வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Sunday, March 2, 2008
துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாம் ஆண்டு துவக்க விழா !
துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாம் ஆண்டு துவக்க விழா !
கி.வீரமணி - சத்யராஜ் - சையத் எம். ஸலாஹுத்தீன் பங்கேற்பு !!
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயில் அமீரகத் தமிழர்கள் அமைப்பின் ஏழாம் ஆண்டு துவக்க விழா,பவளவிழா கண்ட தமிழர் தலைவருக்கு பாராட்டு விழா, அமீரகத்தில் சமூக சேவையில் விருது பெற்ற அஜ்மான் மூர்த்தி, எல். கோவிந்தராஜ் ஆகியோரை கௌரவப்படுத்தும் விழா 28.02.2008 வியாழக்கிழமை மாலை துபாய் இந்தியன் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் உள்ளரங்கில் நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவிற்கு அமீரகத் தமிழர்கள் அமைப்பின் கௌரவத் தலைவர் அஜ்மான் மூர்த்தி தலைமை தாங்கினார். அமீரகத் தமிழர்கள் அமைப்பின் தலைவர் அமுதரசன் வரவேற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் அமீரகத் தமிழர்கள் அமைப்பு மேற்கொண்டுவரும் தமிழ்ச் சமூக மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவரித்தார். புரவலர் எல். கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது உரையில் மனிதநேயமுடன் உதவி செய்ய வலியுறுத்தி அதனை எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறினார். இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய துணைப் பிரதமரின் செயலராக இருந்தவர் வி.பி. மேனன். ஒருமுறை புதுதில்லி புகைவண்டி நிலையத்தில் உடமைகளை இழந்து தவித்தபோது ஒரு சீக்கியர் உதவினார். அவர் உதவிய பணத்தை மணியார்டர் மூலமாக அனுப்புகிறேன் என அவர் கூறிய போது அதற்கு அவர் யாரேனும் ஒருவர் உதவி கேட்கும் போது உதவினால் அது எனக்கு பணத்தைத் திருப்பிக் கொடுத்தது போலாகும் என்றார்.
ஒருமுறை புதுதில்லி விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பயணி தான் வைத்திருந்த சுமைகள் பாதுகாக்கும் அறையில் தனது நாட்டுப் பணத்தில் கட்டணத்தை செலுத்த முயன்ற போது அதனை ஏற்றுக்கொள்ளவில்லை அதன் பாதுகாவலர். பணத்தை இந்திய நாணயமுறைக்கு மாற்ற முனைந்தால் விமானம் சென்று விடும். எனவே இதனை அறிந்து அப்பயணிகு மேனன் உதவினார். சீக்கியர் கூறியது போன்றே மேனனும் அவ்வெளிநாட்டுப் பயணியிடம் தெரிவித்து விடைபெற்றார்.
வெளிநாட்டுப்பயணி முதுமையில் வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் போது பிச்சைக்காரர் ஒருவர் வந்தார். அவரது மகள் அவருக்கு உணவளித்ததும், அவர் ஒரு செருப்பு கொடுக்குமாறு கேட்டார். கோபமுற்ற அவர் அப்பிச்சைக்காரரை விரட்டியடித்தார். இதனையறிந்த அவரது தந்தை அவரைக் கூட்டி வந்து தனது மணிப்பையில் உள்ள பணத்தை கொடுக்கக் கூறினார். இதனை தனது சுயசரிதையில் பதிந்துள்ளதாக வீரமணி தெரிவித்து மனிதநேயமுடன் உதவிட வலியுறுத்தினார்.
தொடரும் ..............
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment