Showing posts with label கீழக்கரை. Show all posts
Showing posts with label கீழக்கரை. Show all posts

Friday, July 17, 2009

கீழக்கரை மெளலவி ஜஹாங்கிர் அரூஸி சொற்பொழிவு

தமிழ் முஸ்லிம் டியூபில் இந்த வார வீடியோ தொகுப்புகள்

This week play list in your favorite www.tamilmuslimtube.com

Sheikh S.Samsudeen Kasimi M.A. Jumaa bayan on Environment, Allah’s gift Water, Our Children’s Education, Why Masjid? , Shy , Sins Cursed by Allah, Life is trust & Who is Kadhiyani,

சுற்றுச்சூழல்,தண்ணீர் ஒரு அருட்கொடை ,பள்ளிக்கூடம் செல்லும் வேளையிலே, வாழ்கை ஒரு அமானிதம், மஸ்ஜித்கள் எதற்காக?. இறை சாபத்திற்குரிய பாவம், வெட்கப்பட வேண்டாமா ?, காதியானிகள் யார்? , என்ற தலைப்புகளில் ஷேக் ஷம்சுதீன் காசிமி ஜும்மா குத்பா பயான்

http://www.tamilmuslimtube.com/playlist/Jumma-Quthbas-of-Moulana-Shamsu

Why difference of opinion in Madhab Laws? (Mathahabkalil Karuththu Verupaadu enn?) Sheikh Abdulla Jamali M.A.
மதஹப்களில் கருத்து வேறுபாடு ஏன்? - ஷேக் அப்துல்லா ஜமாலி

http://www.tamilmuslimtube.com/playlist/2990298030012986302129652995300

Upbringing children in Islamic Prospective (Islaamiya paarvaiyil Kuzhanthai Valarppu) – A.C.Agar Mohamed.

இஸ்லாமிய பார்வையில் குழந்தை வளர்ப்பு – ஷேக் A.C.அகார் முஹம்மது

http://www.tamilmuslimtube.com/playlist/2951300030212994300629803021298

கீழக்கரை அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் காக்கா பயான்

Kilakarai Alhaj Mahamed Maroof kaka bayan

http://www.tamilmuslimtube.com/playlist/2965300829962965302129652992301

கீழக்கரை மெளலவி ஜஹாங்கிர் அரூஸி சொற்பொழிவு

Lectures by Kilakarai Moulavi Jahangeer Aroosi

http://www.tamilmuslimtube.com/playlist/296530082996296530212965299230-2

Lecture to Muslim youngsters on Cinema & Love by Ash Sheik H.M. Minhaj (Islahi)

இளைஞர்களின் சாபக்கேடு - காதல் , சினிமா - ஷேக் H.M.மின்'ஹாஜ் இஸ்லாஹி

http://www.tamilmuslimtube.com/playlist/2951299530162974299230212965299

Tuesday, March 10, 2009

கீழக்கரை தினகரன் செய்தியாளர் அம்ஜத் இப்ராஹிம் இல்ல மணவிழா வாழ்த்து

கீழக்கரை தினகரன் செய்தியாளர் அம்ஜத் இப்ராஹிம் இல்ல மணவிழா வாழ்த்து

கீழக்கரை தினகரன் நாளிதழ் செய்தியாளர் K.S.M.S. அம்ஜத் இப்ராஹிம் ( 9443466669 ) மகளும், துபாய் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் A. ஹமீது யாசின் ( 90034 33642 ) சகோதரி

ஏ.தாஜுல் ஹஸனா மணமகளுக்கும்
ஏ.ஜெய்னுல் ஆபிதீன் மணமகனுக்கும்

14.03.2009 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு கீழக்கரை தெற்குத் தெரு மணமகள் இல்லத்தில் நடைபெற இருக்கும் திருமணம் சிறப்புற நடைபெற வாழ்த்துகிறோம்.

இவண்

நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
www.muduvaivision.com
www.mudukulathur.com

Monday, January 5, 2009

கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலின் கட்டிடக்கலை சிறப்பு

செத்தும் கொடை கொடுத்த" வள்ளல் சீதக்காதி என்றழைக்கப்பட்ட செய்கு அப்துல் காதர் மரைக்காயர் அவர்களால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளிவாசலின் கட்டிடக்கலை சிறப்பு பற்றி தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட வீடியோ படம் உங்கள் அபிமான www.tamilmuslimtube .com ல் கீழ்காணும் சுட்டில் காணலாம்.

http://www.tamilmus limtube.com/ video/Jumma- Masjid-Kilakarai -29723009


Short video film by Tamil Vitrtual University about the Architechtuaral excellence of Kilakarai Naduth theru Juma Masjid built by "Vallal Seethakaathi" in 17th Century , now available in your favourite website www.tamilmuslimtube .com in the following link

http://www.tamilmus limtube.com/ video/Jumma- Masjid-Kilakarai -29723009

Sunday, January 4, 2009

கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்

கேரம் போட்டி: கீழக்கரை பள்ளி மாணவர்கள் முதலிடம்


கீழக்கரை, ஜன. 3: ராமநாதபுரத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவில் நடைபெற்ற இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர்.

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த இரட்டையர் கேரம் போட்டியில், கீழக்கரை மஹ்தூமியா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எம். ஹீப்பத்துல்லா, ஏ. அஜ்மீர் இர்சாத் ரசூல் ஆகியோர் வெற்றி பெற்று, முதல் பரிசாக ரூ. 4,000 மற்றும் அதற்கான சான்றிதழையும் பெற்றனர்.

வெற்றிபெற்ற மாணவர்களை, பள்ளியின் தாளாளர் ஏ.கே.எஸ். ஹிதாயத்துல்லா, தலைமை ஆசிரியர் ஏ. ஜரீனா லோட்டஸ், உடற்கல்வி ஆசிரியர் ஐ. பாபு ஆபிரகாம் ஆகியோர் பாராட்டினர்.

மேலும், இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கும் தேர்வு பெற்றுள்ளனர்.

Monday, October 13, 2008

கீழக்கரையில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

கீழக்கரையில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

09.12.2008 செவ்வாய் கிழமை அன்று காலை 8 மணிக்கு கீழக்கரை , நடுத்தெரு ஜும்ஆ
மஸ்ஜிதில் டவுன் காஜி அல்ஹாஜ் .எம்.எம் .காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ ஹஜ்ஜுப்பெருநாள்
தொழுகை நடத்தினார்


நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவி அஸ்மத் ஹுசைன் மன்பஈ பெருநாள் குத்பா உரையை
நிகழ்த்தினார் கீழக்கரை வழக்கப்படி அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்கள் மஹல்லாக்களிலிருந்து
தக்பீர் முழக்கத்துடன் ஊர்வலமாக ஜும்ஆ மஸ்ஜித் சென்று ஒன்று கூடி பெருநாள் குத்பா
நிறைவுக்குப்பின்னர் தக்பீர் முழக்கத்துடன் ஊர்வலமாக ஜமாஅத்துகளுக்கு திரும்பினர்

Monday, June 16, 2008

முகவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி

முகவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி

முகம்மது சதக் பொறியியல் கல்லூரி, தமிழகத்தில் முதல் சுயநிதி கல்லூரியாக 1984ல் துவக்கப்பட்டு, மாநிலத்தின் முன்மாதிரி பொறியியல் கல்லூரியாக திகழ்கிறது. ஐஎஸ்ஓ 9001-2000 அங்கீகாரம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கழகத்தால் தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.

இக்கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் போன்ற பொதுவான பொறியியல் படிப்புகளும், மரைன், ஏரோனாட்டிகல், ஆர்கிடெக்சர், கெமிக்கல் போன்ற சிறப்பு பொறியியல் படிப்புகளும், சிறந்த ஆசியர்கள் கொண்டு நடத்தப்படுகின்றன.

முதுநிலை படிப்புகளாக எம்.இ., அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ், எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், எம்.இ., தெர்மல் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது.

மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதி, பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு சாப்ட்வேர் பார்க் அமைக்கும் முயற்சியில், முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதிர், செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எம். கபீர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

விளையாட்டு துறையிலும் இக்கல்லூரி சாதனைகளை செய்துள்ளது. இயக்குநர் பைசல் பி.அப்துல் காதர், முதல்வர் டாக்டர் வேமுரிலட்சுமி நாராயணா ஆகியோர் வழிநடத்துகின்றனர்.

கல்லூரியின் அறக்கட்டளை சார்பில், சென்னையில் முகம்மது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முகம்மது சதக் ஏ.ஜெ.பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், கீழக்கரையில் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற 13 கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன.

பிளஸ் 2 தேர்வில் 1,100க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இக்கல்லூரி இலவசமாக இடமளிக்கிறது.

மற்ற மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும், இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வளாக தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. மொத்தத்தில் இக்கல்லூரி ஒரு முன்னோடி கல்வி நிறுவனமாக உள்ளது.

Mohamed Sathak Engineering College
Kilakarai-623806
Website:www.msec.in | Phone:04567-241327,242327 | Fax:04567-245344

For Admissions:

Tel: 04567 – 245343, 241327
Fax: 04567 – 245344

For Enquiry : enquiries@msec.in






http://www.msec.in/

http://www.sathaktrust.com/

Thursday, June 5, 2008

துபாயில் கீழக்கரை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

துபாயில் கீழக்கரை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

துபாயில் கீழக்கரை ஹமீதிய்யா மெட்ரிகுலேஷன் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 06 ஜுன் 2008 ) மாலை 5.30 மணிக்கு அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடைபெற இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீதுயாசின் 050 475 3052 தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தொடர்புக்கு : 050 4753052 / 050 3875658 / 050 3727047

Monday, June 2, 2008

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா

கீழக்கரைஅரபு கல்லூரி பட்டமளிப்பு விழா


கீழக்கரை, ஜுன்.2-

கீழக்கரை அரூஸிய்யா தைக்கா அரபு கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

அரபு கல்லூரி

கீழக்கரையில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு 1671-ம் ஆண்டு மேலத்தெருவில் இஸ் லாமிய மார்க்க மகான் சதக் கத்துல்லா அப்பா என்பவ ரால் அரபு கல்லூரி தொடங் கப்பட்டது. இந்த கல்லூரிக்கு அல்மதரசத்துல் அரூஸிய்யா தைக்கா அரபிகல்லூரி என்று பெயர்.

இங்கு அரபு மொழி கல்வி கற்கும் ஆலிம், உலமாக்களுக்கு இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. இந்த கல் லூரியை தைக்கா சாகிபு ஒலியுல்லா மற்றும் மார்க்க மாமேதை செய்யது முகமது மாப்பிள்ளை லெவ்வை ஆலிம் ஆகியோரின் வாரிசு கள் நிர்வகித்து வருகின்ற னர்.

பட்டமளிப்பு விழா

இந்த கல்லூரியின் மவுலவி ஆலிம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு டிரஸ்டி அல்ஹாஜ் டி.எம்.அகமது அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். சென்னை சுலைமான் அறக் கட் டளை தலைவர் அல்ஹாஜ் கே.எஸ்.எம்.சாகுல்ஹமீது ஆலிம் முன்னிலை வகித்தார். அல்மதரஸத்துல் அரூஸிய்யா தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் கே.டி.எம். அகமது முஸ்தபா வரவேற்று பேசினார். டிரஸ்டி டி.எஸ்.ஏ.ஹமீது அப்துல் காதிர் அறிமுக உரையாற்றி னார்.கீழக்கரை நடுத்தெரு ஜும்மா பள்ளி வாசல் கத்தீபு எம்.அஜ்மத் உசேன் ஆலீம் தொடக்க உரையாற்றினார். காயல்பட்டிணம் மதரஸா மஹ்ரத்துல் காதிரியா அரபி கல்லூரி முதல்வர் எஸ்.கலந் தர் மஸ்தான் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு பேசி னார்.

விழாவில், கல்லூரி மேனே ஜிங் டிரஸ்டி அல்ஹாஜ் டாக் டர்.தைக்கா சுஐபு அலீம் கலந்து கொண்டு மாண வர்களுக்கு மவுலானா மவு லவி பட்டங்களை வழங்கி பேசினார். இதில் தைக்கா டிரஸ்டி அல்ஹாஜ் தைக்கா அகமது ஷாகீர், கீழக் கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி பேராசிரியர் எம்.ரபீக் அகமது, அல்மதரசத்துல் அரூ ஸிய்யா தைக்கா பேராசிரி யர்கள் கே.ஏ.முகைதீன் அப் துல் காதர், எச்.முகைதீன் அப்துல்காதர், எம்.ஐ.முகமது சுல்தான், எஸ்.எஸ்.சலாஹூ தீன் ரிபாயி ஆகியோர் வாழ்த்தி பேசினர். டிரஸ்டி, அல்ஹாஜ் தைக்கா முகமது அஷரப் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

கலந்து கொண்டோர்

விழாவில் சீதக்காதி அறக் கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புகாரி, இ.டி.ஏ. ஸ்டார் நிறுவனங்களின் நிர்வாகி ஷாக் கிர், உஸ்வத்துன் ஹசனா சங்க செயலாளர்எம்.கே.எம்.அசன் தம்பி, கே.வி.எம்.கïம், இஸ் லாமி பைத்துல்மால் -குத்பா கமிட்டி செயலாளர் மைதீன் தம்பி, டாக்டர்.செய்யது அப் துல்காதர், என்.டி.எம்.அகமது பாரூக், சா.கி.மு.ஹபீபு முக மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஹமீது சுல்த்தான் ஆலிம் அரூஸி உள்பட பல ருக்கு மவுலானா மவுலவி பட்டங்களும் மற்றும் அவர் கள் படித்த கல்வி படிப்புக் கான பட்டங்களும் வழங்கப் பட்டது. முடிவில் கல்லூரி முதல்வர் சலாகுதீன் ஆலிம் நன்றி கூறினார். கீழக்கரை மேலத்தெரு பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் எஸ்.ஏ.முக மது ஆரிப் ஆலிம் துஆ ஓதி னார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=416316&disdate=6/2/2008&advt=2

Thursday, April 10, 2008

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனமான இடிஏ அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் கீழக்கரையில் நிருபர்களிடம் கூறியதாவது :

வள்ளல் சீதக்காதி, உமறுப்புலவர் உட்பட பல புலவர்கள் வாழ்ந்து மறைந்த ஊர் கீழக்கரையாகும். போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் மற்றும் வீரத்தளபதிகள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பை விளக்கும் வகையில் ஒலி, ஒளி காட்சி பிரமாண்டமாக அமைக்கப்படும். பழமையை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம், கடல்வாழ் உயிரின கண்காட்சியகம், பழமையான கடல் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகமும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் வகையில் பிரமாண்ட திருமண மண்டபமும் கட்டப்படும்.

பல கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கான அறிக்கை வெஸ்ட் ஆசியா நிறுவனங்களின் இயக்குநர் அஹமது ரிபாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை, வரைபட பணிகள் நிறைவடைந்த பின்னர் வேலைகள் துவக்கப்படும். இதற்கான செலவை இடிஏ அஸ்கான் குழு நிறுவனங்கள், கீழக்கரை நலச் சங்கம் உள்ளிட்டவை ஏற்கும் என்றார்.

தகவல் :

கீழக்கரை ஹமீது யாசின்
ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர்
துபாய்

Sunday, March 9, 2008

பெண்கள் படித்தால் குடும்பம் பல்கலைகழகம் : பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி


பெண்கள் படித்தால் குடும்பம் பல்கலைகழகம் : பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி

கீழக்கரை: பெண்கள் படித்தால் குடும்பமே பல்கலை கழகமாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். கீழக்கரை தாசீம்பீவி அப் துல்காதர் பெண்கள் கல்லுõரி 17வது பட்டமளிப்பு விழா ஹசன்அலி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி வரவேற்றார். அமைச்சர் பொன் முடி பேசியதாவது: கல்லுõரிகளில் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது. விவசாய கல்லுõரிகளில் மாணவர்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். பெண்கள் படித்தால் குடும்பமே பல்கலை கழகமாகும். படிக்கிற போது சிந்தனை வளர்ச்சி பெறவேண்டும், மூடநம்பிக்கைகளுக்கு இடம் தரக்கூடாது. தமிழக முதல்வர் கருணாநிதி 11 தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இதன்மூலம் அடுத்த மூன்றாண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார். கல்லுõரி முதல்வர் சுமையா மாணவியர்களுக்கான உறுதி மொழியை வாசித்தார். அமைச்சர் தங்கவேலன், பவானி எம்.பி., பெண்கள் கல்லுõரி இயக்குனர் ஷெரீப்பா அஜீஸ், நகராட்சி தலைவர் பஷீர் அகமது, மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிசந்திர ராமவன்னி, சீதக்காதி டிரஸ்ட் பொது மேலாளர் ஜலால், துணை பொது மேலாளர் ஷேக்தாவூகான் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாவள்ளி(தில்லையேந்தல்) முருகேசன்(மாயாகுளம்) லட்சுமி(ரெகுநாதபுரம்) உட்பட பலர் பங்கேற்றனர். பல்கலை கழக அளவில் முதல் ராங்க் வாங்கிய முத்துமீனாட்சி, செய்யதா நஷீபா, அரிபாபேகம், நஜிராபானு உட்பட தரப்பட்டியலில் இடம் பெற்ற 19 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப் பட்டன. அலுவலக நிர்வாக அதிகாரி அஜீஸ்முகைதீன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Dear Hidayath, Assalamu Alaikum. How are you all? I have attended the Graduation ceremony of THASIM BEEVI ABDUL KADER COLLEGE FOR WOMEN at Keelakkarai on 8th March 2008. It was a very interesting event to see our own sisters excelling in all fields of education. I could see the visionary personality if BSA, the father of modern day Muslim education.

First, second and third ranks of MCA, first, second and third ranks of B.Sc.(Home Science), first,second and third ranks of B.Sc (Home science with computer application), first,second,fourth,fifth, sixth, seventh, eigth and nineth ranks of B.A.(English Literature), third rank of B.Sc(Mathematics) and third rank of B.Sc(Information Technology) were secured by fourteen Muslim sisters and five Hindu sisters. This is a great achievment for TBAK College for Women. They are securing many ranks of Alagappa University from year three of their opening. ALHAMDU LILLAAH. Give them a big clapping hand by posting this achievment in your daily postings. Regards. Najumudin.

najumudin@rediffmail.com

Thursday, February 14, 2008

கீழக்கரை கல்லூரி நிகழ்ச்சியில் துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவன மேலாண்மை இயக்குநர்



கீழக்க்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்த மாநில தடகள போட்டியை விளையாட்டு வீராங்கனை சைனி வில்சன் துவக்கி வைக்கிறார். அருகில் துபாய் ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தின் மேலாணமை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் மற்றும் பலர்.