Showing posts with label மருத்துவர். Show all posts
Showing posts with label மருத்துவர். Show all posts

Monday, May 4, 2009

நோயில்லா உலகம் படைப்போம்

நோயில்லா உலகம் படைப்போம்
வழி காட்டும் சீன மருத்துவம்


இன்று நம்மில் பல்வேறு நபர்கள் நோயினால் அவதிப்பட்டு, ஆங்கில மருந்துகளின் பின்விளைவுகளாலும் மற்றும் அதற்கு சிகிற்சை அளிக்க போதிய வருமானமில்லாது இறந்து போகும் நிலமையையும் நாள்தோறும் கண்டுவருகிறோம்.

இதற்கெல்லாம் விடைகொடுக்கும் விதமாக, எளிமையான எந்த பக்க விளைவுகளுமின்றி நாடி முறைப்படி நோயறிந்து அதற்கு தகுந்த முறையில் அக்குபஞ்சர் சிகிற்சை அளித்து பூரண குணப்படுத்தி வருகிறோம். நோயாளிக் கூறாமலேயே அவர்களது உடலில் உள்ள நோய்களை பட்டியலிட்டு கூற இயலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்புக் கருவியின்மூலம். பின் கண்டறியப்பட்ட நோய்களுக்குத் தகுந்த முறையில் சிகிற்சையும் அளிக்கிறோம்.

ஒருவரது உணவுப்பழக்கமும், உடல்பயிற்சியும், நல்ல தூக்கமும் நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஐவேளை தொழும்பொழுது மனதை ஒருமுகப்படுத்தி கட்டுபடுத்தவும் முடியும். சரியான வேளையில் தொழுகையை நடத்த கூறுவதுபோல், சரியான வேளையில் உணவையும் உட்கொள்ளவேண்டும். அப்போது நாம் சந்திக்கும் பற்பல நோய்களிலிருந்தும், விடுபடலாம் இன்ஷா அல்லாஹ். இது மிகவும் இன்றியமையாதது.

மேலும் அதிக விபரத்திற்கு அல்லது அக்குபஞ்சர் சிகிற்சைக்கு தொடர்பு கொள்ளவும் >

மருத்துவர் சாதிக் > 09443389935

"தாருல்ஸஃபா அக்குபஞ்சர் சிகிற்சை நிலையம்" > நாகர்கோவில்.

சிகிற்சையின் போது தகுந்த ஆலோசனைகளும் அளிக்கப்படும். அப்போது மீண்டும் நோய் வருவதிலிருந்து உங்களைப்பேணி பாதுகாத்துக் கொள்ளலாம். BP, Diabetics-ற்கு தொடர்ந்து மருந்து சாப்பிடத் தேவையில்லை. இம்மருத்துவம் செய்வதன்மூலம் முழுமையாக அந்த மாத்திரைகளை நிறுத்தி சிறந்த உடல்நலத்தோடு வாழலாம். BP மற்றும் Diabetics-ற்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதன்மூலம் இறுதியில் சிறுநீரகத்தை இழக்க நேரிடும் என்பதையும் மறவாதீர்கள்.

உங்களது இடத்தில் ஒருநாள் இலவச அக்குபஞ்சர் விழிப்புணர்வு முகாம் நடத்தவும் மேற்குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு தேதியைப் பெற்றுக்கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களது ஆவல்; நோயற்ற உலகம் படைப்போம் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து மருத்துவர் சாதிக்.
Mobile: 09443389935.

Wednesday, February 13, 2008

துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது



துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் துபாய் கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல தமிழக மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹானுக்கு 'முதுவை நகர் சாதனையாளர் விருது' 22.01.2008 செவ்வாய்க்கிழமை மாலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் தலைமை தாங்கினார். முன்னதாக மார்க்க ஆலோசகர் மௌலவி ஏ.சீனி நைனார் முஹம்மது தாவுதி இறைவசனங்களை ஓதினார்.

பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் தனது துவக்கவுரையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார்.

ஆடிட்டர் ஹெச்.அமீர் சுல்தான் 'முதுவை நகர் சாதனையாளர் விருதை' டாக்டர் ஏ. அமீர் ஜஹானுக்கு அவரது சமூக நல்லிணக்கம் மற்றும் மருத்துவப் பணிகளை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக வழங்கினார்.

அமீர்சுல்தான், மௌலவி சீனி முஹம்மது, எம். காஜா நஜுமுதீன், சிக்கந்தர், பக்ருதீன், ஷேக் முஹம்மது, சாதிக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

டாக்டர் அமீர் ஜஹான் தனது ஏற்புரையில் கல்வி, செல்வம், வீரம் ஆகியவை ஒரு சமூகத்தின் அடையாளம் என்றார். ஜமாஅத்தினர் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பனிகளைப் பாராட்டினார். தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது தான் முதுகுளத்தூர் என்றதும் தன்னை ராகிங் செய்யாமல் ஒதுங்கிக் கொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். தங்களை உருவாக்கிய மண்ணை நினைவு கூர்ந்து அதற்காக செயலபட்டு வருவது போற்றத்தக்கது என்றார்.

டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில் முதுகுளத்தூர் மாணவர் ஒருவருக்கு மருத்துவம் பயில ஏ.ஜெ.கல்வி அறக்கட்டளை மூலம் உதவிட உறுதியளித்தார். மேலும் முதுகுளத்தூரில் மருத்துவ முகாம் இலவசமாக நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

பொருளாளர் ஏ. அஹம்து இம்தாதுல்லா நன்றி கூறினார்.




நன்றி : இனிய திசைகள் - பிப்ரவரி 2008