Friday, May 9, 2008

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் - ஒரு பார்வை

பிளஸ் 2: திருச்செங்கோடு மாணவி, செங்கை மாணவர் முதலிடம்

"பிளஸ் 2' தேர்வில் முதலிடத்தை இருவர் வகிக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்யா விகாஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். தரணி 1200-க்கு 1182 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். அதே மதிப்பெண் பெற்று செங்கல்பட்டு செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.ராஜேஷ் குமாரும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இருவரும் தமிழை மொழிப் பாடமாக எடுத்து பிளஸ் 2 படித்தவர்கள்.

ஈரோடு கே.கே.என். அரசு மேல்நிலைப் பள்ளி ஏ.ரம்யா, நாமக்கல் வரகராம்பட்டி வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் தளபதி குமார் விக்ரம் ஆகியோர் 1181 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர்.

1180 மதிப்பெண் பெற்ற நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.தீபா மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.

மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும், மாணவர்களில் 81.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிற மொழி பயின்று ரேங்க் பெற்றவர்கள்: தமிழ் அல்லாமல் பிற மொழிப் பாடங்களை எடுத்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் மொழியைப் படித்த அண்ணா நகர் அண்ணா ஆதர்ஷ் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆஷா கணேசன் 1191 மதிப்பெண் பெற்றுள்ளார். அவரை அடுத்து, சம்ஸ்கிருதம் எடுத்த ஆதம்பாக்கம் எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ். முரளிகிருஷ்ணன் 1188 மதிப்பெண் பெற்றுள்ளார்.

அதேபோல் சம்ஸ்கிருதம் படித்த கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர் ஹரீஷ் ஸ்ரீராம் 1187 மதிப்பெண் பெற்றுள்ளார்.

எனினும், தமிழைப் பாடமாக எடுத்தவர்களில் முதல் ரேங்க் பெற்றவர்களே முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்படுவது வழக்கம் என்பதால், தரணி, ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

"பிளஸ் 2' தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.

இத்தேர்வை 5,87,994 பேர் எழுதினர். அதில், 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.4 சதவீதம் ஆகும்.

கடந்த ஆண்டு 5,55,965 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 81 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

வழக்கம்போல், மாணவர்களை விட மாணவிகளே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 4,96,494 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அதில் 2,26,733 பேர் மாணவர்கள். 2,69,761 பேர் மாணவிகள். மாணவர்களின் 81.3 சதவீதம் பேரும் மாணவிகளில் 87.3 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு மொத்த மதிப்பெண் 60 சதவீதத்துக்கு மேல் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு 3,29,091 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு 3,60,722 பேர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20080509090251&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0&dName=No+Title&Dist=

பிளஸ் டூ: மாணவிகள் 87%- மாணவர்கள் 81% தேர்ச்சி

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாயின. இதில் 84.4 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மாணவிகள் 87.3 சதவீதமும் மாணவர்கள் 81.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தேர்வு முடிவுகளைக் காண:

http://results1.oneindia.in/
http://thatstamil.oneindia.in/
http://www.thatstamil.in/
http://www.tnresults.nic.in/
http://www.tngde.in/

இந்த ஆண்டு மொத்தம் 641230 மாணவ-மாணவிகள் தேர்வெழுதினர். இதில் பள்ளிகள் மூலம் எழுதியவர்கள் 587994 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.

தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு:

இவர்களில் மொத்தம் 84.4 சதவீதம் பேர் வெற்றியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 81 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

மொத்தம் 360722 மாணவர்கள் 60 சதவீதத்துக்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பாடவாரியாக 200க்கு 200 பெற்றவர்கள்:

இயற்பியல்- 282 பேர்
வேதியியல்- 306 பேர்
உயிரியல்- 153 பேர்
தாவரவியல்- 19 பேர்
விலங்கியல்- ஒருவர் மட்டும்
கணிதம்- 3852 பேர்
கம்ப்யூட்டர் சயின்ஸ்- 60 பேர்
காமர்ஸ்- 148 பேர்
அக்கெளண்டன்சி- 739
பிஸினஸ் அனாலிடிக்ஸ்- 291 பேர்.


http://thatstamil.oneindia.in/news/2008/05/09/tn-plus-two-results-today.html

புதுவையிலும் மாணவிகள் முதலிடம்: தேர்ச்சி விகிதம் 4% சரிவு

புதுச்சேரியிலும் இன்று பிளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாயின. அங்கு தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் குறைந்துள்ளது. வழக்கம் போல மாணவிகளே முதலிடம் பிடித்துள்ளனர்.

புதுவை கல்வி அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மொத்தம் 10,922 பேர் பிளஸ்டூ தேர்வை எழுதினர். இதில் 9,369 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 76.63 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட சுமார் 4 சதவீதம் குறைவாகும்.

வழக்கம்போல இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர்.

பெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தை பிடித்தார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப்-1,178, பாலாஜி-1,174 மதிப்பெண்கள் எடுத்து 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்துள்ளனர்.

நகர்ப் பகுதியில் 100 சதவீதமும், கிராமப்புறங்களில் 90 சதவீதமும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும். 11 தனியார் பள்ளிகளும், 11 அரசு பள்ளிகளும் இந்த பரிசை தட்டிச் செல்கின்றன என்றார்.

தட்ஸ்தமிழ்.காம்

மொழிவாரியாக முதல் மூன்று இடம் பிடித்தவர்கள்

* தமிழ்:

ஏ. நிஷாந்தினி (198), எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்.

பி. மோகனப்ரியா (197), சேரன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கரூர்.

ஜெ. சரவணப்ரியா (197), ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருநின்றவூர், திருவள்ளூர்.

* அரபி:

கே.எஸ். சஹீனா நிமத் (194), யூ.எச்.ஓ. அரபி மேல்நிலைப் பள்ளி, பள்ளப்பட்டி, கரூர்.

ஏ. ஆமினா பேகம் (193), முர்துஸôவியா ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, சென்னை.

ஏ. முகம்மது உமர் (192), ஆனைகார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.


* பிரெஞ்சு:

ஆஷா கணேசன் (198), அண்ணா ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகர், சென்னை.

எஸ். சினேகா (198), சிருஷ்டி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்.

ஷிவானி எஸ். ஷெட்டி (198), கோல்டன் கேட்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சேலம்.

* ஹிந்தி:

எஸ். அம்ரீன் பேகம் (198), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.

ஆர். விகாஷ் பெடலா (197), அகர்வால் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி, சென்னை.

சித்தார்த் சதுர்வேதி (197), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, நங்கநல்லூர், செங்கல்பட்டு.

* கன்னடம்:

கே. அஞ்சலி (188), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.

எஸ். ரேகா (187), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.

எம். சசிரேகா (182), அரசு மேல்நிலைப் பள்ளி, பனகஹள்ளி.

* மலையாளம்:

எஸ். சுஜா (195), செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளி, கே.கே. புதூர், கோவை.

லிஜி ஜேக்கப் (194), யட்டகோடு மேல்நிலைப் பள்ளி, வீயனூர், தக்கலை.

பி. ரமிஷா (194), சி.எம்.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை.

* தெலுங்கு:

வி. வினோத்குமார் (185), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.

எம். முனிராஜு (184), அரசு மேல்நிலைப் பள்ளி, பாகலூர், ஓசூர்.

பி.எஸ். பவ்யா (182), ஸ்ரீ விஜய் வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.

* சம்ஸ்கிருதம்:

எஸ். முரளிகிருஷ்ணன் (198), எஸ்.டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, ஆதம்பாக்கம்.

ஹரிஷ் ஸ்ரீராம் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.

பி. அக்தா ஜெயின் (198), பி.வி.பி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திண்டல், ஈரோடு.

எம். அவிநாஷ் (198), டி.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.

பிஎல். வித்யா (198), டி.ஏ.டி. மேல்நிலைப் பள்ளி, கோபாலபுரம், சென்னை.

* உருது:

கே. முகம்மது வாசிம் (197), இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வாணியம்பாடி, திருப்பத்தூர்.

எஸ். ஃபசீகர் ரஹ்மான் (196), இஸ்லாமிய மேல்நிலைப் பள்ளி, பேரணாம்பட்டு, திருப்பத்தூர்.

ஏ. அஸ்மா பானு (192), இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேல்விஷாரம், வேலூர்.


* ஆங்கிலம்:

பி. காயத்ரி (195), பரணி பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, கரூர்.

எஸ். லட்சுமி பவானி (194), பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம்.

எம். விவேக் சித்தார்த்தன் (194), எஸ்.சி.ஐ. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் மவுண்ட்.

தினமணி.காம்

No comments: