அமீரகத்தில் அடி, உதையுடன் பணிபுரியும் தமிழக இளைஞர்
புதுக்கோட்டை அருகேயுள்ள ஊரைச் சேர்ந்தவர் ஷேக் முஹைதீன். பணியின் நிமித்தமாக ரூ.50,000 செலுத்தி கடந்த மாதம் பல்வேறு கனவுகளுடன் துபாய் வருகை புரிந்தார்.
இவர் 50,000 ரூபாய்க்காக தனது சகோதரியின் நகைகளை வட்டிக்கு வைத்து பயணச்செலவைக் கட்டியுள்ளார். வட்டிக்கு வட்டி ஏறிக்கொண்டு போகிறது. இவரது பணி ஈரானி ஒருவர் நடத்தும் குறைந்த விலைக்கடையில்.
துபாயில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உம்முல் குவைனில் வெல்ட் கிஃப்ட் டிரேடிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வேலை நேரம் காலை 7 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை. பின்னர் 2.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை. சில நேரம் வேலை சரிவர செய்வதில்லை என அடிப்பது. வெள்ளிக்கிழமை கூட சரியான நேரத்திற்கு தொழுகைக்கு செல்ல அனுமதிப்பதில்லை.
ஒரு மாத காலமே ஆன இவர் திடீரென விசாவைக் கேன்சல் செய் எனக்கூறியதும் சரி போ. பணம் கிடைக்காது என்றார். குடும்ப சூழலின் காரணமாக அடி,உதையினை தாங்கிக் கொண்டு இத்தகைய துன்பத்தை அனுபவித்து வருகிறார் தமிழக இளைஞர் ஷேக் முஹைதீன். இவர் பணிபுரிந்து வரும் நிறுவன தொடர்பு எண் : 06 764 7114 / 050 3352515
இதனைப் படிக்கும் தமிழ் அமைப்புகள் இவருக்கு உதவ முன்வருமா ?
No comments:
Post a Comment