துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதை நிகழ்ச்சி மற்றும் சிறப்பிதழ் வெளியீடு
துபாய் : துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் சார்பில் 'கோடையும் வாடையும்' எனும் தலைப்பில் சிறப்புக் கவிதை நிகழ்ச்சி மற்றும் தமிழ்த்தேர் சிறப்பிதழ் வெளியீடு 10.07.2009 வெள்ளிக்கிழமை காலை கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற்றது.
கோடையும் வாடையும் என்ற சிறப்பு கவிதை நிகழ்ச்சியின் நடுவர்களாக திருப்பத்தூர் அப்துல் வாஹித், பழனி ஆகியோர் இருந்தனர். கவிஞர்கள் சிம்ம பாரதி, ஜியா, சந்திரசேகர், கமால், நர்கிஸ், மலிக்கா, நிலாவண்ணன், அமுதா பத்மநாபன், ஜெயா பழனி, வேலூர் கந்தநாதன், கிளியனூர் இஸ்மத், ராஜா கமால் உள்ளிட்ட பலர் கவிதை வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்தேர் சிறப்பிதழ் வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் சுப்புலட்சுமி பாலா, கராமா மெடிக்கல் சென்டர் டாக்டர் சம்பத் குமார், முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி ஓய்வுபெற்ற ஆசிரியை அபரஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தேர் இதழை டாக்டர் சுப்புலட்சுமி பாலா வெளியிட முதல் பிரதியினை உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
சிறப்புவிருந்தினர்கள் பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிமுகத்தை கலையன்பன் மற்றும் முதுவை ஹிதாயத் ஆகியோர் செய்தனர்.
கவிஞர் நிலாவண்ணன் தாயகம் செல்வதையொட்டி அவருக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது. அவருக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் ஏற்புரை நிகழ்த்தினார்.
செயலாளர் சந்திரசேகர் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜியாவுத்தின், சிம்மபாரதி உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்தனர்.
வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Monday, July 13, 2009
Need cook in Tamil Restaurant - Ajman ( UAE )
Need cook in Tamil Restaurant
A well running Tamil restaurant ( BISMI RESTAURANT) need Tamil
professional cook in Ajman new Ind.area
contact 050-7942589 and 050-5021798
A well running Tamil restaurant ( BISMI RESTAURANT) need Tamil
professional cook in Ajman new Ind.area
contact 050-7942589 and 050-5021798
Subscribe to:
Posts (Atom)