ரெடிமேட் ஆடை தயாரிக்க பயிற்சி
சென்னை, ஜூலை 6: மத்திய அரசு ஜவுளித்துறையின் கீழ் செயல்படும் ரெடிமேட் ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது.
ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழில்நுட்பம், தயாரிப்பு மேற்பார்வையாளர்/ தரக்கட்டுப்பாட்டாளர், ஆடை மாதிரி அமைப்பு/ வெட்டுதல் பயிற்சி, தையல் இயந்திரம் பழுதுபார்த்தல், அளவு தரக்கட்டுப்பாட்டாளர், கணினி ஆடை வடிவமைப்பு ஆகிய புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளன. இவற்றில் சேர விண்ணப்பம் அனுப்ப வரும் 19ம் தேதி கடைசி நாளாகும்.
இவை 3, 6 மற்றும் 12 மாத பயிற்சிகள் உள்ளன. 8ம் வகுப்பு, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். Ôஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம், ஆயத்த ஆடை வளாகம், திரு.வி.க. தொழிற்பேட்டை (எச்டிஎல் ஆபிஸ் அருகில்), கிண்டி, சென்னை-32Õ என்ற முகவரிக்கு விண்ணப்பப் படிவங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 2250 01 21 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, ஆயத்த ஆடை பயிற்சி வடிவமைப்பு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.