Saturday, February 7, 2009

சவுதிக்கான இந்திய தூதருக்கு பாராட்டு விழா

சவுதிக்கான இந்திய தூதருக்கு பாராட்டு விழா

சவூதி அரேபியாவில் நடைப்பெற்ற சவூதி தமிழ்ச்சங்க விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்துக்கொண்டனர்.

வியாழனன்று (05.02.2009) இரவு 08:30 மணிக்கு ஜித்தாவில் உள்ள இந்திய பன்னாட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் மேதகு. எம். ஒ. ஹெச். பாரூக் மரைக்கார் அவர்களின் சீரிய பணிகளை பாராட்டி சவூதி தமிழ்ச்சங்கம் சார்பில் விழா நடத்தப்பட்டது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியை திரு. ராபியா தொகுத்து வழங்கினார். திரு. ஜைனுலாபிதீன் வரவேற்புரை வழங்கினார். திரு. லியாகத் அலி, திரு. ஒ. பி. ஆர். குட்டி, திரு. அக்பர் பாட்சா, திரு. அப்துல் பத்தாஹ், டாக்டர். ரபிக், சவுதிக்கான இலங்கை இணைத் தூதர் மேதகு அப்துல் லத்திப் லாபிர், மற்றும் சவூதி தமிழ்ச்சங்கத் தலைவர் திரு. அப்துல் மாலிக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் "அயலகத்தில் தமிழர்கள் சிறப்பதற்கு பெரிதும் காரணம் - கல்வியே! கடமையே!! கண்ணியமே!!!" என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடைப்பெற்றது.

நடுவராக திரு. குணசேகரன் பங்கேற்க, கல்வியே என்ற அணியில் டாக்டர். ஜெயஸ்ரீ மற்றும் திரு. ராமசந்திரன்; கடமையே என்ற அணியில் திரு. பீர் முஹம்மது மற்றும் திருமதி. ராபத்; கண்ணியமே என்ற அணியில் திருமதி. மைதிலி மற்றும் திரு செய்யது ராஜா ஆகியோர் பங்கு பெற்றனர்.

பட்டி மன்ற நடுவர் தனது தீர்ப்பில், இந்த மூன்று தலைப்புக்கும் தீர்ப்புக் கூற நம் தூதர் ஐயா தான் பொருத்தமானவர் என்று அவர்களின் முடிவிக்கே விட்டுவிட்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் திரு. அப்துல் சலாம் நன்றியுரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்குப்பின், இரவு விருந்துக்கு விழாக் குழுவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இந்த விழாவில் ஜெத்தா தமிழ் சங்கம், தஃபாரஜ்-ஜெத்தா மற்றும் கிரிட் ஆகிய அமைப்புகள் பங்கேற்றன .

செய்தி:
மு. இ. முஹம்மது இபுறாஹீம் மரைக்கார் ஜெத்தா, சவூதி அரேபியா

________________________________________________________________________
இந்த நிகழ்ச்சியின் பொது, சவூதி தமிழ்சங்கத் தலைவர் திரு. அப்துல் மாலிக் அவர்கள் திரு. எம். ஒ. ஹெச். பாரூக் மரைக்கார் அவர்களுக்கு புகழ்மாலை சூட்டிய கவிதை:
ஆதவன் அச்சுறுத்தலில் அன்றாடம்
அல்லுலுற்று அழும் பாலைவனம்
அன்று பலப்பலப்போடு பளிச்சிட்டது!
காலை முதல் மாலை வரை
அலட்டிய ஆட்சி அழிந்தது
அடிமைப்பட்ட அவலமும் ஒழிந்ததென
பூரித்தது பாலைவனம்!
ஏனெனில் ...
அதன் படுகையில்
பெருமை மிகு புதுவையின்
புகழ் மிக்க ஐயா அவர்கள் !!
கொடியவன் கதிரவன்
கலக்கமுற்று கதறினான்
வையகத்து விடிவெள்ளி
வந்துவிட்டதே இங்குமென்று !
உங்கள் வருகை
வறண்ட இவ்வனத்துக்கு
மட்டுமல்ல
இருண்டிருந்த இந்திய
இதயங்களுக்கும் இதமளித்ததையா ...!
தாய் திருதேசத்தின்
தலை மகனாய்
இந்திய மக்களுக்கு
அரணாய்
எங்களனைவருக்கும்
வரமாய்
இந்நாட்டையும், எம்நாட்டையும்
இணைக்கும் பாலமாய்
உறவை வளர்க்கும்
உண்ணத தூதராய் வந்த
தங்களின் வருகையால்
தமிழனின் தனித்துவம்
தலைத்தூக்கியது!
தன்மானம் தழைத்தது!!
பண்பால், பாசத்தால்
பரிவால், பதவியால்
உள்ளத்தால், உரையாடலால்
உயர்ந்து விளங்கும்
ஐயா அவர்களே!
சாதனைப் படைப்பதும்
அதைச் செவ்வனே செய்து
சரித்திரம் பதிப்பதும்
தங்களின் சிறப்பாயிற்றே !
புகழும், புதுமையும்
விரல் வைத்து
வியக்கும் வண்ணம்
மேதகு தூதராய்
இரு நாட்டவரும்
பெருமைப்பட, பெருமிதமுற
தாங்களாற்றிய அரும்பணிகள்
பற்பல !
இந்திய மண்ணின் உயர்வை
தாய் மொழியின் வல்லமையை
வானுற வளர்த்திட்ட
தாங்கள் மென்மேலும்
நலத்தோடும், வளத்தோடும்
புகழோடும், வாழ்ந்து
வெற்றிகள் படைக்க
வேண்டுகிறேன் வல்லவனை!
தமிழ் உறவுகளே!
வியக்க வேண்டாம்...!!
சஞ்சலமில்லா வாழ்வில்
சுகத்தை தந்து
அவ்வப்போது
சோகத்தையும் சுமந்து
அச்சோகத்திலும் ஒரு
சுகத்தையும் ஈந்து
சிறுகதைகள் சிந்திய
என் பேனா முனையில்
இப்போது
கவிதைகளையும் சிதரச்செய்த
நீ சிறப்புற வேண்டும் !
வல்லவனே!
வையகத்தில் வாழ்ந்து
உன்னை வாழ்த்தி
என்றென்றும் வழிப்பட
வாய்ப்பளிப்பாயாக - இறைவனே
இறைஞ்சுகிறேன் - இருகரமேந்தி
உன்னை!!

Shamrock Journeys, New Delhi

Greetings from all of us at Shamrock Journeys….

Benchmarking: Destination Attractiveness and Hospitality Business Performance
We are a professionally managed company which started in the year 1999 and backed by a diligent and pro-active team of professionals, holding sound experience, helping us to confidently meet every challenge that comes our way and leaving no room for any customer grievances.
We have achieved the reputation of the leading tour operators in India by rendering the best travel related services for various kinds of groups and individuals.
We cover all the Indian destinations and provide services for our precious clients according to their desire, demand, special need and interest. Consumers also benefit through clearer indication of the service likely to be offered, so that their service expectations are more likely to correspond with our performances, and their satisfaction with the destination to be increased by observing our hospitality.
Special care and remarkable homely hospitality make our clients always with us.
Visit us - www.shamrockjourneys.com
Looking forward to give you the best services.
Regards,
SHAHID ALI KHAN
Shamrock Journeys(P)Ltd.
Accredited & Associated with IATO, ITOPC, ADTOI
Recognized by Ministry of Tourism - Govt. of India

Regd. Address:
Shamrock Journeys (P) Ltd.
108, R.B.House
Hzt.Nizamuddin West
New Delhi – 110 013 (INDIA)
Tel: +91-11- 41827651 / 41827817 / 24355735 Fax: +91-11- 41827919, Cell: + 91-9811091230

தமிழ் முஸ்லிம் நூலகம்

அன்புச் சகோதரர் இராஜகிரி கஸ்ஸாலி அவர்களின் நூலகங்கள் குறித்த கட்டுரை நம் சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளது. குறிப்பாக மின்னூலாக்கம் குறித்து கட்டுரையாளரின் ஆதங்கம் நியாயமானது.

இந்த வகையில் எமது புதிய முயற்சியாக இணையத்தில் கிடைக்கும் இஸ்லாமிய நூல்கள் அனைத்தையும் ஓரிடத்தில் வாசிக்க வசதியாக தமி்ழ் முஸ்லிம் நூலகம் என்னும் பெயரில் தனியொரு வலைப்பதிவு தொடங்கியுள்ளோம்.

இணையத்தில் காணும் இஸ்லாமிய நூல்கள் பற்றிய விபரங்களை சகோதார்கள் எமக்கு தெரிவித்தால் நன்றியுடன் எமது பதிவில் வெளியிடுகிறோம். நீங்கள் எழுதிய இஸ்லாமிய நூல்களை இணையத்தில் வெளியிட விரும்பினால் தொடர்பு கொள்ளவும்.
நூலகத்தை பார்வையிட இங்கே கிளிக்கவும்
தமிழ் முஸ்லிம் நூலகம்

http://tamilmuslimlibrary.blogspot.com/

தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்
masdooka@hotmail.com





Date: Mon, 2 Feb 2009 00:47:49 -0800
From: gazzalie@yahoo.com
Subject: லட்சிய இஸ்லாமிய இளைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள்....
To: imantimes@googlegroups.com





அறிவு தளத்திலே களமிறங்கி இருக்கும் லட்சிய இஸ்லாமிய இளைஞர்களுக்கு எமது வாழ்த்துக்கள்....

நாம் களமிறங்க வேண்டியவை நிறைய இருகிறது நண்பர்களே. ஒன்றை மட்டும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் இஸ்லாமிய சமுகத்தில் வெளியான புத்தகங்கள் ( திருகுரான் உள்பட வெறும் பத்து நூல்கள் மட்டுமே மின்னூலாக்கம் செய்ய பட்டு இருக்கிறது) பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை மின் புத்தகங்களாக மாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நம்மை போன்ற இளைஞர்களுக்கு உள்ளது. எனவே தாங்கள் அத்தைகய விசயங்களிலும் மிக தீவிர கவனம் செலுத்த வேண்டுமாறு கேட்டு கொள்கிறேன்.

நாம் செய்ய தவறினால் வருங்கால தலைமுறை நம்மை மன்னிக்காது அன்பு நண்பர்களே!!!

நீங்கள் அனைவரும் களமிறங்குங்கள்!

உலகிற்கு உன்னதமான வரலாற்றை சொல்லி தந்த சமுதாயம் நாம்!

நேற்று வரை உறங்கி விட்டோம்!
இனி தீயாக புறப்படுவோம்!!

வாஞ்சையுடன்....
ராஜகிரி கஸ்ஸாலி

கோடிகளைகொட்டி மாநாடுகள்; கொட்டிக்கொடுப்பவர்கள் சிந்தி...

சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களுக்கென்று ஒவ்வொரு கட்சி உதயம் என்று சொல்லுமளவிற்கு தமிழகத்தில் முஸ்லிம்கட்சிகள்/இயக்கங்கள்/அமைப்புகள் பெருத்துவிட்டன. ஒவ்வொரு தனி முஸ்லிமுக்கும் ஒரு அமைப்பு என்ற நிலைவரும்வரை விடமாட்டார்கள் போலிருக்கிறது.

இந்த அமைப்புகள்/இயக்கங்கள் அரசின் கவனத்தை ஈர்க்கிறோம் என்றபெயரிலோ, மார்க்கத்தை பரப்புகிறோம் என்ற பெயரிலோதான் இதுவரை மாநில அளவில் மாநாடுகளை நடத்திவந்தன. இப்போது பரிணாம வளர்ச்சிபெற்று ஒரு கட்சி துவங்குவதற்கு கோடிகள் செலவில் மாநில மாநாடு நடக்கிறது. இப்படி புதிய புதிய அமைப்புகளை, இயக்கங்களை, கட்சிகளை உருவாக்கி நடத்துவதற்கும், அவ்வப்போது லட்சங்கள்/கோடிகள் செலவில் மாநாடுகள் நடத்துவதற்கும் பொருளாதார உதவி செய்வது யார்?

இந்த அமைப்புகள்/ இயக்கங்கள் 'நாங்கள் எந்த வெளிநாட்டு அரசிடமோ,வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தோ உதவிகள் பெறமாட்டோம்' என்று பைலாவை உருவாக்கியிருக்கிறார்கள். அப்படியாயின் உதவுவது யார்? தனது வறுமையை போக்க, இறைவன் வழங்கிய இளமையை தொலைத்து, மனைவிமக்களை பிரிந்து அனாதையாக அரபுநாடுகளில் அற்ப சம்பளத்தில் பணியாற்றிவரும் நம்முடைய சகோதரர்கள்தான். நம்முடைய உழைப்பின் மூலம் சம்பாதித்த இந்த தொகை சமுதாயத்திற்கு பயன்படட்டும் என்ற நல்லெண்ணத்தில் தருகிறார்கள்.

ஆனால், வியர்வை சிந்தி உழைத்தபனம் வீணாக நாளிதழ்/தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும், மாநாடுகளுக்கும் விரயமாவதையும், லட்சங்கள் செலவழித்து நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மார்க்கத்தையும் தாண்டி, சக சகோதரர்களைப்பற்றிய பித்னாக்கள்தான் பெருமளவில் அரங்கேறுகிறது என்பதையும் உதவும் உள்ளங்கள் கண்டுகொள்வதில்லை. நாம் நல்வழியில் செலவுசெய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது. நம்முடைய ஒவ்வொரு நயாப்பைசாவும் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதையும் கண்காணிப்பது கடமையாகும்.

கோடிகளை கொட்டி மாநாடு நடத்தும் தொகையை வைத்து இந்த சமுதாயத்திற்கு எத்தனையோ பயனுள்ள விசயங்களை செய்யலாம். சென்னையில் பிளாட்பாரத்தில் தொழில்செய்யும் ஒரு முஸ்லிம் ஆயிரம் ரூபாய் முதலீடு இல்லாமல் தண்டலுக்கு வாங்கி வியாபாரம் செய்து கிடைக்கும் அற்ப லாபத்தில் வட்டியும் கட்டி, தன்குடும்பத்தோடு அல்லாடுகிறானே அவனுக்கு முதலீட்டுக்கு பனம்தருவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? கட்டவுட்டுகளும் பேனர்களும் வைப்பது இறை உவப்பை பெற்றுத்தருமா?
மருத்துவம் செய்ய வசதியின்றி, எத்தனையோ ஏழைகள் இந்த இயக்கங்களின் படியேறும்போது பலநேரங்களில் விரட்டப்பட்டு, சிலநேரங்களில் உதவிகள் செய்யப்படுகிறதே! இந்த மாநாட்டு தொகையைவைத்து எத்தனையோ நோயாளிகளின் நோயை போக்கலாமே! ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணமுடியுமா? ஏடுகளின் விளம்பரத்தில் இறைவனைக்கானமுடியுமா?
நன்றாக படிக்கக்கூடிய நம்சமுதாயத்து பிள்ளைகள் பெற்றோரால் படிக்க வைக்கமுடியாமல், கல்லூரியில் கேட்கும் கட்டணத்தை செலுத்தமுடியாமல் கல்வியை தூக்கிப்போட்டுவிட்டு கடைகளில் பணியாற்றும் சமுதாய மாணவமணிகளை இந்த மாநாடு நடத்தும் தொகையில் எத்துனையோபேரை பட்டதாரிகளாக உருவாக்கலாமே? கல்விக்கு நம்பனம் செலவாவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? கட்சிகளுக்கு செய்யும் விளம்பரங்கள் பெற்றுத்தருமா?
வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்களிடம் உதவிதேடும் அமைப்பினர், அவர்கள் வெளிநாடுசெல்வதற்காக வட்டியில்லா கடன்கேட்டால், நாங்கள் வெளிநாடு செல்பவர்களுக்கு கடன்தரமாட்டோம் என்று தத்துவம் பேச, வட்டி மார்க்கத்தில் பெரும்பாவம் என்று தெரிந்திருந்தும் வட்டிக்கு வாங்கி வெளிநாட்டு வேலைக்கு வந்து, சம்பாதிப்பதில் பெரும்பங்கை வட்டிக்கு தீனியாக தந்துகொண்டு இருக்கிறானே அவனைப்போன்றோருக்கு உதவுவது இறைஉவப்பை பெற்றுத்தருமா? அல்லது 'கண்காட்சி' நடத்துவது இறைஉவப்பை பெற்றுத்தருமா?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு நாம் சொல்லும்போது 'நாங்கள் மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவை செய்வதில்லையா? என்று இயக்க ஆர்வலர்கள் கேட்கலாம். நீங்கள், ஒருஆண்டுக்கு மருத்துவம்-கல்வி உள்ளிட்ட சமுதாயப்பனிகளுக்கு செய்யும் செலவையும், அமைப்பின்/கட்சியின் பலத்தை அடுத்தவர்களிடம் காட்டுவதற்காக செய்யும் செலவையும் ஒப்பிட்டு பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் இருப்பதை காணலாம்.

எனவே, உதவி செய்யும் உள்ளங்களே! உங்கள் உதவிகள் எதற்கு பயன்படுகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள். இயக்கத்தலைவர்களே! நபி[ஸல்] அவர்கள் மாநாடு போட்டு மார்கத்தை வளர்க்கவில்லை; மாநாடு போட்டு மன்னராகவில்லை. இதை கவனத்தில் கொண்டு உங்களை நம்பி தரும் தொகைகளை முழுக்க முழுக்க மார்க்கப்பிரச்சாரத்திற்கும், முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்துங்கள். மாறாக பலம்காட்டும் வித்தைக்கு செலவு செய்தால், படைத்தோனின் விசாரணைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்.

--
2/06/2009 10:14:00 PM அன்று நிழல்களும் நிஜங்களும் இல் நிழல்களும் நிஜங்களும் ஆல் இடுகையிடப்பட்டது

பாபரி மஸ்ஜித் வழக்கு: வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்

பாபரி மஸ்ஜித் வழக்கு: வெற்றியை எதிர்நோக்கும் முஸ்லிம்கள்

எதிர்வரும் பிப் 9 அன்று அல்லாஹ்ஆபாத் (அலஹாபாத்) ஸ்பெஷல் பெஞ்ச் விசாரித்து வரும் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தரப்பு வாதங்கள் லக்னோவில் முடிவடைய உள்ளது. அதனைத் தொடர்ந் ஹிந்துக்கள் தரப்பிலான வாதம் துவங்கும். ஹிந்துக்களைப் போல் வெறுமனே நம்பிக்கையையும், உணர்ச்சிகளையும் மட்டுமல்லாமல், ஏராளமான அத்தாட்சிகளையும் சமர்ப்பித்துள்ள காரணத்தால் 100 சதம் வெற்றி கிட்டும் என முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

அயோத்தியைச் சேர்ந்த, முஹம்மது ஹாஷிம் அன்ஸாரி என்பவர், 'அரசியல் பலமும், அதிகார பலமும் மட்டுமே இவ்வழக்கில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதை தடுக்க முயற்சிக்கும். நாங்கள் அங்கு 550 வருடங்களாக பள்ளி இருந்துள்ளதற்கான வலுவான சமர்ப்பித்துள்ளோம்' என தெரிவித்தார். இவர் 1949 ம் ஆண்டு வழக்கின் மனுதாரராவார். 90 வயதாகும் அன்ஸாரி, 'சட்டம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு எதிராக தீர்ப்பளிக்க முடியாது' என நம்பிக்கை தெரிவித்தார்.

முதலாவதாக கோபால் சிங் பிஷாரத் என்பவர் முறையான அறிவிக்கை இல்லாமல் வழக்குத் தொடுத்தார். எனவே அது நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, ராம் சந்திர ப்ரம்ஹான்ஸ் என்பவர் ஒரு வழக்குத் தொடுத்தார். அதில் 5 முஸ்லிம்களை பிரதிவாதியாக இணைத்திருந்தார். பாபரி மஸ்ஜித் என்பது அந்த 5 முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. எனவே இதுவும் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்ததாக நார்மோகி அக்காராவின் வழக்கு. இவரது வழக்கு 1885,86 இலேயே தோல்வியில் முடிந்த ஒரு வழக்கு. இதனை மறுபடியும் எடுத்தது நீதித்துறையை கேலிக்குரியதாக்குவதாகும்.

நீதிபதிகள், செய்யது ரஃபாத் ஆலம், சுதிர் குமார் அகர்வால், டி.வி.ஷர்மா ஆகியோர் அங்கம் வகிக்கும் விசேஷ பெஞ்ச் பாபரி மஸ்ஜித் யாருக்கு சொந்தம் என்ற 67 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்து வருகிறது.

1989 இல் லக்னோவிலுள்ள இந்த பெஞ்ச் விசாரிப்பதற்கு முன், ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றம் இதனை விசாரித்து வந்தது. உ.பி.மாநில அரசின் பரிந்துரையை அல்லாஹ்ஆபாத் உயர்நீதி மன்றம் ஏற்றுக் கொண்டதை அடுத்து வழக்கை விரைந்து முடிப்பதற்காக லக்னோ பெஞ்ச்சுக்கு மாற்றப்பட்டது. இதுவரை 12 தடவைகளுக்கு மேல் இதிலுள்ள நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.

அரசு வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக ஹாஷிம் அன்ஸாரி குறிப்பிடுகின்றார். ஹாஜி மெஹபூப் அஹமது, அன்ஸாரியின் கருத்தை மறுபதிவு செய்கிறார். 'இத்தனை வருட தாமதத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ரீதியாக தாமதம் தூண்டப்படுகிறது'.

'இவ்வழக்கைப் பொறுத்தவரை, நமது நிலை மிகவும் உறுதியானது. ஆதாரங்களைப் பொறுத்தவரை வி.ஹெச்.பி. தலைவர்கள் உள்ளிட்ட அனைவருமே, முஸ்லிம்களின் நிலை வலுவாக உள்ளதென அறிவர். அதனால் தான், உறுதியாக நமக்கு வெற்றி கிடைக்குமென நான் நம்புகிறேன். அவர்களைப் பொறுத்தவரை வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாதிடுகின்றனர். ஆனால் நீதிமன்றங்களுக்கு ஆதாரம் தேவை. அவை முஸ்லிம்களிடம் மாத்திரமே உள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார். இவர் பாபரி பள்ளிக்கு வசித்து வருகிறார் என்பதும், 1992 இல் கரசேவகர்கள் இவரை பயங்கரமாக தாக்கினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பல மாமங்களுக்குப் பிறகும், ஆதாரங்களின் அடிப்படையில், விசேஷ அமர்வு நீதிமன்றம் இவ்விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சார்பாக தீர்ப்பளித்தால் அதனை ஹிந்துக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விக்கு, 'நிச்சயமாக மாட்டார்கள், அதன் வெளிப்பாடாகத்தான் உச்ச நீதிமன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர்' என்றும் அவர் கூறினார்.

நீதிமன்றங்களுக்கு வெளியேயான சமரசத்தீர்வு குறித்து வினவியபோது, 'நாங்கள் இப்போதும் எப்போதும் அதற்கு தயாராகவே உள்ளோம். ராமர் கோயில் அயோத்தியில் கட்டுவது குறித்து எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. எங்களது மார்க்கத்திற்கு முரணில்லாத எவ்வித சமரசத்திற்கும் நாங்கள் தயார். ஆனால் அவர்கள் இதனை இழுத்தடிக்கவே விரும்புகின்றனர். எனவே தான் உயர்நீதிமன்றத்தில் தோற்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தை அணுக முயற்சிக்கின்றனர்' என்றும் குறிப்பிட்டார்.

ஹாஜி மஹபூபின் தந்தை ஹாஜி முஹம்மது பெக்கூ இவ்வழக்கின் முதன்மையான வாதிகளில் ஒருவர். பாபரி மஸ்ஜிதில் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவர். 1960,61 இல் அவரது மறைவுக்குப்பின் மத்திய சன்னி வக்ஃப் போர்டு இவ்வழக்கை ஏற்று நடத்தி வருகிறது. முஸ்லிம்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ஸஃபரியாப் ஜிலானி, 'எதிர் தரப்பைச் சேர்ந்த நமோஹி அகாதா கூட டிசம்பர் 23, 1949 க்கு முன் அங்கு சிலைகள் இருந்ததில்லை என்றும் அதற்கு முந்தய இரவில் தான் வைக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்விஷயத்தில் முஸ்லிம்கள் நம்பிக்கை இழந்துள்ளதாக குறிப்பிடும் அன்ஸாரி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இவ்வழக்கில் காட்டிவரும் பாராமுகத்தை கடுமையாக சாடுகிறார்.

இத்தலைவர்கள் பாபரி மஸ்ஜித் இயக்கத்திற்கு ஊறுதான் விளைத்துள்ளனர். ராமஜென்மபூமி இயக்கத்தைப் பொறுத்தவரை, அவர்களுக்கு செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் அரவணைப்பு கிடைக்கிறது. ஆனால் பள்ளிக்காக இதுவரை நாம் எந்த வசூலையும் செய்யவில்லை. காங்கிரஸ், சமாஜ்வாதி ஏன் பிஜேபியிலும் கூட முஸ்லிம் தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் முஸ்லிம்களை முட்டாளாக்குகின்றனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை 1949 முதல் நான் போராடி வருகிறேன். 1954 இல் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய போது 100 முஸ்லிம்களுடன் நான் கைது செய்யப்பட்டேன். மீண்டும் மிசாவில் நான் கைது செய்யப்பட்ட போது காங்கிரஸ் தான் மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சி செய்தது. இப்படியாக இந்த வழக்கிலிருந்து நான் விலகிக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல நெருக்கடிகள் எனக்குத் தரப்பட்டன.

நன்றி: டூசர்க்கில்ஸ் டாட் நெட்

சலீம் கான்

இன்றைய மாணவ சமுதாயம் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் 25 வயது சலீம்கான். மனித நேய சேவைக் காக ஐ.நா.சபை இளைஞர்கள் மாநாட்டில் முதல் முறையாக 'யூத் கேம்பைன்' விருதைப் பெற்றார் சென்னை புதுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சலீம்கான்.

ஐக்கிய நாடுகளின் சபை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் இளைஞர்களுக்கான மாநாட்டை அமெரிக்காவின், நிïயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் நடத்தி வருகிறது.

இந்த வருடம் ஐ.நா.சபையின் ஐந்தாவது இளைஞர்கள் மாநாடு ஆகஸ்டு 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, சலீம்கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஐ.நா.வின் மில்லினியம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக பங்காற்றிய இளைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

'நிலையான சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு' என்ற தலைப்பில் சுனாமி போன்ற கடல் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு `மாங்குரோவ் மரங்களை' தமிழக கரையோரங்களில் வளர்க்க வேண்டும் என்று சலீம்கான் ஆராய்ந்து ஐ.நா.சபையில் வலியுறுத்தினார்.

உலகம் முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ் இளைஞர் ஐ.நா. விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுக்குச் சென்று இந்த விருதை வாங்குவதற்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சலீம்கானுக்கு விசா தர மறுத்ததால், அவரின் சகோதரர் ஷா நவாஸ்கான் அமெரிக்காவில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் விருது வாங்கி, சலீம்கான் சார்பாக உரையாற்றினார்.

சலீம் கானின் சொந்த ஊர் கம்பம். அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்து இருக்கிறார். இவரது அப்பா அம்ஜத் இப்ராகிம்கான் ஓய்வு பெற்ற நூலகர். அம்மா ஹசீனா பேகம் இல்லத்தரசி. ஒரே அண்ணன் அமெரிக்காவில்,
நியூ ஜெர்சியில் கணினி பொறியாளராக பணிபுரிகின்றார். ஒரே அக்கா திருமணமாகி சென்னையில் இருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்ததும் ஒரு வருடம் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் சேர்ந்து இருக்கிறார். ஆனால் பொறியியல் படிப்பதில் உடன்பாடு இல்லாததால் விலகிவிட்டு, பின்னர் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., பயோ டெக்னாலஜி படித்தார். டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களின் மாணவனாக படிக்க வேண்டும் என்ற ஆசையில் புதுக்கல்லூரியில் எம்.எஸ்.சி., சேர்ந்தார். எம்.எஸ்.சி., முடிக்க புராஜக்ட் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் `நிலையான சுற்றுப்புற மேம்பாடு' கட்டுரை.

2004ஆம் ஆண்டில் சுனாமி வந்த போது நான், பெங்களூரில் இருந்ததும,. மீடியாக்களில் சுனாமியின் கொடுமையை பார்த்ததும், மனம் நொந்த நிலையில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அந்தக் கவிதை ஒரு பத்திரிகையிலும் வெளிவந்தது. இந்தக் கவிதைதான் அவரது புராஜக்ட் உருவாவதற்கு முக்கிய காரணம்.

உடனே அவரது குழுவினரான செந்தில், ஷேக் அலி, சுனாத் ஆகியோருடன் இணைந்து இதற்கான வேலையில் இறங்கி உள்ளார். நான்கு பேரும் சேர்ந்து தேடினார்கள் , வெப்சைட் மூலம் சென்னையில் எங்கேயாவது மாங்குரோவ் மரங்கள் இருக்கிறதா? என்று தேடினார்கள் . சென்னையில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். மாங்குரோவ் மரங்களை தமிழில் `தில்லை' மரங்கள் என்று அழைக்கின்றனர்.

ஊரூர் ?குப்பம் என்றழைக்கப்படும் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அங்கு மரங்கள் இருக்குமிடத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு சகதியாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக கருணாகரன் என்ற மீனவர் அங்குவந்தார். தோணி மூலம் அங்கே அழைத்து சென்றார். பின்னர் 4 கிலோமீட்டர் சகதியில் நடந்து சென்று மாங்குரோவ் மரத்துக்கு கீழே மண் எடுத்து அதில் உள்ள நுண்ணுயிர்களை ஆராய்ச்சி செய்தபோது, அதில் உள்ள நுண்ணுயிர்கள்... மண்ணை இறுக்கமான நிலைக்கு வருவதற்கான காரணிகள் என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

இதனால் தான் ஆறு, கடலில் கலக்கு மிடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்கின்றன. மேலும் இந்த மரங்கள் வளருமிடத்தில் மண் வளம் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டனர். மாங்குரோவின் வேர்களும் சுவாசிப்பதை அறிந்து கொண்டனர் . வேர்கள் பூமிக்கு கீழே ஆழமாக சென்று, பின்னர் பூமிக்கு மேல்நோக்கி வளர்ந்து... மரத்தை சுற்றி புற்கள் போல் வளர்ந்துள்ளன. மாங்குரோவ் மரங்கள் வளர்ந்தால் கடல் சீற்றம் குறையும்.''

மாங்குரோவ் மரங்களில் ஆறுவகை உள்ளது. அனைத்து வகைகளையும் கடற்கரை ஓரங்களில் வளர்க்கலாம்.

சுனாமியின் போது நான் எழுதிய கவிதையின் தாக்கத்தால் சுனாமியை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததின் விளைவாக இந்த ஐடியா அவர்களுக்கு தோன்றியது. மேலும், சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று அக்குழு முடிவு செய்தது.

பேராசிரியர் டாக்டர் இஸ்மாயில் அவர்களை ஊக்குவித்தார்.

புராஜக்ட் முடிய இரண்டு ஆண்டுகள் பிடித்து உள்ளது. 2007ஆம் ஆண்டில் சமர்ப்பித்தேன். அவ்வப்போது சிரமங்கள், தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை.''

அடுத்து அரசு உதவியுடன் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பி.எச்டி படிக்க ஆர்வம் உள்ளதாகவும் . மனிதநேய சேவையில் என்னை ஐ.நா.சபைக்கு அர்ப்பணிக்கணும்.'' என்கிறார் சலீம்கான்.ஐ.நா.சபையில் ஒரு தமிழக இளைஞர் விருது பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமையே...!

வேளச்சேரி கே.எஸ். மருத்துவமனை

முதுவைவிஷன்.காம்

முதுவைவிஷன்.காம்

Sudarvamsam vamsam
dateMon, Feb 9, 2009 at 4:23 PM
subjectbest wishes

Congratulations, My best wishes to Muduvai Vision.

Warm regards
Raghuraj