Saturday, August 2, 2008

உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு

உயர் ரத்த அழுத்தத்திற்கு நிவாரணம் வெள்ளைப் பூண்டு: ஆய்வு முடிவு



லண்டன், ஆக. 1: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

உலகில் ஏராளமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பலர் தங்களுக்கு ரத்த அழுத்த நோய் இருப்பதே தெரியாமல் உள்ளனர்.

இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த நோயுடன் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு, மருந்து வழங்குவதுடன் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும், எடையைக் குறைக்க வேண்டும், ரத்த அழுத்தத்தை 140/90 என்ற அளவில் பராமரிக்க வேண்டுமென டாக்டர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் தொடர்பாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் உணவுடன் வெள்ளைப் பூண்டும் வழங்கப்பட்டது. 5 மாதங்களுக்குப் பின் அவர்களை பரிசோதித்த போது வியக்கத்தக்க அளவில் அவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்திருந்தது கண்டறியப்பட்டது.

சில நோயாளிகளுக்கு ரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு மூலம் விரைவில் நிவாரணம் கிடைத்தது என்று ஆய்வாளர் கரீன் ரைட் தெரிவித்துள்ளார்.

கோரிக்கை எதுவானாலும்; குர்ஆன் வழியில் அணுகவேண்டும்! -பேராசிரியர்

கோரிக்கை எதுவானாலும்; குர்ஆன் வழியில் அணுகவேண்டும்! -பேராசிரியர்



கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முத்த வல்லி ஏ. இஹ்சானுல்லா இல்லத் திருமணம் ஞாயிறன்று கோட்டக் குப்பத்தில் நடைபெற்றது. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. மணமக்களை வாழ்த்தி பேசியபோது தெரிவித்ததாவது:

ஆலிம்களின் கோட்டை என்ற சிறப்புக் குரிய கோட்டக்குப்பம் மக்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்ப தோடு அல்லாமல் தங்கள் இல்ல நிகழ்ச்சிகள் ஒவ் வொன்றையுமே முஸ்லிம் லீகின் நிகழ்ச்சியாகவே நடத்தி வருகின்றனர்.

இது திருமண நிகழ்ச் சியா அல்லது முஸ்லிம் லீகின் மாநாடா என வியக்கும் அளவிற்கு சிறப் பாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டி ருக்கிறது. இந்த ஊரில் மற்ற ஊர்களுக்கு வழிகாட்டும் பல சிறப்பம்சங்கள் உள்ளன என்பதை பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.

ரப்பானிய்யா அரபி பெண்கள் மதரஸா என மார்க்கக் கல்வி பணிகள் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இந்த மதரஸாவில் படித்து பட்டம் பெற்ற ஆலிம் பெருமக்கள் தமிழ கத்தன் பல பகுதிகளுக்கும் சென்று குர்ஆனின் போதனைகளை ஹதீஸ் களின் விளக்கங்களை சமு தாய மக்கள் நல்ல முறை யில் எடுத்துரைத்து மார்க்க சேவை ஆற்றி வருகின்றனர்.

எனக்கு முன்பு பேசிய சகோதரர் துபை அப்துல் ரஹ்மான் இந்த ஊரின் பிரச்சினை தொடர்பாக மக்கள் நடந்து கொண்ட முறைகள் குறித்து சில செய்திகளை தெரிவித்தார். கோரிக்கைகள் எதுவானா லும் அதனை எப்படி அணுக வேண்டும் என இறைவன் தனது திருமறை யில் வழிகாட்டியுள்ளான். திருக்குர்ஆனில் முதல் அத்தியாயமான ~அல்ஹம்து சூராவை இறைவன் அமைத்து தந்துள்ள விதமே பல செய்தி களை நமக்கு அழகுற விளக்குகிறது.

இறைவனை புகழ்ந்து அவனது ஆற்றலை வியந்து போற்றும் வகையில் முதல் சில வசனங்கள் அமைந்துள்ளன.

இத்தகைய ஆற்றலுக் கும் - சிறப்புக்கும் உரிய இறைவனுக்கு கட்டுப் பட்டு நடப்போம் என்று மக்கள் இறைவனுக்கு உறுதி அளிப்பது போன்று அடுத்த சில வசனங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு அடுத்துத்தான் ~இறைவா எங்களை நேரான வழியில் செலுத்து வாயாக என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. இப்படி இறைமறை வசனம் ஒரு ஒழுங்கு முறையை நமக்கு விளக்கி காட்டுகிறது. இறைவனிடம் நமது கோரிக்கைகளை வைக்கும் இரே வழிமுறையைத்தான் எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

2004-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற தும் அனைத்து கட்சி களைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் கள் எல்லோரும் டெல்லி யில் ஒன்றாக கூடி முஸ்லிம் சமுதாயத்துக்கு எப்படியெல்லாம் பணி யாற்ற வேடும் என ஆலோ சனை செய்தோம்.

முஸ்லிம்களின் விவகாரம் தொடர் பாக மத்திய அரசு உடனுக் குடன் தீர்வு காணும் வகை யில் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனி அமைச்சகம் அமைக்க பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க முடிவு செய்தோம்.

பிரதமரிடம் நேரம் வாங்கி அவரை சந்தித்த போது நாங்கள் எந்த நோக் கத்திற்காக சென்றோமோ அந்த நோக்கத்தை விட்டு விட்டு ஆளாளுக்கு அவர வர் மாநில பிரச்சினையை பேச துவங்கி விட்டனர்.

பின்னர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த தும்தான் நாம் எந்த நோக் கத்துக்காக பிரதமரை சந்தித்தோமோ அதனை குறித்து விரிவாக விவாதிக் காமல் வந்து விட்டதை அவர்களுக்கு சுட்டிக் காட்டியதுடன் நமது கோரிக்கைகள் தொடர் பாக அரசை அணுகும் போது குர்ஆன் கூறும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதை எடுத்து விளக்கினோம்.

அதன்படி இன்னொரு நாள் பிரதமரை சந்தித் தோம். முதலில் அவரை மனமார வாழ்த்தி பாராட் டினோம். பின்னர் அவர் தலைமையிலான அரசுக்கு முஸ்லிம் சமுதாயம் உற்ற துணையாக இருக்கும் என்ற உறுதியை தெரிவித் தோம். பிறகுதான் நாங்கள் அவரை சந்திக்க வந்ததன் கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தோம்.

இந்த அணுகுமுறையை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்த பிரதமர் மன் மோகன்சிங் எங்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். அதன்படி சிறுபான்மையினருக்கு தனி அமைச்சகம் அமைத்து தந்துள்ளார்.

இறைவன் வழிகாட்டும் இந்த அணுகுமுறையை நாம் தொடர்ந்து கடைப் பிடித்தால் நமது கோரிக்கைகள் அனைத் திலும் உறுதியான வெற்றி யினை பெற முடியும்.

இப்போது மத்தியிலும் - மாநிலத்திலும் ஆட்சி செய்யக் கூடிய அரசுகள் சிறுபான்மை மக்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை கொண்ட அரசுகள். இந்த அரசு களுக்கு தர்மசங்கடங்களை உருவாக்கும் எந்த செயலி லும் யாரும் ஈடுபட்டு விடக்கூடாது. அதிலும் முஸ்லிம்கள் இதில் மிக தெளிவாக இருக்க வேண்டும். அதன்வாயிலா கத்தான் நாம் நமது சமு தாயத்துக்கு நன்மைகளை செய்ய முடியும். நமது எல்லா செயல்களையும் இறைவன் காட்டும் வழி முறையில் அமைத்து கொள்ள வேண்டும். அதற் காக இறைவனிடம் அனை வரும் துஆ செய்வோம்.

இவ்வாறு பேராசிரியர் பேசினார்.

அராபிய இலக்கியங்களில் இந்தியா

அராபிய இலக்கியங்களில் இந்தியா




Webdunia









- எம்.எஸ்.அஷ்ரஃப்

சிற்றிதழ் : அட்சரம் (செப். 03)
ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன்
தனி இதழ் : ரூ.25/-

பல நூற்றாண்டுகளாக, கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார உறவுகள் அராபியர்களுக்கும் இந்தியாவிற்குமிடையே வளர்ந்து வந்துள்ளன. அபாஸித் காலத்தில் இந்திய மருத்துவ, வானியல், தத்துவ நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டன. இபின் நாதிம் தனது நூலான அல்-ஃபெஹ்ரிஸ்ட்டில் அபாஸித் அமைச்சர் யாஹியா பின் காலித் அல்-பர்மாகி, இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டு, ஒரு குழுவை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து மூலிகைகளையும், வாசனைத் திரவியங்களையும், இந்திய மதங்களைப் பற்றிய விவரங்களையும் சேகரித்து வரச் செய்ததாக எழுதுகிறார். இக்குழுவின் தலைவர் திரும்பி வந்ததும் "இந்தியாவின் மதங்களும் அதன் பிரிவுகளும்" என்றொரு நூலையும் எழுதியிருக்கிறார். மேலும் இபில் எல்-நாதிம் இந்தியாவிலிருந்து அரபியில் மொழி பெயர்க்கப்பட்ட 51 நூல்களைப் பட்டியலிடுகிறார். இவற்றில் விஷயங்களைப் பற்றிய புத்தகமும், பிரசவ மருத்துவம் பற்றிய ஒரு நூலும், பாம்புகளைப் பற்றியும், பாம்பு விஷம், அதை முறிக்கும் மருந்துகள் பற்றி பல நூல்களும் உண்டு. பல்வகை நோய்களைப் பற்றியும் குறிப்பாக ஹிஸ்டீரியா மற்றும் மனநல நோய்களைப் பற்றியும் பல நூல்கள் உள்ளன.

பிற்காலத்தில் அராபிய உலகம் இந்தியாவின் மத நூல்களைப் பற்றி அறிந்து கொண்டது. அபு-சாலே பின் எல்-கபாலி (கி.பி.1026) மகாபாரதத்தின் ஒரு பகுதியை மொழி பெயர்த்திருக்கிறார். சாணக்கியரின் எழுத்துக்களும், இன்னும் பல தர்க்க சாஸ்திர, மந்திர நூல்களும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

இடைக்காலத்தில் அபு-ரேஹன் அல் பெரூனி என்ற மாபெரும் அராபிய அறிஞர் 11-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து இந்திய விஞ்ஞானத்தைக் கற்றிருக்கிறார். "இந்தியாவின் மதங்களை அறிதல்" என்ற செறிவானதும், முழுமையானதுமான ஒரு நூலை அவர் இயற்றியுள்ளார். இந்நூலின் 18 அத்தியாயங்களில் இந்தியாவின் மதங்கள், இலக்கியம், புவியியல், வரலாறு, சோதிடம், வானியல் மற்றும் இந்திய மரபுகளைப் பற்றியும் சட்டங்களைப் பற்றியும் விளக்கியுள்ளார்.

அல்-பெரூனி இந்தியாவில் கழித்த காலத்தில் அதிகம் சோதிட அறிவை கற்றுக் கொள்வதிலேயே செலவழித்திருக்கிறார்.இவர் இந்தியாவிலிருந்து திரும்பியதும் ஆர்வமுள்ள பலருக்கு சோதிடக்கணக்குகளை பயிற்றுவித்திருக்கிறார். அவர்களும் இவற்றையெல்லாம் அவருக்கு சொல்லிக் கொடுத்த அறிஞர்களின் பெயர்களைக் கூறுமாறு கேட்டிருக்கின்றனர்.

சமஸ்கிருதத்தை முழுதாகக்கற்றறிந்த அல்-பெரூனி, கபிலின் ஒரு நூலையும், பிரம்ம குப்தாவின் இரு நூல்களையும் அரபியில் மொழி பெயர்த்துள்ளார். இவர் யூக்ளிடெஸின் நூலை சமஸ்கிருதத்திலும் மொழி பெயர்த்துள்ளார். இவையன்றிஅல்-பெரூனி சூரியன், நட்சத்திரங்கள் ஆகியவற்றின் தூரங்களை கணக்கிடும் பழையதொரு கருவியைப் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார். பிரசித்தி பெற்ற ஜெர்மானிய அறிஞர் ஜக்கோ, இந்தியப் பொருட்களைக் குறித்து -சோதிடம், கணிதம், மருத்துவம் போன்றவை - அல்-பெரூனி எழுதிய இருபத்திரெண்டு ஆய்வுக் கட்டுரைகளை பட்டியலிட்டுள்ளார்.

இந்திய அறிவியலின் பால் அவருக்கிருந்த அன்பினாலும்,பெருமதிப்பாலும், அவர் காலத்தைய இந்தியர்களை, தமது உலகத்தை மற்றோரும் அறிந்து கொள்ளும் வகையில் கதவுகளைத் திறந்து வைக்காமை குறித்து சாடுகிறார். தமது மூதாதையர்களின் ஞானத் தேடலைத் தொடரும் வகையில் அப்போதைய இந்தியர்களும் உலகம் முழுக்க பயணம் செய்ய அறிவுறுத்துகிறார்.

இந்திய விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஒரே அராபிய அறிஞர் அல்-பெரூனி மட்டுமல்ல. மற்றுமொரு அராபிய யாத்ரீகர் இபின்-பதூதா (கி.பி.1304-1378) தனது 28 வருட பயணத்தில் 75000 மைல்களை கடந்திருக்கிறார். இபின்-பதூதா, முகமது-பின் துக்ளக்கின் (கி.பி.1325-1351) ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்து தனது "துஹ்ஃபத்அல் நூஸார்" என்ற நூலில் 100 பக்கங்களை இந்தியாவிற்காக ஒதுக்கியிருக்கிறார்.

இபின்-பதூதாவின் மேல் கொண்ட மதிப்பால் துக்ளக் அவரை தில்லியின் நீதிபதியாக நியமித்திருக்கிறார்.

இப்பதவியை சிறிதுகாலம் வகித்த பின்பு, அரசர் அவரது தலைமையில் ஒரு குழுவை சீனாவிற்கு அனுப்பியிருக்கிறார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இபின் பதூதாவிற்கு அப்போது சீனா சென்றடைய முடியாவிட்டாலும், பிறகு தனது சொந்த பயணத்தில் சீனாவிற்கு சென்றிருக்கிறார்.

இபின் பதூதா டில்லி அற்புதமானதொரு நகரமாகவும், இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்லாமிய உலகிலேயே மிகப்பெரிய நகரமென்றும் வர்ணிக்கிறார். இபின் பதூதா தில்லிக்கு அருகில் நான்கு அண்டை நகரங்கள் அமைந்திருப்பதாகவும், அதில் ஒன்று இஸ்லாமியா ஆட்சி வருவதற்கு முன்னரே இருந்துவரும் பழைய தில்லி என்றும், மற்றொன்று துக்ளக் நிர்மானித்த துக்ளகாபாத் என்றும் குறிப்பிடுகிறார்.

அராபிய இலக்கியங்களில் இந்தியா

இபின் பதூதா இந்தியாவை வர்ணிக்கும்போது, இந்திய பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் சேர்த்தே விளக்குகிறார். இந்தியர்களுக்கு தாமரை மேலிருக்கும் பெரு மதிப்பைப் பற்றிக் கூறுகிறார்: "இந்தியர்கள் இந்த மலர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். இந்தியர் ஒருவர் தனது நண்பரைப் பார்க்கச் செல்லும்போது தாமரை இலைகள் ஐந்தை பரிசாகத் தருகிறார். நண்பருக்கு இதில் மொத்த உலகத்தையே பரிசாக அளித்துவிட்டதைப் போல பெருமகிழச்சி ஏற்படுகிறது. பொன்னையும், வெள்ளியையும் விட இதுவே மிக உயர்ந்த பரிசாக இருக்கிறது. "இபின் பதூதா இந்திய பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் கூர்ந்து கவனித்தவராகையால், எந்தவொரு இந்தியனையும் வெளித்தோற்றத்தை வைத்தே அவர்களது மத, கலாச்சாரப் பிரிவுகளைப் பற்றி சொல்லிவிட முடியும் என்று எழுதுகிறார். இந்திய மரபுகளை நன்றாக அறிந்து கொண்டால், முஸ்லீமிற்கும், முஸ்லீம் அல்லாதவர்களுக்குமிடையேயான வேறுபாடுகளை சுலபமாக சொல்லிவிடலாம். முஸ்லீம் அல்லாத பெண்கள் தமது காதுகளை குத்திக்கொண்டு காதணிகள் அணிந்து கொள்கையில், முஸ்லீம் பெண்கள் காது குத்திக் கொள்வதேயில்லை. இபின்-பதூதாவின் கவனத்தை பாதித்த அந்நாளைய இந்திய வழக்கம், உடன் கட்டை ஏறுதல். கணவனின் எரியும் சிதையில் மனைவி உயிருடன் தள்ளப்படுவதை தனது நூலில் அடிக்கடி குறிப்பிடுகிறார்.

இந்தியப் பேரரசர் துக்ளக்கின் விருந்தோண்மையும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் அவருக்கிருந்த மன உறுதியும் இபின்பதூதாவை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

சிந்து மாகாணம் ஒருமுறை கடும் வறட்சியில் தவித்து, முன்னெப்போதுமில்லாத வகையில் விலைவாசிகள் உயர்ந்ததில், முகமது-பின்-துக்ளக் தனது கஜானாவிலிருந்து நேரடியாகவே நிதி எடுத்து ஆறுமாதங்களுக்கு அம்மக்களுக்கு வழங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். துக்ளக் தனது தலைநகரை மாற்றியதற்கான விவேகமான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.

இபின் பதூதாவின் நூலில் இயற்கையின் பல்வேறு கொடைகளை, மரங்களை, பூக்களை, கனிகளை மிக விரிவாக படம் பிடித்துக் காட்டுகிறார். தான் சென்ற இடங்களைத் தத்ரூபமாக வர்ணிக்கிறார். இந்தியாவின் அறிவுக்களஞ்சியங்களில் அபார ஆர்வம் கொண்ட மற்றொருவர் மாபெரும் அபாஸிட் எழுத்தாளர் அல்-கஹேத் ஆகும். இவர் தனது அல்-பாயன் மற்றும் அல்-டேமியான் என்ற நூல்களில் இந்திய தத்துவ ஞானிகளைப் பற்றியும், இந்தியர்களின் அறிவுக் கூர்மையும், தீரத்தையும் புகழ்கிறார். "அறிவிற்கும், ஞானத்திற்கும், தீட்சண்யத்திற்கும் இந்தியாவே ஆதார ஊற்று" என்கிறார்.

மற்றும் அல்-மவூதி (கி.பி.956) என்பவர் சிந்து, குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் பயணம் செய்து எழுதிய நூலில் உலகின் மிகச்சிறந்த ஏழு இனங்களில் ஒன்றாக இந்தியர்களை மதிப்பிடுகிறார். இதே போல் இந்தியாவில் பயணம் செய்து அதன் வியத்தகு பெருமைகளை எழுதியிருக்கும் பிற அராபிய எழுத்தாளர்களாக பின் அல்-ஃபக்கிஹ் அல்-ஹம்தானி (பத்தாம் நூற்றாண்டு அல்-ஷெரீஃப் அல்-இட்ரிஸி (கி.பி.1099-1153) அல்-காஸெளனி (கி.பி.1203-1283), அல்-நூரி (கி.பி.1278-1332) மற்றும் அல்-கலாக் சந்தி (கி.பி.1355-1488) போன்றோரும் ஆவர்.

அராபிய இலக்கியங்களில் இந்தியா

எல்லா நூற்றாண்டுகளிலும் இந்தியா அராபிய இலக்கியங்களில் இடம் பெற்று வந்திருப்பினும், அபாஸிட் காலத்தில் இந்தியாவிற்கும், அராபிய நாகரிகத்திற்கும் நெருக்கமான தொடர்பும், உறவும் இருந்திருக்கிறது. காலங்கள் கடந்து, நமது ஞாபகங்கள் கலைந்த நிலையில், பண்டைய அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றிருந்த இந்தியத் தொடர்புகளை இதுவரை மீள்பார்வை பார்க்க வேண்டியிருந்தது.

நவீன இந்தியா, தனது சின்னங்களுடனும், ஒப்பற்ற தலைவர்களுடனும் நவீன அராபிய இலக்கியத்திலும் அரசியல், சமுதாய எழுத்துகளிலும் பெரும் பங்கு வகித்து வருகிறது. தாகூரும், காந்தியும், நேருவும், அராபிய இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக தாகூர் வெறும் கவிஞராகவும், ஓவியராகவும், தத்துவாசிரியராகவும், ஞானியாகவும் மட்டுமின்றி எப்போதும் மங்காத ஞானஜோதியாகவே அறியப்படுகிறார்.

தாகூரின் பெரும்பான்மையான கவிதைகளும், நாடகங்களும் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டு, குறிப்பாக எகிப்தியர்களால் ஆழ்ந்து பயிலப்பட்டு வருகிறது, பேடி ஹகி "தாகூர் தொகுப்பு" (பெய்ரூட், 1955) வையும், "பறித்த கனிகள்" மற்றும் "இளவேனில்" (டமாஸ்கஸ், 1965) ஐயும் மொழி பெயர்த்துள்ளனர்.

முகமது பதிர் எல்-தின் கலீல், முகமது தாகிர் கல்-கபாலவி, கலீஸ் கிர்கிஸ் கலில், வேடி அல்-புஸ்தானி போன்றவர்கள் தாகூரின் படைப்புகளை மொழி பெயர்த்துள்ளனர். முகமது மெஹ்தி ஆலம், அப்துல் ரகுமான் சித்திக், ஷிர்கி அய்யாது போன்றோர் தாகூரின் படைப்புகளை திறனாய்வு செய்துள்ளனர்.

இந்திய செவ்வியல் காப்பியங்கள் அரபியில் மொழி பெயர்த்தவர்கள் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர் லெபனான் தேசத்து கவிஞர் வேடி அல்-புஸ்தானி ஆவார். இவர் பகவத்கீதையின் சில பகுதிகளை மட்டுமின்றி ராமாயணத்திலிருந்தும், பல பகுதிகளை மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்பில் இவர் பயன்படுத்திய உத்திகளும், இயல்பான உணர்ச்சிகரமான, சரளமான நடையும் பலருக்கு முன்னுதாரணமாக அமைந்தது. எகிப்திய எழுத்தாளர் ஆனிஸ் மன்சூர் கலைக்களஞ்சியமாக படைத்த தனது உலகைச் சுற்றி 200 நாட்கள், நூலில் இந்தியாவிற்கு 154 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலங்களில், எகிப்திய எழுத்தாளர்களை மிகவும் பாதித்த இந்தியத் தலைவராக மகாத்மா காந்தியை கூறலாம். அராபிய இலக்கியத்தில் அவர் சகிப்புத் தன்மைக்கும், அன்பிற்கும், அமைதிக்கும் சின்னமாக விளங்குகிறார். அராபிய எழுத்தாளர்களால் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அவரது வாழ்க்கையைப் பற்றியும், அவரது போராட்டத்தைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளன.


http://tamil.webdunia.com/miscellaneous/literature/magazine/0705/11/1070511017_1.htm

சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்

சாதனைப்படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்

கல்விக்குத் திருமணம், குடும்ப வாழ்க்கை தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திருமணமான மூன்று ஆண்டில் மேற்படிப்புக்காகத் திருமதி ஷகீலா பானு (23)உலகப்புகழ்பெற்ற லண்டன் இம்பீரியல் கல்லூரிக்குச் செல்கிறார். திருமதி ஷகீலா, " ஏ ஸ்டார்" எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு அமைப்பின் (Agency for Science, Technology and Research)இந்த ஆண்டுக்கான உபகாரச் சம்பளத்தைப் (Scholarship) கடும் போட்டிக்கிடையில் பெற்றார். உயிராய்வியல் மருத்துவத்தில் (Biomedical Sciences) டாக்டர் (PhD) பட்டம் பெறுவார்.

தலைச்சிறந்த சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் துறையில் இளநிலை பட்டத்தைப் (Honours) பெற்ற ஷகீலா, "என் நீண்ட நாள் கனவு இறுதியில் நிறைவேறப்போவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த என் கணவருக்கு நன்றி," என்றார். திருமணமான பிறகும் தங்கு தடையின்றி கல்வியைத் தொடர முடியும் என்பதற்கு ஷகீலா ஒரு சிறந்து எடுத்துக்காட்டு. ‘இளமையில் கல்’ என்பதுதான் அவர் கணவரின் அறிவுரை.
"குடும்ப வாழ்க்கைக்காக என் மனைவி தனது லட்சியத்தை விட்டுக்கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை'.

"ஆதலால், சவால்களை எதிர்நோக்க அவருக்குப் பக்க பலமாக இருந்து வருகிறேன்," என்றார் ஷகீலாவின் கணவர் திரு முகமது ஏடிரீஸ் (31).
இவர், மில்லேனியா கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணிப்புரிகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடும் உழைப்பு மட்டும் போதாது. எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டு செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஷகீலாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
"லட்சியத்துடன் வாழ்க்கையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்." என்று உறுதியுடன் ஷகீலா கூறுகிறார்.

தலைத்துண்டு அணிந்துகொண்டே கல்வி தொண்டில் சிறக்க முடியும் என்று நிரூபித்த இந்த சகோதரியை போல வீட்டிற்கு ஒரு பெண் உருவாக்க வேண்டும்.

(http://tamilmurasu.tamil.sg/node/626)


பிறைநதிபுரத்தான்

இஸ்லாத்தை புரிந்து கொள்ள உதவும் நூல்கள்

Assalamualaikum.

We can even start by giving a booklet " Understanding Islam and the Muslims ", a 32 page booklet having the following topics like, ' what is Islam', what do muslims believe', ' do islam and christianity have different origins'.

This book has photos beside the answer for easier understanding.

It can be printed in bulk and distributed.

Any person interested to know about Islam, can understand the entire concept about Islam.

Sincerely,

Mohamed Imtiaz
Jan Trust
97 Coral Merchant Street
Chennai 1
T: 25244015

imtiazhlc@hotmail.com

பஹ்ரைனில் இலவச கணிப்பொறி வகுப்புகள்

பஹ்ரைன் தமுமுகவின் சார்பில் இலவச கணிப்பொறி வகுப்புகள்

பஹ்ரைன் தமுமுகவின் சார்பில் இலவச கணிப்பொறி வகுப்புகள் ஆரம்ப விழா கடந்த
25-07-2008 வெள்ளி மாலை 8-30 மணிக்கு தமுமுக மர்கஸில் வைத்து நடைபெற்றது.
மண்டலத் தலைவர் முஹைதீன் ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்
பொருளாளர் ராஜகிரி யூசுப் கிராஅத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

கரம்பை ஜக்கரிய்யா வரவேற்புரை ஆற்றினார்.

இதைத் தொடர்ந்து கம்ப்யூட்டர் வேல்ட் நிறுவனத்தின் நிதி நிர்வாக மேலாளர்
ஐ. சபீருத்தீன் அவர்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பில் 2 கம்ப்யூட்டர்கள்
வழங்கி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு B.F.C. Real Estate
Pvt Ltd., நிறுவன பங்குதாரர்களின் தலைவர் S.M.T. காலித், டிஸ்கவர்
இஸ்லாம் தாயீ சகோ. முபாரக், பஹ்ரைன் தமிழ் சங்க பிரதிநிதி திருவை பஷீர்,
அக்குப்பஞ்சர் மருத்துவர் ஜாபர் அலி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை
வழங்கினர். அமைப்பாளர் ஏர்வாடி ரிஸ்வான் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் கணிப்பொறி வகுப்பின் ஆசிரியர் அப்துல் காதர் நிர்வாகிகள் கோட்டார்
ரபீக், ஜாபர், பீர்முஹம்மது பேசினர். இந்நிகழ்ச்சியில் ஹாமா டவுன்
தமுமுகவின் வழிகாட்டுதலின் பேரில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட வேலூரைச்
சேர்ந்த சகோ. வினோத் தன் புதிய பெயரான
ஏ. அப்துல் வாஹித் என்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கலந்துகொண்டோர்
தக்பீர் முழக்கமிட்டு வாழ்த்தினர்.

முடிவில் தமீமுன் அன்சாரி நன்றியுரை நிகழ்த்தினார்.


தகவல் : எஸ். முஹம்மது அப்துல் காதர், பஹ்ரைன்

S. Mohd. Abdul Kader
Video Editor
Rayana Media Center
P.O Box 5021
Kingdom of Bahrain
Mob No: +973 39685402
www.rayanamediacenter.com

முத்துப்பேட்டை சாதனையார்களுடன் ஒரு சந்திப்பு

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

சாதனையார்களுடன் ஒரு சந்திப்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வெளி உலகிற்கு தொியாத பல சாதனைகள் இருக்கிறார்கள். அரசியல் துறை, பொது நல சேவை, எழுத்துலக துறை, திரைப்படத்துறை போன்ற பல துறைகளில் சாதனைகளை படைத்த மற்றும் சாதனைகளை படைத்து கொண்டு இருக்கும் ஒரு சிலரை நோிடைய சந்தித்து அவா்களின் அனுபவங்களை பற்றிய கட்டுரை இது.

பொது சேவையில் தன்னாா்வத்துடன் செயல்படும் ஜனாப். முகைதீன் அப்துல் காதா் அவா்கள், துபாயில் செயல்படும் ஈமான் அமைப்பின் துணைத்தலைவரான ஜனாப். எம். அப்துல் ரஹ்மான் அவா்களின் தந்தையாவாா்.முஸ்லிம் லீக் கட்சியில் மிகுந்த பற்றுக்கொண்டவர் என்று சொல்வதைவிட தீவிர பற்றுக்கொண்டவர். இவாின் பிறந்த தேதி 14.3.1933. இவருடைய தாயாா் இறந்தவுடன், அனைத்து குடும்ப பொறுப்புகளை
இவர் ஏற்றுக்கொண்டார்.

1953 ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவா்களை நோில் சந்தித்து உரையாடி இருக்கிறாா் மற்றும் தற்போதைய அரசியல் தலைவர்கள் பலாிடம் நட்பு வைத்து இருக்கிறாா். தமிழக முதல்வா் டாக்டா். கலைஞருடன் மிகுந்த நட்புடன் பழகுபவா். குறிப்பாக சொன்னால் பனத்வாலா, திருப்பூா் மைதீன் பீா் முஹம்மது அப்துல் சமது வடகரை. பாக்கர், யூசுப் சாஹிப் (மறுமலா்ச்சி ஆசிரியா்) போன்ற மறைந்த
தலைவா்களுடன் மிகுந்த நட்பு கொண்டு இருந்தாா் மற்றும் பேராசிரியா் . காதா் மொய்தீன் அவா்களுடன் மிகுந்தநட்பு கொண்டு இருக்கிறாா்.

கட்சி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது கேரளா முன்னாள் முதல்வரான ஈ.எம்.எஸ். நம்பூதரி பட், எம். கல்யாண சுந்தரம், பாப்பா. உமாநாத், தா. பாண்டியன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்து உரையாடி இருக்கிறார். அத்துடன் டாக்டர் கலைஞரை அவர்களை இரு முறை சந்தித்து இருக்கிறார்.

சென்னை மண்ணடியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு சொந்தமான கட்டிட்டத்திற்கு சிறு வயதிலேயே நன்கொடை அளித்துள்ளாா். அவா் கொடுத்தது வேறும் மூன்று ரூபாய் மட்டும் தான். ஆனால் அந்த தொகை தற்போது பல ஆயிரங்கள் மதிப்பு மிக்கதாக உள்ளது. கொடுத்தது சிறிய தொகை தான் இருந்தாலும் சிறிய வயதிலேயே அதனை கொடுத்து இருக்கிறாா் என்று தான் நாம் பார்க்க வேண்டும்.

முகைதீன் அப்துல் காதா் அவா்கள், முத்து நகாில் சங்கத்து பள்ளிக்கூடம் என்று சொல்லப்படும் ஆவன்னா நேனா பள்ளியில் பெற்றோா் ஆசிரியர் கழகத்தின் தலைவராக கடந்த பத்தாண்டுகளாக பணி புரிகிறாா். மற்றும் பல பொது சேவைகளிலும் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டுள்ளார். இன்னும் பல சேவைகளை செய்துக்கொண்டு இருக்கிறார்.

தந்தையை தொடர்ந்து அவருடைய மகனாரும் பல பொது சேவைகள், கல்வி சேவைகள், சமுதாய சேவைகள், ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி, நோய்வாய் அடைந்த ஏழைகளுக்கு நிதியுதவி போன்ற பல உதவிகளை ஈமான் அமைப்பு மூலமாகவும் மற்றும் முத்துப்பேட்டை கல்வி பேரவை மூலமாகவும் செய்துக்கொண்டு வருகிறாா்.

முஸ்லிம் கட்சியினை பலப்படுத்த தாங்கள் கூறும் கருத்து என்னவென்று, ஜனாப். முகைதீன் அப்துல் காதர் அவர்களை கேட்டேன். ஆா்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி அவா்களுக்கு நம்பிக்கையை வளர்த்து வர வேண்டும். நம் சமுதாய இளைஞர்கள் துணிந்து செயல்பட வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு உழைக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் உறுதுணையாக இருக்க வேண்டும்
என்றார்.

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உடல் பொருள் ஆவியை தியாகம் செய்த பல தலைவர்களை இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்திற்காக ஆயத்தமாகி கொண்டு நாம் எண்ணிப்பார்க்கமால் இருக்க முடியாது. பற்பல இஸ்லாமியா்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இருந்தனா். ஆனால் சில பாசிச சக்திகள் தியாகம் செய்த இஸ்லாமியர்களை மறைந்து விட்டு மறந்து விட்டு என்னவோ
அவா்கள் தான் இந்திய சுதந்திரத்தினை வாங்கி தந்ததாக கூறிக்கொள்கிறார்கள்.

15.8.1922 ஆம் ஆண்டு முத்துப்பேட்டையில் பிறந்த ~முத்துக்கவிஞர்~ என்றழைக்கப்படும். கவிஞர். கே.எஸ்.முகம்மது தாவூத் அவர்களை 31.7.2008 அன்று அவருடைய இல்லத்தில் அந்தி நேரத்தில் சந்தித்தேன். இவருக்கு 2 ஆண் மகனார்கள், 4 பெண் மகள்கள், பேத்தி 2 உள்ளது, 4 பேரன்கள் உள்ளார்கள். எளிமையான தோற்றம், திண்ணமான பேச்சு, வார்த்தை பொலிவு, கவித்துவம் அமைந்த வார்த்தைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவரை நான் ஒரு கவிஞர் என்று தான் எண்ணி இருந்தேன். பின்னர் தான் தெரிந்தது இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்று.

1943ஆம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். முத்துப்பேட்டையில் இவர் மூன்றாவது மட்டும் தான் படித்து வந்தார். பின்னர் பர்மாவிற்கு சென்று அனுபவ ரீதியாக ஹிந்தி, உருது, பர்மா, சிங்களம், முதலிய மொழிகளை தெரிந்து வைத்து இருக்கிறார்.

இந்தியா, மலேஸியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் பல பத்திரிகைகளுக்கு கவிதை மற்றும் கட்டுரை எழுதி இருக்கிறார். 86 வயதாகி விட்ட இந்த வயதிலும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.. இவர் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய இன்பத்தமிழ் இலக்கணம் என்ற நூலினை பாராட்டி அமெரிக்க கலிபோர்னியாவில் உள்ள உலக கலை பண்பாட்டு அமைப்பு என்ற நிறுவனம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி
சிறப்பித்துள்ளது. மற்றும் 14.7.2001 அன்று முத்துப்பேட்டையில் நடந்த மீலாது விழா சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் இவருக்கு ஜே.எம். ஹாரூண் அவா்கள் பொன்னாடை போாத்தி சிறப்பித்தார்.

இவர் சிறந்த நாட்டு பற்று உடையவர், தமிழ் பற்று மிக்கவர், நாட்டுப்பற்றுடன் மனித நேய நல்லிணத்திற்'காகவும் தொண்டாற்றி வருகிறார். அகில இலங்கை முஸ்லிம் லீக் மார்க்க கமிட்டி முன்னாள் அங்கத்தினர். பல மார்க்க பத்திரிகைகளுக்கும் பல செய்திகளை அனுப்புவதால் பல இஸ்லாமிக பத்திரிகைகள் இவருக்கு இலவசமாக இவர் இல்லம் தேடி வருகிறது. முத்து நகரில் உள்ள ஆவன்னா நேனா பள்ளிக்கூடம் துவங்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறார். மற்றும் எஸ்.பி.கே. தோட்ட வளாகத்தில் உள்ள மக்கா பள்ளி வாசல் கட்டிடபணி துவங்கி அனைத்து வேலைகள் முடிவதற்கும் இவர் பணி புரிந்து இருக்கிறார்.

சுதந்திர போராட்ட தியாதிகள் நினைவு பரிசினை முன்னாள் முதல்வர். ஜெயலலிதா அவர்களின் கைககளால் பெற்று இருக்கிறார். அத்துடன் 1973 ஆம் ஆண்டு இந்திய நாட்டு சுதந்திரத்தின் 25ஆம் ஆண்டு விழாவில் பட்டயமும் மற்றும் சான்றும் பெற்று இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டின் சுதந்திர தினத்தின் போது இவரை பாராட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நினைவு பரிசுகளை வழங்குவார்கள்.

இவரிடம் தற்போது பல அரிய தகவல்கள் அடங்கிய கைப்புத்தகம் ஒன்று உள்ளது. மற்றும் பிரசுரம் ஆகாமல் இவருடைய பல கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வேறும் காகிதத்தில் இவர் கைப்பட எழுதப்பட்டு உள்ளது. அதனை யாரேனும் பிரசுரத்திற்கு எடுத்து வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பினால் அவரை நேரிடையாக தொடர்பு கொள்ளலாம்.

அவருடைய முகவரி : முத்து கவிஞர். முகம்மது தாவூத். குட்டியாா்பள்ளி தெரு. பேட்டை சாலை. முத்துப்பேட்டை 614 704. திருவாரூா் மாவட்டம்.

முத்துப்பேட்டை ஹெச். எம்.ஆர். என்றழைக்கப்படும் ஜனாப். ஹெச். முஹம்மது ரஸீஸ்கான் அவர்களும் எழுத்துலகில் மிக்க அனுபவமிக்கவர். மணி விளக்கு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணி புரிந்து உள்ளார். கல்வி பண்பாட்டு பயிற்சி கூடம் என்ற வின்னர்ஸ் மெட்ரிக்குலேஸன் பள்ளியின் நிா்வாகி, தாளாளர், முதல்வர். 1953 ஆம் ஆண்டு முதல் இவருடைய பேச்சானது பல மேடைகளில் ஒலித்து உள்ளது. எம். ஏ வரலாறில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி பயிற்று இருக்கிறார். முத்துப்பேட்டை புதுப்பள்ளி வாசல் முஹல்லா நிர்வாகத்தில் 18 ஆண்டுகள் செயலாளர் பணி. தற்போது 4 ஆண்டுகள் தலைவர் பணி. திருவாரூர்் மாவட்ட ரீதியில் நிரந்தர சமாதான கமிட்டி உறுப்பினராக இவர் உள்ளார்.

1972 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதிந்து இன்றும் பல சாதனைகளை புரிந்துவரும் முத்துப்பேட்டை. முஹம்மது அலி (என்ற) பாபு மகா ராஜா என்ற திரைப்பட இயக்குனா் பிறந்த ஊரும் முத்துப்பேட்டை என்றால் மிகையாகாது. உதவி இயக்குனராக சிநேகிதி, அன்பு சகோதரர்கள் போன்ற படங்களில் பணி புரிந்து உள்ளார். வசனகர்த்தாவாக சமர்ப்பணம் மற்றும் கமலம் போன்ற படங்களில் பணியாற்றி
உள்ளார்.

1981 ல் வெளியான இவா் கதை வசனம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம் தரையில் வாழும் மீன்கள். இந்த திரைப்படத்தில் தான் நடிகை அம்பிகா அறிமுகம். நடிகை வனிதா அறிமுகம். நடிகர் விஜய்பாபு அறிமுகம். நகைச்சுவை நடிகா் எஸ்.எஸ். சந்திரன் அறிமுகம். நடிகா். ராதா ரவி அறி்முகம். மற்றும் இசையமைப்பாளா் சந்திரபோஸ் அவர்களும் இந்த படத்தில் முதன் முறையாக இசையமைத்தார். பல முகங்களை
திரைக்கு தந்து, மிகவும் எளிமையான வாழ்க்கையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா. இரண்டு பெண் பிள்ளைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு வாழ்ந்து வருகிறார். இயக்குனா் பாபு மகா ராஜா. .

1962ல் எஸ்.எஸ்.எல்.சி. படிப்பினை முத்து நகாில் பயின்றார். முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான பெருக வாழ்ந்தான், கோவிலூர் பெண்கள் பள்ளிக்கூடம் மற்றும் மல்லிப்பட்டினம் மனோரா போன்ற பகுதியில் முதன் முதலில் இயக்கப்பட்ட இவருடைய முதல் திரைபடமான தரையில் வாழும் மீன்களாக தான் இருக்கும். இவருடைய முதல் படத்தினை வளநாடு சினி ரீலீஸ் - திருச்சி என்ற நிறுவனம் வெளியிட்டது. இவரின் இரண்டாவது திரைப்படம் தொடரும் சரித்திரங்கள். 3வது படம் அர்த்தமுள்ள ஆசைகள். தற்போது இவரிடம் ஓசை என்ற படத்திற்கான கதை வசனம் எல்லாம் தயார். ஆனால் தயாரித்து வெளியிட நல்ல ஒரு தயாரிப்பாளரை எதிர்ப்பார்த்து இவர் காத்து இருக்கிறார். இதனை படிக்கும் திரைத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இருந்தால் அவரிடம் தொடர்பினை நான் ஏற்படுத்தி
தருகிறேன். இங்கு ஒன்றினை குறிப்பிட விரும்பிகிறேன். நடிகர் மோகன் நளினி நடித்து ஓசை என்ற படமானது பல ஆண்டுகளுக்கு முன் வெளியானது. ஆனால் அந்த கதையல்ல. ஏனெனில் ஒரு திரைப்படம் வெளிவந்து 20 ஆண்டுகள் கழித்து அதே பெயரில் மற்றொரு திரைப்படம் வெளி வரலாம் என்பது திரைத்துறையின் நியதி.

தாங்களின் எதிர் கால சாதனையாக எதனை குறிப்பிட விரும்புகிறீர்கள் என்பதனை பற்றி கேட்ட போது, எதிர் காலத்தில் நான் ஒரு நல்ல இயக்குனராக மக்கள் மத்தியில் பெயர் எடுக்க வேண்டும். மற்றும் மத்திய அரசாங்கம் அளிக்கும் திரைப்படத்துக்கான உயர்ந்த விருதினை நான் பெற வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். நான் சில ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம்
போன்ற படங்களை மொழி மாற்றம் செய்து உள்ளேன். ஆகையால் தமிழ் நாடு மட்டுமின்றி மற்ற மாநில திரைத்துறையிலும் சில நண்பர்களை நான் பெற்று இருக்கிறேன். இறைவனின் நாட்டப்படி நானும் ஒரு நாள் பெரிய இயக்குனர் என்ற பெயர் எடுப்பேன் என்று உறுதியாக கூறுகிறேன்.. .

இது போல் பல சிறப்புகளை கொண்ட படைப்பாளிகளை பெற்ற ஊராக தான் இன்றைய முத்துப்பேட்டை உள்ளதே தவிர பொய் ஊடகங்கள் ஊகத்தினை தான் நினைக்கிறதே தவிர உண்மையினை மறைக்கிறது. காலம் ஒரு நாள் பதில் சொல்லும். இத்தகைய படைப்பாளிகளும் மற்றும் சாதனை செய்துக்கொண்டு இருக்கும் சாதனையாளர்கள் இருக்கும் பட்சத்தில் எங்கள் ஊர் முத்துப்பேட்டை இன்னும் சிறக்கும் சிறப்பாக வளரும்.
வெளி உலகிற்க்கு தெரியாத படைப்பாளிகள் இருக்கும் இந்த ஊரினை பற்றி பல அரிய தகவல்கள் அறிய விரும்புவோர்கள் ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்தால் பல உண்மைகள் புரியும்.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

திருக்குர்ஆன் இணையத்தளம்

கீழ்க்கண்ட

திருக்குர்ஆன் இணையத்தளம்

அரபி - ஆங்கிலம்
அரபி - உர்தூ

உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஓதுவதைக் கேட்டு பயன் பெறலாம்

http://www.quranexplorer.com/quran/

அரபி மொழியை உச்சரிப்புடன் பயில உதவும் இணையத்தளம்

http://www.multimediaquran.com/