மாநில அளவிலான கட்டுரைப் போட்டி
மேல்நிலைப்பள்ளி / கல்லூரி / அரபிக் கல்லூரி மாணவர்களுக்காக
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இன்ஷா அல்லாஹ் வருகிற 2010 ஜனவரி 30,31 அகிய நாட்களில் திருச்சியில் மாநில மாநாட்டை நடத்த உள்ளது. இதனையொட்டி மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள், அரபிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்காக மாநில அளவிலான கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்துகிறது.
தலைப்பு
இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறி
அல்லது
சமூகப் புத்தமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்கு
அல்லது
முன்மாதிரிச் சமூகத்தை உருவாக்குவதில் இஸ்லாத்தின் பங்கு
விதிமுறைகள்
மாணவ, மாணவியர் மேற்குறிப்பிட்ட தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் கட்டுரைகள் எழுதலாம்.
கட்டுரைகள் தமிழ் / ஆங்கிலம் / உருது மொழிகளில் எழுதலாம்
கட்டுரை 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
போட்டியில் பங்கு பெறும் மாணவ / மாணவியர் தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே தங்கள் கைப்பட எழுத வேண்டும்
தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் ஒப்புதலோடு கட்டுரைகள் அனுப்ப வேண்டும்
கட்டுரைகள் 30.12.2009 க்குள் பின்வரும் முகவரிக்கு வந்து சேர்ந்திட வேண்டும்
பரிசுத் தொகை
முதல் பரிசு : ரூ 5000
இரண்டாம் பரிசு : ரூ 3000
மூன்றாம் பரிசு : ரூ 2000
இத்துடன் சான்றிதழும், கேடயமும், மதிப்புவாய்ந்த இஸ்லாமிய நூல்களும் பரிசாக வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு மாநில மாநாட்டில் பரிசுகள் வழங்கப்படும்.
கட்டுரைகள் அனுப்ப வேண்டிய முகவரி
ஒருங்கிணைப்பாளர்
மாநில அளவிலான கட்டுரைப் போட்டி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில மாநாடு
ஐ.எஃப்.டி. வளாகம்
138 பெரம்பூர் நெடுஞ்சாலை
சென்னை 600 012
தொலைபேசி : 044 2662 1101 / 94449 01422 / 90431 30358
இறுதி நாள் : 05. 01. 2010