயர்வான வெற்றிக்கு வழியைச் சொல்லும்
நன்றாக ஏற்கின்ற நண்பர் யார்க்கும்
....நாளைக்கு நற்சாட்சி நோன்பில் உண்டு
மன்றாடும் இறையடியார் மன்னிப் படைவார்
....மகத்தான ஓரிறையின் மார்க்கம் கொள்வார்
அன்றாட வாழ்நாளில் நோன்பின் பயிற்சி
....அற்புதங்கள் வெளிப்படுத்தும் ஆன்ம மாட்சி.


மெய்யான இறையச்சம் மனதில் கொண்டால்
....மேற்படியான் சாத்தானும் தோற்றுப் போவான்
ஐயமில்லாப் பேருண்மை அரிய நோன்பில்
....அடைந்தாரே அடைகின்றார் அதுவே நோக்கம்.
வையத்தில் வைக்கின்ற விரத மெல்லாம்
.... வயிற்றுக்கே உணவுக்கே என்றி ருக்க
பொய்யில்லா இஸ்லாமின் இந்த நோன்பு
....புலனடக்கம் போதிக்கும் பேரா சானே!

இறைவேதம் அருளான இந்த மாதம்
....எண்ணத்தை வளமாக்கும்; ஓடிப் போகும்
விரைவாக மீண்டுவர உள்ளம் வேண்டும்
...விண்மதிகள் பதினொன்று முழுதாய் ஆகும்
பிறைபார்க்க பெருநாளும் பூத்து நிற்கும்
....பேரன்பை ஈகையிலே பார்த்தி ருக்கும்.
நிறைவான நேரங்கள் நோன்பில் என்றும்
....நிலையான வெகுமதியும் இறையின் நாட்டம்


இனிய பெருநாள் வாழ்த்துகள்

--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com

Monday, October 13, 2008

கீழக்கரையில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

கீழக்கரையில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

09.12.2008 செவ்வாய் கிழமை அன்று காலை 8 மணிக்கு கீழக்கரை , நடுத்தெரு ஜும்ஆ
மஸ்ஜிதில் டவுன் காஜி அல்ஹாஜ் .எம்.எம் .காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ ஹஜ்ஜுப்பெருநாள்
தொழுகை நடத்தினார்


நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவி அஸ்மத் ஹுசைன் மன்பஈ பெருநாள் குத்பா உரையை
நிகழ்த்தினார் கீழக்கரை வழக்கப்படி அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்கள் மஹல்லாக்களிலிருந்து
தக்பீர் முழக்கத்துடன் ஊர்வலமாக ஜும்ஆ மஸ்ஜித் சென்று ஒன்று கூடி பெருநாள் குத்பா
நிறைவுக்குப்பின்னர் தக்பீர் முழக்கத்துடன் ஊர்வலமாக ஜமாஅத்துகளுக்கு திரும்பினர்

Monday, December 17, 2007

தியாகத் திருநாள்!

தியாகத் திருநாள்!
எண்ணற்ற
தியாகங்கள்
இவ்வையத்தில்
வரலாற்றிலும்
வாழ்விலும்!

நாட்டுக்காக
மொழிக்காக
உறவுக்காக
நட்புக்காக
காதலுக்காகவென!

உயிர்
உறவுகள்
உடமைகள்
சொத்துக்கள்
சுகங்களெனப்
பலவற்றின் தியாகம்!

ஆயினும்
ஆயிரமாயிரம்
ஆண்டுகளாய்ப்
போற்றப்பட்டு வரும்
ஒரே தியாகம்
இப்ராஹீம்(அலை)நபி
அவர்களுடையது தான்!

தள்ளாத முதுமையில்
தனக்குப் பிறந்த
ஒரே மகனை
இறைவனின் ஆணையேற்றுப்
பலிப்பீடம் ஏற்றியது!

சுய நலமே சூழ்ந்திருக்கும்
இவ்வுலகில் நாம்
தியாக உணர்வு
பெற்றிட
உணர்த்தும் நாளே
தியாகத் திருநாள்
பக்ரீத்!!

-இமாம்.கவுஸ் மொய்தீன்
drimamgm@hotmail.com