Showing posts with label தொழுகை. Show all posts
Showing posts with label தொழுகை. Show all posts

Friday, August 6, 2010

திருக்குர்ஆனையும் தொழுகையையும் புரிந்துகொள்ளுங்கள் - எளிய வழியில்

திருக்குர்ஆனையும் தொழுகையையும் புரிந்துகொள்ளுங்கள் - எளிய வழியில்

From: Sheik Masthan
Date: 5 August 2010 4:23:43 PM GMT+04:00
To: Sheik Masthan
Subject: திருக்குர்ஆனையும் தொழுகையையும் புரிந்துகொள்ளுங்கள் - எளிய வழியில்
Reply-To: uqc_organizing_committee@googlegroups.com


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....


கீழ்கண்ட பயிற்சியினை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் சென்னையில்
தங்கள் பகுதியில் உள்ள ஸ்கூல்.காலேஜ்,பள்ளிவாசல் மற்றும் பொது இடத்தில் நடத்த விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்...
1. ஷேக் மஸ்தான் : 9841223553
2. அஹ்மது கபீர் : 9994176372


பயிற்சியின் விபரம்.....


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
உங்களில்; சிறந்தவர் குர்ஆனை தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்று கொடுப்பவரே
- நபிமொழி அறிவிப்பவர் : உதுமான் (ரழி) நூல் : புஹாரி.


குறுகிய கால பயிற்சி - தமிழில் (3 மணி நேரம்)


திருக்குர்ஆனையும், தொழுகையையும்
புரிந்து கொள்ளுங்கள் - எளிய வழியில், இன்ஷா அல்லாஹ்


குர்ஆனிலுள்ள திரும்ப திரும்ப வரும் 50 வார்த்தைகளை முழுக்க முழுக்க அர்த்தம் புரிந்து முற்றிலும் புதிய மற்றும் எளிய முறையில் கற்றுக்கொள்ள ஒரு அரிய சந்தர்ப்பம்.


இதில் கற்றுக்கொள்ளும் 50 வார்த்தைகளை தெளிவாக அறிவதன் மூலம் ஏறக்குறைய திருக்குர்ஆனிலுள்ள தோராயமாக 28,995 வார்த்தைகளை புரிந்து கொண்டு ஓத முடியும். திருக்குர்ஆனில் உள்ள மொத்தம் ஏறத்தாழ 78,000 வார்த்தைகளில், இது 35 சதவீதத்திற்கும் அதிகமான வார்த்தைகளாகும்.




• மல்டி மீடியா திரை மூலம் பாடம் கற்பித்தல்
• 12 வயதுக்கு மேற்பட்டவர்க்கு மட்டும்
• குர்ஆன் ஓத தெரிந்து இருத்தல் போதுமானது




குறுகிய காலப் பயிற்சிகளின் நோக்கம்:


திருக்குர்ஆன்,


1. கற்க எளிதானது என்பதை உணர்த்துதல்.
2. அதைப் புரிந்துகொண்டு திரும்பத் திரும்ப ஓத ஊக்குவித்தல்.
3. அதனுடன் உறவாட, அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த உதவுதல்.
மேலும்,
4. தொழுகையை அர்த்தம் அறிந்தவராய் தொழுதல்.
5. குழு உணர்வைத் தோற்றுவித்தல்.




PLEASE FORWARD TO ALL YOUR FRIENDS AND RELATIVES.....


A short course on
Begin to "UNDERSTAND QURAN AND SALAH - The Easy Way" in Tamil 3Hrs…

Following are the brief details about the programme :
Qualification : The participant should know to read Quran and Tamil Language
Understand Quran and Salah - The Easy Way in Tamil for 3 hours through Power Point Presentation and it covers in Total 8 Lessons - Each Lesson will be conducted for 20 minutes and contents are as follows:

1. Surah Al Fathiha and Al Asr, some hadees and Duas from our Daily Prayers with word to word translation.
2. Some Grammar thru TPI method (Total Physical Interaction)
3. Motivational & Educational Tips to memorize, remember, etc...
4. 50 Arabic words will be taught with translation and examples. That 50 words repeat in quran more than 27,500 times, it means more than 35% of the words in quran (total words in quran approx. 78,000)
5. Test paper (Objective type Questions) will be given at end of the course to make sure that the participants learnt these 50 words thoroughly.



9Hrs Course...


Assalam alaikum wa rahmatullah

OVERALL objectives of this program are as follows:
1. Bring Islamic brothers to interact with the QURAN (recite, understand, follow).
2. Teach 100 words & basic Grammar in these program through what they recite everyday and through easy grammar techniques. (50% coverage of words of the Qur'an; not the Qur'an itself).
3. Grouping the participants under some Learned Peoples to clear their doubts and to continue their learning
4. Teach another 250 words within two months (through additional recommended recitations) & some more Grammar thru email and conducting 25 hours of additional teaching at suitable intervals at Chennai. At the end of this course, a student is familiar with 70% of the words (not 70% of the Qur'an). So, in each line, only two unknown words (on the average) remain.
5. Teach the Quran from Al-Fatihah till An-Naas in 165 hours or at least guide the people how to learn it from first to last.
(A practical alternative for people can be having a 3 hour session every weekend, where they can complete half para easily; after completing the above steps. In 60 weeks, the Qur'an can then be completed from Al-Fatihah till An-Naas).
Please note that a total of 200 teaching hours are required for basic understanding of the Qur'an. The remaining 30% of the words are learnt in this process, i.e., in Step 5, automatically. The list of these words can be provided but it really does not help because a person can not memorize from lists or does not learn a language from a dictionary!.
The objectives of the short course are (as given in the slides):
1. Convince that Qur'an is easy to learn
2. Encourage to recite Qur'an again and again with understanding
3. Help in interacting with the Qur'an (to bring it into our lives)
4. To pray Salah effectively
5. To generate the team spirit to work for Islamic cause (Muslim as well as humanity cause)


Jazakallah
Sheik Masthan
9841223553

Sunday, July 19, 2009

சூரிய, சந்திர‌ கிரகண தொழுகைகள்:

சூரிய, சந்திர‌ கிரகண தொழுகைகள்:

(வரும் July 22 2009 துபாயில் சூரிய கிரஹண நேரம் காலை y 5:43 - 5:48;
இந்தியாவில் சூரிய கிரஹண நேரம் காலை J5:31 - 7:25 )

விரிந்து பரந்த இப்பிரபஞ்சமெனும் புத்தகத்தின் எந்தப் பக்கத்திலும் அதை உருவாக்கியவனின் பெயர் எழுதி வைக்கப் படவில்லை. ஆனால் பிரபஞ்ச புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்பதைப் பறைசாற்றுகின்றன! அப்படைப்பாளனின் வல்லமைகள், குணநலன்கள் குறித்த தேவையான விபரங்களை அப்புத்தகத்தின் வாக்கியங்கள் நமக்குக் கற்றுத் தருகின்றன

இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன். (7:54)

இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. (21:33)

சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:05)

நபியவர்களது காலத்தில் (அவர்களது மகனான) இப்றாஹீம் மரணித்த தினத்தன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களெல்லாம் அது இப்றாஹீமின் மரணத்தினாலே ஏற்பட்பது என்று பேசிக்கொண்டனர். (இதனைக்கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சூரியனும் சந்திரனும் யாருடைய இறப்பிற்கும் மறைவது கிடையாது நீங்கள்(அதனைக்) கண்டால் தொழுங்கள் மேலும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை புரியுங்கள் எனக் கூறினார்கள் (புஹாரி)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து ‘முஹம்மதின் சமுதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்’ என்றும் குறிப்பிட்டார்கள். புஹாரி: 1044 ஆயிஷா (ரலி)


சூரிய கிரகண தொழுகை:

கிரஹண சமயத்தில் 2 ரக்அத் நஃபில் தொழுவது சுன்னத். இதற்கு ஸலாத்துல் குஷூஃப் என்று சொல்லப்படும். இந்த தொழுகையை பாங்கு, இகாமத் இல்லாமல் ஜமாஅத்தோடு தொழ வேண்டும்.

இந்த நேரத்தில் நாம் செய்யவேண்டியது:

அதிகமாக துஆ செய்வது
பாவங்களை நினைத்து, வருந்தி, அஞ்சுவது
சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று அதிகமாக ஓதுவது
இஸ்திஃக்ஃபார் அதிகமாக செய்வது
தர்மம் செய்வது

சந்திர கிரஹண தொழுகை:

சந்திர கிரஹண நேரத்தில் 2 ரகஅத் நஃபில் (ஸலாத்துல் ஃகுஷூஃப்) தொழுவது சுன்னத்தாகும். இந்த தொழுகை ஜமாஅத் இல்லாமல் தனித்தனியாக தொழவேண்டும்.

சூரிய கிரகணம் பற்றிய‌ முழு விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.


http://www.shadowandsubstance.com/

தகவல் உதவி :

gafoorhasani@gmail.com

Sunday, July 5, 2009

இரவு எட்டே முக்காலுக்கு மஃரிப் தொழுகை...! - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

இரவு எட்டே முக்காலுக்கு ம்ஃரிப் தொழுகை...! - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளிகிழமை மாலை நியூ யோர்க்கிலிருந்து விமானத்தில் சின்சினாட்டி புறப்பட்டேன். அந்த நள்ளிரவில்
வேந்தன் ஐயா எனக்காக விமான நிலையத்தில் காத்திருந்தார். மறுநாள் காலை அவரே பத்து மணி நேரம்
காரை ஓட்டி நயாகரா நீர் வீழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்றார். நயாகரா மறக்க முடியாத அனுபவம்.
அதைவிட வேந்தன் ஐயாவின் அன்பு.

மறுநாள் இரவு சின்சினாட்டி திரும்பி, திங்கள் முற்பகல் இந்தியானாபொலிஸ் வரை வந்து என் உறவினர்
ஃபைசல் வசிக்கும் ஸ்ப்ரிங்ஃபீல்டுக்கு பேருந்து ஏற்றி விட்டார். இரவு எட்டரை மணிக்கு அங்கு சென்றடைந்தேன். வரவெற்ற ஃபைசல் போகும் வழியில்தான் பள்ளி தொழுதுவிட்டுப் போய் விடலாம் என்றார்.

விசாலமான் ஒரு வளாகத்தில் அழகான பள்ளி. புதியவர்கள் யாரும் எளிதில் உள் நுழைந்து விட முடியாது.
குறிப்பிட்ட ச்ங்கேத எண்ணை அழுத்தினால்தான் கதவே திறக்கும். ஃபைசல் அங்கு உறுப்பினர். ஆகவே
எந்தச்சிரமமும் எனக்கு இருக்கவில்லை.

உள்ளெ நுழைந்தபோது தொழுகை ஆரம்பமாகவிருந்தது. இரவுத் தொழுகைக்கான சங்கல்பத்தைச் செய்து
கொண்டு தொழ ஆரம்பித்தேன். பிறகுதான் அது சாயுங்காலத் தொழுகை என்று தெரிய வந்தது. ஆக, மீண்டும்
ஒரு முறை சாயுங்காலத் தொழுகை, இரவுத் தொழுகை, பள்ளிக்கான காணிக்கைத் தொழுகை ஆகியவற்றை
நிறைவேற்றி முடித்தேன்.

அந்தப் பள்ளியில் அதிகாலைத் தொழுகை, மதியத் தொழுகை, மாலைத் தொழுகை எல்லாம் நம்மூர்
போலவே உரிய காலங்களில் நடைபெறுகின்றன. சாயுங்காலத் தொழுகை மட்டும், சூரியன் 8.40 க்கு
அஸ்தமிப்பதால் 8.45 க்கு நடைபெறுகிறது. இரவுத் தொழுகை பத்துமணிக்குப் பிறகு நடைபெறுகிறது.

ஃபைசல் வீட்டுக்கும் பள்ளிக்கும் ஐந்து மைல்கள்.(அமெரிக்காவில் இன்னும் மைல் கணக்குத்தான்...!)
பக்கத்து வீட்டில் ஹைதராபாதைச் செர்ந்த நண்பர் இம்ரான். இருவரும் மாலை அலுவல் முடிந்து வீடு
வருகிறார்கள். பிறகு இருவரும் சேர்ந்தே காரில் பள்ளி செல்கிறார்கள். சாயுங்காலத் தொழுகைக்குப்பிறகு
கடைகளுக்குச் சென்று தேவைப்பட்ட சாமான்களை வாங்கி விட்டு இரவுத் தொழுகையையும் முடித்து
விட்டு வீடு வருவதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்களுக்கெனெ தனிப்பகுதி இருப்பதால் பலர் குடும்பத்துடனேயே வருகிறார்கள். நேரத்தைக் கணக்குப்
பார்த்து ஓடிக்கொண்டே இருக்கும் அந்த மக்களுக்கு இந்த ஒன்று கூடலும் சந்திப்பும் ஒரு மிகப் பெரிய
ஆறுதல். அத்துடன் தொழுகையும் நிறைவேறி விடுகிறது.

__._,_.___

Wednesday, April 1, 2009

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

சகோதரர்களே...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..

அண்மையில், சென்னையிலுள்ள ஒரு பள்ளிவாசலில்
கண்ட அறிவிப்பைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

இதுபோன்ற நல்ல அறிவிப்புகளை / நடைமுறைகளை /
சிறப்பான பயனுள்ள வசதிகளைக் காணும் போது
அவற்றை இஸ்லாமியக் குழுமங்கள் மூலம் பகிர்ந்து
கொண்டால் மற்ற ஊர்களிலும்
(விருப்பமானால்) அவற்றை நடைமுறைப்படுத்த
உதவியாக இருக்குமே.


===================================

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

படைத்த நாயனிடம் "தொழுகை" மூலம்
தொடர்பு கொள்ளப் பள்ளிக்கு வந்தபின்
படைப்பினங்களிடம் "செல்போன்" மூலம்
தொடர்பு கொள்வதைத் தவிர்க்கலாமே!

===================================


மிக்க அன்புடன்,
JM





.
.
jamalminjamal@gmail.com

Thursday, February 5, 2009

ஒளுவும்; தொழுகையும்" பாடம்

ஒளுவும்; தொழுகையும்" பாடம்

தூயோனைத் தொழ நாடும் போழ்து
தூயதோர் அமல் "ஒளு" என்பது
" பிஸ்மில்லாஹ்" என்னும் திருமந்திரம்
துவக்கமாய்க் ஓதி
உள்ளங்கைகளால் நீரைக் கோதி;
உள்ளத்துள்:"ஒளு செய்கின்ற"எண்ணதுடன்
உதடுகளால் "கலிமா"வை விளம்பு:
கைகளை நன்றாக அலம்பு

நாக்கு வழி; அதனால்
அச்சரச் சுத்தமாய்
உச்சரிக்கும் இறைவசனம் -உன்
நாக்கு வழி....!!

பல் விலக்கு; அதனால்
பல நோய்கட்கு விலக்கு
நாசி துவாரத்தில்
தூசிகள் போக்கிட
நீர் செலுத்திக் கொண்டே
வாய்க் கொப்பளி

முகத்தை கழுவு முழுவதுமாய்;
முகமொளிரும் முழுநிலவாய்..
கையால் நீரேந்தி
முழங்கை வரை அந்நீரை ஓட விடு;
புழங்கிய பாவங்கள் ஓடி விடும்..!

தலையை நீரால் வாரிவிடு;
தலையில் உட்கார்ந்துள்ள
ஷைத்தானின் கால்களை வாரிவிடும்..!
புறச்செவிகட்கும் சிறிதளவு நீரைக் கொடுத்து விடு;
புறம்பேச்சுக்கள் செவிக்குள் வாராது தடுத்து விடும்..!

கரண்டை வரை கால்கள்
இரண்டையும் கழுவி விடு;
விரண்டோடிடுவான்
விரட்டப்பட்ட ஷைத்தான்..!!!

இறைவன் கட்டளைப்படியே "ஒளு"
நிறைவேற்றிவிட்ட நிம்மதியுடனே..

தொழுகை:

தொழுகையை நாடு;
தூய்மையான இடம் தேடு.....

"குறிப்பிட்ட நேரத்தின்
குறிப்பிட்ட தொடர்புத் தொழுகையை
குறிப்பான "கிப்லா"வின் திசை நோக்கி
அல்லாஹ்வைத் தொழுவதாய்..."
"நிய்யத்" என்னும் எண்ணத்தை
நிர்ணயித்துக் கொண்டு,
"அல்லாஹு அக்பர்" என்றே
கைகளை உயர்த்தி விடு

"இறைவனே பெரியவன்" என்று படி;
சரணடைவதில் இதுவே முதற்படி

நெஞ்சில் கைவைத்து;
அஞ்சி தலை தாழ்த்தி;
அஞ்சலை அனுப்பு
"அல்-fபாத்திஹா" வரிகளில்
"ஆமீன்" முத்திரைப் பதித்து
கொஞ்சம் ஒதிடு இறை வசனம்;
கெஞ்சும் குரலோடு உன் வதனம்..

"அல்லாஹு அக்பர்" என்றே
பணிந்து போகும் எண்ணத்தில்
குனிந்து முட்டுகளில் கைகள் படுக
"தூயோனவனே புகழுக்குரியோன்"
வாயால் வாழ்த்து பாடுக

"அவனைப் புகழ்வதை கேட்பவன்
அவனே" என்று சொல்லிய வண்ணம்
தலை நிமிர்ந்து
நிலைக்கு வந்து விடு

"அல்லாஹு அக்பர்" என்றே கூறி

முற்றிலுமாக அவனுக்கேச் சரணடைய
நெற்றியினைத் தரை மீது வைத்து
வெற்றி என்னும் புதையல்
பெற்றிடும் பேறு பெறுக;
அரும்பின் தேனைச் சுவைத்திட
விரும்பி மலருக்குள்
சுருண்டு கிடக்கும்
"சுரும்பு" என்னும் வண்டினைப் போல்..
இறைவனோடு நெருக்கமான அந்த நேரம்;
இறங்கிவிடும் உன் மனதின் பாரம்.....!!!!

"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
சிறியதோர் இருப்பிலமர்ந்து
பிரியமான அவனிடம்
பிரியத்துடன் கேள்:
"மன்னிபு;இரக்கம்;
மண்ணில் வாழும் வரை இரணம்"

"அல்லாஹு அக்பர்" என்றே கூறி
மீண்டுமொரு முறை
"சுஜூது"வின் சுகமேப்
பெற்றிடவே ஆவலுடன்
நெற்றியினைத் தரையில் வைத்து
"தூயோனேப் புகழுக்குரியோன்" என்றுரைத்து
முதல் நிலையை முடித்த நிலையில்..

இரண்டாம் நிலைகு வரும் பொழுதும்
"அல்லாஹு அக்பர்" என்றே சொல்லு
அடுத்த நிலையில் நில்லு.


இப்படியாக எத்தனை "ரகத்"(நிலைகள்)
இறைவனோடு தொடர்பு தொழுகை என்று
துவக்கத்தில் "நிய்யத்"வைத்தாயோ
அதன் எண்ணிகை முடியும்
இறுதி நிலையாம்
"தஷ்ஹுத்" இருப்பில் அமருக
இறைவனும்; இறுதி நபி(ஸல்)யும்

நிறைவுடனே "மிராஜ்"ல்
நிகழ்த்திய நேர்முக உரையாடலென உணர்க..
மகிழ்வுடனே மாநபி(ஸல்) மற்றும்
இபுராஹிம்(அலை);மூமீன்கள் யாவர்க்கும்
இனிய ஸலாம் படித்து விடு;
இனிதாய் தொழுகை முடித்து விடு.

ஓர் அதிசயச்செய்தி:

நீர் பட்டால் துருவாகும்
நிலத்திலுள்ள பொருள் யாவும்; ஆனால்........
"ஒளு"ச் செய்யும் நீர்
உள்ளத்து "துரு" நீக்கும்.....!!!!!!!!!!!!!

இறுதியாக ஓர் ஆனந்தச் செய்தி:

யோகாசனம் போதிக்கும்
ஆசான்கள் யாவரும்
படம் போட்டு
பாடம் நடத்தும் போழ்து
சொல்லிவிடும் ஓர் உண்மைச் செய்தி:
"முஸ்லிம்கள் தொழுகையின்
இறுதியிருப்பில் அமர்ந்திருப்பது போல்.." என்ற
அச்செய்தியினைப் படித்தேன்:
"அல்லாஹ் நமக்கு அருளிய
முழுமையான ஒர் அமல்
தொழுகையின் நிலைகளே.. ஆஹா
பரிபூரணமான யோகா..-என்றே
உரியோனிடம் நன்றி கூறி
மகிழ்ந்தேன்; "தீன்" என்னும்
தேனைச் சுவைத்தேன்...

அன்பான் குழந்தாய்..!
அன்போடு அழைத்தேன்
-"தீன்" என்னும்
தேனைச் சுவைத்திடு
தெரியாமல் உள்ளோரை அழைத்திடு

-என்றும் அன்பு படர்ந்த
இதயமுடன்

-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்

00971-50-8351499
shaickkalam@yahoo.com

Monday, October 13, 2008

கீழக்கரையில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

கீழக்கரையில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

09.12.2008 செவ்வாய் கிழமை அன்று காலை 8 மணிக்கு கீழக்கரை , நடுத்தெரு ஜும்ஆ
மஸ்ஜிதில் டவுன் காஜி அல்ஹாஜ் .எம்.எம் .காதர் பக்ஷ் ஹுசைன் ஸித்தீக்கீ ஹஜ்ஜுப்பெருநாள்
தொழுகை நடத்தினார்


நடுத்தெரு ஜும்ஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவி அஸ்மத் ஹுசைன் மன்பஈ பெருநாள் குத்பா உரையை
நிகழ்த்தினார் கீழக்கரை வழக்கப்படி அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்கள் மஹல்லாக்களிலிருந்து
தக்பீர் முழக்கத்துடன் ஊர்வலமாக ஜும்ஆ மஸ்ஜித் சென்று ஒன்று கூடி பெருநாள் குத்பா
நிறைவுக்குப்பின்னர் தக்பீர் முழக்கத்துடன் ஊர்வலமாக ஜமாஅத்துகளுக்கு திரும்பினர்

Monday, July 21, 2008

குர்ஆனையும், தொழுகையையும் புரிந்து கொள்ளுங்கள் - எளிய வழியில் (UNDERSTAND QURAN, SALAH - THE EASY WAY) IN TAMIL

ரியாத்தில் திருக்குர்ஆனை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு

ரியாத்தில் திருக்குர் ஆன் மற்றும் தொழுகையை புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சி ரியாத்தில் ரெயில் வணிக மையத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை.


மேலதிக விபரம் பெற மௌலவி இப்ராஹிம் IBRAHIM – 055 7779305 / 01 2048163


INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE "UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY" ON 1ST AUGUST, 2008.

THE DETAILS ARE AS FOLLOWS ::

FREE COURSE

DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.
LOCATION MAP IS ENCLOSED HEREWITH FOR YOUR REF.
TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)
CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163




DEAR BROTHERS IN ISLAM,

ASSALAAMU ALAIKKUM (VARAH)

BY THE GRACE OF ALMIGHTY ALLAH, THERE WAS A FIRST SESSION OF “UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY” SUCCESSFULLY COMPLETED ON LAST FRIDAY 18TH JULY, 2008. THE PARTICIPANTS OF THE PROGRAM HAD GIVEN THEIR UTMOST COOPERATION IN ATTENDING THE COURSE AND SHOWN MUCH INTEREST TO LEARN THE MEANINGS OF 100 WORDS, WHICH REPEAT IN QURAN APPROX. 40,000 TIMES, WHICH COVER ALMOST 50% OF AROUND 78,000 WORDS IN TOTAL QURAN. THIS COURSE MOTIVATES THE PARTICIPANTS TO READ QURAN REPEATEDLY WITH UNDERSTANDING, PRACTICE AND PROPOGATE AS PER QURAN’S INSTRUCTION.

INSHA ALLAH, WE HAVE PLANNED TO START OUR SECOND SESSION OF THE SAME COURSE “UNDERSTAND QURAN & SALAH – THE EASY WAY” ON 1ST AUGUST, 2008. THE DETAILS ARE AS FOLLOWS ::
FREE COURSE

DATE : 1, 8, 15, 22 & 29 AUGUST 2008 (ON FRIDAYS)
TIME : 4.00 PM TO 6.00 PM – 2 HOURS PER WEEK (5 WEEKS = 10 HRS)
PLACE : RAIL BUSINESS CENTRE, FIRST FLOOR, ROOM NO.117,
RAIL STREET (OLD ALKHARJ ROAD, BEFORE SLEEP HIGH SHOW ROOM), RIYADH.


TOTAL SEATS - 20 NOS. (SEATS WILL BE ALLOTTED ON FIRST COME, FIRST SERVE BASIS)

CONTACT : MOULAVI IBRAHIM – 055 7779305 / 01 2048163

PARTICIPANTS ALREADY REGISTERED ::
1. ARIFF MARICAR - 0506472527
2. ABDUL KHADER SANGAM - 0502846990
3. AHMED AKBAR – 0509939062
4. MOHAMED SHERIFF – 0556034493
PLS BOOK EARLY TO AVAIL THE OPPORTUNITY.

Ghazali MBM.

ghazali@zeeteexpress.com

Thursday, June 12, 2008

IMPORTANCE OF FRIDAY

IMPORTANCE OF FRIDAY


Every Muslim should prepare for Jum'ah from Thursday. After Asr on
Thursday one should increasingly read Istighfaar etc. That person
shall obtain the most benefit of Jum'ah who awaits it and prepares for it
from Thursday.

Rasulallah ( S.A.W. ) has said : " The best day of the week that
the sun rises on, is the day of Jum'ah." The night of Jum'ah (the night
between Thursday and Friday ) is more blessed and the day of Jum'ah is
most blessed.

Friday is the best among all days.
Friday is an Eid for the Believers.
Adam (R.A.) was created on Friday,
He was granted entrance into Jannah on Friday,
He was descend into Earth on Friday,
He died on Friday, Qiyaamah will also take place on Friday.
Amongs the seven days of the week, Friday is the day when Allah's
Special mercies are granted. It is a day of gathering for the
Muslims and rewards are increased. Many great events took place on this
day, and yet take place.

Hazrat Abu Saeed kh u dri ( R.A. ) says that the Rasulallah ( S.A.W.) has said that :
" Whoever recite Suratul-Kahf on Friday (the night between Thursday and Friday) enjoys the illumination between two Fridays." (Nasai) Hazrat Abdullah Bin Umar ( R.A. ) says that the Rasulallah ( S.A.W. ) has said that: " Whoever recites Suratul-Kahf on Friday, will enjoy
a light shining from his feet to the heaven and will have his sins forgiven committed between the two Fridays." ( Ibn Marduya ).

It is reported from Hazrat Abu Huraira ( R.A. ) that Rasulallah (
S.A.W.)has said that : " Whoever recites Suratul-Ham- Mim Dukhan on
Friday, (the night between Thursday and Friday ) enjoys the prayer of
70,000 angels for his forgiveness and gets all sins forgiven." ( Tirmizi ).
Hazrat Abdulla Bin Abbas ( R.A. ) says that Rasulallah ( S.A.W. )
has said That : " Whoever recites Suratul-Aale Imran on Friday, angels
enjoy the divine shower of salutation on him till sunset." ( Tibrani ).
Al Isbahaani reports from Ibn Abbas ( R.A. ) that Rasulallah (
S.A.W.)said : " The one who performs 2 raka'at after Maghrib on Friday
night (the night between Thursday and Friday ) and reads in every
rakaat once Suratul-Al Fatiha and Suratul Zilzaal ( Iza zul zilatil Ardhu )
15 times,Allah will ease for him the Sakaraat of Death ( the moment of
death ) and will save him from the punishment of the grave and make
easy for him the crossing of the Siraat.
Hazrat Abu Amama ( R.A. ) says that the Rasulallah ( S.A.W. ) has
said that : " The bath of Friday, pull out every sin of the man from
its root.( Tibrani ) Hazrat Abu Huraira ( R.A. ) says that the Rasulallah ( S.A.W. ) has
said that : " whoever goes out for Friday prayer after making proper
ablution and listen to the sermon quietly sitting, get all his sins
forgiven not only from one Friday to the next, but also the sins of three days
more."(Muslim ) Hazrat Abdullah Bin Masud ( R.A. ) reports that Rasulallah ( S.A.W.
) had said : " The order of sitting before Allah will be just as order of attendance on Friday. Whoever comes first in mosque on Friday will have his seat nearest to Allah, the second one will have the second seat and third one will have the third seat and fourth one will also not be very far from Allah." ( Ibn Maaja )

After the Jum'ah Salaat read as follows :
Suratul-Fatiha 7 times,
Suratul-Iklaas 7 times,
Suratul-Falaq 7 times,
Suratul-Naas 7 times.
Allah said, "If you are ashamed of me, I will be ashamed of you."

I f you are not ashamed, send this message...only if you believe.
"Yes, I love Allah. Allah is my fountain of Life and My Saviour.
Allah keeps me going day and night. Without Allah, I am no one. But
with Allah, I can do everything. Allah is my strength."
This is a simple test. If you love Allah and you are not ashamed of
all the great things that he has done for you, send this to everyone
you know, and the person that sent it to you.
May Allah help u to succeed...Ameen