ராமநாதபுரம் தமிழ்ச் சங்க முப்பெரும் விழா
ராமநாதபுரம், மே 31: ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் தின விழா, மாவட்ட நூற்றாண்டு துவக்க விழா, நகராட்சி பொன்விழா ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆர். வாசுகி தலைமை வகித்து தமிழ்ச் சங்க நூலகத்தின் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்துப் பேசினார்.
ராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர். லலிதகலா ரெத்தினம் முன்னிலை வகித்தார். சங்கச் செயலர் சந்திரசேகரன் வரவேற்றார்.
தமிழ்ச் சங்க நிறுவனர் எஸ்.எம். கமாலின் உருவப் படத்தை தொழிலதிபர் எம். காதர் மைதீன் திறந்து வைத்தார்.
நிறுவனரின் நினைவுகள் குறித்து கவிஞர் நா. வேலுச்சாமி துரை, எம்.எம்.எஸ். செய்யது இப்ராஹிம், இல. நடராஜன் ஆகியோர் பேசினார்கள்.
நூறாண்டுகள் கண்ட மாவட்டம் என்ற தலைப்பில் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் எம்.எஸ்.கருணாநிதி, மூத்த பத்திரிகையாளர் எம்.எஸ். அல்லாபாக்ஸ், பொன் விழா கண்ட நகராட்சி என்ற தலைப்பில் அ. அன்வர்தீன் ஆகியோர் பேசினர்.
விழாவில் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கு நக்கீரன் கோபால் ரூ. 25,000 நன்கொடையாக வழங்கியதுடன் குற்றம் குற்றமே என்ற தலைப்பில் பேசினார்.
இலக்கிய இன்பம் என்ற தலைப்பில் கவிஞர் தெய்வச்சிலை பேசினார். விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர் அப்துல்சலாம், துணைத் தலைவர் விவேகானந்தன், செயலர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தர மூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் தலைமை ஆசிரியை காளீஸ்வரி, விபத்து மீட்புச் சங்க தலைவர் தேவசேனாதிபதி, சங்க துணைத் தலைவர் கு. விவேகானந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Showing posts with label ராமநாதபுரம். Show all posts

Tuesday, June 2, 2009
Sunday, January 4, 2009
ராமநாதபுரம் தமிழ்ச் சங்க விருது வழங்கும் விழா

www.muduvaivision.com
ஜன. 3: ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில், முன்னாள் சங்கத் துணைத் தலைவர் த. குழந்தைசெட்டியார் நினைவு தினவிழா மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டோருக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத் தலைவர் மை. அப்துல் சலாம் தலைமை வகித்தார். சங்கச் செயலர் கண் மருத்துவர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கு.விவேகானந்தன் வரவேற்றார்.
சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தை செட்டியாரின் உருவப்படத்தை, உறுப்பினர் எஸ்.கே. பால்ச்சாமி செட்டியார் திறந்துவைத்தார்.
கவிஞர் வேலுச்சாமிதுரை, ஆசிரியர் பாஸ்கரன், கலைச்செல்வன், கரு.நா. விசுவநாதன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
திருச்சி கவிஞர் நந்தலாலா நடுவராகவும் கவிஞர்கள் முத்துநிலவன், மதுக்கூர். ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
எஸ்.ஆர். வெங்கிடாஜலம் (வணிகர்), டாக்டர் கே. ஜோசப்ராஜன் (மருத்துவர்), புலவர் கு. முனியாண்டி (தமிழ்ப்பணி), சா. கஸ்தூரிபாய் (சமூகப்பணி) ஆர். வாசு (சிறந்த இசைப்பணி), கரு.நா. விசுவநாதன் (சிறந்த நாடகப்பணி).
சிறந்த சமூகப்பணி செய்துவரும் அமைப்பு என்ற முறையில், விபத்து மீட்புச் சங்கத்திற்குரிய விருதை, அச்சங்க இணைச் செயலாளர் பாலமுருகன் பெற்றுக் கொண்டார்.
சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு உரப்புளி ஜெயராமனுக்கும், 2-வது பரிசை பழ. முருகேசன், செய்யதா தேன்மொழி ஆகியோரும் பெற்றனர்.
சிறப்புப் பரிசாக தமிழரசி உதயக்குமார், சந்திரசேகரன் ஆகியோருக்கு, சங்கப் பொருளாளர் சுந்தரமூர்த்தி பரிசுகள் வழங்கினார்.

Thursday, October 9, 2008
ராமநாதபுரம் : தமிழ்ச் சங்க முப்பெரும் விழா

ராமநாதபுரம், அக். 6: ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம் சார்பில் மருதூர் வள்ளலார், காமராஜர், கி.வா.ஜ. விருது பெற்ற பேராசிரியர் அப்துல்சலாமுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தமிழ்ச் சங்கச் செயலர் பொ. சந்திரசேகரன் தலைமை வகித்தார். சங்க துணைத் தலைவர் வைகிங் எம்.எஸ். கருணாநிதி முன்னிலை வகித்தார். பொருளாளர் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.
விழாவில் வள்ளலாரைப் பற்றி கவிஞர் மகுடதீபனும், காமராஜரைப் பற்றி கவிஞர் பழ. முருகேசனும் கவிதை வாசித்தனர்.
சங்கத்தின் மற்றொரு துணைத் தலைவர் கு. விவேகானந்தன் விழாவை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
பின்னர் சென்னை கம்பன் கழகத்தினரால் ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத் தலைவரான பேராசிரியர் மை. அப்துல்சலாமுக்கு கி.வா.ஜ. விருது வழங்கப்பட்டமைக்கு அனைவரும் பாராட்டினர்.
மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.கே. பவானி ராஜேந்திரன், கே. ஹசன்அலி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் அ. அன்வர்ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, வர்த்தக சங்கத் தலைவர் தனபாலன் ஆகியோர் தமிழ்ச் சங்கத் தலைவரையும், அதன் செயல்பாடுகளையும் பாராட்டினர்.
பேராசிரியர் மை. அப்துல்சலாம் ஏற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் பல்வேறு வரலாற்று நூல்கள் எழுதிய எழுத்தாளர் அமரர் முஸ்தபா கமாலின் மகள் சர்மிளா தன் தந்தை எழுதிய நூல்களை நாட்டுடைமையாக்க அரசை வலியுறுத்தி பவானி ராஜேந்திரன் எம்.பி., கே. ஹசன்அலி எம்.எல்.ஏ. ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
சங்க உறுப்பினர் பெ. குமரன் நன்றி கூறினார்.

Monday, June 2, 2008
ராமநாதபுரம் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி
ராமநாதபுரம் நேஷ னல் அகாடமி மெட்ரிக் பள்ளி மாணவி பாயிஹா, 471 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலி டம் பெற்றார். பாடவாரி யாக இவர் பெற்ற மதிப்பெண்: தமிழ்-93, ஆங்கிலம்-91, அறிவியல்-95, கணிதம்-99, வரலாறு மற்றும் புவியியல்-93. மாணவி பாயிஹாவின் தந்தை சகுபர் சாதிக், தாய் ஷபீகா ஆகியோர் டாக்டர்கள். பாயிஹாவின் சகோதரி தஹ்சினீ நிலோபர், கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 4 பாடங்களில் 100 சதவீத மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வெற்றி குறித்து மாணவி பாயிஹா கூறுகையில், `பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும். பின்னர் மருத்துவம் படித்து சமூக சேவை செய்வதே எனது விருப்பம்' என்றார்.
Subscribe to:
Posts (Atom)