Saturday, December 6, 2008

பாங்காங்கில் தியாகத் திருநாள்

BAKRID FUNCTION WILL BE HELD AT HAINAN CHINESE HALL ON 8TH DEC CHIEF GUST AMBASSADOR OF
INDIA IN BANGKOK FUNTION AT 6 PM
PRESIDENT HABIB SULAIMAN
SECRETARY HUMAYUN

MC DR RAFIUDEEN

Abdul Hameed Rafiudeen

கும்பகோணத்தில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்

கும்பகோணத்தில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்

கும்பகோணம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மத்திய, மாநில அரசு தேர்வாணைய தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்காக அல் அமீன் பயிற்சி மையம் 07-12-2008 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

இப் பயிற்சி மையத்தினை அபுதாபி நோபிள் மரைன் குரூப் நிர்வாக இயக்குநர் அல்ஹாஜ் எம். சாகுல் ஹமீது துவக்கி வைக்க உள்ளார்.

விழாவில் இஸ்லாமிய இலக்கியக் கழக பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா, கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிபாளர் வி.ஆர். சீனிவாசன் பி.இ, உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்க பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுபோன்ற பயிற்சி மையங்கள் விரைவில் திருச்சி, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

மேலதிக விபரம் பெற 98 400 400 67

தமிழ் SPELL CHECK மென்பொருள்

இன்று தமிழில் தட்டச்சு செய்ய பல மென்பொருட்கள் (இ-கலப்பை, NHM , மற்றும் கீமேன்) போன்ற மென்பொருட்கள் இருந்தாலும் அச்சுத்துறைக்கு ஏற்ற ஒரு மென்பொருளாக இதுவரை ஸ்ரீலிபி மற்றும் அனு போன்ற மென்பொருட்களை நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் புதிய மென்பொருளை சர்மா ப்ராடக்ஸ் மற்றும் சொல்யூசன்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கியுள்ள விசைத்தமிழ் எனும் மென்பொருள் எல்லா தரப்பினருக்கும் ஏற்ற ஒரு மென்பொருளாகவே இருக்கிறது. அந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் பற்றிய ஒரு பார்வை!
விசைத்தமிழ்

எந்த ஃபான்ட் லும், எல்லா தட்டச்சு முறைகளிலும் தமிழில் தட்டச்சு செய்ய என்ற கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள்

விசைத்தமிழ் என்ற மென்பொருள் மூலம் நமது கணினியில் தமிழில் தட்டச்சு செய்யலாம் உங்களுக்கு தெரிந்த உள்ளீட்டு முறையில், உதாரணத்திற்கு நீங்கள் செந்தமிழ் பாண்ட்களை பயன்படுத்தினால் அந்த செந்திமிழ் பாண்ட் ஐ பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த டைப்-ரேட்டர் , தமிலிங்கிஸ் முறை போன்று 12 வகையான முறையில் பேஜ்மேக்கர், வேர்டு, அடோப் இன்டிசைன், உட்பட எல்லா மென்பொருள்களிலும் தட்டச்சு செய்யமுடியும்.

அதோடு விண்டோஸ் XP, முதல் விண்டோஸ் விஸ்டா வரை windows - ன் எல்லா ஆபரேட்டிங் சிஸ்டம்களிலும் இயங்கும்.

தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக் குடும்பங்களும், 10-ற்கும் மேற்பட்ட விசைபலகை வகைகளும் உள்ளன.இவை எல்லாவற்றிலும் இயங்கூடிய வகையில் இந்த மெனபொருட்கள் வந்துள்ளது குறிப்பிட்டத் தக்கது

இந்த மென்பொருட்களோடு உடன் வரும் துணை மென்பொருட்கள்

ஸ்பெல் செக் : தமிழில் முதன்முறையாக 23 இலட்சம் வார்த்தைகளை உள்ளடக்கிய தமிழ் Sell Checker , விசைத்தமிழ் மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் எந்த மென்பொருளில் டைப் செய்தாலும் ஒவ்வொரு வார்த்தையினையும் சொற்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளை கண்டறிந்து அதற்கான சரியான வார்த்தையை உடனே காண்பிக்கும் அதிவேக Sell Checker இம் மென்பொருளில் உள்ளது.
ஆட்டோ கரெக்ட் : தமிழில் இதுவரை வந்துள்ள எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கபட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. Ms-Word ன் Spell check போன்று

"ஃபான்ட் சாம்ப்ளர்" : ஒரே நேரத்தில் பல்வேறு ஃபான்ட்களில் வரும் எழுத்துருவை ஃப்ரிவீயூ காட்டுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்.

தமிழ் - ஆங்கிலம் அகராதி (டிக்ச்னரி) : இதில் ஏறத்தாழ 60,000 ஆங்கில வார்த்தைகளுக்கு 2,30,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலுருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். யுனிக்கோடிலும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விசைத்தமிழ் கொண்டுள்ளது.

Font Analyzer : ஃபான்ட் பகுப்பாய்வு மென்பொருள்

இந்த மென்பொருளின் மூலம் நமக்கு வந்திருக்கும் ஃபான்ட் எந்த முறையில் இருந்தாலும் நாம் பயன்படுத்தும் முறைக்கு மாற்றிவிடலாம்.
உதாரணத்திற்கு வானவில் ஃபான்ட் பயன்படுத்துபவர்கள் பாமினி ஃபான்டிற்கு மாற்றிக்கொள்ளலாம். இப்படி 117 வகையான ஃபான்ட்களிலிருந்து நமக்கு வேண்டும் ஃபான்ட்களுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
(உம்) இளங்கோ <-> வானவில், இளங்கோ <-> யுனிகோடு , டாம் <-> யுனிகோடு, போன்று எந்த ஃபான்ட் முறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

Tamil Sorting : அகர வரிசைப்படுத்துதல்

ஆங்கில மென்பொருட்களில் உள்ள அகர வரிசைப்படுத்துதல் போன்று தமிழில் நீங்கள் வைத்திருக்கும் அனைத்து முறைகளிலும் நீங்கள் அகர வரிசைப்படுத்தி வைக்கலாம்.

இந்த மென்பொருளை தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற ட்ரான்ஸ்லிட்ரேஷன் விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், யுனிக்கோடிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு www.tamil.sarma.co.in
மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை தமிழில் அறிமுகப்படுத்த தமிழ்வணிகம் இன் தளத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

Malayalam Juma Khutba on Air

From: Indian Islahi Center Ajman
Date: Fri, Dec 5, 2008 at 9:48 AM


Malayalam Juma Khutba on Air
Assalamu Alaikkum,

From today onwards Asianet Radio 657 AM will be broadcasting Malayalam Juma Khutba conducted by Ajman Indian Islahi Centre at Abdul Aziz Al Zawawi Masjid, Ajman at 12:10pm (UAE time) inshaa Allah.

This is a very good opportunity for all Keralites in the UAE and other Gulf countries to hear Malayalam Juma Khutba every Friday through RADIO.

Please inform your families friends and relatives to tune on 657 AM - Asianet Radio.


Indian Islahi Centre
Ajman, U.A.E.
Te: 06-7428463, 050-3047017

காயல்பட்டிணத்தை முன்மாதிரி நகராக்குவோம்

காயல்பட்டிணத்தை முன்மாதிரி நகராக்குவோம்
துபாயில் காயல் நல மன்ற பொதுக்குழுவில் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரி பேச்சு


ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வரும் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக்கூட்டம் துபாய் அல் தவார் பூங்காவில் 28.11.2008 வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

துவக்கமாக அல்ஹாபிழ் ஹஸ்புல்லாஹ் மக்கி இறைவசனத்தை ஓதினார். காயல் நல மன்ற தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரி தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் காயல்பட்டிணத்தை முன் மாதிரி நகராக்குவோம் என்றார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொண்டார்.

முஹம்மது ஈசா வரவேற்புரை நிகழ்த்தினார்.

பிரைம் மெடிக்கல் செண்டர் ஆலோசகர் முஹைதீன் சாஹிப், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் இயக்குநர் ஆபித் ஜுனைத், தோஷிபா எலிவேட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.ஜே. முஹம்மது இக்பால், பஹ்ரைன் காயல் நல மன்ற தலைவர் அபுல்ஹசன், தமாம் காயல் நல மன்றத்தின் ரஃபி, மஸ்கட் அலி அபுபக்கர் உள்ளிட்டோர் அமீரக காயல் நல மன்றம் தாயகத்தின் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளுக்கு உதவி வருவது குறித்து பெருமிதம் கொண்டனர்.

ஜே.எஸ்.ஏ. முஹம்மது யூனுஸ் வரவு செலவு விபரத்தினையும், நூஹு சாஹிப் ஆண்டறிக்கையும் வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.

குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நூஹு சாஹிப் நன்றியுரை கூற துஆவுடன் இனிதே நிறைவுற்றது.

இக்கூட்டத்தில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து காயலர்கள் கலந்து கொண்டனர்.

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1878&Country_name=Gulf&cat=new