வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Monday, February 11, 2008
துபாயில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் நூல் வெளியீடு
துபாயில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் நூல் வெளியீடு
துபாய் சங்கமம் தொலைக்காட்சியின் சார்பில் கீழை சீனா தானாவின் 'மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்' எனும் நூல் வெளியீட்டு விழா லேண்ட் மார்க் ஹோட்டலில் 08.02.2008 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
பவித்ரா வரவேற்புரை நிகழ்த்தினார்.
கந்தநாதன் தனது நூல் விமர்சன உரையில் மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள் மனித நேயம், மதநல்லிணக்கம், இறைநம்பிக்கையினை வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.
மணிப்பால் பல்கலைக்கழக பேராசிரியை மலிகா சபியுதீன் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளைக் கொண்ட இதுபோன்ற புத்தகங்களை வாரம் ஒருமுறை குழந்தைகளிடம் வாசித்துக் காண்பித்து இக்கணினி யுகத்தில் அவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த முயல வேண்டும் என்றார்.
பொறியாளர் ஆல்பர்ட் இந்நூலை வாசிப்பவர் தனித மனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவார் என்பதில் ஐயமில்லை என்றார்.
'மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்' நூலை நூலாசிரியர் கீழை சீனா தானா அவர்கள் வெளியிட தொழிலதிபர் முரளி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தொழிலதிபர்கள் மர்சூக், பாபநாசம் அப்துல் ஹமீது, அஜ்மான் மூர்த்தி, டாக்டர் வில்லியம்ஸ், இலங்கை எழுத்தாளர் டாக்டர் ஜின்னாஹ் சர்புதீன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
மர்சூக் அவர்கள் தனது உரையில் இந்நூல் தனக்கு ஒரு ஊக்க சக்தியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து டாக்டர் வில்லியம்ஸ், அஜ்மான் மூர்த்தி, அப்துல் வாஹித், கவிஞர் இஸ்மத், கமருல் ஜமான், உஸ்மான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.
நூலாசிரியர் கீழை சீனா தானா ஏற்புரை நிகழ்த்தினார்.
சங்கமம் தொலைக்காட்சி ( 04 3530607 ) நிர்வாக இயக்குநர் கலையன்பன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
http://www.puduvaitamilsonline.com/news8.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment