துபாயில் இளையான்குடி ஜமாஅத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி
துபாயில் சிவகெங்கை மாவட்டம் இளையான்குடி ஜமாஅத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி 01.01.2009 வியாழக்கிழமை முஸ்ரிஃப் பூங்காவில் நடைபெற்றது.
இச்சந்திப்பு நிகழ்ச்சிக்கு செல்வ முஹம்மது தலைமை வகித்தார். துவக்கமாக மாணவர் ஒருவர் இறைவசனங்களை ஓதினார்.
செல்வ முஹம்மது அவர்கள் தனது தலைமையுரையில் இதுபோன்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள அனைவரையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
பரீத் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார்.இச்சந்திப்பு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்த அறிமுகவுரையினை ஜலால் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து கலிஃபா செய்யது ஹுசைன் தனது வாழ்த்துரையில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இளையான்குடியில் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி துவக்க விழாவில் பங்கேற்ற கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.அப்துல் ரஹ்மான் இத்தகைய கல்விப்பணிக்கு தூண்டுகோலாக இருந்த அனைவரையும் பாராட்டினார். இளையான்குடி நகரின் பெருமைகளை கவிதை நடையில் எடுத்தியம்பினார்.
அஹ்மது கபீர் தனது சிறப்புரையில் இளையான்குடி நகர் குறித்த மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தார். தொழிற்துறையில் நாம் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். வாழ்வியலின் நோக்கங்களை உணர்ந்து செயல்படக் கேட்டுக் கொண்டார். கல்விச்சேவையில் இளையான்குடி பங்களிப்பை எடுத்துரைத்தார். இளையான்குடியில் 25 க்கும் மேற்பட்ட கவிஞர்களது இலக்கியச் சேவை குறித்து விவரித்தார். அரசியல், சமூகம், பொதுச்சேவை, ஆராய்ச்சித்துறை, அரசுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இளையான்குடி மக்களின் பங்களிப்பு குறித்து விளக்கினார். தொடர்ந்து நமதூரின் பெருமையினை நிலைநாட்ட அனைவரும் தங்களது ஒத்துழைப்பினை நல்கிட கேட்டுக் கொண்டார்.
பஷீர் தனது உரையில் தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நமக்கிடையே தகவல் பரிமாற்றம் எளிதாக செய்யக்கூடிய பணியினை மேற்கொள்ள வேண்டும். பணிவாய்ப்பு தேடி அமீரகம் வரும் நமதூர் சகோதரர்களுக்கு உதவிட முயற்சிகள் செய்ய வேண்டும்.
அதனைத் தொடர்ந்து அஷ்ரஃப் அலி, அயூப் அலி, புரோஸ்கான், குத்புதீன், சுகர்னோ, அப்துல் காதர், லியாக்கத் அலி, நிஹ்மத்துல்லாஹ், அமானுல்லாஹ், சுல்தான், செய்யது, சாதிக், பாசித்,தமீம் அன்சாரி, செய்யது, தாஹிர், சேட், ஹமீதுல்லாஹ், சுல்தான், பைசல், யாசர், காதர் சுல்தான், சுபைர், பரீத் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
ரோஸ்லான் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியினை சுல்த்தான் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலாத இளையான்குடி சகோதரர்கள் தங்களது பெயரினை
050 745 0359 / 055 975 9919 ஆகிய எண்களில் பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
1 comment:
What is the criteria to be a member
Post a Comment