Saturday, March 15, 2008

ராஜ்ய சபா......

இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபைக்கு 'ராஜ்ய சபா' என்று பெயர். இதன் பெரும்பாலான உறுப்பினர்கள்
பல்வேறு மாநிலங்களின் சட்ட மன்றங்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். குடியரசுத் தலைவரால் சிலர்
நியமிக்கப்படுவதும் உண்டு. சபை தொடர்ந்து இருக்கும். உறுப்பினர்களின் ஆயுட்காலம் தான் ஆறு ஆண்டுகள்.
இதில் மூன்றில் ஒரு பகுதியினர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெற, அவர்களோ அல்லது
அவர்களுக்குப் பதிலாக புதிய உறுப்பினர்களோ தேர்ந்து எடுக்கப் படுவதுண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு இரண்டு ஆண்டும் ஆறு பேர் ஓய்வு பெற இன்னும் அறுவர்
தெர்ர்ந்து எடுக்கப் படுவர். தமிழகத்தைப் பொறுத்தவரைஒருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட 34
வாக்குகள் வேண்டும். இன்றைய நிலவரப்படி திமுக கூட்டணி நான்கு பேரையும், அதிமுக ஒருவரையும்
எளிதாகத் தேர்ந்தெடுத்து விடலாம். ஆறாவது இடத்துக்குத்தான் இழுபறி.

அதிமுக 60 + மதிமுக 6 = 66. இரண்டு இடங்களைபெற எதிரணிக்கு இரண்டு வாக்குகள் குறைவு. சென்ற முறை கனிமொழி களத்தில் இறக்கக்ப் பட்டதாலோ என்ன்வோ அந்த இரண்டு வாக்குகளை திமுக விட்டுக்
கொடுத்து அதிமுகவில் இருவர் தெரிவாக உதவியது. "இதுதான் உண்மையான ஜனநாயகம்" என்று ஜெ.
தன் வாழ்நாளில் முதல் முறையாக கலைஞரைப் பாராட்டினார்.

அந்த ஒரு இடத்தை தன் கூட்டணிக் கட்சி சகாவும், சிறந்த 'பார்லிமெந்தேரியனுமான' வைக்கோவுக்கு ஜெ
விட்டுக் கொடுப்பாரார் என்கிற நம்பிக்கையை அவர் பொய்த்துப் போக வைத்து விட்டார்

இம்முறை அந்த இடத்தை திமுக விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. ஐந்து வேட்பாளர்களை அறிவித்து
விட்டது. இரண்டு திமுக, இரண்டு காங்கிரஸ், ஒன்று இடது சாரிகளுக்கு. அதிமுக ஒன்றை தான் எடுத்துக்
கொண்டு மற்றதை மதிமுகவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறது. தேவைப்படும் அந்த இரண்டு வாக்குகளுக்கு
எங்கே போவார்கள் ?

ஒன்று விஜயகாந்திடம் இருக்கிறது. அது அநேகமாக திமுகவுக்குப் போகாது. இன்னொன்று 'தளி' தொகுதி-
யிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட சுதந்திர உறுப்பினரிடம் இருக்கிறது. ஆனால் அவர் சட்ட மன்ற செயல்
பாடுகளில் இடதுசாரிகளுடந்தான் இணைந்து இருக்கிறார்.

ஆகவே, தேர்தல் நிச்சயம். நான்கு திமுகவினரும், ஒரு அதிமுகவும் தேர்ந்தெடுக்கப்பட, ஒரு இடத்துக்கு
இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு இருக்கும். எப்போதுமே ஏகமனதாகத் தீர்மானிக்கப்படும் ராஜ்யசபா இடங்கள்
22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் தேர்தல் மூலம் தீர்மானிக்கப்படவிருக்கிறது.

அந்தத் தேர்தலில், மூன்றாவது சுற்றில் மத்திய அமைச்சராக இருக்கும் டி.ஆர்.பாலு நாவலர் நெடுஞ்செழியன்
தம்பி இரா.செழியனைத் தோற்கடித்தார்.

திமுக அணி நன்கு இடங்களில் தன் பங்குக்கான இரண்டு இடங்களுக்கான பெயரை அறிவித்து விட்டது.
அமீர் அலி ஜின்னாவையும் திருமது வாசந்தியையும் அறிவித்ததன் மூலம் திமுக சிறுபான்மையினரைக்
கவனத்தில் கொண்டுள்ளது ஆனால் இவற்றில் ஒன்று பேரா:ஸவாஹிருல்லாவுக்கொ, அல்லது கவிக்கோவுக்கோ போகும் என்ற வதந்திகள் வதந்திகளாகவே போயிருக்கின்றன கவிஞர் வைரமுத்துவும்
வரிசையில் நிற்கும் ஒருவர் என்று சொல்கிறார்கள்.

காங்கிரசுக்கு இரண்டு இடங்கள். அவற்றில் ஒன்றை தனகுத்தர வேண்டும் என்று பா.ம.க அடம் பிடிக்கிறது.
இது தொடர்பாக டெல்லியில்அமைச்சர்அன்புமணி ராமதாசுக்கும் காங்க்..கட்சி செயலர்அஹ்மது பட்டேலுக்கும்
பேச்சு வார்த்தைகள் தொடர்வதாக செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன விளைவு என்னவாகுமோ தெரியாது. ஐந்தாவது இடத்துக்கு இடதுசாரி போட்டியிடுகிறது.

64,000 டாலர் கேள்வி. வெற்றி நிச்சயமில்லாத நிலையில் தன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வைக்கோ போட்டியிடுவாரா என்பதுதான்.

அன்புடன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
abjabin@gmail.com

No comments: