Wednesday, February 13, 2008

காயல் பிறைக்கொடியான் காலமானார்!

காயல் பிறைக்கொடியான் காலமானார்! நல்லடக்கம் மஃரிபுக்குப் பின்!!


தகவல்: எஸ்.கே.எஸ் (தாருத்திப்யான் நெட்வொர்க்)


கடந்த சில மாதங்களாக சுகவீனப்பட்டிருந்த காயல்பிறைக்கொடியான் கவிஞர்
எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுஸைன் 09 பிப்ரவரி 2008 சனிக்கிழமை காலை 10:45
மணியளவில் காயல்பட்டணம் கே.எம்.டி.மருத்துவமனையில் காலமானார்.


------------------------------


காயல்பிறைக்கொடியான் மறைவு! பேரா.காதர் மொகிதீன் இரங்கல்!!


கவிஞர் காயல்பிறைக்கொடியானின் மரணத்தை முன்னிட்டு, அவர் வாழ்நாள்
முழுவதும் சார்ந்திருந்த பேரியக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்
தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ள இரங்கல்
செய்தி:-


அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலாக தம் கவிதை உணர்வுகளால் தமிழை
அலங்கரித்த காயல்பிறைக்கொடியான் காலமான செய்தி வருத்தத்தைத் தருகிறது.
மார்க்கம், தேசியம், தாய்ச்சபை என அவர் பாடாத தலைப்புகளே இல்லை என
சொல்லும் அளவிற்கு பல்லாயிரக் கணக்கான பாடல்களை யாத்தளித்தவர்...


திங்கள் வழங்கும்..., எழில் முத்துப்போலே... என தொடங்குகின்ற நபிகளாரின்
புகழ்பாடும் அற்புதமான கவிதைகளும், ஒன்றுபட்டு வாழ்வோம்... ஒருமைப்பாடு
பேணுவோம்... நன்றியோடு தாயகத்தில் நன்மை சூழ வாழ்வோம் என்ற தேசிய
உணர்வூட்டும் பாடல்களும் கவிஞருக்கு பெருமை சேர்த்தவை!


காலமெல்லாம் முஸ்லிம் லீகிற்கு உழைத்த காயல்பிறைக்கொடியான் முஸ்லிம்
லீகின் புகழ்பாடும் கவிதைகள் பலவற்றை யாத்தளித்தவர்... பிறைக்கொடி
உயர்ந்தே பறக்கட்டுமே... என்ற தலைப்பிலான பாடல்கள் பல இவர் பாடிய
பாடல்களில் முக்கிய இடம்பெற்றவை!


கவிஞர் காயல்பிறைக்கொடியான் உள்ளத்தாலும், உணர்வாலும், எண்ணத்தாலும்,
எழுத்தாலும், பேச்சாலும் முஸ்லிம் லீகிற்காக வாழ்ந்தவர்... மாபெரும்
அறிஞர் இஸ்லாமிய மார்க்கத்தில் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்...


மரபுக் கவிதையிலும், இசைப்பாட்டிலும் சன்மார்க்க விளக்கத்தையும் சமுதாய
ஒற்றுமையையும் முஸ்லிம் லீகின் தனித்துவத்தையும் படிவற்ற சமுதாய குயில்
அவர்!


இந்த தமிழருக்கு பாராட்டு விழாவும், பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும்
அண்மையில்தான் காயல்பட்டணம் நடைபெற்று நானும் பங்கேற்று பாராட்டி
வாழ்த்தும், வாய்ப்பும் கிடைத்தது.


இன்று உடலால் நம்மை விட்டு அவர் பிரிந்திருந்தாலும் உணர்வால் நம்முடன்
என்றும் இருக்கிறார்... அன்னாரின் மறுவுலக வாழ்விற்கு அனைவரும் வல்ல
இறைவனை இறைஞ்சுகிறோம்.


-இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில
தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தனது இரங்கல் செய்தியில்
தெரிவித்துள்ளார்


------------------------------------


காயல்பிறைக் கொடியானின் கடைசி இரங்கற்பா
தகவல்: காயல்பட்டணத்திலிருந்து மாஸ்டர் கம்ப்;யுட்டர் அகடமி


உன்னுடைய பொம்மை தான்
நானென்று நானறிவேன்
உன்னுடைய பலகோடி கோடி
அடியாரில் நானொருவன்


இன்னல் தரும் பிணிகளினால்
தாக்குண்டு தவிக்கின்றேன்
என்னை இவ்வாறு இங்கே
இடர்படுத்தல் சம்மதமோ!


என்னுடைய பணிகளிங்கே
இன்னும் இருக்குமெனில்
இன்னல் தரும் பிணிகளெனை
அணுகாது காப்பாயே!


இல்லை எனில் உடன்தூய
இனிய கலிமாவுடனே
வல்லோனே உன் சிறந்த
விண்ணுலகிற் கழைப்பாயே!!


---------------------------------------------------------------------------­-----
காயல் பிறைக்கொடியான்
கவிஞர் எஸ்.எம்.பி.யின் கடைசி இரங்கற்பா இது!


--------------------------


http://www.kayalpatnam.com

http://groups.google.com/group/imantimes

No comments: