துபாயில் ஜின்னாஹ் ஷரிபுத்தின்னின் "வேரறுந்த நாட்கள்" சிறுகதை நூல் வெளியீடு
துபாயில் சங்கமம் தொலைக்காட்சியின் ஆதரவுடன் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தின்னின் "வேரறுந்த நாட்கள்" என்னும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா 02.01.2009 வெள்ளிக்கிழமை மாலை கராமா சிவ் ஸ்டார் பவனில் நடைபெற்றது.
கராமா மெடிக்கல் சென்டரின் டாக்டர் வில்லியம்ஸ் தலைமை தாங்கினார். பாபநாசம் அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். நளாயினி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் குறித்து அறிமுகவுரை நிகழ்த்தினார்.
தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுத்தீன் கவிஞரது இலக்கியச் சேவை குறித்து பாடல் பாடினார். கவிஞர் கிளியனூர் இஸ்மத் சிறுகதை நூல் குறித்த விமர்சன உரை நிகழ்த்தினார்.
கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் "வேரறுந்த நாட்கள்" நூலை வெளியிட முதல் பிரதியை டாக்டர் வில்லியம்ஸ் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பாபநாசம் அப்துல் ஹமீது உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவைத் தலைவர் அப்துல் கத்தீம், எஸ்.எம். ஃபாரூக், எஃப்.எம். அன்வர் பாட்சா, தேனிசைச் சுடர் ஏ. அஷ்ரஃப் அலி, தாய்மண் வாசகர் வட்ட அமைப்பாளர் செ.ரெ.பட்டணம் மணி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment