Friday, May 30, 2008

முஸ்லிம்களெல்லாம் வன்முறையாளர்களா?

முஸ்லிம்களெல்லாம் வன்முறையாளர்களா?

முஸ்லிம் மன்னர்கள் எல்லா மன்னர்களைப் போலவும் போரிட்டனர். கொள்ளையடித்தனர். அவை மன்னர்களின் படைகளின் பொதுவான செயல்பாடு.

மன்னர்களுக்கு நாடும், செல்வமும், பெருமையும் குறியே தவிர, மக்களின் தனிப்பட்ட நம்பிக்கைகள், பண்பாடுகள், மதம் ஆகியவை பற்றி பெரிதும் கவலைப்பட்டதில்லை. இஸ்லாமியரை எதிர்த்துப் போரிட்ட சிவாஜியின் நன்றியுள்ள தளபதி இந்து.

அக்பரின் தளபதிகளும், அமைச்சர்களும் இந்துக்கள். ஒளரங்கசீப் எதிர்மறையாக அறியப்பட்ட அளவுக்கு, உபநிஷத்தை பாரசீகத்தில் மொழிபெயர்த்த அவரது சகோதரர் தாரா அறியப்படவில்லை.

தவறாக இஸ்லாமியர்களாலும் புரிந்து கொள்ளப்படும் இந்த ஜிகாத் என்ற வார்த்தையின் உண்மைப் பொருள், ‘மனிதன் தன் உள்மனதுடன் நடத்தி வெல்லும் போரே’ என்கிறது திருக்குரான்.

1901ல் மெக் கென்லி துவங்கி ஜான் எப் கென்னடி வரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவரையும் கொன்றது இஸ்லாமியர் அல்ல. ஆஸ்திரியாவின் ஆர்ச் ட்யூக் பெர்ட்டினான்ட் படுகொலை ஐரோப்பாவையே உலுக்கியது அது முஸ்லிம்களின் செயலல்ல.

இந்திய விடுதலைக்குப்பின் ‘அப்துல்லா’ என்று பச்சை குத்திக்கொண்டு மகாத்மாவைக் கொன்ற மதவெறியன் முஸ்லீம் அல்ல. இந்தியாவின் நூற்றாண்டுப் பகைமைக்கு வித்திட்ட பாபர் மசூதி இடிப்பும், குஜராத் படுகொலையும் இஸ்லாம் வன்முறைக்கு முன்னோடிகள் அல்ல. ராஜீவ் காந்தியையும், இந்திராகாந்தியையும் கொன்றது இஸ்லாமியத் தீவிரவாதிகள் அல்ல.

காஷ்மீர், கலவரங்களுக்கு, பாகிஸ்தான் தூண்டுதலும், இஸ்லாமியரும் காரணம். ஆனால் காலிஸ்தான் வன்முறை, அஸ்ஸாம், திரிபுரா, மிசோராம், நாகலாந்து, தெலுங்கானா என எங்கும் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு முஸ்லிம்களை காரணம் காட்டமுடியாது.

ஹிரோஷிமா, நாகசாகி, ‘நேபாம்’, பயலாஜிகல் ஆயுதம் என அழிவு விஞ்ஞானத்தை உலகின் ஒவ்வொரு நாட்டின் மீதும் பயன்படுத்தி அறிவியல் வளர்ப்பவர்கள் இஸ்லாமியர் அல்ல.

அமெரிக்காவில் 3 கோடி செவ்விந்தியரை, ஆஸ்திரேலியாவில் 4 கோடிப் பழங்குடியினரைக் கொன்றதும், இரண்டரை கோடி ஆப்பிரிக்கர்களை அடிமைகளாகக் கடத்தியதும், தென்னாப்ரிக்க இனவெறியை ஆசீர்வாதம் செய்ததும் எந்த இஸ்லாமிய வன்முறையாளனும் அல்ல.

இந்த மாயையிலிருந்து விடுபடும்போது உண்மையான வன்முறையாளர்கள் யார்? உலகைத் தம் சுயநலத்திற்காக ரணகளமாக்கும் மனிதகுல எதிரிகள் யார் என்பதை உலகம் உணரும்.

எழுதியது ஜிம்ஷா எழுதிய நேரம் 2:50 PM 2 பின்னூட்டங்கள்


asalamone@rediffmail.com

No comments: