இந்திய நாட்டின் சுதந்திரம் இறையாண்மை ஒற்றுமை ஒருமைப்பாடு மற்றும் கண்ணியம் ஆகியவற்றை நிலைநிறுத்திப் பாதுகாப்பது...
தேச மக்களின் வலிமைக்கும் வளத்துக்கும் மகிழ்வுக்கும் பங்களிப்பாற்றி பாடுபடுவது...
இந்திய கூட்டமைப்பில் வாழும் சமுதாயத்தில் சமயசார்பற்ற சமத்துவ ஜனநாயக அடித்தளங்களை வலுப்படுத்துவது...
தேசிய வாழ்வியலில் முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிற சமுதாயங்களுக்கும் இடையில் நல்லுறவு நேயம் நட்புறவு கருத்திணக்கம் ஒற்றுமை ஆகியவற்றை ஓங்கச் செய்வதற்கு முனைந்து செயலாற்றுவது...
சிறுபான்மையினர் ஷெட்ய+ல்டு வகுப்பினர் பழங்குடியினர் மற்றும் நலிந்த பிரிவினர் அனைவருடைய அரசியல் சட்ட ரீதியான உரிமைகளுக்கும்
நலன்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து அவர்களின் மொழி கல்வி சமூகப் பொருளாதார அரசியல் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவது...
மாநில அரசினுடையவும் உள்ளாட்சி அமைப்புகளினுடையவுமான அதிகாரங்களை அதிகரிக்கப் பாடுபடுவது...
குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினரின் சமய கலாச்சார தனித்தன்மையை பேணிப் பாதுகாத்து மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் சமாதானம் சுமூகம் கூட்டுறவு முன்னேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் நவயுக சமுதாயம் உருவாக்கப் பாடுபடுவது...
http://www.muslimleaguetn.com/aims.asp
No comments:
Post a Comment