Wednesday, February 13, 2008

துபாயில் இந்தியர் வாழ்க்கை முறை குறித்து சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனம் குறும்படம் தயாரிப்பு

துபாயில் இந்தியர் வாழ்க்கை முறை குறித்து சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனம் குறும்படம் தயாரிப்பு


துபாய் மற்றும் வளைகுடாவில் வாழ்ந்து வரும் இந்தியர் வாழ்க்கை முறை குறித்த தகவல்களை குறும்படமாக தயாரித்து வசந்தம் செண்டரல் எனும் சிங்கப்பூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட இருக்கிறது. இங்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

மேற்கண்ட தகவலை குறும்பட நிகழ்ச்சியினை தயாரித்து வரும் சாகுல் ஹமீது தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2008/02/13/wrold-singapore-tamil-tv-programme-on-gulf-indians.html

துபாயில் தமிழக மருத்துவர்களுக்கு வரவேற்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

துபாயில் தமிழக மருத்துவர்களுக்கு வரவேற்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி

துபாய் மற்றும் அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பு சார்பில் தமிழக பிரபல பாலியல் மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹான் மற்றும் டாக்டர் ஏ. நஜிருல் அமீன் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 01.02.2008 வெள்ளிக்கிழமை 6.30 மணியளவில் கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற இருக்கிறது.

டாக்டர் ஏ. அமீர்ஜஹான் அவர்கள் பாலியல் துறையில் சுமார் 25 ஆண்டுக்கும் அதிகமாக அனுபவம் மிக்கவர். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த இவர் ரஷியாவில் ஸ்டாவ்ரோபோல் மாநில மருத்துவ பல்கலையின் கௌரவ டாக்டர் பட்டம், செக்ஸாலஜி குறிதது தமிழில் நூல்கள் எழுதியமைக்காக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பாராட்டு, மதுரை அமுதசுரபி கலைமன்றத்தின் பாராட்டு, தமிழ்நாடு ராஜிவி காந்தி விருது, செல்வமணி ஃபைன் ஆர்ட்ஸ் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.

டாக்டர் ஏ. நஜிருல் அமீன் ரஷிய மருத்துவப் பல்கலையின் தேர்வுக்குழுவில் உள்ளார். ஏ.ஜே. கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

மருத்துவத்துறையில் சேவையாற்றிவரும் இவர்களை பாராட்டி அஜ்மான் அமீரகத் தமிழர்கள் அமைப்பு தலைவரும், அயல்நாடு வாழ் தமிழ் மக்கள் சேவைக்காக விருது பெற்றவருமான அ.சு. மூர்த்தி, சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜ், துபாய் அமீரகத் தமிழர்கள அமைப்பு அமுதரசன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் பாராட்ட உள்ளனர்.

மேலும் அதனைத் தொடர்ந்து மருத்துவம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரம் வேண்டுவோர் 050 4748490 / 050 7979552 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு நடத்தும் முப்பெரும் விழா



துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு நடத்தும் முப்பெரும் விழா


உழைப்போம்! உயர்வோம்!! உதவுவோம்!!! எனும் உன்னத நோக்கத்துடன் செயல்பட்டு வரும் துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பு ( Web : www.etadxb.20fr.com Email : etadxb@yahoo.com ) சமுதாயப் பணியில் தனது ஆறாம் வயதினை பூர்த்தி செய்து ஏழாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அதனை நினைவுறுத்தும் வகையில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் 7வது ஆண்டு துவக்கவிழாவும், பவள விழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழாவும்,, அமீரகத்தில் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருது பெற்றவர்களை கெளரவிக்கும் வண்ணமாகவும் வருகிற பிப்ரவரி 28ம் தேதி வியாழக்கிழமை மாலை துபாய் இந்தியன் ஹை ஸ்கூல் வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ரசீத் உள்ளரங்கில் விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக துபாய் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக

மாண்புமிகு ஷேக் சுல்த்தான் அப்துல்லாஹ் பக்கீத் அல் மத்ருஷி அவர்கள்
(சேர்மன், பின் பக்கீத் நிறுவனங்கள்)

தமிழர் தலைவர்
மானமிகு திரு. கி. வீரமணி அவர்கள்
(தலைவர், திராவிடர் கழகம்)

புரட்சித்தமிழன் திரு. சத்யராஜ் அவர்கள்

திரு. குடந்தை அன்பழகன் அவர்கள்
(நிறுவனர், அன்பு மருத்துவமனை மற்றும் கல்விசார் நிறுவனங்கள்)

திரு. வீரசேகரன் அவர்கள்
(வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்)

இவர்களுடன் கலைஞர் டிவி புகழ் "எல்லாமே சிரிப்புதான்" குழுவினர்களும் பங்கேற்கவுள்ளனர். இவ்விழாவின் சிறப்புகளாக, ஆண்டுமலர் வெளியீடு, அங்கத்தினர்கள் பங்கேற்கும் சிலம்பம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்கள் பெற 050 4748490 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

தகவல் : அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செய்திப்பிரிவு

துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது



துபாயில் தமிழக மருத்துவருக்கு விருது

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் துபாய் கராச்சி தர்பார் உணவகத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபல தமிழக மருத்துவர் டாக்டர் ஏ. அமீர்ஜஹானுக்கு 'முதுவை நகர் சாதனையாளர் விருது' 22.01.2008 செவ்வாய்க்கிழமை மாலை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் தலைமை தாங்கினார். முன்னதாக மார்க்க ஆலோசகர் மௌலவி ஏ.சீனி நைனார் முஹம்மது தாவுதி இறைவசனங்களை ஓதினார்.

பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் தனது துவக்கவுரையில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து விவரித்தார்.

ஆடிட்டர் ஹெச்.அமீர் சுல்தான் 'முதுவை நகர் சாதனையாளர் விருதை' டாக்டர் ஏ. அமீர் ஜஹானுக்கு அவரது சமூக நல்லிணக்கம் மற்றும் மருத்துவப் பணிகளை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக வழங்கினார்.

அமீர்சுல்தான், மௌலவி சீனி முஹம்மது, எம். காஜா நஜுமுதீன், சிக்கந்தர், பக்ருதீன், ஷேக் முஹம்மது, சாதிக் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

டாக்டர் அமீர் ஜஹான் தனது ஏற்புரையில் கல்வி, செல்வம், வீரம் ஆகியவை ஒரு சமூகத்தின் அடையாளம் என்றார். ஜமாஅத்தினர் மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பனிகளைப் பாராட்டினார். தான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது தான் முதுகுளத்தூர் என்றதும் தன்னை ராகிங் செய்யாமல் ஒதுங்கிக் கொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். தங்களை உருவாக்கிய மண்ணை நினைவு கூர்ந்து அதற்காக செயலபட்டு வருவது போற்றத்தக்கது என்றார்.

டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில் முதுகுளத்தூர் மாணவர் ஒருவருக்கு மருத்துவம் பயில ஏ.ஜெ.கல்வி அறக்கட்டளை மூலம் உதவிட உறுதியளித்தார். மேலும் முதுகுளத்தூரில் மருத்துவ முகாம் இலவசமாக நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

பொருளாளர் ஏ. அஹம்து இம்தாதுல்லா நன்றி கூறினார்.




நன்றி : இனிய திசைகள் - பிப்ரவரி 2008

காயல் பிறைக்கொடியான் காலமானார்!

காயல் பிறைக்கொடியான் காலமானார்! நல்லடக்கம் மஃரிபுக்குப் பின்!!


தகவல்: எஸ்.கே.எஸ் (தாருத்திப்யான் நெட்வொர்க்)


கடந்த சில மாதங்களாக சுகவீனப்பட்டிருந்த காயல்பிறைக்கொடியான் கவிஞர்
எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுஸைன் 09 பிப்ரவரி 2008 சனிக்கிழமை காலை 10:45
மணியளவில் காயல்பட்டணம் கே.எம்.டி.மருத்துவமனையில் காலமானார்.


------------------------------


காயல்பிறைக்கொடியான் மறைவு! பேரா.காதர் மொகிதீன் இரங்கல்!!


கவிஞர் காயல்பிறைக்கொடியானின் மரணத்தை முன்னிட்டு, அவர் வாழ்நாள்
முழுவதும் சார்ந்திருந்த பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்
தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ள இரங்கல்
செய்தி:-


அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலாக தம் கவிதை உணர்வுகளால் தமிழை
அலங்கரித்த காயல்பிறைக்கொடியான் காலமான செய்தி வருத்தத்தைத் தருகிறது.
மார்க்கம், தேசியம், தாய்ச்சபை என அவர் பாடாத தலைப்புகளே இல்லை என
சொல்லும் அளவிற்கு பல்லாயிரக் கணக்கான பாடல்களை யாத்தளித்தவர்...


திங்கள் வழங்கும்..., எழில் முத்துப்போலே... என தொடங்குகின்ற நபிகளாரின்
புகழ்பாடும் அற்புதமான கவிதைகளும், ஒன்றுபட்டு வாழ்வோம்... ஒருமைப்பாடு
பேணுவோம்... நன்றியோடு தாயகத்தில் நன்மை சூழ வாழ்வோம் என்ற தேசிய
உணர்வூட்டும் பாடல்களும் கவிஞருக்கு பெருமை சேர்த்தவை!


காலமெல்லாம் முஸ்லிம் லீகிற்கு உழைத்த காயல்பிறைக்கொடியான் முஸ்லிம்
லீகின் புகழ்பாடும் கவிதைகள் பலவற்றை யாத்தளித்தவர்... பிறைக்கொடி
உயர்ந்தே பறக்கட்டுமே... என்ற தலைப்பிலான பாடல்கள் பல இவர் பாடிய
பாடல்களில் முக்கிய இடம்பெற்றவை!


கவிஞர் காயல்பிறைக்கொடியான் உள்ளத்தாலும், உணர்வாலும், எண்ணத்தாலும்,
எழுத்தாலும், பேச்சாலும் முஸ்லிம் லீகிற்காக வாழ்ந்தவர்... மாபெரும்
அறிஞர் இஸ்லாமிய மார்க்கத்தில் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்...


மரபுக் கவிதையிலும், இசைப்பாட்டிலும் சன்மார்க்க விளக்கத்தையும் சமுதாய
ஒற்றுமையையும் முஸ்லிம் லீகின் தனித்துவத்தையும் படிவற்ற சமுதாய குயில்
அவர்!


இந்த தமிழருக்கு பாராட்டு விழாவும், பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும்
அண்மையில்தான் காயல்பட்டணம் நடைபெற்று நானும் பங்கேற்று பாராட்டி
வாழ்த்தும், வாய்ப்பும் கிடைத்தது.


இன்று உடலால் நம்மை விட்டு அவர் பிரிந்திருந்தாலும் உணர்வால் நம்முடன்
என்றும் இருக்கிறார்... அன்னாரின் மறுவுலக வாழ்விற்கு அனைவரும் வல்ல
இறைவனை இறைஞ்சுகிறோம்.


-இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில
தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது இரங்கல் செய்தியில்
தெரிவித்துள்ளார்


------------------------------------


காயல்பிறைக் கொடியானின் கடைசி இரங்கற்பா
தகவல்: காயல்பட்டணத்திலிருந்து மாஸ்டர் கம்ப்;யுட்டர் அகடமி


உன்னுடைய பொம்மை தான்
நானென்று நானறிவேன்
உன்னுடைய பலகோடி கோடி
அடியாரில் நானொருவன்


இன்னல் தரும் பிணிகளினால்
தாக்குண்டு தவிக்கின்றேன்
என்னை இவ்வாறு இங்கே
இடர்படுத்தல் சம்மதமோ!


என்னுடைய பணிகளிங்கே
இன்னும் இருக்குமெனில்
இன்னல் தரும் பிணிகளெனை
அணுகாது காப்பாயே!


இல்லை எனில் உடன்தூய
இனிய கலிமாவுடனே
வல்லோனே உன் சிறந்த
விண்ணுலகிற் கழைப்பாயே!!


---------------------------------------------------------------------------­-----
காயல் பிறைக்கொடியான்
கவிஞர் எஸ்.எம்.பி.யின் கடைசி இரங்கற்பா இது!


--------------------------


http://www.kayalpatnam.com

http://groups.google.com/group/imantimes

இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விடை காண ..............

Questions are answered by: Sheikh Adil Salahi. He can be reached at:

islam@arabnews.com

Questions on religious matters may be sent to the following address which is being normally forwarded to the appropriate channel for reply and clarification:
Islam in Perspective Section, Arab News, P O Box: 10452, Jeddah-21433, SAUDI ARABIA