வல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்
Friday, April 11, 2008
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'மௌனம்' எனும் தலைப்பில் கவிதை நிகழ்வு
துபாயில் வானலை வளர்தமிழ் அமைப்பின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் 'மௌனம்' எனும் தலைப்பில் கவிதை நிகழ்வு
துபாயில் வானலை வளர்தமிழ் எனும் இலக்கிய அமைப்பின் சார்பில் மாதந்தோறும் ஒருமுறை வெள்ளியன்று காலை கவிதை நிகழ்வு ஏதேனும் ஒரு தலைப்பில் கராமா சிவ் ஸ்டார் பவன் உணவக அரங்கில் நடைபெற்று வருகிறது.
வானலை வளர்தமிழ் அமைப்பின் மூன்றாவது ஆண்டு துவக்க விழா 11.04.2008 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இவ்விழாவில் இம்மாத தலைப்பாக ‘மௌனம்' எனும் தலைப்பில் நடைபெற்றது. கவிதை நிகழ்வு என்றோடல்லாமல் அதனை தொகுத்து நூலாக மாதந்தோறும் வெளியிட்டு வருவது அதன் தனிச் சிறப்பு. காவிரி மைந்தன் நிகழ்வினை துவக்கி வைத்துப் பேசினார்.
மௌனம் எனும் கவிதை வாசிப்பதற்கு நடுவர்களாக அதிரை இளைய சாகுல், ஜெயராமன் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். மௌனம் எனும் தலைப்பில் கந்தநாதன், சந்திரசேகர், வெற்றிவேல் செழியன், ஜியாவுதீன், காவிரி மைந்தன், சிம்மபாரதி, சுரேஷ், சஞ்சீவி, தங்கராசா, கீழை ராஜா,வடிவுக்கரசன், நிலாவண்ணன், மலைவேல், தமிழ்ச்செல்வன், இளைய சாகுல், முத்துப்பேடடை ஷர்புதீன் உள்ளிட்டோர் கவிதை வாசித்தனர். ஈமான் அமைப்பின் ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அழுகின்ற போதும் ஆனந்தம் அடைகின்றபோதும்
மௌனம் மட்டுமே உயர்ந்து நிற்கும் என்றார் காவிரி மைந்தன்.
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கவிதை வாசிக்கு நிலாவண்ணன் ( காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி )
அதனைத் தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகை புரிந்துள்ள இலக்கியச் செல்வர் கவிநேசன் டி.எம்.எம். தாஜுத்தீன் அவர்கள் எழுதி நாகூர் இ.எம். ஹனீபா அவர்கள் பாடிய சிடி விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நிலாவண்ணன் பெற்றுக்கொண்டார். அதிலிருந்து ஒரு பாடலை அடமங்குடி அப்துல் ரஹ்மான் பாடினார். அப்பாடல் வருமாறு :
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை இன்னும்
இனி கேட்பதற்கே அஞ்சுதே என் உள்ளம்
எனும் பாடல் வரிகளை உணர்வுப் பூர்வமாகப் பாடியது அனைவரது சிந்தனையையும் கிளறும் விதமாக அமைந்திருந்தது.
எண்ணம் விரிவாக இருப்பின் வாழ்வு விரிவாக இருக்கும் - கவிஞர் தாஜுத்தீன்
மௌனம் எனும் சிறப்புக் கவிதைச் சிறப்பிதழை கவிஞர் தாஜுத்தீன் வெளியிட முதல் பிரதியை முதுவை ஹிதாயத் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய கவிஞர் தாஜுத்தீன் கவி என்பது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுவது என்றார். எண்ணம் விரிவாக இருப்பின் வாழ்வும் விரிவாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு என்றார். உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்கள் வாழ்வின் உச்சாணிக் கொம்புக்கே சென்ற நிகழ்வுகளை ஆப்ரஹாம் லிங்கன், கென்னடி, லெனின் உள்ளிட்டோரின் வாழ்வினை மேற்கோள்காட்டி குறிப்பிட்டார்.அமெரிக்க அதிபராக இருந்த கென்னடி அவர்கள் ஒருமுறை பள்ளியொன்றிற்கு சென்றபோது மாணவர்களைப் பார்த்து அவர்கள் பிற்காலத்தில் என்னவாக வரவிரும்புகின்றனர் எனக் கேட்டறிந்தார். ஒரு மாணவர் மட்டும் தான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வர விரும்புவதாகக் குறிப்பிட்டார். அவர் தான் கிளிண்டன். வாழ்வின் உயர்நிலையினை அடைய அடித்தளம் அழகுர அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மௌனம் குறித்து சிறப்பான முறையில் கவிதை வாசித்த அனைவரையும் பாராட்டினார் கவிஞர் தாஜுத்தீன், இதுபோன்ற இலக்கிய சங்கமமத்திற்கு ஆதரவு நல்கி வரும் சிவ் ஸ்டார் கோவிந்தராஜுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
கவிஞரை வானலை வளர்தமிழ் நிர்வாகிகள் சந்திரசேகரன் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து டாக்டர் பார்த்தசாரதி, அஷ்ரப் அலி உள்ளிட்டோரும் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியினை காவிரி மைந்தன் ஒருங்கிணைத்தார்.
வானலை வளர்தமிழ் அமைப்பினை தொடர்பு கொள்ள : காவிரி மைந்தன் 050 251 96 93 / kavirimaindhan@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment