Tuesday, January 29, 2008

துபாயில் டாக்டர் அமீர்ஜஹான் குடும்பத்தினருக்கு வரவேற்பு

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பரிசளிப்பு விழா

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 2006-07 ஆம் ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு விழா 01.02.2008 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆர்.எம்.அப்துல் கரீம் நினைவரங்கில் நடைபெற இருக்கிறது.

பரிசளிப்பு விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் எம். அன்வர் தலைமை தாங்குகிறார்.

சென்னை கிளை ஜமாஅத் தலைவர் அமீர் ஹம்சா,மதுரை கிளை ஜமாஅத் தலைவர் முஹம்மது இப்ராஹிம், முதுகுளத்தூர் திடல் ஜமாஅத் தலைவர் முஹம்மது மசூது, முஸ்தபா நகர் பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் செய்யது இப்ராஹிம், பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி தாளாளர் ஏ. முஹம்மது மூஸா, பள்ளிவாசல் நர்சரி பள்ளி தாளாளர் வாவா ராவுத்தர், ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க தலைவர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் முன்னிலை வகிக்கின்றனர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம். ராஜா முஹம்மது வரவேற்புரை நிகழ்த்துகிறார். பள்ளிவாசல் பள்ளிகள் கல்விக்குழு தலைவர் ஏ.எம்.எம். முஹம்மது மீரா பொன்னாடை அணிவிக்கிறார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கு குடிசை மாற்றுவாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலனும், இரண்டாம் இடம் பெற்றவருக்கு முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே. முருகவேல், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வித்துறை இணைய் இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கின்றனர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பொன்னாடை அணிவித்து முதன்மைக்கல்வி அலுவலர் வி. பழனிவேலுச்சாமி மாவட்டக் கல்வி அலுவலர் மேகவர்ணம்,முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஈஸ்வரி கருப்பையா, பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் ஏ. ஷாஜஹான், பேரூராட்சி மன்ற தலைவர் சசிவர்ணம், சென்னை முதுகுளத்தூர் முஸ்லிம்கள் நலச்சங்க தலைவர் ஏ.அப்துல் குத்தூஸ், சென்னை அஜீஸ் ஸ்டீல் கார்ப்பரேஷன் அஜீஸ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியம், உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துராமலிங்கம், இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் எம்.எஸ். சௌக்கதலி, பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் பொருளாளர் கமால்நாசர் உள்ளிட்டோர் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.

தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர், முன்னாள் தலைமையாசிரியர்கள் நல்லாசிரியர் எஸ். காதர் முகைதீன், எம்.எஸ். லியாக்கத்தலி, எஸ். வரிசை முஹம்மது, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஞானதாஸ், டிஇஎல்சி பள்ளி தலைமையாசிரியர் ஜான் இராஜேந்திர பிரசாத உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

பெரிய பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஓ.ஏ. முஹம்மது சுலைமான் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

தகவல் உதவி :

ஏ.முஹம்மது மூஸா,
பானு பிரிண்டிங் பிரஸ்,
முதுகுளத்தூர்

புதுவை குறித்த இணையத்தளம்

புதுவை குறித்த புதிய இணையத்தளம்

www.puduvaitamilsonline.com
puduvaitamilsonline@gmail.com

Please visit our new tamil portal from puducherry,we expect your
feed back, suggestions, and your participations.
warm regards,
a.sugumaran
+ 09345419948
www.puduvaitamilsonline.com

Sunday, January 27, 2008

பிரியாணிக்கு அப்பு ..............

அமீரகத்தின் முதல் தமிழ் வானொலி ( ? ) என முழங்கிக் கொண்டிருக்கும் சக்தி எஃப்.எம். தனது விளம்பரத்தில் பிரியாணிக்கு அப்பு .......... என சமீபகாலமாக முழங்கி வருவது அமீரக தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கலாம்.

பிரியாணி என்றதும் அனைவருக்கும் ருசித்துப் பார்க்க வேண்டும் என்பது இயற்கை தானே. ஞாயிற்றுக்கிழமை 27.01.2008 அன்று இரவு உணவுக்காக சென்றேன். அன்பான உபசரிப்பு. ஆனால் பிரியாணி எதிர்பார்த்த சுவை கிடைக்கவில்லை.

ஏதோ லெமன் சாதம் சாப்பிட்டது போல் இருந்தது. பிரியாணி எப்படி என கருத்து கேட்டனர். சிறிது காரம் இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தேன். இதையே பலரும் கூறி வருவதாக தெரிவித்தனர்.

ஆரம்பித்து மூன்று மாதம் ஆனதாக தெரிவித்தனர். விரைவில் சுவையில் மாற்றம் இருக்கும் என தெரிவித்தனர்.

செட்டிநாட்டு இல்லம் போன்று மதுரை அப்பு உணவகம் அமைக்கப்பட்டிருந்தது.

Saturday, January 26, 2008

முதுகுளத்தூரில் குடியரசு தின விழா



முதுகுளத்தூரில் அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள், காவல்துறை மற்றும் காவல்துறை நண்பர்கள் குழு சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் நகரின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

தகவல் உதவி : தாஹிர் உசேன், சீனி ஜெராக்ஸ்,முதுகுளத்தூர்.

Friday, January 25, 2008

அஜ்மானில் முப்பெரும் விழாவில் அரபியரைக் கவர்ந்த தமிழக கரகாட்டம்

அஜ்மானில் முப்பெரும் விழாவில் அரபியரைக் கவர்ந்த தமிழக கரகாட்டம்

அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பு மற்றும் ஷார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக் கழகம் 25.01.2008 வெள்ளிக்கிழமை அஜ்மான் ஜுவல் பேலஸில் நடத்திய பக்ரீத், கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் ஆகிய முப்பெரும் விழாவில் தேசிய விருது பெற்ற ரமேஷின் கரகாட்டத்தை சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த அரபியரைக் கவர்ந்திருந்தது.

துவக்கமாக அஜ்மான் அமீரக தமிழர்கள் அமைப்பின் மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஷேக் காலித் பின் சயீத் அல் நுயமி, முஹம்மது அப்துல்லாஹ் அல்வான், சுல்தான் அப்துல்லாஹ் ராஷித் அல் மத்ரூஸி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை உலக நட்புறவுக் கழகத்தின் சார்பில் 'சாதனையாளர்' விருது இலக்கியத்திற்காக கவிஞர் பா. இராமலிங்கம், மருத்துவ சேவைக்காக குடந்தை அன்பு மருத்துவமனை நிறுவனர் சாக்கோட்டை க. அன்பழகன், கல்விப் பணிக்காக நவநீதகிருஷ்ணன், சிவ் ஸ்டார் பவன் கோவிந்தராஜன், அண்டா டிராவல்ஸ் மேலாளர் பொதக்குடி ஜெய்னுலாபுதீன், சென்னை டாக்டர் பி. தங்கராஜ், டாக்டர் சுந்தரம், பாபு தாமஸ் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

விழாவில் வாழ்த்துரை வழங்கிய குடந்தை அன்பு மருத்துவமனை நிறுவனர் க. அன்பழகன் தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவின் உயர்வுக்கு அண்ணியச் செலவாணி மூலம் முக்கியப் பங்காற்றி வருவது வெளிநாடு வாழ் இந்தியர்களே என்றார்.

ஈடிஏ ஸ்கை எக்ஸ்பிரஸ் இயக்குநர் சென்னை சங்கமத்தில் இருப்பது போன்ற உணர்வை இவ்விழா ஏற்படுதியதாக குறிப்பிட்டார். தமிழர்களின் உயர்வுக்கு காரணமாக இருந்து வரும் அஜ்மான் ஷேக்கைப் பாராட்டினார். இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனராஜ் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஜ்மான் மூர்த்தியுடன் இணைந்து அவர்களது குடும்பத்திற்கு உதவித்தொகையை வழங்கினார்.

அஜ்மான் இந்திய சங்க பொதுச்செயலாளர் அஹ்மத் கான், மன்னார்குடி சமூக சேவகர் கே. மலர்வேந்தன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி குழுவினரின் நாட்டுப்புறப்பாடல் இசை நிகழ்ச்சி மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை ஆர்ப்பரிக்க வைப்பதாய் அமைந்திருந்தது.

குழந்தைகளின் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாய் முப்பெரும் விழா இருந்தது.விழா சிறப்புற நடைபெற அஜ்மான் மூர்த்தி தலைமையிலான குழுவினர் சிறப்புடன் செயல்பட்டனர்.

நிகழ்ச்சியினை சங்கமம் தொலைக்காட்சியின் இயக்குநர் கலையன்பன் தொகுத்து வழங்கினார்.

தேசிய விருது பெற்ற ரமேஷின் கரகாட்டம்



விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்

Thursday, January 24, 2008

அஞ்சல் வழியில் அரபி மொழி

அஞ்சல் வழியில் அரபி மொழி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ரேடியோ கெய்ரோ அரபி மொழியினை ஒலிபரப்பி வருகிறது. இதனைக் கேட்கும் நேயர்களுக்கு அரபி மொழி பயில புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.

அரபி மொழி பயிலக்கூடிய புத்தகங்களை இலவசமாகப் பெற தங்களது சுய குறிப்புகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி பெறலாம்.

Radio Cairo
Arabic By Radio
P O Box No. 325
Cairo
P.C.N. 11611
A.R.EGYPT

துபாய் கல்வி நிறுவனங்கள்

துபாயில் உயர் கல்வி வழங்கும் தமிழ் நிறுவனம்

துபாயில் விஸ்டம் இன்ஸ்டிடியூட் உயர்கல்வியினை வழங்கி வருகிறது. இங்கு பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்களின் உயர்கல்வியினை தொடர்கல்வி மூலம் வழங்கி வருகிறது.

தொடர்புக்கு

விஸ்டம் இன்ஸ்டிடியூட்
துபாய் : 04 396 44 55
அபுதாபி : 02 621 44 74

மின்னஞ்சல் : wisdom@emirates.net.ae

மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் ( Off campus Center )

Block 3 Dubai Knowlege village
Tel : 04 3902981 / 82
E mail : contact@mgudxboc.com
www.mgudxboc.com

Courses : MBA ( Regular & Weekend ) , B.Com, BBA, BBM, BCA , BSc ( Computer Science ), BTS ( Bachelor of Tourism Studies )


Rajagiri International School
P O Box NO. 500438
Al Warqa'a
Dubai
UAE
Tel : 04 2800 691
Fax : 04 2800 692
E mail : info@risdubai.org
www.risdubai.org


Link India Educational Consultancy Center
P O Box No 55246
No 5 Al Nakheel Center
Deira
Dubai
Tel : 04 223 9224 / 223 4660
Mobile : 050 8428319

www.linkindia.org
E mail : linkindiagcc@yahoo.com

இறக்கத்துக்கு தமிழ் மென்புத்தகங்கள்

இறக்கத்துக்கு தமிழ் மென்புத்தகங்கள்

இணையத்தில் காணக்கிடைக்கும் சில தமிழ் மென் நூல்களின் தொகுப்பு இங்கே.சுட்டியை சொடுக்கி நீங்கள் இம்மென்நூல்களை இறக்கம் செய்து கொள்ளலாம். இப்புத்தகங்களை படிக்க அடோபி அக்ரோபாட் ரீடர் போன்ற pdf reader ஒன்று தேவைப்படும்.
இப்பக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வாருங்கள்.மேலும் பல நூல்கள் இந்த வரிசையில் வந்து சேரலாம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது
http://rapidshare.com/files/19316245/Inna_Naarpathu_Iniyavai_Naarpadhu.pdf

காளமேகப்புலவர் பாடல்கள்
http://rapidshare.com/files/19316246/Kalamega_Pulavar_Paadalgal.pdf

பட்டிணப்பாலை
http://rapidshare.com/files/19316247/Pattinappaalai.pdf

பழமொழி நானூறு
http://rapidshare.com/files/19316248/Pazhamozhi_Naanooru.pdf

பிரதாப முதலியார் சரித்திரம்
http://rapidshare.com/files/19316249/Prathaba-Mudaliyar-Charithiram.pdf

ஆங்கிலம் வழி தமிழ் இலக்கணம் கற்க
http://rapidshare.com/files/19316251/Tamil-Grammar-in-Easy-English.pdf

தொல்காப்பியம்
http://rapidshare.com/files/19316253/Tholkaapiyam.pdf

திருக்குறள் அதன் பொருளோடு
http://rapidshare.com/files/19316252/Thirukkural_with_Meanings.pdf

கவிஞர் வைரமுத்துவின் தண்ணீர்தேசம்
http://rapidshare.com/files/19316254/Thanneer_Desam.pdf

திருக்குறள் மென்பொருள்
http://rapidshare.com/files/8230465/ViralNuniyilKural.zip

சுஜாதாவின் எல்டோரடோ
http://www.esnips.com/nsdoc/baf7063f-589c-478b-9af0-82f676d4895d

சுஜாதாவின் எப்படியும் வாழலாம்
http://www.esnips.com/nsdoc/783f44a3-df2f-4c6d-ae58-1177d84733f2

சுஜாதாவின் காரணம்
http://www.esnips.com/nsdoc/77d4963c-80eb-4193-9f77-c35a95df1818

சுஜாதாவின் ஜன்னல்
http://www.esnips.com/nsdoc/aeb282fe-40f4-4ca2-acbf-fda726cbe1bf

சுஜாதாவின் கால்கள்
http://www.esnips.com/nsdoc/df054c73-b9d3-4f5c-893b-8740aa9fd09a

சுஜாதாவின் இளநீர்
http://www.esnips.com/nsdoc/08a6adaa-2ffd-49f6-9bcd-24826e2107c5

சுஜாதாவின் நகரம்
http://www.esnips.com/nsdoc/d3be0434-6d21-4b77-a479-78a3d959ac6d

சுஜாதாவின் அம்மா மண்டபம்
http://www.esnips.com/nsdoc/72f230b3-9144-4122-9574-53aece733d9d

சுஜாதாவின் அரங்கேற்றம்
http://www.esnips.com/nsdoc/48de5d17-4c5c-435d-9a17-83c4eb57535b

சுஜாதாவின் அரிசி
http://www.esnips.com/nsdoc/01f77bd4-7093-4e3c-a93a-4d74f8e21858

சுஜாதாவின் கர்பியூ
http://www.esnips.com/nsdoc/9246ae98-db4f-498d-9181-433017a8110d

சுஜாதாவின் எங்கே என் விஜய்
http://www.esnips.com/nsdoc/fdc23d03-a331-4d03-b0f5-a73ca6a822c7

சுஜாதாவின் பிலிம் உத்சவ்
http://www.esnips.com/nsdoc/c7e23176-c910-46b1-bb74-715fd06bd836

கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1A
http://www.esnips.com/nsdoc/31e16bb3-26c0-447b-82d4-f93089549aeb

கல்கியின் பொன்னியின் செல்வன் பாகம் 1B
http://www.esnips.com/nsdoc/ad2fe93c-cd67-4a66-9693-2a71b0122517

கல்கியின் சிவகாமியின் சபதம்
http://www.esnips.com/nsdoc/af31a560-2e28-4641-89d3-60addd1541c0

கல்கியின் அலையோசை பாகம் 1
http://www.esnips.com/nsdoc/108b9d0a-da79-4cd4-8a8d-ee2958868e38

கல்கியின் அலையோசை பாகம் 2
http://www.esnips.com/nsdoc/7ec1fa64-28e5-4592-8a9c-f2012e48ecff

கல்கியின் அலையோசை பாகம் 3
http://www.esnips.com/nsdoc/184144e8-fe0d-4845-8cc4-02be84b9bfca

கல்கியின் அலையோசை பாகம் 4
http://www.esnips.com/nsdoc/88c3ab7b-9113-48eb-8481-0e94850c6015

சோலைமலை இளவரசி
http://www.esnips.com/nsdoc/e4f67db3-8c01-4565-9219-a37fdf9af117

ராம கிருட்டினணின் அயல் சினிமா
http://www.esnips.com/nsdoc/570ba27b-c03c-460c-b5fa-961ac0656937

மாணிக்கவாசகரின் திருவாசகம்
http://www.esnips.com/nsdoc/51154e63-565c-41f8-ad33-396650f35efd

திருமந்திரம்
http://www.esnips.com/nsdoc/999cd506-bb33-4554-b279-79084312b236

பாரதியின் பாஞ்சாலி சபதம்
http://www.esnips.com/nsdoc/86dcd3fe-d31b-4f22-8edc-a0e906ae7ddd

நம்பிக்கை
http://www.esnips.com/nsdoc/6d7a8f83-afde-42f9-affe-0eaad0e4b41e

பட்டிணத்தார் பாடல்கள்
http://www.esnips.com/nsdoc/023cc252-7b8e-4b02-8ed7-f28143155e05

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 2
http://www.esnips.com/nsdoc/40cebc5f-5d41-482f-ae2f-1e1992717638

தமிழ் எண்கள்
http://www.esnips.com/nsdoc/0bbf8cce-7089-45e2-9060-e0d143d4d5c7

பத்திரகிரியார் பாடல்கள்
http://www.esnips.com/nsdoc/eaff2460-5dfa-42b4-a8c2-e127ade1a9b5

திருமந்திர சிந்தனைகள்
http://www.esnips.com/nsdoc/4e840d65-5f85-47c4-b635-d087ce548929

Updated
சீரகம்
http://www.esnips.com/nsdoc/113d3029-324b-46e8-b3df-9cd377d09df8

அலர்ஜி
http://www.esnips.com/nsdoc/3a9563c5-4bbe-4fa1-9483-c54ebb80acf9

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பாகம் 1
http://www.esnips.com/nsdoc/1c22a39c-bd85-4c45-aa35-9e17cd317376

அந்திமகாலம்
http://www.esnips.com/nsdoc/7dfee137-9d52-4c45-b6aa-6873d8b639ea

மணிமேகலை
http://www.esnips.com/nsdoc/b62039bc-ea44-4fe4-95c8-580db3d2067f

பாரதிதாசனின் தமிழச்சியின் கதை
http://www.esnips.com/nsdoc/b1778b3b-4660-4e76-a16d-b951f3eaeb6e

பாரதிதாசனின் பாண்டியன் பரிசு
http://www.esnips.com/nsdoc/a20ad3c3-b52a-41ba-9063-0bfecacdcc0d

பாரதியின் பாஞ்சாலி சபதம்
http://www.esnips.com/nsdoc/eeadf69b-ac00-4a01-b75b-1ef9beee6bf2

பா.ரா வின் மாயவலை
http://www.esnips.com/nsdoc/160152b9-829a-403c-86b9-73dc4d872ce4

சிலப்பதிகாரம் பாகம் 1
http://www.esnips.com/nsdoc/6130d462-65a5-481d-8f9e-3a6be19bda05

சிலப்பதிகாரம் பாகம் 2
http://www.esnips.com/nsdoc/ca62a41c-2938-4991-a616-d83f0b211475

சிலப்பதிகாரம் பாகம் 3
http://www.esnips.com/nsdoc/37590761-a6e3-4899-a2d3-79aab9df4d1c

பாரதியின் சந்திரிகையின் கதை
http://www.esnips.com/nsdoc/c6823330-5ed1-4211-9b15-786f8eda583a

கந்தர் சஷ்டி கவசம்
http://www.esnips.com/nsdoc/ff5f8f68-ad87-4c7c-81e1-a361b660f16a

வியர்வை
http://www.esnips.com/nsdoc/2221caf2-547a-4375-93d7-1add3dc54749

நெல்லிக்கனி
http://www.esnips.com/nsdoc/0f477670-1f6f-4c0c-8c01-557b15bd3c96

இந்திய மருத்துவம்
http://www.esnips.com/nsdoc/075d8d08-ea05-444c-8b62-3ebfbed3d9cb

ஆரோக்கியம்
http://www.esnips.com/nsdoc/1e753caf-929c-4bbf-92f1-c46dbe4491f5

பப்பாளி
http://www.esnips.com/nsdoc/27b5ab7e-c435-4946-b0ce-12e9174d3d6c

புறநானூறு
http://www.esnips.com/nsdoc/226bbb74-31f6-430a-9558-6a10fc91eff0

புணர்ச்சி
http://www.esnips.com/nsdoc/1e968807-73d4-47dc-93af-90eb9e443136

வைட்டமின்கள்
http://www.esnips.com/nsdoc/63644f43-a1dc-4876-ba13-33611a582ddb

மாதுளை
http://www.esnips.com/nsdoc/d448e769-a715-4181-8656-b3159a3a874b

வாழைப்பழம்
http://www.esnips.com/nsdoc/26df4ac9-2ccc-4a6e-870f-7369133c5d98

மனித உடலில் கடிகாரம்
http://www.esnips.com/nsdoc/6b376398-0dfb-47cf-b4ff-2576d546b272

எண்ணம்
http://www.esnips.com/nsdoc/05299ae4-4f88-4a32-ba39-40027f25b462

வெங்காயம்
http://www.esnips.com/nsdoc/f8bfd30f-aeaf-4924-9f94-1c1395a69dde

முதுகுவலி
http://www.esnips.com/nsdoc/7971b717-e9d6-42ca-8cc1-fd09c3e8b722

சுக்கு
http://www.esnips.com/nsdoc/6131d
--~--~---------~--~----~------------~-------~--~----~
தமிழ் இணையம்,

தமிழர்களின் இணையத் தளங்களைப் பற்றியும், தமிழ் சார்ந்த இணையத் தளங்கள் பற்றியும் சுட்டிகளை அளித்து அதனை விமர்சிப்பதோடு, உபயோகமளிக்கும் பல சுட்டிகளை இக்குழுமம் மூலம் உறுப்பினர்களுக்கு அளிப்பதே இக்குழுமத்தின் நோக்கம்.

NAF (Net Achievers Forum)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...

இந்த இனிய செய்தியை NAF (Net Achievers Forum)யிலிருந்து தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்க்காக தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். தகவல் தொழில் நுட்பத் துறையில் தமிழக இஸ்லாமிய மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும். அவர்களது எதிர்காலம் மேம்பட வேண்டும் அத்துடன் இஸ்லாமிய ஒழுக்கவிழுமியங்களை பேணி நடக்க வேண்டும் என்ற சீரிய சிந்தனையின் விளைவாத்தான் NAF தான் தனது பணிகளை செய்து வருகின்றது.

தகவல் தொழில் நுட்பத்துறையில் வலைமனை மேலான்மையியலில் இந்தியா, குவைத், துபாய், சவூதி... போன்ற நாடுகளில் பணிபுரிய சிறந்த வல்லுநர்களைக்கொண்டு திறம் பட செயலாற்றி வருகிறது NAF. ஒவ்வொருவரும் தங்களது தனித்தன்மையையும், தொழில் திறமையையும் வளர்த்துக்கொள்ளவும், தமிழ் இஸ்லாமியச் சமூகத்திற்க்காக தங்களால் இயன்ற தகவல் தொழில் நுட்பத்துறை மூலமாக சேவைகளைச் செய்யவும் NAFஐ நாடுவது நலம்.

இத்துறையில் புதிதாக தடம் பதித்தவர்களையும், தயாராக இருக்கும் மாணவர்களையும் ஊக்குவித்தும், அவர்களுக்கு தனித்தனியே பயிற்சி யளித்தும் மேன்மேலும் மெருகூட்டி இத்துறையில் சாதனைபடைக்க அனுப்பிவைக்கிறது NAF.

தற்போது புதிய திட்டமாக சிஸ்கோ மற்றும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்களின் புதிய பாடத்திட்டங்களுக்கான பயிற்சி முகாம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி இரண்டாம் தேதியிலிருந்து துவங்க இருக்கும் இம்முகாம் அறுபது நாட்களுக்கு இன்ஷா அல்லாஹ் நடக்க உள்ளது. இச்செய்தியை வாசிக்கும் தமிழகத்தைச் சார்ந்த இஸ்லாமியர்கள் யாவரும் இப்பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயனடைந்து அதன் மூலம் நம் சமூகத்திற்கும் பயன் தரவேண்டும் என்று இத்தருணத்தில் அறிவுருத்துகின்றோம்.

பாடத்திட்டம் : CCNA / MCSA Combo Package
பயிற்சிக் காலம் : இரண்டு மாதங்கள் (60 நாட்கள்)
பயிற்சித் துவக்கம் : 2ஆம் தேதி பிப்ரவரி
பயிற்சிக்கூடம் : அசோக்நகர் - சென்னை - இந்தியா
பயிற்சிக்காக விண்ணப்பிக்க : சகோ. முஹம்மது ரஃபி - 0091-9894307261
சகோ. ஸையது அன்ஸாரி - 0091-9283255170
மின்னஞ்சல்கள் : n_rafi_tvl@yahoo.com மற்றும் syedansari_86@yahoo.co.in

வேண்டுகோள் – குறைவான இடங்களே இருப்பதால் சகோதரர்கள் விரைந்து பதிவு செய்துகொள்ளவும். பாடத்திட்டம் குறித்த விரிவான தகவல்களுக்கு தங்களது சுயவிவரங்களுடன் மேலுள்ள முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

Message from


shanawas_a@yahoo.com.sg

மகிழ்ச்சி,துன்பம்

மகிழ்ச்சி,துன்பம்

பொதுவாக சில மனிதர்கள் நிகழ் காலத்தில் வாழ்வதில்லை. கடந்த காலத்திலேயே தங்கிவிடுகிறார்கள். கடந்த காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை எதிர் காலத்திற்கும் கொண்டு செல்வார்கள். அதன் மூலம் தனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியையும் துன்பகரமான நோக்கிலேயே நோட்டமிடுவார்கள்.

இப்படிப் பட்டவர்கள் தன்னுடைய மகிழ்ச்சியை குறித்து சிந்திப்பதேயில்லை. இவர்கள் தங்களைத் தானே மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வார்கள். எப்போதும் இவர்கள் மனம் கவலையோடே நிரம்பி யிருக்கும். முகத்தில் சோர்வு நிலை தாண்டவமாடும். இவர்கள் சிந்தனையெல்லாம் வருங்காலத்தில் என்ன துன்பம் நேரப் போகிறதோ என்றுதான் இல்லை. கடந்த காலத்தில் ஏற்பட்ட துன்பங்கள் குறித்துத் தான் இருக்கும்.

இவர்கள் எதற்கும் திருப்தி அடையாதவர்களாய் இருப்பார்கள். பிறரைப் பற்றி இவர்கள் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. மற்றவர்களுக்கு அறிவுரை என்னும் பேரில் ஏதாவது சொல்லி அவர்களது இன்பத்தையும் கெடுப்பார்கள். இவர்கள் எந்நேரமும் தன்னுடைய கவலைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதால், இவர்கள் பேச்சிலும் கவலைதான் தெறிக்கும். இவர்களின் வார்த்தைகள் அவ நம்பிக்கையால் சலவை செய்யப் பட்டிருக்கும்.

இப்படி இவர்கள், தேவையில்லாத அவசியமில்லாத விஷயங்களுக்காக கவலைப்படுவதனால், இவர்களின் அன்றாட வாழ்க்கை அவதிக்குரியதாக இருக்கும். இவர்கள் வருங்காலத்தின் மேல் அளவற்ற அவ நம்பிக்கையும் பயமும் கொணடிருப்பார்கள். இந்தப் பிரச்சனை வருமோ அந்தப் பிரச்சனை வருமோ யென்று, வரப்போகாத பிரச்சனைகளும் வந்து விடுமோயென சந்தேகப் படுவார்கள். அது அவர்களின் மனப்பான்மையை சுருக்கி விடுகிறது. நோய்களை வாழ்நாள் குத்தகையாக ஆக்கிக்கொள்கிறது.

ஒரு மனிதன் தனக்கு இன்பம் வரப்போகிறது. இன்பம் மட்டும்தான் வரப்போகிறது என்று எண்ணும் குணம் உடையவானக இருப்பானாயின் அவனுக்கு நிச்சயமாய. இன்பம்தான் நேரும். அப்படியே துன்பம் நேர்ந்தாலும், அந்த துன்பமானது அவனை பெரிதளவில் பாதிக்காது. ஆனால் எவனொருவன் தனக்கு துன்பம் நேர்ந்துவிடுமோ என பயப்படுகிறானோ, அவனுக்கு நிகழப்போகும் இன்பம் கூட துன்பமாகவே காட்சியளிக்கிறது. ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஒரு சிறு துன்பம் நேர்ந்துவிட்டால் கூட போதும், அதை அவன் பூதக்கண்ணாடி கொண்டு பார்ப்பான்.

ஆக, எண்ணத்தில் இருப்பதுதான் செயல்படிவம் பெறும். அதற்காகத்தான் நம் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் 'கனவு காணுங்கள்' என்றார். உன் மனம் நல்லதையே நினைக்குமானால், உனக்கு நிகழக்கூடியவை அனைத்தும் நல்லதாகவே அமையும். எதிர்மாறாக உன் மனம் துன்பத்தில் கிடக்கு மானால் நிகழும் நன்மைக்கூட துன்பமாகவே காட்சியளிக்கும்.

ஒருவன் காட்டு வழியாக சென்று கொணடிருந்தான். சூரியனின் வெப்பம் தாள முடியாமல் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கினான். அப்போது அவனுக்கு தாகமாக இருந்தது. குடிக்கத் தண்ணீர் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைத்தான். என்ன ஆச்சரியம், எங்கிருந்தோ தண்ணீர் வந்தது.

அதைப் போலவே சாப்பிட உணவு கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான், அவ்வாறு உணவும் வந்தது. சற்று நேரம் இந்த மரத்து நிழலில் தூங்கிவிட்டு செல்ல ஒரு கட்டில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான். அவ்வாறே கட்டிலும் கிடைத்தது.
அவனது உள்ளத்தில் திடீரென்று ஒரு சஞ்சலம், இப்படி ஒரு காட்டில் தன்னந்தனியாக படுத்துக் கொண்டிருக்கிறோமே, ஏதாவது புலி நம்மை அடித்தால் என்ன செய்வது என்று நினைத்தான். அவன் நினைத்தது போல புலியால் அடிக்கப்பட்டு இறந்தான்.
இப்படித்தான் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நடந்து கொணடிருக்கிறது. எல்லாம் நன்மைக்கே என்று நினைப்பவனுக்கு நல்லவை நடக்கிறது. சஞ்சலம் உடையவனுக்கு அதற்கேற்றார் போல் நடக்கிறது.

மனிதன் நிகழ்காலத்தை வைத்து எதிர்காலத்தை கணிக்கக் கூடிய ஆற்றல் உடையவனாக இருந்தாலும், அவன் கணித்தவாறே நடக்கும் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. எல்லாம் நம்பிக்கைதான்.

பூமியிலிருந்து வேற்று கோள்களுக்கு அனுப்பும் விஞ்ஞானிகள், இந்த விண்கலம் இந்த நேரத்தில் இங்கே தரையிரங்கும், இங்கிருந்து இன்னயின்ன விஷயத்தை படம் பிடித்து அனுப்பும் என்று சொன்னால்கூட அதில் அவர்களுக்கு தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் தான் நம்பிக்கை இருக்கும். ஒரு சதவிகிதம் சஞ்சலம் இருக்கும். ஆனால் அதை அவர்கள் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். முழு உறுதியோடு செயல்படுவார்கள்.

இப்படி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் முன்பே அது போய்ச் சேருமா, இல்லை கோளாறு ஏற்படுமா, இல்லை விபத்து நேருமா என்று விஞ்ஞானிகளுக்கு தெரிய வந்தால், அதற்கேற்றாற் போல் செயல்படுவார்கள். ஆனால் இவைகள் எதிர்பாராமல் நிகழும்போது ஏமாற்றம் தான்.

இங்கே "எதிர்பாராமல்" என்ற வார்த்தைதான் நாம் கவனிக்க வேண்டியது. ஏனெனில் அது எதிர்காலத்தோடு தொடர்புடையது. ஒரு மனிதன் தனக்கு வருங்காலத்தில் அளவற்ற செல்வங்கள் கிடைக்கப் போகிறது என்றால், இப்போதிலிருந்து அவன் சோம்பேறி ஆகிவிடுவான். இதுவே ஒரு மனிதனுக்கு துன்பம் நேரிடப் போகிறது என்று தெரிந்தால், இப்போதிருந்தே அவன் இன்பத்தை தொலைத்து விடுவான்.

ஆகையால்தான், எதிர்காலம் எதிர்பாராதவையால் சூழப்பட்டிருக்கிறது. என்னதான் எதிர்காலம் எதிர் பாராதவையால் சூழப்பட்டிருந்தாலும், நிகழ்காலத்தை அடிப்படையாகக் கொண்டே வருங்காலம் வடிவமைக்கப்படுகிறது. நிகழ்காலத்தில் அவன் சிந்தனையும் செயலும் சிறப்பாய் இருந்தால் எதிர் காலமும் அவ்வாறே அமையும்.

நிகழ்காலத்தில் சிந்தனையில் தெளிவு இல்லாமலும் செயலில் பிரகாசமில்லாமலும் இருப்பவன் எதிகாலத்தையும் அவ்வாறே அமைத்துக் கொள்கிறான். இவர்கள் படுக்கையறையையும் விட்டு வைப்பதில்லை. அங்கேயும் துன்பத்தோடு புரண்டு புரண்டு படுப்பார்கள். தூக்கத்தை கெடுத்துக் கொண்டு துக்கத்தை அதிகரிப்பார்கள்.

மனிதனுக்கு தூக்கம் என்பது, அவன் துயர்கள் அனைத்தையும் மறப்பதற்காகவும், உழைத்து உழைத்து களைத்த உடம்பிற்கு ஓய்வு தந்து, மீண்டும் உழைப்பதற்கான ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் பெறுவதற்காகத் தான்.

ஆனால் பெரும்பாலோர் என்ன செய்கிறார்கள். இரவு நேரத்தில் சரிவர தூங்குகிறார்களா? இல்லை. நாளை எப்படி இருக்குமோ, என்ன நடக்குமோ என்று கவலைப்படுகிறார்கள். பகலைத்தான் இன்பமாக கழிக்க வில்லை என்றால், இரவையும் அவ்வாறே கழிக்கிறார்கள்.
இன்னும் சிலரின் கவலைகள் வித்தியாசமானது. அவர்கள் தனக்கு தூக்கம் வரவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டு, தன் மனத்தை உறுத்திக் கொண்டிருப்பார்கள். அதுவே அவர்களின் தூக்கத்திற்கு பெருந்தடையாக அமைந்துவிடும்.

நாம் சிறப்பாய் செயல்படுவதற்காக எப்படியெல்லாம் பயிற்சியை மேற்கொள்கிறோமோ, அவ்வாறே தூங்குவதற்கும் சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அந்த பயிற்சி ஒன்றுமில்லை. பகலில் செய்ய வேண்டியதை ஒழுங்காய் செய்வதுதான்.
ஆக சீரான தூக்கத்திற்குக்கூட பயிற்சி அவசியமாகிறது. நாம் படுக்கைக்கு செல்லும் முன் நம் மனத்திலுள்ள பிரச்சனைகளை, சிக்கல்களை எல்லாம் விரட்டி விட்டு மன அமைதியோடு படுக்கைக்கு சென்றால் நிச்சயம் நல்ல தூக்கம் வரும். படுக்கையில் நம் உடலை அலட்டிக் கொள்ளாமல் தொய்வாய் படுக்க வேண்டும். முக்கியமாய் தூக்கம் வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி, கண்களை மூடி்க் கொண்டு "நான் நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருக்கிறேன்" என்ற எண்ணத்தை மனத்தில் ஓடவிட வேண்டும்.

மனிதனுக்கு இன்றை தினமென்பது நிச்சயம், அது அவனுக்குச் சொந்தமானது. ஆனால் நாளை என்பதோ நிச்சயமற்றது. அதை அவன் சொந்தம் கொணடாட தகுதி அற்றவன். ஏனெனில் நாளை என்பதில் அவனே இல்லாமல் கூட போகலாம்.

ஆகையால்தான் இருக்கும் இன்றினை மனநிறைவோடு வாழக் கற்றுக் கொள் என்று மேதாவிகள் சொல்கிறார்கள்.

இன்று என்பது நேற்றாகிறது. நாளை என்பது இன்றாகிறது. ஆகையால் இன்றை எவன் கவலைப்படாமல் மன அமைதியோடு வாழ்கிறானோ, அவன் நேற்றையும் நாளையும் அவ்வாறே வாழ்ந்தான், வாழ்வான்.

நேற்று என்பது நினைவு, நாளை என்பது நம்பிக்கை. மனிதனுக்கு நாளை பற்றிய பயத்தை கட்டுப் படுத்தும் உணர்ச்சி பெரும்பாலும் குறைவாகவே இருக்கின்றன. இந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் இல்லாதவன் கவலைப்படுகிறான். பயப்படுகிறான். இப்படியே தினந்தினம் அவன் செத்துப் பிழைக்கிறான். இதன் காரணமாக அவனுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. பின் நரம்பு தளர்ச்சி, மூளை பாதிப்பு போன்றவற்றால் பாதிப்பிற்கு உள்ளாகிறான்.

ஆனால் இத்தகைய பய உணர்ச்சி அற்றவனோ, இல்லை இதையெல்லாம் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையவனோ, இத்தகைய மன அழுத்தத்திற்கு உள்ளாவதில்லை. அவன் எதையும் சமாளிக்க தயாராக இருப்பான்.

மன அழுத்தம் நம்மை ஆட்கொணடால் முதலில் மனம் சோர்ந்து போகிறது. பின் உடல் சோர்ந்து போகிறது. தலைவலி, மூச்சு வாங்குதல், எதற்கும் நமபிக்கையற்ற தன்மை, அழுகையென அது நம்மை வழி நடத்துகிறது.

நாம் எந்தச் சூழ்நிலையையும், பிரச்சனையையும் சமாளிக்கக் கூடியவானாக நம்மை பழக்கிக் கொள்ள வேண்டும். நடந்தவைகளுக்காக நாம் கவலைப்படுவதால் என்ன ஆகிவிடப் போகிறது. அது முடிந்து விட்டதுதானே. இனி நடக்கப்போவதைத்தானே நாம் வசப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்ற உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சென்றவைகளைப் பற்றி நினைத்து, நாம் ஏன் நம் கண்ணீரை வீணாக்க வேண்டும். ஞானி அனக்ஸாகரஸ் என்பவரிடம் ஒருவர் ஓடி வந்து "ஐயா, தங்கள் மகன் இறந்து விட்டான்" என்ற இழவுச் செய்தியை சொல்கிறான். இதைக் கேட்டதும் ஞானி அனக்ஸாகரஸ் "இதில் என்ன இருக்கிறது. எல்லோரும் இறக்க வேண்டியவர்கள்தான் என்று கவலைப்படாமல் பதிலளித்தாராம்.

ஞானியாய் இருப்பதால் அவருக்கு இந்த விஷயம் பாதிப்பை தராமல் இருக்கலாம். ஆனால் சராசரி மனிதர்களுக்கோ இந்தச் செய்தி கண்டிப்பாய் பாதிப்பை தரும்.

உயிரை இழப்பதுதான் உச்சக்கட்டம். ஆகையால் நாம் உயிர் இழப்பு தவிர்த்து வேறு எந்தப் பிரச்சனைக்கும் கவலையடையக் கூடாது என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். சொல்லப் போனால் இந்த உயிர் இழப்பால் ஏற்படும் கவலை கூட காலப்போக்கில் காணாமல் போய்விடும் என்பது உண்மை.

ஆகவே இருக்கும் காலத்தை ஆனந்தத்தோடு, மன அழுத்தம் இல்லாமல், பிரச்சனைகளை சமாளிக்கும் துணிவோடு வாழ்வோமாக.

Mail sent by

ahamed anas

சித்த மருத்துவ ஏடு!

பலவித நோய்களின் பிடியில் சிககிதவிக்கும் நமக்கு அதற்கான மருந்து நம் வீட்டிலேயே இருப்பது தெரியாது. அதற்கான வழிகாட்டியே கீழ்க்காணும் சித்த மருத்துவ ஏடு. ஆக கீழ் குருப்பிட்டிருக்கும் சுட்டியை சொடுக்கி வாசித்து பயன்பெறவும்.

http://eegarai.blogspot.com/


Message from :

kuttyvaidhyar@yahoo.com

Tuesday, January 22, 2008

14 வயதில் 29 பதக்கங்களை குவித்த பள்ளி மாணவன்

14 வயதில் 29 பதக்கங்களை குவித்த பள்ளி மாணவன்

செங்கோட்டை: 14 வயதே நிரம்பிய 9ம் வகுப்பு மாணவன், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று 29 பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டை காசுக்கடை பஜார் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேனின் மகன் முகமது முஸ்தபா (14). பழைய குற்றாலத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜாகீர் உசேன் கடந்த 8 வருடங்களாக குங்பூ, கராத்தே, ஊசூ, சிலம்பம், வாள் சுழற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை குவித்துள்ளார்.

இவர் இதுவரை 17 தங்கம், 12 சில்வர், 2 வெண்கலம் பதக்கங்களையும் பெற்றுள்ளான். மேலும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த மாநில ஊசூ சாம்பியன்ஷிப் போட்டியில் சப்-சீனியர் பிரிவில் இரண்டாம் பரிசும், திருநெல்வேலியில் நடைபெற்ற மாநில கிக்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியின் கட்டா பிரிவில் முதல் பரிசும் பெற்றுள்ளார்.

ஏராளமான போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ள இம்மாணவருக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்த ஆண்டு முதல் கல்வி உதவித் தொகையாக ரூ.1,600 வழங்கியுள்ளது. இந்த உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.பிரகாஷ் வழங்கி இம்மாணவரை பாராட்டினார்.

மேலும் இவர் வருடம் தோறும் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் குற்றால சாரல் விழாவில் வீரதீர விளையாட்டினை தொடர்ந்து நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த வயதில் பிளாக் பெல்ட், கலைமதி விருது, உள்ளிட்ட பல்வேறு விருதுகள், நூற்றுக்கணக்கான கேடயம், சான்றிதழ்களை வீரதீர விளையாட்டுகள் மூலம் இம்மாணவன் பெற்றுள்ளான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீரவாஞ்சி நாதன் பிறந்த செங்கோட்டையில் பிறந்த இம்மாணவர் வீரதீர விளையாட்டுகள் மூலம் சாதனை படைத்து வருவது நெல்லை மாவட்டத்துக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

www.thatstamil.com

அமீரக உணவகங்கள்

அமீரக உணவகங்கள்

துபாய்

ஆச்சி செட்டிநாடு ரெஸ்டாரண்ட்
அல் முதீனா ரோடு
மார்க்கோ போலா ஹோட்டல் எதிரில்
தேரா
துபாய்

தொலைபேசி : 04 2730 733
மொபைல் : 050 976 00 88

பணம் பணமறிய அவா

பணம் பணமறிய அவா
- கொடுவாய் ஜாஃபர்சாதிக் பாகவி -

அன்னை தேசத்துஅகதிகள் நாம்
எண்ணெய் தேசங்களில் எரிந்து கொண்டிருக்கிறோம்!
அடிவயிற்றில் பதிந்தவறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள் அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ளமாமிசத் துண்டுகள் நாம்!
கண் தெரியா தேசத்தில் விழுந்து காயங்கள்
தலை சாய்த்துக்கண்ணீர் வடிக்கிறோம்!
மொத்தக் குடும்பத்தையும் முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப் படாத் திசைகளில்
தொடர்கிறது நம் பயணம்!

ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா என்றுதான்
கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா என்றல்லவா
பதில் வருகிறது!
நமக்கு மட்டும் ஏன்
பணம் பந்த பாசங்களின் சமாதியாகி விட்டது?

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப் பெற்று விடுகிறது நம் பெருநாட்கள் ஒவ்வொன்றும்....
உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?
கலவரத்தில கைக் குழந்தையைத் தொலைத்த தாயின்
பதற்றத்தைப் போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசியபின்னால்
அடையும் அவஸ்தைகள்......நம்மில்
பலருக்கு தாம்பத்திய வாழ்க்கை கூட
தவணை முறையில்தான் தட்டுப்படுகிறது....
தொலைபேசியிலும் தபாலிலும் கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில் இல்லறம் நடக்கிறது...
மனைவியின்மூச்சுக் காற்று தந்த சுகம் கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!
குடும்ப விளக்குகளை கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம் தன்னந்தனியாய் இந்தத் தீவுகளில்...
வீடு கூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?

உயிரோடு இருக்கும்பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான் கொடுக்க முடிகிறது செல்ல முத்தங்கள்!
என்ன இருந்தாலும் காகிதங்கள் உணருமா பாசத்தின் ருசி
ஒவ்வொரு முறையும் ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும் எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!

காலத்தின்இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல் வெறும் கடிதம் போடத்தானா?
பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல தபால்களுக்காக....

வாழ்க்கையின் பாதி விரக்தியிலும், விரகத் தீயிலும் எரிந்து போகும்
நம் வாலிப வாழ்க்கை கடைசியில் நரம்புகள் அறுந்து போய்
முகாரி பாடும் வீணைகளாய்...
என்ன சொல்லி என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரைத்தான் யார் அறிவார்?

எழுதியவர்:கொடுவாய் ஜாஃபர்சாதிக் பாகவி

கருத்து

shaikdawood mohamedfarook
dateFri, Aug 28, 2009 at 2:31 PM
subjectThanks

Dear Mr.Hidayath,

Assalamu Alaiqum,

Thank you very much for your service to the society and particularly for Tamil Muslim
community through media. Published for Jamal Mohamed College Alumni news is
very fine. My special Thanks to you because you have published my photo and mentioned in my name inside the news.

We will pray to Almighty Allah for you and your family for long life with good health
and wealth & Happiness.

Regards
S.M.Farook


janaki raman
dateFri, Mar 27, 2009 at 6:17 PM
subjectRe: அபுதாபி தமிழ் மகளிர் வட்டம் நடத்தும் நடனப் போட்டி


வணக்கத்திற்குரிய இதயத்துல்லா அவர்களுக்கு,

எங்கள் கல்லூரியில் நடைபெற்ற இரண்டு நாள் தேசியக்கருத்தரங்கிற்கு தாங்கள் கூறிய வாழ்த்துதலை நான் மறக்கவில்லை. ஆயினும் மின்னஞ்சல் கூட அனுப்ப இயலாத சூழ்நிலையில் இருந்தேன். தாங்கள் அபதாபியில் நடைபெறுகின்ற நிகழ்வை அனுப்பியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. தாங்கள் எங்கிருப்பினும் தமிழ் பற்றிய உணர்வையும், வளர்ச்சியையும் மறக்காது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள் என்பது குறித்து மிகவும் மகிழ்கின்றேன். மேலும் நாம் மின்னஞ்சலில் பேசலாம்.



நன்றி.

இவண்,
முனைவர் நா.ஜானகிராமன்
துறைத்தலைவர்
பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி
பெரம்பலூர்
தமிழ்நாடு - 621 212.

12.3.2009

துபாய்.


அன்புள்ள பத்திரிகையாளர் திரு. முதுவை ஹிதாயத்துல்லா அவர்களுக்கு…


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


நலம். நலம் அறிய ஆவல். தொடர்ந்து தங்களது படைப்புக்களை பார்க்கிறேன். நிறைய தகவல்கள் பயனுள்ளதாக உள்ளன. இன்று தமிழ்.காம் -ல் தாங்கள் தொகுத்திருந்த செய்திகளைப் பார்த்தேன். படித்தேன். ரசித்தேன். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!


பலவருடங்களுக்குமுன் திருச்சியில் நாங்கள் சொந்தப்பத்திரிகை நடத்தியபோது உங்களைப் பார்த்தபோது… மற்றவர்களைப் பற்றிய துணுக்கு, கேள்வி எழுதுபவராக இருந்த நீங்கள்… இன்று உங்களைப் பற்றிய மற்றவர்கள் துணுக்கு எழுதும் அளவுக்கு வளர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இன்னும் நீங்கள் உங்களை பக்குவப்படுத்திக்கொண்டு கதை, கவிதைகள் என எழுதி பட்டை தீட்டிய வைரமாய் ஜொலிக்க வேண்டுமென்று சகபத்திரிகையாளன் என்ற முறையில் வாழ்த்துகிறேன்.


இஸ்லாமிய பத்திரிகை துறைக்கு தகவல் களஞ்சியமாக திகழும் தங்களை மனதார பாராட்டுகிறேன்.




தோழமையுடன்…

திருச்சி சையது.
trichysyed@yahoo.com



MM Shahul Hameed
ccAbdul Rahman ,
Syed Himana ,
Javid Ahamed
dateThu, Mar 5, 2009 at 8:43 PM
subjectCongrats


Assalamu alaikum my dear Hidayathullah. How are you and the family?

I was going thro the Q & A section of the Nargis Meelad Malar. To a question by a reader, Dr Himana Syed expresses his happiness and appreciation to your extraordinary skill in immediately reporting thro net informations and news items in general and those related to our community in particular. I used to wonder about your speed in passing on informations to people throughout the globe. Sometimes, we come to know about happenings in our own surroundings thro your mails!

Dr HS himself is a great writer and speaker with a true commitment towards the welfare of our community. Modirakayyaal thattikodukkapattulleergal! Hearty congrats!
As a Jamalian, I am proud of you for your great service to the community. May Allah bless you! MMS


Syed Ibrahim
dateThu, Feb 19, 2009 at 6:18 PM
subjectRe: Fwd: ராமதாசின் மண்டையில் உரைக்கட்டும்!!

your journalistic jump is very high, Alhamdhulillaah, you are destined to reach very high levels of utility oriented journalism. welldone . we are proud of you himanasyed


|| editor || www.sangamamlive.com ||
dateThu, Feb 19, 2009 at 6:10 PM
subjectRe: ராமதாசின் மண்டையில் உரைக்கட்டும்!!

அன்பின் நண்பருக்கு,

தாங்கள் அனுப்பிய ராமதாசின் மண்டையில் உரைக்கட்டும் எனும் தலைப்பிலான கட்டுரை கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனை குறித்து நானும் செவியுற்றேன். தாங்கள் அனுப்பியுள்ள ஆக்கத்தில் உள்ள கருத்துக்கள் செறிவுடையவையாக இருந்தாலும் போதுமானதாக இல்லை ஆகவே இன்னும் ஆதரங்களுடன் அனுப்பிட அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நட்புடன்
விஜய்


kudanthai hussain
dateTue, Feb 17, 2009 at 2:20 PM
subjectformal

dear hidayath.
assalauallikum(warah)
i want to know whether the THEN KOODU is functioning are not?.
how i link my blog with other blog?
i hope you are well. convey my best wishes to all my friends.
wwassalam.
Prof. Tamilmamani Kuanthai Dr. Hussain,
kumbakonam

fromFirdouse Rahman Khan
dateTue, Mar 4, 2008 at 9:13 AM
subjectRe: துபாயில் நூல் அறிமுக விழா / துபாயில் ரத்ததான முகாம்

Dear Hidayath

Assalamu alaikum(wah).

Well and wish to hear about your welfare.

When I see your activities and social involvement, I am really proud of and to extent jealous also.But I sincerely and wholeheartedly pray for your continued services to our Islamic society.I think it was my gift from God to meeting you in Dubai.

I am also more eager to join you with hands provided I am there in UAE. But my naseeb, I am in Oman.

Thanks a lot.

Remember you in all my duas and prayers.

With regards
Firdouse

navaneetha krishnan
dateSat, Feb 7, 2009 at 12:48 AM
subjectRe: Vanakkam

நண்பரே தங்களின் வலைப்பூவை இன்றுதான் கண்டேன். மிக்க மகிழ்ச்சி! அதில் அதிகாலை லோகோவைக் கண்டதும் இன்னும் ஆனந்தம். நீங்கள் அதிகாலையின் இணைப்பை (Image Link) தங்களின் வலைப்பூவில் நிரந்தரமாகக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். மேலும் முதுகுளத்தூர்.காம்-தான் நமது நட்பை உருவாக்கியது. தாங்கள் மறந்திருப்பீர்கள், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சரி முடிந்தால் முதுகுளத்தூர்.காம்-மிலும் இணைப்புத் தர முன்வந்தால் எமக்குப் பேருதவியாக இருக்கும். தொடர்ந்து நமது நட்பும் சகோதரத்துவமும், தமிழ்ச் சேவையும் நெடுநாள் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியவேண்டும். நான் வளைகுடாவில் இருந்தபோது தங்களைச் சந்திக்க இயலவில்லை, பரவாயில்லை இன்ஷா அல்லாஹ் நாம் ஒருநாள் எங்காவது சந்திப்போம்! தங்களின் அனைத்து ஒத்துழைப்பும் அளவிடற்கரியது. மேலும் தங்களின் அனைத்து வலைப்பூக்களையும் அதிகாலையில் இணைத்துவிடவும். தங்களின் http://muduvaihidayath.blogspot.com/ வலைப்பூவை நான் ஏற்கனவே அதிகாலையில் இணைத்தும்விட்டேன். தங்களுக்குச் சிரமமெனில் எனக்கு வலைப்பூக்களின் முகவரியை அனுப்புங்கள். நான் இணைத்துக்கொள்கிறேன். ஆனால் அந்தந்த வலைப்பூக்களில் அதிகாலையின் இணைப்பு இருந்தால்தான் அதிகாலை இணைக்க ஏற்றுக்கொள்ளும். எனவே இணைப்புகளைக் கொடுத்துவிட்டு எனக்குத் தெரிவிக்கவும். நன்றி!

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

MM Shahul Hameed
dateTue, Feb 3, 2009 at 8:36 AM
subjectSpecial thanks

Dear Br Hidayath, Assalamu alaikum. I must convey our special thanks to you since you could make it on the day when the NAAC Peer Team visited our college and participated in the Alumni Meet with the Team members. The information I mailed you is for general announcement which I know you will immediately execute. May Allah bless you and your family. Regards. Dr M.M. Shahul Hameed
JAMAL MOHAMED COLLEGE
TRICHY

navaneetha krishnan
Ramesh Viswanathan
dateThu, Feb 5, 2009 at 11:46 PM
subjectRe: Adhikaalai Logo in our UTS Website

Yes.... Its working great... Thank you very Much.
மிக்க மகிழ்ச்சி! அருமையானதொரு வாய்ப்பை அதிகாலைக்கு ஏற்படுத்தித்தந்த அருமை நண்பர் ஹிதயத்துக்கும், தங்களுக்கும் அதிகாலை எப்போதும் கடமைப்பட்டுள்ளது. தொடர்ந்து தங்களது ஒத்துழைப்பும், நமது மேன்மைமிகு நட்பும், பரிமாறல்களும் தொடர இறைவனை வேண்டுகிறேன். தங்களின் லோகோ அதிகாலையில் இணைப்பதற்கான பணி நடந்து கொண்டுள்ளது. விரைவில் தெரிவிக்கிறேன். மிக்க நன்றி!

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

navaneetha krishnan
dateTue, Feb 3, 2009 at 9:43 PM
subjectRe: Fwd: Video of the Holy Kaaba from Inside

Wow....Thanks for the opportunity to see such a wonderful heaven inside.... I am really lucky. Hidayath! Can I put in the site in Spiritual section?

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

Sudarvamsam vamsam
dateSun, Feb 1, 2009 at 10:18 AM

Mikka Nandri, Thiru Hidayath.


Raghu

Syed Ibrahim
dateSat, Jan 17, 2009 at 9:27 AM
subjectRe: Fwd: துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி

Alhamdhulillah.
Insha Allah you will get more and more recognition IN THE DAYS TO COME AS YOU ARE SHOWING IMPROVEMENT IN YOUR EFFORTS EVERY DAY.
I have received many appreciative notes recently from Brother Salim of Jamiyah Singapore and Sangkam Ilyas who recently visited you in Dx.
I always pray for you, dear Hidayathullah!
Tomorrow, Insha Allah I am moderating a Mega lecture series Inauguration organised by JAMIYAH and all the Indian Muslim Organisations, the first of its kind in singapore.
PRAY FOR ITS SUCCESS -HS


Abdul Baqavi
dateFri, Jan 16, 2009 at 5:19 PM
subjectRe: துபாய் ஈமான் அமைப்பு நட‌த்தும் அல்ஹ‌ம்துலில்லாஹ் நிக‌ழ்ச்சி

Dear Hidayath,
its been a pleasure receiving emails from you as a member of Imantimes.

I have no idea how I got my name involved in this. Probably through efforts of Thalapathi's son Abdul Rahman. Many of your contents are useful and a reflection of events happening in our community. I am quite impressed with all your initiative and it is very encouraging to note that you have excelled in this activity with vigour and energy. God bless this wonderful initiative of yours for many years to come.

I love the focus of Iman times on the Tamil Muslim community. The events and happenings of the community are well revealed. Not taking sides or getting involved in any unnecessary controvery. Keep up the good work Hidayath and I look forward to meeting you someday.

Please remove the following email addresses from the group:
baqavi@singnet.com.sg
sumayab.2005@business.smu.edu.sg
sooffiyah@hotmail.com

Include the new address given below:
abdulbaqavi@gmail.com

This address is created to receive your emails. I also request you to avoid having third parties using our emails. Some of the contents are definitely not in par with the group's intention.

I live in Singapore and note down my mobile number if you drop by. +65 90307249. This is for your own record only. Thanks and best wishes.

Abdul Hameed Baqavi

navaneetha krishnan
dateFri, Jan 23, 2009 at 8:24 AM
subjectRe: நன்றி!

நன்றி ஹிதாயத்! தங்களுடைய ஒத்துழைப்பிற்கும் முயற்சிக்கும் அதிகாலை எப்போதும் நன்றியுள்ளதாகவே இருக்கும்.

வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

navaneetha krishnan
dateMon, Jan 26, 2009 at 9:00 PM
subjectமிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி ரமேஷ்! தங்களின் நட்புக்கும் நண்பர் ஹிதாயத் நட்பிற்கும் மகிழ்ச்சி! தமிழ் எங்கு வளர்ந்தாலும் அதற்காக எம்மால் ஆன துளியளவு ஆதரவையாவது பங்களித்தால்தானே தமிழர்களாகப் பிறந்ததற்கு பேறு! மிகுந்த மகிழ்வோடு தங்களின் கைகளோடு எம் கைகள் கோர்த்து பிரயாணிக்க அதிகாலை பெருமிதம் கொள்கிறது! நன்றி!

வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

From: Ramesh Viswanathan
Sent: Monday, 26 January, 2009 6:14:36 AM

Dear Mr. Navaneetha Krishnan,

Good day. How are you ? By gods grace we are fine in UAE.
Thank you very much for all your support.
Because of our Media Secretary Mr. Muduvai Hidayath our UAE Tamil Sangam www.uaetamilsangam.com is growing day by day.
Special thanks to UTS (UAE Tamil Sangam) Media Secretary.
Once again thank you very much Mr. Navaneetha Krishnan.


With
Ramesh Viswanathan

2009/1/26 navaneetha krishnan

Vanakkam Hidayath,
Pl view this link, scroll down for viewing all photos below the news in the site..... FYI. Thanks for the wonderful photos and pl forward to your friends. Dubai night view is already uploaded in the site, but i have some error... soon which will be published and let you know.

துபாய் : UAE தமிழ்ச்சங்கம் நடத்திய 'பொங்கல் விழா' புகைப்படத்தொகுப்பு

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=10115&lang=ta&Itemid=188

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

Samsudeen Sultan Salahudeen
dateThu, Jan 22, 2009 at 8:29 PM
subjectRe: PADITHADHIL PIDITTHAVAI

Assalamu Alaikkum Wr. Wb. Mr. Hidayath.......!

All of your messages are very useful one and have to protect it for future reference. But it is having lot of spelling mistakes and font mistakes also.
If you can do something to avoid such things it will be very useful and help to read tamil in net without any difficulties.

Expecting your quick attention in this regard.

Thanks & regards

Vassalam


S.SHAMSUDEEN
Thidal - Mudukulathur

Habib Mohamed
dateSun, Jan 4, 2009 at 1:27 AM
subjectRe: MAIL FROM HIDAYATH

Dear Hidayath,

Asalamu alaikum warahmathullahi wa barakathuhu. Thanks for approving my request to join this groupg.

As you requested I am introducing myself. I am son of Mohideen son of Quasim [late] (brother of Mohamed Aliyar[late] ). Hope I make sense to you. From child I spent most of the time in Chennai. So, I do not much aware of the happening in Muduvai. I came across this Muduvai group from one of my relatives' email.

Can you kindly introduce yourself. Sorry, to ask this eventhough you may be well known by the most of the Muduvai people.

Are you in Muduvai or in any other country? Very intersted to hear the life in Muduvai from this group.

Jazakallahu Hair...

With regards,
Habib


Kader Mohideen
dateSat, Jan 3, 2009 at 1:01 PM
subjectThanks

Dear Hidayath,
Thanks for your unlimited emails, and also I am happy for joined by you with the Muduvai Groups
Thanking you
With warm Regards
A.Kader Mohideen
CSC - Mudukulathur


fromKader Hussain
dateMon, Jan 5, 2009 at 7:27 AM
subjectமுதுவை ஹிதாயத்

hello முதுவை ஹிதாயத்

if you still remember..jmc life, kadir ibrahim hostel, gani, kiyas, afsal and kader. yes, it is me. i happend to see your blog and took the email from there.

happy to see that you are working dubai. i visited there few times and saw gani and co.

just want to say hi....rest after your reply

keep in touch

Kader


nri_news dinakaran
dateFri, Dec 26, 2008 at 2:38 PM
subjectRe: அமீர‌க‌த்தில் கிறிஸ்தும‌ஸ் கொண்டாட்ட‌ம்

dear sir ,
please make your information as an attachment with an extensions .doc or .txt
ie,.... type your info in notepad or word document and attach it along with font name ......

thanks & regards,...
vanangamudi .v


nazumu deen
dateFri, Dec 26, 2008 at 5:02 PM

Assalamu Alaikkum


Thank u very much for your kind cooperation.

Another thanks for adding this group.

Mr. Nizam (Rahmath Printers) is one of my Friends.

Regards,

(Nazumu Deen)


asan mohamed
dateThu, Dec 25, 2008 at 4:18 PM
subjectRe: Departing of the Soul

Assalamualaikkum(WrWb)

Very useful message brother.

Thanks


Seyed Ibrahim
dateSun, Dec 21, 2008 at 8:23 PM
subjectYour Blog & My mail ID

Assalamu Alaikum முதுவை ஹிதாயத்,

I was doing a google search, and hit upon your
http://muduvaihidayath.blogspot.com/ . It had a ton of information,
and copy of my email "Improving the School Education" sent to some
brothers. I was glad to see that, but also has a request.

Could you Please REMOVE my email id seyed.ibrahim@gmail.com from your
blog. Web crawlers look for the mail ids and send Junk emails. Thank
You.

Question: Just curious to know How did you get my email?

Wassalam
--
Seyed Ibrahim
Chennai-29

E D I T O R - sangamamlive
reply-toeditor@sangamamlive.in

toMuduvai Hidayath

dateWed, Dec 17, 2008 at 3:22 PM
subjectRe: தேசிய யோகாசனப் போட்டியில் லதாங்கி பள்ளி மாணவர்க்குத் தங்கம்

hide details 3:22 PM Reply


அன்பின்ய நண்பருக்கு,

தாங்கள் அனுப்பிய செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து செய்திகள் அனுப்பி வருவதற்கு மிக்க நன்றிகள்.

தாங்கள் தொடர்ந்து சங்கமம்லைவிற்கென்று தாங்கள் எழுத அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

நிகழ்வுகள்,செய்திகள்,தகவல்கள்,அறிவிப்புகள்,கட்டுரைகள்,சிறுகதைகள்,கவிதை என எதுவாக வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பலாம். வேறு எந்த ஊடகத்தில் வந்ததாக இருக்கக் கூடாது.

தங்களின் அன்பிற்கு நன்றிகள்

நட்புடன்
விஜய்


navaneetha krishnan
dateMon, Dec 15, 2008 at 11:15 PM
subjectRe: எளிய முறையில் தண்ணீரை கொதிக்க வைக்க

Thank You Hidhayath... I expect more from you.

சுலபமாக தண்ணீர் கொதிக்கவைக்கும் சாதனம் - சத்திரக்குடி மாணவர்கள் சாதனை

http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=8563&lang=ta&Itemid=52

புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
www.adhikaalai.com
http://manuneedhi.blogspot.com

abdul rahman
"Ali, Liyakath" ,
Muduvai Hidayath
date Dec 2, 2008 8:14 AM
subject Re: Fwd: this news air on 1 dec 10 pm india time thank u ,

Very Good action Hidayath.
Thanks.

Abdul Rahman

gulfnews news
date Dec 1, 2008 9:29 PM
subject Re: this news air on 1 dec 10 pm india time thank u ,
mailed-by gmail.com
asslam bro this news air on 1 dec 10 pm india time thank u ,

kindly send follow up of the news with pic
thank you
by
M.I. Yacoob ( gulfnews editor )
9884107959


kalam kadir
dateSat, Nov 22, 2008 at 10:09 PM
subjectRe: பாலையான வாழ்க்கை

இதயத்தில் உள்ள ஹிதாய்த்துல்லாஹ்
உதய நேரம் என்னிடம் சொன்ன செய்தி
தூங்கி கொண்டிருந்த என்னிடம்(சனிக்கிழமை விடுமுறை)
தூங்கி விடாது என்றென்றும் கவிதை யாத்திட வேண்டும் என்ற
ஆர்வத்தை தூண்டும் வண்ணம் அவாவினை உண்டாக்கியது
போர்வையை விட்டு விட்டு போய்ப்பார்த்தேன்
உண்மையில் நீங்கள் உண்மையான நண்பரே
இம்மையிலும் மறுமையிலும் எல்லாம் பெறுவீரே.............


Vasantha Vaasal Saleem Basha
date Oct 19, 2008 9:15 PM
subject சேவைக்கு இல்லை விடுப்பு..

அன்பு நண்பர் ஹிதாயத் அவர்களுக்கு...
தங்களின் சமுதாய பற்றும் சேவை மனப்பான்மையும் பிறருக்கு உதவிடும் ஆர்வமும் கண்டு எப்போதும் நான் வியப்பும் பெருமிதமும் அடைவதுண்டு!

ஆனால், களைப்பாற விடுமுறையில் நாடு திரும்பிய போதிலும்...சிறிதும் சுனக்கமின்றி சமுதாய பணியில் ஈடு படுவதென்பது...நிச்சயமாய் எல்லோராலும் இயலாது என்பது உண்மையிலும் உண்மை.

தொடரட்டும் உங்கள் சேவை!
மலரட்டும் இனிய சமுதாயம்!!
மறு மலர்ச்சி பெறட்டும் சமூகம்!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்-நம்
அனைவருக்கும் துணையும் அருளும்
பொழியட்டுமாக.(ஆமீன்!)




Tamil Anna
dateSun, Aug 17, 2008 at 8:44 AM
subjectGreetings Fromadhikaalai.com

அன்பின் ஹிதாயத்,
உங்களை சிறப்புச் செய்தியாளர்
என்றே போட்டுவிட்டோம்.
பார்த்தீர்களா?
--
நன்றி,
தமிழண்ணா,
அதிகாலை.
www.adhikaalai.com
http://www.adhikaalai.com/index.php?/en/செய்திகள்/உலகம்/ஒரே-பிரசவத்தில்-ஏழு-குழந்தைகள்!



ஏ.கே.கான்
ஆசிரியர்,தட்ஸ்தமிழ்.காம்
பெங்களூர்

AK Khan
ccsettu sankar ,
arivualaganarivu@gmail.com
dateTue, Jun 17, 2008 at 11:45 AM

Dear Hidayat,

You can send litrature related articles to Mr. Shankar who has joined our team

Shankar: Hidayat is a very good friend and a major news source for us on local and Gulf affairs

Regards,
Khan


பிர்தொஸ்
ஓமன்

Assalamu alaikum(wah).

Well and wish to hear about your welfare.

When I see your activities and social involvement, I am really proud of and to extent jealous also.But I sincerely and wholeheartedly pray for your continued services to our Islamic society.I think it was my gift from God to meeting you in Dubai.
I am also more eager to join you with hands provided I am there in UAE. But my naseeb, I am in Oman .

I am sure you will keep me in mind.

Thanks a lot.

Remember you in all my duas and prayers.

With regards
Firdouse
firdouse7@gmail.com


அப்துல் மாலிக்
ஜித்தா


Dear brother,
Assalamu Alaikkum.
Its a honor that you have kindly extended to me by publishing about the IUML award and my brief in 'Dina Malar' daily. More than everything I consider having friends like you are my real asset.

We intend to go on vacation during end July. We shall try to meet if you also happen to be Chennai around that time.

Thanks for your kind gesture once again and please Pray for me.
With Duwa'as and salaams

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=777&Country_name=Gulf&cat=new

A Malik
malikamalik22@hotmail.com

Mon, Jul 7, 2008 at 11:25 AM
subjectRE: Tnx for the report

Dear brother, Assalamu Alaikkum.
You have embarrassed me with your intro. Though our meeting was brief it is still in my green memories. Since then iam interacting with ur emails which are really informative and useful. May Almighty reward you for the good work. Kindly do let me know whenever you happen to pass by Jeddah. Please convey our regards and salaams to your family too.
A Malik


abushaimah@gmail.com has invited you to join the GTMG group with this
message:

அன்புச் சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இணையத்தில் செய்திகளை முந்தித் தரும் உங்கள் சேவையை அறிவேன். உலகத் தமிழ்
முஸ்லிம்களின் ஒருங்கிணைப்பு முயற்சியாக என்னைப் போன்ற சில சகோதரர்கள் தொடங்கிய
இக்குழும முயற்சிக்கு உங்களை அழைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இணைந்து கொள்ள விருப்பம் இருந்தால் இவ்வழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்

அன்புடன்

அபூஷைமா

Here is the group's description:

Global Tamil Muslim Groups


சற்றுமுன்னின் வருங்காலம்?

அண்மைக்காலமாக முதுவை இதாயத் மட்டுமே மிகத் தீவிரமாகத் தொடர்ந்து
பங்காற்றி வருகிறார். முன்பு போல் வெறுமனே செய்திகளை வெட்டி ஒட்டி
கொண்டிருப்பதற்கான தேவை இருப்பதாய் தெரியவில்லை. இந்த உழைப்பை இன்னும்
திறமாக நாம் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்க வேண்டும்.

ரவி

முன்னாள் எம்பியும் இந்நாள் எம்பியும்

புஜைரா வாரந்திர மாட்டுச் சண்டை


ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைராவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் மாட்டுச்சண்டை நடைபெற்று வருகிறது.

இது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி முனைவர் அப்துல் கலாம்

Monday, January 21, 2008

வலைப்பதிவுலகம் - வலைக்கும்மி

வலைப்பதிவுலகம் - வலைக்கும்மி

2002 வாக்கில் கணினியில் திக்கித் திணறி தமிழில் தட்டியபோது பெரும் அதிசயமாக
உணர்ந்தது இப்போதும் நினைவிருக்கிறது. அன்று முழுவதும் கனவில் தமிழ்
எழுத்துகளாக வந்தன! இணையக் குழுமங்களில் இணைந்து எழுதத் தொடங்கி,
வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கி, இன்றைக்குப் பார்த்தால் 2400க்கும் மேற்பட்ட
வலைப்பதிவுகளில் தினமும் தோராயமாக 200 பதிவுகள் எழுதப்படுகின்றன. இன்றைக்குத்
தமிழ் ஊடகங்கள் இந்த வலைப்பதிவுகளையும் இணையத் தளங்களையும் புறக்கணிக்கவே
முடியாது. அப்படி ஒரு பூதாகரமான வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழ் இணைய
எழுத்துலகம். ஆனால் அந்த வளரச்சி தரும் இலக்கிய அனுகூலங்களோ
கேள்விக்குரியனவாகத்தான் இருக்கின்றன.

2000 வாக்கில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த சில எழுத்தாளர்கள், அடுத்த
தலைமுறை எழுத்தாளர்கள் இணையத்திலிருந்தே வருவார்கள் என்று
சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, கழிந்துவிட்ட இந்த ஏழு வருடங்களில்,
இணையத்திலிருந்து வந்து அச்சுலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும்
எழுத்தாளர்கள் எவருமே இல்லை. இனி வரும் என்று நம்பலாம் என்று சொல்லத்தக்க
அளவிலும் இணையத் தமிழ் உலகில் செறிவான எழுத்துகளும் காணக் கிடைப்பதில்லை.
அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் ஒப்பீட்டு அளவில் அது மிகவும் குறைவாகவே
உள்ளது.

இன்றைக்கு வலைப்பதிவுகள் என்பது நினைத்த நேரத்தில், நினைத்த விஷயத்தை எழுதி
விடக்கூடிய இடமொன்றை மட்டுமே பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். பரந்து
கிடக்கும் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தீவிரமான இலக்கிய நோக்குடையவை
என இருபது வலைப்பதிவுகள் தேறினாலே பெரும் விஷயம். இணையத்தில் எழுதப்படும்
எழுத்துகளில் பெரும்பாலும் காணக் கிடைப்பவை ஜாதி பற்றிய சொல்லாடல்கள், தமிழக,
ஈழ அரசியல் பற்றிய சீற்றங்கள் மற்றும் நிறைய தனிப்பட்ட குறிப்புகள் இவை
மட்டுமே. இவற்றில் தீவிரமாக எழுதுபவர்கள் மிகமிகக் குறைவே. அப்படி தீவிரமாக
எழுதுபவர்களும் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருந்தனவற்றையே மீண்டும் மீண்டும்
சொல்லிக்கொ¡ண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தாக்குதல் மீறிய விவாதம்
நிகழ்ந்துவிட்டால் அதை அதிசயங்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.

கட்டற்ற சுதந்திரம் என்னும் மந்திரச் சொல்லே இந்த வலைப்பதிவுக்களின் அடிநாதமாக
விளங்குகிறது. உண்மையில் ஒரு தனிமனிதனுக்குத் தரப்படும் கட்டற்ற சுதந்திரம்
என்பது, அவன் சமூகத்தோடு சேரும்போது கடுமையாக மட்டுப்படுத்தப்படுகிறது என்பதை
உணராமல், கட்டற்ற சுதந்திரம் என்னும் வார்த்தைக் கோவைகள் தரும் நேரடி
அர்த்தத்தை மனதில் கொண்டே, பல வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. அதனால்
இயல்பாகவே அவை தாக்குதலில் ஈடுபடுகின்றன. செறிவான விவாதம் என்பதே வலைவிரிக்கும்
பூடகமான தாக்குதல் நிறைத்தே எழுதப்படுகிறது. அதேபோல் இந்த வலைப்பதிவுகள்
நிராகரிப்படாத எழுத்துகளின் தொகையாக விளங்குகின்றன. இதனால் ஒரு வலைப்பதிவு
எழுத்தாளன், நியாயமாக ஒரு எழுத்தாளன் அனுபவித்திருக்கவேண்டிய மட்டுறுத்தல்
மற்றும் தகுதியில்லாத எழுத்துகள் என்பன போன்ற வடிகட்டுதலை சந்திப்பதே இல்லை.
இதனால் வலைப்பதிவு எழுத்தாளன் மனதில் அவனைப் பற்றிய ஒரு மிதமிஞ்சிய அனுமானமும்
சித்திரமும் ஏற்பட்டுப்போகிறது. இரண்டு கட்டுரைகள் எழுதிப் போட்ட உடனேயே தான்
ஒரு எழுத்தாளன் என்கிற பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அச்சு உலகில் ஒரு எழுத்தாளன்
கடந்து வரவேண்டிய சவால்கள் எவற்றையும் காணாமலேயே ஒரு இணைய எழுத்தாளன் அந்த
இடத்தை அடைந்துகொள்கிறான். இதனால் ஏற்படும் சௌகரியம் நம்பிக்கை என்றாலும்
அதன் இன்னொரு கோடியான அதீத நம்பிக்கையில் எழும் அபத்தங்களைக் கூட சிறந்த
எழுத்து என்றும் நம்பும் எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் வலைப்பதிவுகளில்
எழுதத் தொடங்கும் ஒருவன் அடையவேண்டிய இலக்குகளை அடையமுடியாமல், தொடர்ந்து
வலைப்பதிவுகளில், எப்படி எழுதத் தொடங்கினானோ அப்படியே எழுதிக்கொண்டிருக்கிற
அல்லது மடிந்துபோகிற ஒருவனாகிவிடுகிறான்.

கணினியில் தமிழ் எழுதத்தெரிந்தாலே எழுத்தாளனாகி விடலாம் என்கிற எளிமையான
சூத்திரத்தில் ஆட்பட்டு எழுதத் தொடங்கும் எவரும், இதுவரை தமிழ் எழுத்துலகம்
கண்டிருக்கிற உயரங்களை, வீழ்ச்சிகளை, சவால்களைப் பற்றிய எந்தவித அறிவும்
இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இன்றைய அச்சு எழுத்தாளர்கள் மீதே 'தமிழின் மரபை
அறியாதவர்கள்' என்கிற விமர்சனம் வைக்கப்படும் நிலையில், இன்றைய வலைப்பதிவு
எழுத்தாளர்கள் தமிழின் தற்போதைய எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பைக் கூட
அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனந்த விகடன், குமுதம் வழியாக இலக்கியத்தை அடைய
இவர்கள் எடுக்கும் முயற்சி இவர்களை ஒரு ரெண்டுங்கெட்டான் நிலையில் கொண்டு
சேர்க்கிறது. இதனால் வெகுஜன இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வளர்ந்த வெகுஜன
திரைப்படங்களும் அது சார்ந்த ஆழமற்ற எழுத்துகளும் மேலும் 'சிறப்பாக' இங்கு
வளர்கின்றன. குறைந்தபட்சம் எழுதத் தொடங்கிய பின்பாவது, இதற்குமுன் தமிழில்
இருக்கும் இலக்கியங்களைப் படிப்பது பற்றிக் கூட யோசிப்பதில்லை என்பது யதார்த்த
சோகம். இணையத்தில் எழுதத் தொடங்கி, சிறப்பாக தொடர்ந்து முன்னேற்றம்
கண்டுவரும் எழுத்துகளை இனம்கண்டு ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறலாம் என்ற
போதிலும், அவற்றையே பொதுக்கருத்தாக முன்வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

வலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த
வலைப்பதிவுக்களைத் திரட்ட, திரட்டிகள் தோன்றியபோது அவை ஒரு வசதியை
முன்னிறுத்தியே செயல்பட்டன. ஆனால் அதிலிருந்து வரும் ஹிட்டுகளின் எண்ணிக்கை
வலைப்பதிவுக்களின் தரத்தை நிர்ணயிக்கும் சக்தி என்கிற எண்ணம் நிலைபெற்றபோது,
வலைப்பதிவுகளில் எழுதப்படும் எழுத்தின் தரம் மேலும் சரியத் தொடங்கியது. வாசகனை
திடுக்கிடச் செய்து உள்ளே அழைத்துவரச் செய்யும் கிறுக்குத்தனமான தலைப்புகளுடன்
கும்மிப் பதிவுகள் வரத் தொடங்கின. [இந்த இடத்தில் இன்னொன்றைச்
சொல்லவேண்டும். நிறைய வலைபதிவர்கள் எழுதுவதால் புழக்கத்திற்கு வரும் புதிய
சொற்களை வலைப்பதிவு உலகம் தானறியாமலேயே தமிழுக்குத் தந்துகொண்டிருக்கிறது.]
தொடர்ந்து திரட்டிகள் பின்னூட்டங்களையும் (Comments) திரட்ட ஆரம்பித்தன. அதிக
பின்னூட்டங்கள் வேண்டி செய்யப்பட்ட அரசியலைப் பற்றி எழுதவேண்டுமானால் பெரிய
புத்தகமே போடவேண்டியிருக்கும். இதில் வலைப்பதிவுவுலகம் பெரும் வீழ்ச்சியைச்
சந்தித்தது என்றே சொல்வேன். ஒருவகையில் இந்தத் திரட்டிகள் தொடக்கத்தில்
வலைப்பதிவுக்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்தாலும், அதன் எதிர்வினையாக ஒரு பெரிய
சரிவையும் தந்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்றைக்கு இந்தத்
திரட்டிகளின் தேவையை நிராகரிக்கவே முடியாது என்பதையும் சொல்கிறேன். இந்தத்
திரட்டிகள் இல்லாவிட்டால் எங்கிருந்தோ யாராலோ எழுதப்படும் எழுத்தை ஒரு வாசகன்
நினைத்த நேரத்தில் சென்றடையமுடியாது. ஆனால் எத்தனை தூரம் இந்தத் திரட்டிகளின்
தேவை மிக மிக முக்கியமானதொன்றாக இருக்கிறதோ, அத்தனை தூரம் அது வலைப்பதிவுகில்
ஆரோக்கியமற்ற போட்டியையும் உருவாக்கி விட்டது. இது வலைப்பதிவர்களின்
தனிப்பட்ட மனோபாவத்தால்தான் நிகழ்கிறது என்றாலும் பொதுக்காரணியாக இந்தத்
திரட்டிகளே விளங்குகின்றன.

தொழில்நுட்பம் தரும் வசதிகளை அனுபவிக்கும்போது தொடர்ந்து அது தரும்
இன்னல்களிலிருந்து மீளமுடியாத அதே நிலையை இந்தத் திரட்டிகளுக்கு ஒப்பிடலாம்.
பின்னூட்டங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் முதன்மை பெற்றவை
விவாதங்கள். பெரும் விவாதங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு விவாதத்தின்
மூலம் பொதுக்கருத்தை எட்டிவிடவே முடியாது. அதற்கான வரலாறே நம்மிடம் கிடையாது.
உண்மையில் இதுவே சாத்தியமானதும் கூட. இதை உணர்ந்தவர்கள் குறைவாகவும், நம்
கருத்தே பொதுக்கருத்து என்னும் ஆரம்பநிலை எழுத்துகளை
பிரதிநிலைப்படுத்துபவர்கள் அதிகமாகவும் சேர, விவாதங்கள் அதைமீறிய தாக்குதல்
நிலையையும், அதைத் தொடர்ந்து விவாதித்தவர்கள் மீதான முன்முடிவையும்
ஏற்படுத்தின. ஒரு அச்சு ஊடகத்தில் நிகழும் உள்ளரசியலுக்கு இணையான, அதை மிஞ்சும்
பெரும் அரசியல் இன்றைய நிலையில் வலைப்பதிவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
ஒருவரின் ஜாதி மற்றும் மதத்தைச் சார்ந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் ஒருவரால்
இணையத்தில் எழுதவே முடியாது. பெண்கள் என்றால் இருக்கவே இருக்கிறது கற்பு பற்றிய
சொல்லாடல்கள். இதையும் மீறி விவாதம் செய்யும் பெண்களை விரல்விட்டு
எண்ணிவிடலாம். அல்லது எளிதாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.

வலைப்பதிவுவுலகின் இன்னொரு முக்கிய பின்னடைவு Anonimity. யார் என்கிற விவரம்
இல்லாமல், எங்கிருந்து எழுதுகிறீர்கள் என்கிற விவரம் தெரியாமல் நீங்கள் ஒரு
வலைப்பதிவை நடத்தலாம், எல்லா வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் செய்யலாம். அச்சு
ஊடகங்களில் இவை சாத்தியமல்ல. பிற ஊடகங்களில், நீதிமன்றங்கள், வழக்கு உள்ளிட்ட
விஷயங்கள் உங்களைக் கேள்விக்குட்படுத்தும். ஆனால் இணைய உலகில் இந்தக் கட்டுகள்
இல்லாத சுதந்திரம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் நம்மால் எப்படிப்
பயன்படுத்தப்படும் என்பது நாம் அறிந்ததே. அதுவே நிகழ்ந்தது. தனக்குத் தானே
வேறுவேறு பெயர்களில் போட்டுக்கொள்ளும் பின்னூட்டங்கள், பொதுவில்
வைக்கமுடியாத வாசகங்களைத் தாங்கிய பின்னூட்டங்கள், வசவுகள், கேள்வி கேட்பது
யாரென்பது தெரியாததால் தரும் சௌகரியங்கள் நிறைந்த கேள்விகள் என பின்னூட்டங்கள்
குவிந்தன. குவிகின்றன. சிலர் எக்கேள்வி என்றாலும் அதன் பொருளைப் பார்ப்பது
என்ற நிலையையும், சிலர் கேள்வியின் முகாந்திரத்தை அறியாமல் வெற்று வெளியுடன்
மோதிக்கொண்டிருக்கமுடியாது என்கிற நிலையையும் எடுத்தார்கள். உண்மையில் அவரவர்
வசதிக்கேற்பவே இந்நிலையை எடுத்தார்கள் என்றே நான் வரையறுக்கிறேன். யார்
எழுதுகிறார்கள் என்று தெரியாமல் வலைவிரிக்கப்படும் ஒரு விஷயமாகத்தான்
இப்படிப்பட்ட அனானிகளை வகைப்படுத்தமுடிகிறது. இயல்பாகவே ஒரு மனிதனுக்குள்
உறைந்து கிடக்கும் அறியாத ஒன்றைத் தேடும் எண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி,
யார் எழுதுகிறார் என்று தெரியாமலேயே நிறைய வருடங்கள் இயங்கும் வலைப்பதிவுகளும்
உண்டு. யார் என்று தெரியாது என்பதே ஒரு identityயாக மாறிவிடும் வலைப்பதிவுகளும்
உண்டு. இவர் யார் என்கிற விவரம் தரும் வலைப்பதிவு கும்மிகள் இதில் அதிகம்
சுவாரஸ்யம் பெற்றதாகவும் ஹிட்டுகள் பெற்றதாகவும் ஆகிவிடுவது அடிக்கடி நடக்கும்.
வலைப்பதிவுகளை ஒருவகையில் இன்றைய கணினி சார்ந்த மக்களின் மனவியல் பதிவாகவும்
கொள்ளமுடியும். அனானிமிட்டி தரும் சுதந்திரம் முகம் சுளிக்க வைத்தாலும் அதில்
நிலவும் உளவியலைப் படிக்கக் கற்றுக்கொண்டால், அது நிகழ்ந்துகொண்டிருக்கும்
காலத்தின் ஆகச் சிறந்த பதிவாக அமையும் என்பதையும் சொல்லவேண்டும்.

வலைப்பதிவு எழுத்தாளர்களின் எழுத்துகளை ஆராய்ந்தால் அவர்களில் சுஜாதா
ஏற்படுத்திய பாதிப்பு விளங்கும். சுஜாதாவின் எழுத்துகளை முன்மாதிரியாக வைத்தே
இன்று எழுதும் பல வலைப்பதிவு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். சுஜாதாவின்
முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அது ஒரு செயற்கைத் தன்மை
வாய்ந்ததாகிவிடுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்கள்
நகரும் புள்ளி, அதற்கு மிகவும் எதிர்த்தன்மை கொண்ட, விளங்கிக்கொள்ள முடியாத
எழுத்துகளாகி விடுகிறது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கும் தனித்தன்மையைக்
கண்டெடுத்து அதை வளர்க்கும் திறன் நிறைந்தவர்கள் மிகக்குறைந்த நிலையில்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

அதுபோல துறை சார்ந்த எழுத்துகள் என்கிற பிரிவை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு
மிகப்பெரிய தேக்க நிலையையே இன்றைய வலைப்பதிவுகள் கொண்டிருக்கின்றன. அச்சு
ஊடமும் இதே நிலையை சமாளிக்க பெரும் போராட்டங்களை மேற்கொள்ளும்போது,
வலைப்பதிவுக்களை அதிகம் குறை சொல்வதற்கில்லை. ஒன்றிரண்டு முயற்சிகள்
நடந்தாலும், தொடர்ந்து வலைப்பதிவுகளின் உலகம் விரிவடையும்போது இவை
தீவிரமடையலாம். துறை சார்ந்த எழுத்துகளில் ஏற்படும் மறுமலர்ச்சிக்கு
வலைப்பதிவுகள் ஒரு முக்கிய காரணமாக விளங்கமுடியும். ஆனால் அது எப்போது
நிறைவேறும் என்பதை கணிப்பது சவாலானது. பெரும் வெள்ளம் போல
விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் நீரில் கலந்திருக்கும் கசடுகள் போலவே இன்றைய
பெரும்பாலான வலைப்பதிவுகள் தோன்றுகின்றன. நிஜமாகவே புதிய திறப்பில் ஏற்படும்
வெள்ளவேகம் எதிர்பார்க்கக்கூடியதே. அதுவே இன்றைய வலைப்பதிவு உலகில்
நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதிர்வரும் மிகப்பெரிய காலத்தை மனதில் கொண்டு,
இச்சிறிய காலகட்டத்தைக் கணக்கிட்டால், வலைப்பதிவுகள் சிறப்பான ஒரு மாற்று ஊடமாக
செயல்படமுடியும் என்கிற நம்பிக்கையை வைக்கலாம். அதற்கு அச்சு ஊடகங்களில்
சிறுபத்திரிகை இயக்கங்கள் செய்த வேலையை வலைப்பதிவுகளில் சிறுபத்திரிகையைச்
சேர்ந்த எழுத்தாளர்கள் செய்ய முன்வரவேண்டும். இணைய உலகம், அச்சு உலகம் என்கிற
பிரிவுகளுக்கிடையேயான இடைவெளி சுருங்கி, எல்லா எழுத்தாளர்களும் எங்கும் எழுதும்
நிலை வந்தால் வலைப்பதிவுகளில் நிலவி வரும் விபத்துகள் நாளாவட்டத்தில்
சீரடையலாம்.

வலைப்பதிவுக்களின் சாதனையாகச் சொல்லவேண்டுமானால், உலகம் அடைந்த குறுக்கத்தை
அதிவிரைவுபடுத்தியவை இந்த வலைப்பதிவுகள். எங்கோ நிகழும் ஒரு விஷயத்தில்
பல்வேறு கோணங்களை, முக்கியமான முக்கியமற்ற, தரமான தரமற்ற, இலக்கிய ரீதியிலான
வெகுஜன ரீதியிலான என பல்வேறு முகங்களை நாம் நிமிடங்களில் அடையமுடியும்.
இரண்டாவது, எதைக் குறித்த தகவலும் தேடி அடையலாம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில்
யாரோ ஒருவர் நீங்கள் தேடும் விஷயத்தைப் பற்றி நிச்சயம் ஒரு வரியாவது
எழுதியிருப்பார். அது எவ்வளவு உங்களுக்குப் பயன்படும் என்பது வேறு விஷயம்.
மூன்றாவது, எல்லையற்ற எண்ணங்களை எழுதிச் செல்வது. பக்கங்களின் கட்டுப்பாடு
இல்லையென்பதால் நீங்கள் எழுத நினைப்பவற்றை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் எழுதிச்
செல்லலாம். இது ஒருவகையில் மனவெழுச்சி சார்ந்த எழுத்துகளை
வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால் அது நிகழவில்லை. மீண்டும் மீண்டும்
குறிப்புகள் போன்ற விஷயங்களே காணக் கிடைக்கின்றன. இந்த தேக்க நிலை மறைந்து,
தமிழ் அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகைகள் நிகழ்த்திய பெரும் மாற்றத்தை,
பாய்ச்சலை உண்டாக்கக்கூடிய எல்லா வசதிகளும் இணைய உலகம் பெற்றிருக்கிறது. அது
முழுமையாக, செறிவாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே விஷயம். சுஜாதா ஒருமுறை
வலைப்பதிவுக்களை '15 நிமிடப் புகழுக்கு எழுதப்படும் டைரிக் குறிப்புகள்' என்று
சொன்னார். இது பெரும் கொந்தளிப்பை வலைப்பதிவர்களிடையே ஏற்படுத்தினாலும்,
அதிலிருக்கும் உண்மையை அவர்கள் உணரத் தலைப்பட்டால், பிச்சை
எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு யானையின் அவலம் நமக்குப் புரியலாம். அப்போது
'செய்தி ஊடகம்' என்று மட்டுமே இப்போது வரையறுக்கமுடியக்கூடிய வலைப்பதிவுலகம்
மாற்று ஊடகம் என்கிற நிலையை அடையலாம். அடையவேண்டும் என்று ஒரு வலைபதிவுலக
எழுத்தாளனாக பெரிதும் விரும்புகிறேன்.

*சில திரட்டிகள் (அலெக்ஸா ரேட்டிங் அடிப்படையில். இதைச் சொல்லவில்லை என்றால்
பெரிய வெட்டுக்குத்து நடக்கும் வாய்ப்புண்டு.)*

http://www.thamizmanam.com/
http://www.thenkoodu.com
http://tamilblogs.com/a/index.php
http://www.tamilveli.com/
http://www.thamizhbharathi.com/

*பரவலான இணைய உலக பயன்பாடுகள்*

கும்மிப் பதிவுகள்
மொக்கை பதிவுகள்
ஆணி பிடுங்குதல்
பொட்டி தட்டுதல்
பின்னூட்டாங்கள்
அனானி
எலிக்குட்டி சோதனை
உள்குத்து
முதுகு சொறிதல்
சுய சொறிதல்
சுட்டி
உரல்
ஓடை
டிஸ்கி

*இணைய உலகில் பயன்படும் நகைப்புக்குறிகள்*

அரட்டை (Chat) அடிக்கும்போது பயன்படுத்தப்படும் நகைப்புக்குறிகள் (Smileys)
வலைப்பதிவுலகிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. நீங்கள்
வலைப்பதிவுலகில் அடிக்கடி :) :)) :P :> :( :(( X-( :D போன்ற குறியீடுகளைச்
சாதாரணமாகப் பார்க்க நேரிடலாம். இது தமிழ் எழுத்துலகம் பெற்றிருக்கும் இன்னொரு
விஷயம்! இனி வரும் காலத்தில் எந்த எழுத்திலும் இந்த நகைப்புக்குறிகள்
இடம்பெறும் அளவிற்கு அசுர வளர்ச்சி அரும் அடைந்துவரும் இவற்றின் பயன்பாடுகளை
அறிய இணையத்தில் மேயவும்.

நன்றி: தமிழினி மாத இதழ், ஜனவரி 2008.

--
Thanks and regards,
Haranprasanna
vhprasanna@gmail.com

Visit:http://www.anyindian.com/ - To Purchase books online.
Visit: http://www.nizhalkal.blogspot.com/ - To read my postings.

ஆசிரியர் இல்லாத வகுப்பில் கும்மாளமடிக்கும் குழந்தைகள் போலவே நாம்
இணையத்தை பயன்படுத்துகிறோம். கண்டிப்பாக இன்னும் ஐந்து வருடங்கள்
வலைப்பதிவுகள் பெரிய கவனத்தையும், பிரபலமாகவும் ஆகும். அப்போது பழைய
வலைப்பதிவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் பங்கு என்பது என்னவென்றே
அவர்களே விளங்கிக் கொள்ளமுடியாத தோற்றத்தையும் தலைக்குனிவையும்
தரும். நமக்கு ஒரு எழுத்தாளரை பிடித்து விட்டதென்றால் அவரின் பழைய
படைப்புக்களை எங்கெல்லாமோ தேடுவோம். இதுவரை வலைப்பதிவுகளின்
அந்த தாக்கம் எனக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் அமைந்திருக்கிறது.
யாரும் பழையதை கிண்ட போவதில்லை, இன்று நான்கு பேர் கைகட்டி நகைக்க
சமைக்கப்படும் உப்புமாக்கள் அதிகம். மேலும் இணையத்தில் எழுதுபவர்கள்
பெரும்பாலானோர் பரவலான வாசிப்பனுபம் அற்றவர்களாக இருப்பதுவும் காரணம்.
அப்படி இருப்பவர்கள் வீண் கும்மிகளில் கவனத்தை திருப்ப மாட்டார்கள்.
கிடைத்த சொற்ப நேரத்தில் பதிவிடுபர்களும், கிடைக்கும் சொற்ப இடைவெளியில்
பணியை செய்பவரும் நிறைந்த உலகம் இந்த வலைப்பதிவுலகம். தொழில்முறை
எழுத்தாளர்களுக்குரிய பொறுப்புணர்ச்சி அற்ற சமுகத்தில் வேறென்ன
எதிர்பார்க்கிறீர்கள்?
என்பது போன்ற கேள்விகள்தான் மனதில் எழுகின்றன.

உங்களுக்கு தோன்றிய பெரும்பாலான கருத்துக்கள் அனைவர் மனதிலும் இருக்ககூடியதே
ஆனாலும் செயல்பட அல்லது தற்"போதைய" இருப்பை விட்டு வெளிவர
விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கிறோம், எதிர்காலத்தைப் பற்றி எங்களுக்கென்ன
கவலை? எங்கள் பதிவுகளை நாங்களே மீள்வாசிப்பு செய்வதில்லை!

நல்ல அலசல் ப்ரசன்னா! உங்கள் எதிர்கால இணையம் மற்றும் தமிழ் இணைய
வரலாற்றில் வலைப்பதிவுகளின் பகுதி பற்றிய சிந்தனை ஒவ்வொருவரும் உணர்ந்து
கொள்ள வேண்டியது அவசியம்.

-கதிர்-

flashkathir@gmail.com
Maraththadi@yahoogroups.com

Saturday, January 19, 2008

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

எல்லாப் புகழும் இறைவனுக்கே !


இந்தி நட்சத்திரம் அமீர் கானின் இயக்கத்தில் வெளிவந்துள்ள "தாரே ஸ்மீன் பர்" இந்தியாவையே கலக்கிக்
கொண்டிருக்கிறது. அத்வானியே பார்த்து, உணர்ச்சி வச்ப்பட்டு கண் கலங்கினார் என்றால் மற்றவற்றை நாம்
ஊகித்துக் கொள்ளலாம். ஒரு பிஞ்சு உள்ளத்தின் எண்ணத்தை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது
இந்தப் ப்டம்.

இந்தப் படத்தை இரண்டு முறை பார்த்துள்ள என் பேரன் (உண்மையில் என் 'பெயரனும்' கூட) அந்த இளம்
கதாநாயகனின் அணுகுமுறையை தனதாகவே ஆக்கிக் கொண்டு, நெஞ்சில் அறைகிறார் போல் முன் வைத்த
கேள்வி, "பெற்றோருக்கு பந்தயத்தில் ஆசை என்றால் குதிரைகளை வளர்க்க வேண்டியது தானே அல்லாமல்
ஏன் ' மார்க்' ' மார்க்' என்று குழந்தைகளின் உயிரை எடுக்கிறார்கள்?

இப்போது அல்லாமா இக்பால் எழுதிய ஒரு கவிதையின் ஆங்கிலப் படிவத்தை எனக்கு அனுப்பி இருக்கிறான். குழந்தைகள் எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம். இதோ
அதன் தமிழ் மொழிபெயர்ப்பு -- என்னால் முடிந்த வரை.

என் உள்ளத்தின் ஆழத்தில் ஊறிக்கிடக்கும் சிந்தனைகள் தான் என் உதட்டின் மேற்பரப்புக்கு வருகின்றன.
இறைவா ! என் வாழ்க்கையே ஓர் ஒளி விளக்காய் ஒளிர வேண்டும்; இருளே சூழ்ந்து வீடக் கூடாது.

உலகின் ஒட்டு மொத்த இருளும் என் முன்பிலிருந்து மறைந்து போகட்டும்
என்னுடைய ஒளிமயமான பிரசன்னத்தில் எல்லாமே 'தக்-தக' வென்று மின்னட்டும்.

தனித்து நிற்கும் ஒவ்வொரு மலரும் கூட ஒட்டு மொத்த பூங்காவுக்கும் அழகு சேர்க்கிறது
அதுபோல ஞானத்தின் இருப்பிடமாய் என் வாழ்வு மலர்ந்து மனித சமூகத்துக்கு பெருமை சேர்க்கட்டும்

வெளிச்சத்தை நாடி ஓடித் திரியும் நல்ல உள்ளங்கள் என்னைச்சுற்றி வலம் வரட்டும்.
அத்தகைய ஒளி மிக்கதாய் என் வாழ்க்கை மலரட்டும் - வளரட்டும்

இறைவா ! அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆசையை என்னில் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிய விடு.
நீ தந்த சக்தியின் பயனாய் ஞானத்தை - அறிவை தொடர்ந்து தேடும் வல்ல்மையை எனக்குக் கொடு.

வாழ்வு தேடி, ஆனால் வறுமையில் சிக்கித் தவிக்கும் அத்தனை பேருக்காகவும் என் வாழ்க்கையை
அர்ப்பணிக்கும் மனத் திண்மையைக் கொடு. ஏழை - எளியோர் - இயலாதோர் - பசி முதலான அத்தனை
பிணிகளிலும் அல்லல் படுவோருக்கு கடைசிவரை நான் துணை நிற்க நீ எனக்கு கிருபை செய்.

இறைவா ! நீ ஆயிரமாயிரம் சந்தர்ப்பங்களை எங்களுக்குத் தந்துள்ளாய் அவற்றை நாங்கள் தவறாகப்
பயன்படுத்தி விடாமல் எங்களைக் காப்பாற்று. நல்ல வழிகளிலேயே செல்ல கருணை செய்.எல்லோருக்கும்
நன்மையே செய்ய அருளாசி தா.

அல்லாமா இக்பால் மகத்தான கவிஞர். அதில் தர்க்கமில்ல. ஆனால் அந்தக் கவிதையை இந்தப் பிஞ்சு
உள்ளம் தேர்ந்து எடுத்து இருக்கிறது பாருங்கள் அதுதான் என்னை மிகவும் நெகிழ வைக்கிறது.

என் பேரன் அப்துல் ஜப்பார் (செல்லமாக "அபி") என் மூத்த மகன் ஆசிஃப் மீரானின் மூத்த மகன். எல்லாப்
புகழும் இறைவனுக்கே !

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

Real life in GULF

Real life in GULF

* Local calls are free
* Petrol is cheaper than water, Payment for drainage too
* Any building construction finishes in 3 months
* Unqualified get more salary than Qualified
* Show-off matters more than real quality & performance
* Laborers are paid less than what they can earn back in their own country
* Companies can kick out their employees without any reason
* Wastas (recommendation) are more powerful than money
* Cleaners have more Wasta than officers
* Watchman has more Rights than the Building Owner
* Office boy & Drivers have more influence on Boss than Manager.......
* Gulf climate changes so fast, in one hour u can see raining, dust storm, hot / humid / chilling weather
* Gulf is located in desert, still u find greenery everywhere
* If u can't earn money in the Gulf, u can earn anywhere in the world
* In Gulf, time goes very fast, Friday to Friday comes u never know, its so fast
* Every bachelor has a dream of getting married and buying a house in India
* U love your parents, friends, relatives 100 times more than when you were together
* Being at home is more painful than being at work
* Theatres are full of Arab nationals whenever there is a movie of Salman / Sharukh
* Gulf girls sing Hindi songs but don't understand anything
* Dance Bars and Pubs more than that in Bangalore
* A ladies hair saloon every 5 meters
* Food/Grocery delivery to the car
* A Starbucks every 10 meters
* Hard Rock Cafe with no alcohol
* In one single flat sharing with 5 families
* In one single room sharing with 5 bachelors.
* A Shopping Mall located every 2 km
* Highway lanes differentiated for slow & fast drivers
* Getting a license is more difficult than buying a car
* Smashed cars are more than bugs
* Parking charge: 2 Dirham for 1 hour - 5 Dirham for 2 hours & so on
* No Queues for women
* Medical is very poor
* Everybody is looking for their annual vacation.
* U can find healthy food in everywhere.
TRAFFIC SIGNAL IN GULF:
* GREEN: Signal to go for Indians,Americans & Europeans
* YELLOW: Signal to go for Egyptians and Pakistanis,
* RED : Signal to go for Kuwaitis, Saudis , Palestinians & Lebanese
Last but not least.
There is no PEACEFUL LIFE


Don't be afraid that your life will end, be afraid that it will never begin

Thanks & Brgds
Adam.Arifin
Ras Al Khaimah
UAE
THOPPUTHURAI@gmail.com

அது ஒரு பொற்காலம்

அது ஒரு பொற்காலம்
(அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா )

கடந்த காலத்தை,அதிலும் குறிப்பாகப் பள்ளிக் கூட வாழ்க்கையை மலரும் நினைவுகளாக மனதில் அசை போட்டுப் பார்ப்பதில் கிடைக்கும் இன்பம் அலாதியானது. சொந்த ஊரில் உள்ள பள்ளிக் கூடங்களில் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பத்தை விட வெளியூரில் விடுதியில் தங்கிப் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும் இன்பமே தனி. அந்த இன்பத்தை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் தெரியும். ஒருவருக்கொருவர் மனம் விட்டுப்பழகிய பழக்கம், குடும்ப விஷயங்கள் வரை பகிர்ந்துக் கொண்டு தேடிய ஆறதல், இறுதியாகப் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து பிரிந்து சென்ற சோகம், ஆகிய இவற்றில் எதைத்தான் மறக்க முடியும்?

1970 ஆம் ஆண்டு ஆக்கூர் ஓரியண்டலில் அடியெடுத்து வைத்து ஆறு ஆண்டுக்காலம் அற்புதமான கல்வியைக் கற்று 1976 ஆம் ஆண்டு நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த நாங்கள் இன்றளவும் எங்களால் மறக்க முடியாத அந்த நற்காலத்தை மனதால் அசைபோடுகிறோம். ஆம் அது ஒரு பொற்காலம்.
தாய் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவி வாழ்ந்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்களாகிய எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த 'ஆக்கூர் ஓரயண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' இன்று பொன் விழா காண்பதை அறிந்து எங்கள் உள்ளமெல்லாம் குளிருகிறது.

பள்ளி வாழ்க்கையை முடித்து நாங்கள் வெளியேறினாலும் எங்களில் சிலர் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வந்து எங்களை உருவாக்கிய எங்கள் பள்ளியை பார்வையிட்டிருக்கிறோம். இடையில் சில காலம் பள்ளியின் வளர்ச்சியில் சற்று தளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தற்போதைய தாளாளர் கண்ணியத்திற்குரிய அல்ஹாஜ் A.முஹம்மது இக்பால் அவர்கள் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது முதல், முன்னேற்றப் பாதையில் எங்கள் பள்ளி பீடு நடை போடத் தொடங்கியிருப்பதை காணும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
உள்ளம் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள உணவுக் கூடம், மனதைக் கொள்ளைக் கொண்ட புதிய மாணவர் விடுதி,அதி நவீன வசதிகளுடன் கூடிய அழகான வகுப்பறைகள்,எழில் மிகுந்த இறையில்லம்,ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, சுவையான உணவு, சுத்தமான சுற்றுப் புறச்சூழல், ஆகா! மெய்மறந்து நின்றோம். மாணவனாக ஆறாம் வகுப்பில் சேர்ந்து மறுபடியும் படிக்கத் தொடங்குவோமா! என்று உள்ளம் ஏங்கியது. சாத்தியமில்லாத கற்பனைகள் கூட சில சமயம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருவதுண்டு.

இது வரை இப் பள்ளி அடைந்திருக்கும் அசுர வளர்ச்சியைக் காணும் போது, இன்ஷா அல்லாஹ் இனியும் அடையப் போகும் அபரிமிதமான வளர்ச்;சி இதோ நம் கண் முன்னே தெரிகிறது.இப்போது நடைபெறும் பொன் விழா நிகழ்ச்சிகள் அதற்குக் கட்டியம் கூறுகின்றன. பொன் விழா காணும் இந்தப் பொன்னான 'ஓரியண்டல் அரபி மேல் நிலைப்பள்ளி' என்னும் மாபெரும் கல்விக் கடலில் நாங்களும் ஒரு காலத்தில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பதை நினைக்கும்போது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது.

இந்த ஆக்கூர் ஓரியண்டல் எங்களுக்கு அறிவைத் தந்தது, ஆற்றலைத் தந்தது, அனுபவங்களைத் தந்தது, அநேக நண்பர்களைத் தந்தது, மனப்பக்குவத்தைத் தந்தது, மார்க்க ஞானத்தைத் தந்தது, காலமெல்லாம் நேர் வழி நடக்க எங்கள் கரம் பிடித்து நடை பழக்கியது.
இம்மை மறுமை ஈருலகக் கல்வியையும் ஒர சேரப் பயில எங்களுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு, தொழுகை நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளில் இன்றளவும் நாங்கள் நின்றொழுக எங்களுக்குக் கிடைத்த அருமையானப் பயிற்சி, நல்லொழுக்கத்துடன் நாங்கள் வாழ எங்களுக்கு விதிக்கப்பட்ட நியாயமான கட்டுப்பாடுகள், ஆகிய இவை தான் இன்று நாங்கள் தூயவர்களாக வாழ்வதற்குத் துணை நின்றவை என்றால் அதற்கு மூல முதற்காரணமாக அமைந்த எங்கள் ஆக்கூர் ஓரியண்டலை நாங்கள் எப்படி மறக்கமுடியும்?
பள்ளி இறுதி வகுப்பை இனிதே நிறைவு செய்து உயர் கல்வி கற்பதற்காக நாங்கள் உயர் கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற போது தான் நாங்கள் கல்வி பயின்ற ஆக்கூர் ஓரியண்டலின் மகிமையைப் புரிந்துக் கொண்டோம். பிற கல்வி நிறுவனங்களிலிருந்து வந்து சேர்ந்த மாணவர்களை விட நாங்கள் உயர்வாக மதிக்கப்பட்டோம். அந்த அளவுக்கு எங்கள் கல்வியின் தரமும் ஒழுக்கத்தின் தரமும் உயர்வானதாக இருந்தது. எங்களுக்குப் பெருமையாகவும் இருந்தது. இந்தப் பெருமையும் புகழும், உயர்;ந்த கல்வியையும் உன்னத நல்லொழுக்கத்தையும் எங்களுக்குப் போதித்து, எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் ஆசிரியப் பெருந்தகைகளையும், எங்களின் உயர்வுக்குக் காரணமாகிய ஆக்கூர் ஓரியண்டல் என்னும் இந்த அற்புத நிறுவனத்தையுமே சாரும்.

எங்களுக்கு நற்கல்வியையும் நல்லொழுக்கத்தையும் போதித்த நல்லாசிரியர்களில் யாரை நாங்கள் மறக்க முடியும்? அவர்களில் சிலர் மறைந்து விட்டனர். பலர் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் எங்கள் நெஞ்சங்களில் என்றென்றும் நிறைந்து வாழ்கின்றனர். அறிஞர் பெருமக்களையும் ஆன்றோர்களiயும் சான்றோர்களையும் உருவாக்கிய ஆசிரியர்களாகிய அந்த அறிவு ஜீவிகள் ஒவ்வொருவரைப்பற்றியும் ஓராயிரம் வரிகள் எழுதலாம். எவ்வளவு எழுதினாலும் அந்த நல்லாசிரியர்கள் எங்களுக்குப் போதித்த நற்கல்விக்கும்

நல்லொழுக்கத்திற்கும் அவை போதுமான நன்றிக் கடன் ஆகாது. இன்றளவும் சக நண்பர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது அந்த அறிஞர் பெருமக்களை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

பல்வேறு கால கட்டங்களிலும் எண்ணற்ற சிரமங்களுக்கு மத்தியில் விடுதி நிர்வாகத்தை திறம்பட நடத்திச் சென்ற, இறையடி சேர்ந்து விட்ட முன்னாள் தாளாளர்களின் மறுமைப் பேற்றுக்காக மனமாற இறைவனை இறைஞ்சுகிறோம். தன்னலம் கருதாது பாடுபட்ட அந்த தயாள உள்ளங்களை என்றென்றும் நினைவில் வைத்திருப்போம்.

தத்தம் இல்லங்களில் நடைபெற்ற விருந்து வைபவங்களின் போது எங்களையும் தங்கள் குடும்பத்தினர்களாக எண்ணி அத்துனை பேருக்கும் அறுசுவை விருந்தளித்து கௌரவப்படுத்திய ஆக்கூர் வாழ் மக்களை எப்படி மறக்க முடியும்? எங்களை கௌரவித்த அந்தக் கொடை வள்ளல்களை, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் கௌரவிப்பானாக!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து ஆக்கூரில் சங்கமித்தோம். காலமெல்லாம் பயன் தரும் கல்வியை திறம்படக் கற்பதில் கவனம் செலுத்தினோம். கள்ளம் கபடமில்லாமல் பழகினோம். ஒன்றாக உண்டோம், உறங்கினோம்,ஓடி விளையாடினோம். ஒருவருக்கொருவர் உதவியாய் ஒத்தாசையாய் இருந்து கவலை மறந்து காலம் கழித்தோம். பள்ளி வாழ்க்கை நிறைவடைந்த போது ஆரத்தழுவி கண்ணீர் மல்க பிரியா விடை பெற்றோம். இனி எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ?

ஆக்கூர் ஓரியண்டலில் நாங்கள் வாழ்ந்த அற்புத வாழ்க்கை 30 ஆண்டுகளுக்கு முன் நிறைவடைந்து விட்டது.ஆனால் அந்தப் பசுமையான நினைவுகள் மட்டும் பசுமரத்தாணிபோல் இன்றும் எங்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. ஆம் அது ஒரு பொற்காலம்.
நாங்கள் இருந்து பயின்ற வகுப்பறைகள் அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடிக் கட்டடங்களாகிவிட்டன. நாங்கள் கட்டாந்தரையில் அமர்ந்து உண்ட, ஓலை வேயப்பட்ட உணவுக் கூடம் இப்போது கண்ணைக் கவரும் உணவுக் கூடமாக மிளிர்கிறது. நெரிசலுடன் நாங்கள் தங்கியிருந்த மாணவர் விடுதி இன்று விசாலமான விடுதியாகப் பரிணமித்துள்ளது. வகுப்பறையை தொழுகைக் கூடமாக்கி நாங்கள் தொழுகை நடத்தியது அந்தக் காலம். இப்போது எழில்மிகுந்த இறையில்லம் கம்பீரமாகக் காட்சி தருகிறது. உயர் நிலைப் பள்ளியாக இருந்தது இப்போது மேல் நிலைப் பள்ளியாக உயர்வு பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு எங்கள் பள்ளி அடைந்து வரும் முன்னேற்றத்தைக் கண்டு நாங்கள் பூரிப்படைகிறோம். வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

இந்தக் கல்விக் கூடத்திலிருந்து உருவான எண்ணற்ற தாரகைகள் சமுதாய வானில் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஆயிரமாயிரம் அறிவு ஜீவிகளை உருவாக்க இந்த 'ஆக்கூர் ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி' தன் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

masdookaa@yahoo.com

Friday, January 18, 2008

indian union muslim league Political Members Details

indian union muslim league Political Members Details

MP - 2 (E.Ahamed and K.M. Kader Mohideen)
Rajya Sabha MP - Abdul Wahab ( Kerala )
MLA - 2 (Abdul Basid and Kalilur Rahman)

Ma Nagaratchi (City Corporation) Members

Nellai - 3
Kovai - 2
Salem - 2
Chennai - 1
Madurai - 1

Corporation (Nagaratchi)

Kayal pattinam -12
Tenkasi -6
Kadayanallur -6
Puliangkudi- 6
Vellur- 2
Ambur -7
Vaniyambadi -6
Thiruppur -2
and also
Manparai, tuticorin, ramanathapuram, mudukulathur, kilakarai, pudukottai, aranthangi, seerkalai, villupuram, chinnasalem, ulundurpet, thiyagathuruvom, thiruvannamalai, saiyaru, melvizaram, nagapattinam, coodalur, kunnoor, muthupet are 1 members

Panchayath board

coodalur - above 43

Peruratchi
pallapatti, laalpet, pallikondan, athiyuthu, annavasal, -1
oneriyam

Enamkulathur, Papanasam, -1


Message from

muba rasvi
Marumalarchi

துபாயில் மேலும் ஒரு இஸ்லாமிய வங்கி

துபாயில் மேலும் ஒரு இஸ்லாமிய வங்கி

துபாயில் ஷரிஅத் அடிப்படையில் செயல்படும் ஆறாவது இஸ்லாமிய வங்கியான நூர் இஸ்லாமிய வங்கி" ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டுள்ளது.

நூர் இஸ்லாமிய வங்கி ஒரு பில்லியன் டாலர் மூலதனத்துடன் துபாயில் ஆறு கிளைகள் உட்பட அமீரகத்தில் பத்து கிளைகளைக் கொண்டதாக துவங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குள் இந்த கிளைகள் இருபதாக விரிவடையும்.
நூர் இஸ்லாமிய வங்கி பல்வேறு முஸ்லிம் நாடுகளிலும் தனது சேவையை துவங்க ஆவல் கொண்டுள்ளது.

துபாய் இஸ்லாமிய வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி,ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, துபாய் வங்கி ஆகியவை ஏற்கனவே அமீரகத்தில் ஷரிஅத் அடிப்படையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் குறிப்புகளை அறிய உதவும் இணையத்தளம்

சமையல் குறிப்புகளை அறிய உதவும் இணையத்தளம்

இன்றைய அறிவியல் யுகத்தில் இணையத்தளம் ஒரு தவிர்க்க இயலாததாகி விட்டது. பல்வேறு தரப்பினருக்கும் ஏற்றவகையில் பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலாவருகிறது.
சமையல் குறிப்புகளைக் கொண்டு www.tamilkudumbam.com எனும் இணையத்தளம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்து வருகிறது.

நீங்களும் இவ்விணையத்தளத்தில் உங்களது சமையல் குறிப்புகளை பதிவு செய்யலாம்.

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு

சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு
கல்வி உதவி தொகை

+1 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப் பட்ட பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ/மாணவியருக்கு 2007 - 2008 முதல் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தினை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2876 மாணவர்களுக்கு, இவ்வுதவிகள் கிடைக்கும். அதில் 1372 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பங்களுக்கும் தொடர்பு கொள்க:

http://www.minorityaffairs.gov.in/

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) ஏற்பாடு செய்யும்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) ஏற்பாடு செய்யும்
'' நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகளின் 75 வது வார சிறப்பு நிகழ்ச்சி ''

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-01-2008 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை யைத் தொடர்ந்து குவைத் , ஹவல்லி (ஸாதிக் ரவுண்டானா மற்றும் ஷுவூன் அலுவலகம் அருகில் அமைந்துள்ள) மஸ்ஜித் அஷ்-ஷைக்கா அஷ்-ஷபீக்கா பள்ளிவாசல் வளாகத்தில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic) ஹவல்லி கிளை ஏற்பாடு செய்யும் '' நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகளின் 75 வது வார சிறப்பு நிகழ்ச்சி '' நடைபெற இருக்கின்றது. (இப்பள்ளிவாசலில் கடந்த 75 வாரங்களாக ஒவ்வொரு வாரமும் ஜும்ஆ தொழுகை முடிந்தவுடன் கண்ணியமிக்க உலமா பெருமக்கள் மூலமாக தமிழில் நபிமொழி (ஹதீஸ்) வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது).

சங்கத்தின் துணைத்தலைவர் மவ்லானா மவ்லவீ அஷ்ஷைக் M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினர் பேராசிரியர் மவ்லவீ அஷ்ஷைக் A. அப்துஸ் ஸலாம் தாவூதி ஹழ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றுகின்றார்.

இச்சிறப்பு மிகு நிகழ்வில் குவைத் வாழ் இந்திய , இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடன் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் ஹவல்லி கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com லும் நிகழ்ச்சி குறித்த செய்தியையும், (பேரூந்து என்களுடன்) நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் , மேலதிக விபரங்களுக்கு q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ மற்றும் 9430786 , 7872482, 7738420, 7302747, 7684739, 7841399 , 5088149, 9383812 , 7243382, 7585914 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் சங்க செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic )
இணையதளம் : www.k-tic.com
மின்னஞ்சல் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹூ குழுமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group


குறிப்பு :

இந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை காண வாய்ப்பு

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை காண வாய்ப்பு

29 வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளது.
இப்போட்டியை நேரில் காணும் வாய்ப்பை சீன வானொலி நிலையம் ஏற்படுத்தியுள்ளது. இவ்வானொலி நிலையம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியை நேரடியாகக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்புப் பரிசுகளையும் பெறும் வாய்ப்புள்ளது.

சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு தினமும் இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒலிபரப்பாகிவருகிறது.
மேலும் விபரங்களுக்கு

http://tamil.cri.cn/other/contest2008/

கான் பாகவி இல்ல மணவிழா

ரஹ்மத் அறக்கட்டளையின் தலைமை மொழீபெயர்ப்பாளர் ஹஸ்ரத் முகம்மது கான் பாகாவியின் மகனின் திரு
மண வைபவம் தேனீயில் நடைபெற்றது. தமிழக முஸ்லிம் சமூக-கலாச்சார-இலக்கியப் பிரமுகர்கள் பலர்
வருகை தந்திருந்தனர். விழா அராங்கம் மவுலவிகள் மாநாடு போலவே கட்சியளித்தது சிறப்பு

அன்று மாலை உத்தமபாளையம் ஹாஜி கறுத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி வளாகத்தில், கல்லூரியின்
தாளாளரும் செயலருமான ஹாஜீ தர்வேஷ் மொஹிதீன், தலைவர் ஹாஜி ஷேக் மொஹிதீன் தலைமையில்
தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த 65 ஜமா'அத்துகளின் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

கவிக்கோ அப்துர்ரஹுமான், எஸ்.எம்.,ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நான்,சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து
கொண்டோம். பேராசிரியர் அப்துல் சமது வரவேற்றார். அமைப்பின் செயலர் ஜனாப் பொன்ராஜ் கொந்தாளம்
செயல் திட்டங்களை விரித்துரைத்தார்.

கவிகோவும், ஹிதாயத்துல்லாவும் மத்திய - மாநில அரசுகள் எத்தகைய நலத் திட்டங்களை அறிவித்துள்ளன.
அறியாமை காரணமாக நாம் எதையெல்லாம் தவற விட்டு விட்டோம். இனி எவ்வாறு விழிப்புடனிருந்து
இவற்றின் பயன் பாட்டை முழு அளவில் எப்படிப் பெற்றுக் கொள்வது என்பன பற்றியெல்லாம் எடுத்துச்
சொன்னார்கள் - தன்களது நீண்ட, உணர்ச்சி மிகு உரைகளில் !.

உடனடியாக, அரசின் இட ஒதுக்கீடு காரணமாக, வரும் கல்வியாண்டில் ச்மார் 70 மருத்துவப் படிப்பு இடங்களும் சுமார் 700 பொறியியல் படிப்பு இடங்களும் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.
ஆனால் இந்தச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முஸ்லிம் சமூகம் எந்த அளவுக்குத் தயார் என்பது
கேள்விக்குறியாகவே உள்ளது.

இருட்டை சபிப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது உத்தமம் என்ற கூற்றுக்கு ஏற்ப,
தமிழகமெங்கும் இதுவரை ஏழு மாவட்டங்களில் PLUS-2 மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்
பட்டுள்ளன. தேனீ மாவட்டத்தில் மட்டும், கம்பம், போடி, தேனி, உத்தமபாளையம்,சின்னமனூர் ஆகிய
ஊர்களில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை பள்ளி வளாகங்களில் வைத்து நடத்தப்
படுகின்றன. ஆகவே நம் மக்கள் மாத்திரமே வருகிறார்கள். எல்லோருமே தொழும் வழக்கத்தையும்,
பெண்கள் புர்கா அணிவதையும் கடைப்பிடிக்கிறாகள். அல்ஹம்துலில்லாஹ். நல்ல் ஏற்பாடு.

PLUS-2 பரீட்சைக்கு ஏறக்குறைய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த்க் கால. அளவு போதுமா
என்பது சந்தேகமே. என்றாலும் ஒன்றை ஆரம்பித்து வைத்து விட்டால் இந்த ஆண்டில் இல்லாவிட்டாலும்
இனி வரும் காலங்கள் இவை சிறப்பாக்ச் செயல் பட ஏதுவுண்டு.

மத்திய - மாநில அரசுகளிடமிருந்து முஸ்லிம்கள் எத்தகைய சலூகைகளைப் பெறமுடியும் என்பதை பிறகு
எழுதுகிறேன். இப்போது உதாரணத்துக்கு ஒன்று:

Auto-rikshaw/ Taxi/ Van/ Mini-bus ஆகியவை வாங்க சில நிபந்தனைக்கு உட்பட்டு தகுதி அடிப்படையில் மத்திய
அரசு 85% ம் மாநில அரசு 10% ம் மான்யம் வழங்குகின்றன. நம் முதலீடு 5% தான். இந்த 5% ஐயும் கடனாகாத்
தர வங்கிகள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சலுகைகளை முஸ்லிம்கள் படுத்தாததால் சென்ற ஆண்டு சுமார் 110 கோடி ரூபாய் மத்திய அரசுக்கே திரும்பஅனுப்பப் பட்டு விட்டதாக ஹிதாயத்துல்லாஹ் கூட்டத்திலேயே ஒரு தகவலைச் சொன்னார்.

ஒருவனுக்கு மீனைத் தின்னக் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுக்கப்
பிழைத்துக் கொள்வான் என்று ஒரு சொலவடை உண்டு. ஆகவே, வெளிநாடுகளில் வாழும் அன்பர்களுக்கு ஓர்
வேண்டுகோள்;

உங்கள் ஊர்களில் உள்ள ஏழைகளுக்கு இயன்றபோதெல்லாம் நீங்கள் உதவி வந்திருக்கக் கூடும். ஆனால்
அதை விட அவர்களுக்கு ஒரு வாழ்வு ஆதாரத்தைக் கை காட்டி விட்டீர்களென்றால் கியாமத் நாள் வரை
அது பயனுள்ளதாக - பலன் தருவதாக இருக்கும்.

விதவைகள் மற்றும் முதியோர் ஓய்வு ஊதியம் மாதம் 400/- ஓய்வு பெற்ற உலமாக்களுக்கு மதம் 750/-
பிரசவ உதவி 6,000/- திருமண உதவி 15,000/- இப்படி எத்தனையோ. இதில் சோகம் என்னவென்றால்
சம்பந்தப் பட்டவர்களுக்கே இப்படி சில இருப்பது தெரியாது

எனவே, உங்கள் ஊர்களில் சில அமைப்புகளை ஏற்படுத்துங்கள். அருகதைப் பட்டவர்களைத் தேடிப் பிடியுங்கள்
அவர்களுக்கு இந்த உதவிகள் கிடைப்பதற்கான ஆவன செய்யுங்கள். ஆண்டவன் உங்கள் தலைமுறை -
தலைமுறைக்கும் நல் அருள் பாலிப்பான்.

வஸ்ஸலாம். ஹுதா ஹாஃபிஸ். சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
abjabin@gmail.com

கணினியில் தமிழில் எழுத ...........

http://software.nhm.in/writer.html இறக்கி நிறுவினீங்கன்னா தானா உங்கள் கணினியில் தமிழ் unicode முடுக்கப்படும்.

அப்புறம் நேரடியா எங்க வேணா எழுதலாம்

Latest version (v1.2 beta) of w3Tamil Web Keyboard has released on 15th January, 2008 with its new features after one year period of gap. Now it supports for the Tamil99 Keyboard standard.

URL: http://wk.w3tamil. com

This little web keyboard will help you to write Tamil texts in Tamil Unicode encoding when you are away from your own Tamil Unicode enabled computer - for example in an Internet cafe in a foreign country. Also for users who are not familiar with the Tamil99 keyboard layout, w3TamilWK provides Virtual/onscreen keyboard interface to directly enter the Tamil Unicode text into the text area by clicking mouse on the Web Keyboard.

Also you can use it as a typing tutor to practice the Tamil99 Keyboard Layout Typing without installing any additional software in your computer.

Regards.

S.M. Arif Maricar
http://arifmaricar.blogspot.com

Wednesday, January 16, 2008

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இஸ்லாமிய ஏழை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

இலவசப் பொறியியல் கல்வியினை தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரி வழங்குகிறது.
ஜுன் 2008 ஆம் ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தானிஷ் அஹ்மத் பொறியியல் கல்லூரியும், அகில இந்திய இஸ்லாமியக் கல்வி நிறுவன குழுமமும் இணைந்து பிளஸ் டூ படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்வி படிப்பினை கருத்தில் கொண்டு 10 மாணவர்களுக்கு இலவச சேர்க்கை வழங்குகிறது எனபதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாணவர்களின் உயர்கல்விக்காக ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நேரடித் தகுதித் தேர்வு நடத்தியும், மாணவர்களுக்கு அவர்களின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் இந்த இலவச சேர்க்கையை வழங்கி வருகிறோம்.

இவ்வாண்டு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் தகுதித் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் அதற்குண்டான படிவத்தினை அந்தந்த மாவட்டப் பள்ளிகளிலும் பள்ளிவாசல்களிலும் நாங்கள் நியமித்துள்ள முக்கிய நபர்களிடமும் பெற்று பூர்த்தி செய்து அவர்களிடம் நேரடியாகவும் கொடுக்கலாம். அல்லது எங்கள் கல்லூரி முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் விபரங்ளுக்கும் விதிமுறைகளுக்கும் உடன் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
தானிஷ் அஹ்மது பொறியியல் கல்லூரி
நெ 166 முடிச்சூர் ரோடு
( பதிவு அலுவலகம் எதிரில் )
மேற்கு தாம்பரம்
சென்னை 600 045
தொலைபேசி : 9382377788/044 32918452 / 9380586462

நன்றி : சமரசம் மாதமிருமுறை ஜனவரி 2008
www.samarasam.com