Thursday, May 14, 2009

http://tamilquranmp3.com/

Ali A Kader
gani@dhaqan.net
akseemar@tamilquranmp3.com
dateMon, May 11, 2009 at 8:08 AM
subjectNEW IN WEB WORLD - FIRST ONLINE TAMIL FLIP QURAN

அன்புள்ள‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு,
அஸ்ஸ‌லாமு அலைக்கும்

முத‌ல் முறையாக‌ த‌மிழ் குரானை அத‌ன் உண்மையான‌ புத்த‌க‌ வ‌டிவில் வ‌லை உல‌கில் அறிமுக‌ப்ப‌டுத்துகிறோம். குரானின் ப‌க்க‌ங்க‌ளைப் புர‌ட்டுவ‌து போல் நீங்க‌ள் புர‌ட்டி உங்க‌ளுக்கு தேவைப்ப‌ட்ட‌ ப‌க்க‌ங்க‌ளையோ, திருகுரானின் அத்தியாய‌ங்க‌ளையோ புர‌ட்டி பார்த்துக் கொள்ள‌லாம்.

நாங்க‌ள் எடுத்துக் கொண்ட‌ முய‌ற்சிக்கு உங்க‌ள் முழுமையான‌ ஆத‌ர‌வே கார‌ண‌ம்.
திருகுரானை இந்த‌ புதிய‌ வ‌டிவில் காண‌ கீழ்க‌ண்ட‌ முக‌வ‌ரியில் அமுத்த‌வும்.

http://tamilquranmp3.com/

த‌ய‌வு செய்து இந்த‌ ம‌ட‌லை உங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளுக்கும், ச‌கோத‌ர‌ர்க‌ளுக்கும் அனுப்பித் த‌ந்து
அணைவ‌ரும் ப‌ய‌ன் பெற‌ செய்ய‌வும்.

என்றும் உங்க‌ள‌ ஆத‌ர‌வை நாடும்
k@der
Adminstrator

தேர்தல் ரிசல்ட்: இணையத்தில் நேரடி ஒளிபரப்பு

தேர்தல் ரிசல்ட்: இணையத்தில் நேரடி ஒளிபரப்பு
Thursday, 14 May 2009

சென்னை, மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதும் நௌடங்கி இணைய தள டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.இது இந்தியாவில் கொண்டு வரப்பட்ட முதலாவது ஆன் லைன் டி.வி.யாகும்.


தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் ஒளிபரப்பப் படுவதோடு, தேர்தல் தொடர்பான அனைத்துக் தகவல்களும் இதில் இடம் பெறும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ம் தேதி தொடங்கி மூன்று தினங்களுக்கு தேர்தல் நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பாகும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனீல் நாயர் தெரிவித்துள்ளார்.

நௌடங்கி டிவியில் 3.8 கோடி வீடியோ காட்சிப் பதிவுகள் உள்ளன. இந்த ஆன் லைன் டி.வி.யை உலகெங்கும் தினசரி 60 லட்சம் பேர் பார்க்கின்றனர்.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களுடன் இணைக்கப் பட்டுள்ளதால், விரும்பும் டிவி நிகழ்ச்சிகளைத் தேர்வு செய்து பார்க்கலாம். இணையதள முகவரி:www.nautanki.tv.

வி.களத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

வி.களத்தூரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் இந்திய முஸ்லீம் நல அறக்கட்டளை சார்பாக 11.05.2009 காலை 10 மணிக்கு கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது. வி.களத்தூர் ஜாமிஆ பள்ளிவாசலின் கீழதளத்தில் நடைபெற்ற இந்நிகழ்சிசக்கு அறக்கட்டளையின் கல்விக்குழு தலைவர் ஜனாப் சேக் முஹம்மது(துபய்) தலைமைதாங்கினார். ஐடியல் ஆங்கிலப்பள்ளியின் தாளாளர் ஜனாப் கமால் பாசா (அபுதாபி ) வறவேற்றுப்பேசினார். இந்த கருத்தரங்கில் இளையான்குடி சாகீர்உசேன் கல்லூரி பேராசிரியர,; டாக்டர் ஆபிதீன் அறிமுகமில்லாத அரிய படிப்புகள் என்ற தலைப்பில் அறிமுகமில்லாத சுமார் 150 க்கும் மேற்பட்ட புதுப்புபது படிப்புகள் பற்றிய தெளிவான ஆலோசனைகளை ஒளித்திரையின் மூலம் விளக்கி முஸ்லீம்களுக்கு இன்றைய கல்வியின் அவசர அவசியம் குறித்தும் பேசினார்.

இந் நிகழ்சியில் ஆரும்பாவூர் தாஹிர் பாசா, வி களத்தூர் ஹக்கீம் , ஆதம் சரீப், சேக் தாவூத் , சாதிக், அபுதாஹிர், உட்பட சுமார் இறுநூறுக்கும் அதிகமான மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.