மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35வயதிற்குட்பட்ட இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா
விருதுநகர், ஜன.8.
இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள், காந்தீயமும், நேருவின் பொருளாதாரக் கொள்கைகள்தான் உலக அளவில் நிலைத்து நிற்கக்கூடியவை என்று கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகமயமாதலில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பில் பேசிய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லி கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இலக்கிய வட்டம் சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு பல்கலைக்கழக வேந்தர் தி.கலசலிங்கம் தலைமை தாங்கினார். துணை வேந்தர் டாக்டர் செல்லையாதங்கராசு, டாக்டர் எம்.ஜெயகுமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரேணுகா வரவேற்புரையாற்றினார். சந்தியா நன்றி கூறினார். இந்து லட்சுமி அறிக்கை வாசித்தார். கருத்தரங்கில் உலகமயமாதலில் மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் டாக்டர் இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் பேசும்போது கூறியதாவது இன்டர்நெட்டில் இந்த தலைப்புக்கு 2 கோடியே 22 லட்சம் அர்த்தமுள்ள சொற்றொடர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கணியன் ஞீங்குன்றனர் என்ற புலவர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறியதை அன்னை இந்திராகாந்தி ரஷியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது குறிப்பிட்டார். அதையே நேரு டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற தனது நூலில் குறிப்பிட்டார். மாணவர்களாகிய ஞிங்கள் உங்கள் கவனத்தை திசை திருப்பிச் செல்லும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஞிங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி வாழக்கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வல்லுநர்களாக மாற முடியும்.
உலகம் முழுவதும் உங்கள் திறமைகளை அறிவுக்கூர்மையை பயன்படுத்த நாடுகள் தயாராக உள்ளன. உலகில் உள்ள 193 நாடுகளில் 151 நாடுகள் உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டுள்ளன. இதன்மூலம் எந்த நாடும் எந்த நாட்டிலும் வாணிபம் செய்யலாம்.
பணத்தை வங்கியில் போடலாம். உங்கள் திறமையை 151 நாடுகளில் காட்டி முன்னேற முடியும். டெக்னாலஜிக்கு எல்லை கிடையாது. இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவிலும், சைனாவிலும் தான் மனித வலம் கொட்டிக்கிடக்கிறது. எனவேதான் இங்கிருந்து ஆட்களை வெளிநாடுகளுக்கு அழைத்துப்போகின்றன.
1995_ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு உருவானது. இன்டர்நெட் உலகில் வாழ்கிறீர்கள். சந்தையில் எது தேவைப்படுகிறதோ அதை உருவாக்குங்கள். வெளிநாட்டவர் இங்கே முதலீடு செய்கிறார்கள்.
உங்களுக்கு இங்கேயே நிறைய வாய்ப்புள்ளது. இப்போது வந்தது போல் பொருளாதாரப் பாதிப்பு சில துறைகளில் வரலாம். ஐ.டி. போல் நமது நாட்டில் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நேருவின் பொருளாதாரக் கொள்கையும், காந்தீயக்கொள்கையும் தான் உலகில் நிலைத்து நிற்கும் சக்தி வாய்ந்தவை. நமது பொருளாதாரம் நல்ல ஸ்திரத்தன்மையோடு விளங்குகிறது. உள்ள இருப்பையும் சேர்த்தால் பல லட்சம் கோடி இருப்பு ஆதாரம் உள்ளது. நமது ரிசர்வ் வங்கி சட்டங்கள் பாதுகாப்பானவை.
இப்போதுதான் இதுபோல் (ஆர்பிஐ) நாமும் செய்யலாமா என்று அமெரிக்கா ஆய்வுசெய்கிறது. மிகப்பெரிய கம்பெனிகளுக்குத்தான் ரிஸ்க் அதிகம். நமது பொருளாதாரம் ஒரு மிக்ஸ்டு எக்கனாமி. இப்போதெல்லாம் எம்.பி.ஏ. வகுப்புகளில் யோகா, பகவத்கீதை போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. எனவே உலகமயமாதலில் உங்கள் பங்கு இந்த நாட்டிற்கு பயன்படுவதாக இருக்கட்டும் என்றார்.
விழா நிகழ்ச்சிகளை ராஜேஸ்சர்மா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேரா.யவனராணி, டாக்டர் சக்திவேல் ராணி செய்திருந்தனர்.
No comments:
Post a Comment