அல்லாஹ்வின் திருப்பெயரால்..
சாதனையார்களுடன் ஒரு சந்திப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வெளி உலகிற்கு தொியாத பல சாதனைகள் இருக்கிறார்கள். அரசியல் துறை, பொது நல சேவை, எழுத்துலக துறை, திரைப்படத்துறை போன்ற பல துறைகளில் சாதனைகளை படைத்த மற்றும் சாதனைகளை படைத்து கொண்டு இருக்கும் ஒரு சிலரை நோிடைய சந்தித்து அவா்களின் அனுபவங்களை பற்றிய கட்டுரை இது.
பொது சேவையில் தன்னாா்வத்துடன் செயல்படும் ஜனாப். முகைதீன் அப்துல் காதா் அவா்கள், துபாயில் செயல்படும் ஈமான் அமைப்பின் துணைத்தலைவரான ஜனாப். எம். அப்துல் ரஹ்மான் அவா்களின் தந்தையாவாா்.முஸ்லிம் லீக் கட்சியில் மிகுந்த பற்றுக்கொண்டவர் என்று சொல்வதைவிட தீவிர பற்றுக்கொண்டவர். இவாின் பிறந்த தேதி 14.3.1933. இவருடைய தாயாா் இறந்தவுடன், அனைத்து குடும்ப பொறுப்புகளை
இவர் ஏற்றுக்கொண்டார்.
1953 ஆம் ஆண்டு காயிதே மில்லத் அவா்களை நோில் சந்தித்து உரையாடி இருக்கிறாா் மற்றும் தற்போதைய அரசியல் தலைவர்கள் பலாிடம் நட்பு வைத்து இருக்கிறாா். தமிழக முதல்வா் டாக்டா். கலைஞருடன் மிகுந்த நட்புடன் பழகுபவா். குறிப்பாக சொன்னால் பனத்வாலா, திருப்பூா் மைதீன் பீா் முஹம்மது அப்துல் சமது வடகரை. பாக்கர், யூசுப் சாஹிப் (மறுமலா்ச்சி ஆசிரியா்) போன்ற மறைந்த
தலைவா்களுடன் மிகுந்த நட்பு கொண்டு இருந்தாா் மற்றும் பேராசிரியா் . காதா் மொய்தீன் அவா்களுடன் மிகுந்தநட்பு கொண்டு இருக்கிறாா்.
கட்சி தேர்தல் பிரச்சார கூட்டங்களின் போது கேரளா முன்னாள் முதல்வரான ஈ.எம்.எஸ். நம்பூதரி பட், எம். கல்யாண சுந்தரம், பாப்பா. உமாநாத், தா. பாண்டியன் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்து உரையாடி இருக்கிறார். அத்துடன் டாக்டர் கலைஞரை அவர்களை இரு முறை சந்தித்து இருக்கிறார்.
சென்னை மண்ணடியில் உள்ள முஸ்லிம் லீக் கட்சிக்கு சொந்தமான கட்டிட்டத்திற்கு சிறு வயதிலேயே நன்கொடை அளித்துள்ளாா். அவா் கொடுத்தது வேறும் மூன்று ரூபாய் மட்டும் தான். ஆனால் அந்த தொகை தற்போது பல ஆயிரங்கள் மதிப்பு மிக்கதாக உள்ளது. கொடுத்தது சிறிய தொகை தான் இருந்தாலும் சிறிய வயதிலேயே அதனை கொடுத்து இருக்கிறாா் என்று தான் நாம் பார்க்க வேண்டும்.
முகைதீன் அப்துல் காதா் அவா்கள், முத்து நகாில் சங்கத்து பள்ளிக்கூடம் என்று சொல்லப்படும் ஆவன்னா நேனா பள்ளியில் பெற்றோா் ஆசிரியர் கழகத்தின் தலைவராக கடந்த பத்தாண்டுகளாக பணி புரிகிறாா். மற்றும் பல பொது சேவைகளிலும் தன்னை ஈடுப்படுத்திக்கொண்டுள்ளார். இன்னும் பல சேவைகளை செய்துக்கொண்டு இருக்கிறார்.
தந்தையை தொடர்ந்து அவருடைய மகனாரும் பல பொது சேவைகள், கல்வி சேவைகள், சமுதாய சேவைகள், ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி, நோய்வாய் அடைந்த ஏழைகளுக்கு நிதியுதவி போன்ற பல உதவிகளை ஈமான் அமைப்பு மூலமாகவும் மற்றும் முத்துப்பேட்டை கல்வி பேரவை மூலமாகவும் செய்துக்கொண்டு வருகிறாா்.
முஸ்லிம் கட்சியினை பலப்படுத்த தாங்கள் கூறும் கருத்து என்னவென்று, ஜனாப். முகைதீன் அப்துல் காதர் அவர்களை கேட்டேன். ஆா்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி அவா்களுக்கு நம்பிக்கையை வளர்த்து வர வேண்டும். நம் சமுதாய இளைஞர்கள் துணிந்து செயல்பட வேண்டும். இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு உழைக்கும் அரசியல்வாதிகளுக்கு நம் உறுதுணையாக இருக்க வேண்டும்
என்றார்.
இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட உடல் பொருள் ஆவியை தியாகம் செய்த பல தலைவர்களை இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாடத்திற்காக ஆயத்தமாகி கொண்டு நாம் எண்ணிப்பார்க்கமால் இருக்க முடியாது. பற்பல இஸ்லாமியா்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு இருந்தனா். ஆனால் சில பாசிச சக்திகள் தியாகம் செய்த இஸ்லாமியர்களை மறைந்து விட்டு மறந்து விட்டு என்னவோ
அவா்கள் தான் இந்திய சுதந்திரத்தினை வாங்கி தந்ததாக கூறிக்கொள்கிறார்கள்.
15.8.1922 ஆம் ஆண்டு முத்துப்பேட்டையில் பிறந்த ~முத்துக்கவிஞர்~ என்றழைக்கப்படும். கவிஞர். கே.எஸ்.முகம்மது தாவூத் அவர்களை 31.7.2008 அன்று அவருடைய இல்லத்தில் அந்தி நேரத்தில் சந்தித்தேன். இவருக்கு 2 ஆண் மகனார்கள், 4 பெண் மகள்கள், பேத்தி 2 உள்ளது, 4 பேரன்கள் உள்ளார்கள். எளிமையான தோற்றம், திண்ணமான பேச்சு, வார்த்தை பொலிவு, கவித்துவம் அமைந்த வார்த்தைகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவரை நான் ஒரு கவிஞர் என்று தான் எண்ணி இருந்தேன். பின்னர் தான் தெரிந்தது இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி என்று.
1943ஆம் ஆண்டு நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். முத்துப்பேட்டையில் இவர் மூன்றாவது மட்டும் தான் படித்து வந்தார். பின்னர் பர்மாவிற்கு சென்று அனுபவ ரீதியாக ஹிந்தி, உருது, பர்மா, சிங்களம், முதலிய மொழிகளை தெரிந்து வைத்து இருக்கிறார்.
இந்தியா, மலேஸியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து வெளிவரும் பல பத்திரிகைகளுக்கு கவிதை மற்றும் கட்டுரை எழுதி இருக்கிறார். 86 வயதாகி விட்ட இந்த வயதிலும் எழுதிக்கொண்டே இருக்கிறார்.. இவர் சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய இன்பத்தமிழ் இலக்கணம் என்ற நூலினை பாராட்டி அமெரிக்க கலிபோர்னியாவில் உள்ள உலக கலை பண்பாட்டு அமைப்பு என்ற நிறுவனம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி
சிறப்பித்துள்ளது. மற்றும் 14.7.2001 அன்று முத்துப்பேட்டையில் நடந்த மீலாது விழா சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் இவருக்கு ஜே.எம். ஹாரூண் அவா்கள் பொன்னாடை போாத்தி சிறப்பித்தார்.
இவர் சிறந்த நாட்டு பற்று உடையவர், தமிழ் பற்று மிக்கவர், நாட்டுப்பற்றுடன் மனித நேய நல்லிணத்திற்'காகவும் தொண்டாற்றி வருகிறார். அகில இலங்கை முஸ்லிம் லீக் மார்க்க கமிட்டி முன்னாள் அங்கத்தினர். பல மார்க்க பத்திரிகைகளுக்கும் பல செய்திகளை அனுப்புவதால் பல இஸ்லாமிக பத்திரிகைகள் இவருக்கு இலவசமாக இவர் இல்லம் தேடி வருகிறது. முத்து நகரில் உள்ள ஆவன்னா நேனா பள்ளிக்கூடம் துவங்குவதற்கு இவரும் ஒரு காரணமாக இருந்து இருக்கிறார். மற்றும் எஸ்.பி.கே. தோட்ட வளாகத்தில் உள்ள மக்கா பள்ளி வாசல் கட்டிடபணி துவங்கி அனைத்து வேலைகள் முடிவதற்கும் இவர் பணி புரிந்து இருக்கிறார்.
சுதந்திர போராட்ட தியாதிகள் நினைவு பரிசினை முன்னாள் முதல்வர். ஜெயலலிதா அவர்களின் கைககளால் பெற்று இருக்கிறார். அத்துடன் 1973 ஆம் ஆண்டு இந்திய நாட்டு சுதந்திரத்தின் 25ஆம் ஆண்டு விழாவில் பட்டயமும் மற்றும் சான்றும் பெற்று இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டின் சுதந்திர தினத்தின் போது இவரை பாராட்டி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நினைவு பரிசுகளை வழங்குவார்கள்.
இவரிடம் தற்போது பல அரிய தகவல்கள் அடங்கிய கைப்புத்தகம் ஒன்று உள்ளது. மற்றும் பிரசுரம் ஆகாமல் இவருடைய பல கவிதைகள் மற்றும் கட்டுரைகள் வேறும் காகிதத்தில் இவர் கைப்பட எழுதப்பட்டு உள்ளது. அதனை யாரேனும் பிரசுரத்திற்கு எடுத்து வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்பினால் அவரை நேரிடையாக தொடர்பு கொள்ளலாம்.
அவருடைய முகவரி : முத்து கவிஞர். முகம்மது தாவூத். குட்டியாா்பள்ளி தெரு. பேட்டை சாலை. முத்துப்பேட்டை 614 704. திருவாரூா் மாவட்டம்.
முத்துப்பேட்டை ஹெச். எம்.ஆர். என்றழைக்கப்படும் ஜனாப். ஹெச். முஹம்மது ரஸீஸ்கான் அவர்களும் எழுத்துலகில் மிக்க அனுபவமிக்கவர். மணி விளக்கு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணி புரிந்து உள்ளார். கல்வி பண்பாட்டு பயிற்சி கூடம் என்ற வின்னர்ஸ் மெட்ரிக்குலேஸன் பள்ளியின் நிா்வாகி, தாளாளர், முதல்வர். 1953 ஆம் ஆண்டு முதல் இவருடைய பேச்சானது பல மேடைகளில் ஒலித்து உள்ளது. எம். ஏ வரலாறில் பட்டப்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி பயிற்று இருக்கிறார். முத்துப்பேட்டை புதுப்பள்ளி வாசல் முஹல்லா நிர்வாகத்தில் 18 ஆண்டுகள் செயலாளர் பணி. தற்போது 4 ஆண்டுகள் தலைவர் பணி. திருவாரூர்் மாவட்ட ரீதியில் நிரந்தர சமாதான கமிட்டி உறுப்பினராக இவர் உள்ளார்.
1972 ஆம் ஆண்டு திரைப்படத்துறையில் கால் பதிந்து இன்றும் பல சாதனைகளை புரிந்துவரும் முத்துப்பேட்டை. முஹம்மது அலி (என்ற) பாபு மகா ராஜா என்ற திரைப்பட இயக்குனா் பிறந்த ஊரும் முத்துப்பேட்டை என்றால் மிகையாகாது. உதவி இயக்குனராக சிநேகிதி, அன்பு சகோதரர்கள் போன்ற படங்களில் பணி புரிந்து உள்ளார். வசனகர்த்தாவாக சமர்ப்பணம் மற்றும் கமலம் போன்ற படங்களில் பணியாற்றி
உள்ளார்.
1981 ல் வெளியான இவா் கதை வசனம் எழுதி இயக்கிய முதல் திரைப்படம் தரையில் வாழும் மீன்கள். இந்த திரைப்படத்தில் தான் நடிகை அம்பிகா அறிமுகம். நடிகை வனிதா அறிமுகம். நடிகர் விஜய்பாபு அறிமுகம். நகைச்சுவை நடிகா் எஸ்.எஸ். சந்திரன் அறிமுகம். நடிகா். ராதா ரவி அறி்முகம். மற்றும் இசையமைப்பாளா் சந்திரபோஸ் அவர்களும் இந்த படத்தில் முதன் முறையாக இசையமைத்தார். பல முகங்களை
திரைக்கு தந்து, மிகவும் எளிமையான வாழ்க்கையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா. இரண்டு பெண் பிள்ளைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட்டு வாழ்ந்து வருகிறார். இயக்குனா் பாபு மகா ராஜா. .
1962ல் எஸ்.எஸ்.எல்.சி. படிப்பினை முத்து நகாில் பயின்றார். முத்துப்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான பெருக வாழ்ந்தான், கோவிலூர் பெண்கள் பள்ளிக்கூடம் மற்றும் மல்லிப்பட்டினம் மனோரா போன்ற பகுதியில் முதன் முதலில் இயக்கப்பட்ட இவருடைய முதல் திரைபடமான தரையில் வாழும் மீன்களாக தான் இருக்கும். இவருடைய முதல் படத்தினை வளநாடு சினி ரீலீஸ் - திருச்சி என்ற நிறுவனம் வெளியிட்டது. இவரின் இரண்டாவது திரைப்படம் தொடரும் சரித்திரங்கள். 3வது படம் அர்த்தமுள்ள ஆசைகள். தற்போது இவரிடம் ஓசை என்ற படத்திற்கான கதை வசனம் எல்லாம் தயார். ஆனால் தயாரித்து வெளியிட நல்ல ஒரு தயாரிப்பாளரை எதிர்ப்பார்த்து இவர் காத்து இருக்கிறார். இதனை படிக்கும் திரைத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் இருந்தால் அவரிடம் தொடர்பினை நான் ஏற்படுத்தி
தருகிறேன். இங்கு ஒன்றினை குறிப்பிட விரும்பிகிறேன். நடிகர் மோகன் நளினி நடித்து ஓசை என்ற படமானது பல ஆண்டுகளுக்கு முன் வெளியானது. ஆனால் அந்த கதையல்ல. ஏனெனில் ஒரு திரைப்படம் வெளிவந்து 20 ஆண்டுகள் கழித்து அதே பெயரில் மற்றொரு திரைப்படம் வெளி வரலாம் என்பது திரைத்துறையின் நியதி.
தாங்களின் எதிர் கால சாதனையாக எதனை குறிப்பிட விரும்புகிறீர்கள் என்பதனை பற்றி கேட்ட போது, எதிர் காலத்தில் நான் ஒரு நல்ல இயக்குனராக மக்கள் மத்தியில் பெயர் எடுக்க வேண்டும். மற்றும் மத்திய அரசாங்கம் அளிக்கும் திரைப்படத்துக்கான உயர்ந்த விருதினை நான் பெற வேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள். நான் சில ஆண்டுகளுக்கு முன்பாக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம்
போன்ற படங்களை மொழி மாற்றம் செய்து உள்ளேன். ஆகையால் தமிழ் நாடு மட்டுமின்றி மற்ற மாநில திரைத்துறையிலும் சில நண்பர்களை நான் பெற்று இருக்கிறேன். இறைவனின் நாட்டப்படி நானும் ஒரு நாள் பெரிய இயக்குனர் என்ற பெயர் எடுப்பேன் என்று உறுதியாக கூறுகிறேன்.. .
இது போல் பல சிறப்புகளை கொண்ட படைப்பாளிகளை பெற்ற ஊராக தான் இன்றைய முத்துப்பேட்டை உள்ளதே தவிர பொய் ஊடகங்கள் ஊகத்தினை தான் நினைக்கிறதே தவிர உண்மையினை மறைக்கிறது. காலம் ஒரு நாள் பதில் சொல்லும். இத்தகைய படைப்பாளிகளும் மற்றும் சாதனை செய்துக்கொண்டு இருக்கும் சாதனையாளர்கள் இருக்கும் பட்சத்தில் எங்கள் ஊர் முத்துப்பேட்டை இன்னும் சிறக்கும் சிறப்பாக வளரும்.
வெளி உலகிற்க்கு தெரியாத படைப்பாளிகள் இருக்கும் இந்த ஊரினை பற்றி பல அரிய தகவல்கள் அறிய விரும்புவோர்கள் ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்தால் பல உண்மைகள் புரியும்.
தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்
No comments:
Post a Comment