Saturday, August 4, 2007

ஆங்கில ஆசான்

ஆங்கில ஆசான் ்்


அமீரகத்தில் இலவச கல்விப் பணியில் ஒரு தமிழர்

ஸலாஹுத்தீன்


ஐக்கிய அரபு அமீகரம் அபுதாபியில் தனது பணிநேரம் போக மீதமுள்ள நேரத்தில் சமுதாய மக்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியை இலவசமாக செய்துவருக்ணீறடர் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழர் சலாஹுத்தீன்.

அமீரகத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடத்தையும் பணம் சம்பாதிப்பதிலேயே குறிக்கோளாக இருப்பார்கள். காரணம் பல தியாகங்களை செய்து வெளிநாடு வந்திருப்பது சம்பாதிப்பதற்காகவே என்ற சுடுகின்ற உண்மைதான் காரணம். சிலபேர் சொல்வதைப்போல மஹஸர் மைதானத்தில் ‘யா நப்ஸே’ என்று அவரவர்கள் தங்களை மட்டுமே பார்த்துக் கொள்வதைப்போல வெளிநாட்டு வாழ்க்கையும் கிட்டதட்ட அந்த நிலைமைக்குத்தான் தள்ளப்படுகிறடர்கள். உறவினர்கள், நண்பர்கள் என அந்த வட்டாரங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் கவனிக்கப்படுவதில்லை. ஊடணீலே நல்ல நண்பனாயிருந்தாலும் இங்கே வந்திருந்தால், ஒரு ‘ஹய்’ ஒரு ‘ஹலோ’ அவ்வளவுதான், தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போவார்கள். யாரையும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது என்பதுதான் அப்பட்டமான உண்மை.

இப்படியிருக்கும் இங்கேதான் ஒரு தமிழர் குறைந்த வருமானமேப் பெற்றுவந்தாலும், தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தை சமுதாய மக்களின் கல்விப்ணிக்கு உதவி வருகிறடர். தமிழர்கள் ஆங்கிலப் புலமையில் குறைவாகவிருப்பதாலேதான் வளைகுடாவில் அவர்களால் உலக அளவிலான போட்டியை சமாளிக்க முடியவில்லை, என்று உணர்ந்து நம் சமுதாய மக்களை உயர்த்திட இலவசமாகவே ஆங்கிலக் கல்வியைக் கற்றுத்தருகிறடர் சலாஹுத்தீன்.

இவரது சேவையில் பலனடைந்த மாணவர்களில் பலர்; பதவி உயர்வு பெற்றவர்களும் உண்டு.

No comments: