இன்றைய மாணவ சமுதாயம் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு உதாரணமாக விளங்குபவர் 25 வயது சலீம்கான். மனித நேய சேவைக் காக ஐ.நா.சபை இளைஞர்கள் மாநாட்டில் முதல் முறையாக 'யூத் கேம்பைன்' விருதைப் பெற்றார் சென்னை புதுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சலீம்கான்.
ஐக்கிய நாடுகளின் சபை உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் இளைஞர்களுக்கான மாநாட்டை அமெரிக்காவின், நிïயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் நடத்தி வருகிறது.
இந்த வருடம் ஐ.நா.சபையின் ஐந்தாவது இளைஞர்கள் மாநாடு ஆகஸ்டு 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக, சலீம்கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில் ஐ.நா.வின் மில்லினியம் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்பாக பங்காற்றிய இளைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
'நிலையான சுற்றுப்புறச்சூழல் மேம்பாடு' என்ற தலைப்பில் சுனாமி போன்ற கடல் சீற்றங்களை எதிர்கொள்வதற்கு `மாங்குரோவ் மரங்களை' தமிழக கரையோரங்களில் வளர்க்க வேண்டும் என்று சலீம்கான் ஆராய்ந்து ஐ.நா.சபையில் வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் தமிழ் இளைஞர் ஐ.நா. விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்குச் சென்று இந்த விருதை வாங்குவதற்கு சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சலீம்கானுக்கு விசா தர மறுத்ததால், அவரின் சகோதரர் ஷா நவாஸ்கான் அமெரிக்காவில் உள்ள ஐ.நா.தலைமைச் செயலகத்தில் விருது வாங்கி, சலீம்கான் சார்பாக உரையாற்றினார்.
சலீம் கானின் சொந்த ஊர் கம்பம். அங்குதான் பள்ளிப் படிப்பை முடித்து இருக்கிறார். இவரது அப்பா அம்ஜத் இப்ராகிம்கான் ஓய்வு பெற்ற நூலகர். அம்மா ஹசீனா பேகம் இல்லத்தரசி. ஒரே அண்ணன் அமெரிக்காவில்,
நியூ ஜெர்சியில் கணினி பொறியாளராக பணிபுரிகின்றார். ஒரே அக்கா திருமணமாகி சென்னையில் இருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்ததும் ஒரு வருடம் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் சேர்ந்து இருக்கிறார். ஆனால் பொறியியல் படிப்பதில் உடன்பாடு இல்லாததால் விலகிவிட்டு, பின்னர் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி., பயோ டெக்னாலஜி படித்தார். டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களின் மாணவனாக படிக்க வேண்டும் என்ற ஆசையில் புதுக்கல்லூரியில் எம்.எஸ்.சி., சேர்ந்தார். எம்.எஸ்.சி., முடிக்க புராஜக்ட் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக உருவானதுதான் `நிலையான சுற்றுப்புற மேம்பாடு' கட்டுரை.
2004ஆம் ஆண்டில் சுனாமி வந்த போது நான், பெங்களூரில் இருந்ததும,. மீடியாக்களில் சுனாமியின் கொடுமையை பார்த்ததும், மனம் நொந்த நிலையில் ஒரு கவிதை எழுதி இருக்கிறார். அந்தக் கவிதை ஒரு பத்திரிகையிலும் வெளிவந்தது. இந்தக் கவிதைதான் அவரது புராஜக்ட் உருவாவதற்கு முக்கிய காரணம்.
உடனே அவரது குழுவினரான செந்தில், ஷேக் அலி, சுனாத் ஆகியோருடன் இணைந்து இதற்கான வேலையில் இறங்கி உள்ளார். நான்கு பேரும் சேர்ந்து தேடினார்கள் , வெப்சைட் மூலம் சென்னையில் எங்கேயாவது மாங்குரோவ் மரங்கள் இருக்கிறதா? என்று தேடினார்கள் . சென்னையில் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்ந்திருப்பதை கண்டுபிடித்தனர். மாங்குரோவ் மரங்களை தமிழில் `தில்லை' மரங்கள் என்று அழைக்கின்றனர்.
ஊரூர் ?குப்பம் என்றழைக்கப்படும் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தி அங்கு மரங்கள் இருக்குமிடத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு சகதியாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, தற்செயலாக கருணாகரன் என்ற மீனவர் அங்குவந்தார். தோணி மூலம் அங்கே அழைத்து சென்றார். பின்னர் 4 கிலோமீட்டர் சகதியில் நடந்து சென்று மாங்குரோவ் மரத்துக்கு கீழே மண் எடுத்து அதில் உள்ள நுண்ணுயிர்களை ஆராய்ச்சி செய்தபோது, அதில் உள்ள நுண்ணுயிர்கள்... மண்ணை இறுக்கமான நிலைக்கு வருவதற்கான காரணிகள் என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.
இதனால் தான் ஆறு, கடலில் கலக்கு மிடத்தில் மாங்குரோவ் மரங்கள் வளர்கின்றன. மேலும் இந்த மரங்கள் வளருமிடத்தில் மண் வளம் மிகவும் இறுக்கமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொண்டனர். மாங்குரோவின் வேர்களும் சுவாசிப்பதை அறிந்து கொண்டனர் . வேர்கள் பூமிக்கு கீழே ஆழமாக சென்று, பின்னர் பூமிக்கு மேல்நோக்கி வளர்ந்து... மரத்தை சுற்றி புற்கள் போல் வளர்ந்துள்ளன. மாங்குரோவ் மரங்கள் வளர்ந்தால் கடல் சீற்றம் குறையும்.''
மாங்குரோவ் மரங்களில் ஆறுவகை உள்ளது. அனைத்து வகைகளையும் கடற்கரை ஓரங்களில் வளர்க்கலாம்.
சுனாமியின் போது நான் எழுதிய கவிதையின் தாக்கத்தால் சுனாமியை தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்ததின் விளைவாக இந்த ஐடியா அவர்களுக்கு தோன்றியது. மேலும், சமூகத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று அக்குழு முடிவு செய்தது.
பேராசிரியர் டாக்டர் இஸ்மாயில் அவர்களை ஊக்குவித்தார்.
புராஜக்ட் முடிய இரண்டு ஆண்டுகள் பிடித்து உள்ளது. 2007ஆம் ஆண்டில் சமர்ப்பித்தேன். அவ்வப்போது சிரமங்கள், தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றை ஒரு பொருட்டாக அவர் கருதவில்லை.''
அடுத்து அரசு உதவியுடன் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பி.எச்டி படிக்க ஆர்வம் உள்ளதாகவும் . மனிதநேய சேவையில் என்னை ஐ.நா.சபைக்கு அர்ப்பணிக்கணும்.'' என்கிறார் சலீம்கான்.ஐ.நா.சபையில் ஒரு தமிழக இளைஞர் விருது பெற்றிருப்பது நமக்கெல்லாம் பெருமையே...!
No comments:
Post a Comment