Sunday, May 25, 2008

ஆதித்தனார் இலக்கியப் பரிசு

ஆதித்தனார் இலக்கியப் பரிசு

தமிழ் அறிஞருக்கு ரூ. 1.5 லட்சம்
சிறந்த புத்தகத்துக்கு ரூ. 1 லட்சம்

அமரர் சி.பா. ஆதித்தனார் நினைவாக இந்த அண்டும் ரூ. 2.5 லட்சம் இலக்கியப் பரிசு வழங்கப்படுகிறது.

தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சமும், சிறந்த இலக்கியத்துக்கு ரூ. லட்சமும் இந்த பரிசு பிரித்து வழங்கப்படும்.

ஆதித்தனார் நினைவு நாள் வருடந்தோறும் மே 24 ஆம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி ஆண்டுதோறும் இலக்கியப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

சென்ற ஆண்டு டாக்டர் வ.அய். சுப்பிரமணியத்துக்கு மூத்த தமிழ் அறிஞருக்கான ரூ.1.5 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.

காக்கைச் சோறு' என்ற நூலை கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு சிறந்த இலக்கியத்துக்காக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.

ஆதித்தனாரின் பிறந்த நாளான செப்டம்பர் 27 ஆம் தேதி நடக்கும் விழாவில் இவ்வாண்டுக்கான பரிசு வழங்கப்படும்.

கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லா துறைகளையும் சேர்ந்த நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.

கடந்த 3 ஆண்டுகளுக்குள் முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும். 192 பக்கத்துக்கு குறையக்கூடாது. ஆசிரியர் அல்லது பதிப்பாளர் அனுப்பி வைக்கலாம்.

ஜுன் 30 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

அறிஞர் பெருமக்களைக் கொண்ட ஒரு தேர்வு குழு பரிசுக்குரிய தேர்வு நூலை தேர்ந்தெடுக்கும்.

பரிசுக்குரிய மூத்த தமிழ் அறிஞர் பெயரை யார் வேண்டுமானாலும் சிபாரிசு செய்து அனுப்பி வைக்கலாம். அவரது பணிகளையும் எழுதி அனுப்ப வேண்டும்.

மேலும் விபரம் பெற

ஆதித்தனார் இலக்கியப் பரிசு
தினத்தந்தி
சென்னை 600 007
என்ற முகவ்ரிக்கு தொடர்பு கொண்டு பெறலாம்.

விவரம் - விதிகள்

1. அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் இலக்கியப்பரிசுகளை தினத்தந்தி நாளிதழ் வழங்குகிறது.

2. மொத்தப் பரிசுத் தொகை இரண்டரை லட்ச ரூபாய்

3. அத்தொகை தமிழில் வெளிவந்த சிறந்த இலக்கிய நூலுக்கு ஒரு லட்ச ரூபாய் என்றும், வாழ்நாள் முழுவதும் தமிழுக்குத் தொண்டாற்றிய முதிய தமிழ் அறிஞர் ஒருவருக்கு ஒன்றரை இலட்ச ரூபாய் என்றும் பிரித்துக் கொடுக்கப்படும்.

4. ஆதித்தனார் பிறந்த நாளான செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தப் பரிசுகள் வழங்கப்படும்.

5. தேர்வுக்குழுவின் தேர்வே முடிவானது. அது எந்த ஒரு நீதிமன்றத்தின் பரிசீலனைக்கும் உரியது அல்ல.

6. பரிசைப் பகிர்ந்து அளிக்க தேர்வுக்குழுவிற்கு உரிமை உண்டு

7. பரிசுத்திட்டம் பற்றி நேரடித் தொடர்பும், கடிதப் போக்குவரத்தும் வைத்துக் கொள்ளக்கூடாது.

8. விதிகளை மாற்றவோ, புது விதிகளை சேர்க்கவோ தேர்வுக்குழுவுக்கு முழு உரிமை உண்டு.

9. ஜுன் 30 ஆம் தேதிக்குள் ஆதித்தனார் இலக்கியப் பரிசு, தினத்தந்தி, சென்னை 600 007 என்ற முகவரிக்கு நூல்கள் / தமிழறிஞர் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

நூல்கள்

10. கதை, கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லாத்துறை நூல்களையும் பரிசுக்கு அனுப்பி வைக்கலாம்.

11. ஒருவர் எத்தனை நூல்கள் ( தலைப்புகள் ) வேண்டுமானாலும் அனுப்பலாம்.

12. அச்சேறிய நூல்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஒவ்வொரு நூலிலும் 6 பிரதிகள் அனுப்ப வேண்டும். எந்தத் துறையைச் சேர்ந்த நூல் என்பதை ஒவ்வொரு பிரதியிலும் குறிப்பிட வேண்டும்.

13. பரிசுக்குரிய ஆண்டுக்கு முன்னதாக 3 ஆண்டுக்குள் ( 2005,2006,2007 ) முதல் பதிப்பாக வெளிவந்த நூலாக இருக்க வேண்டும்.

14. எழுதிய ஆசிரியர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆசிரியர் அல்லது பதிப்பாளர் நூல்களை அனுப்பலாம்.

15. நூல் 192 பக்கத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். ( கவிதை என்றால் 160 பக்கத்துக்குக் குறையக்கூடாது ) சொந்தமாக எழுதப்பட்டிருக்க வேண்டும். தழுவலாகவோ, மொழி பெயர்ப்பாகவோ இருக்கக்கூடாது.

16. ஆசிரியரின் சொந்த முயற்சியால் எழுதப்பட்ட நூல் என்ற உறுதிமொழியுடனும், ஆசிரியரின் கையொப்பத்துடனும் நூலை அனுப்ப வேண்டும்.

17. பிரதிகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது.

18. ஒருமுறை பரிசீலனைக்கு அனுப்பிய நூல்களை மறு ஆண்டும் அனுப்பலாம்.

19. ஒருமுறை பரிசு பெற்றவருக்கு மீண்டும் பரிசு வழங்கப்படமாட்டாது.

தமிழறிஞர்கள்

20. தமிழ்த் தொண்டாற்றி வரும் முதுபெரும் தமிழறிஞர் பெயர்களை எவரும் பரிந்துரை செய்யலாம். அவர்கள் ஆற்றிய பணிகளையும் சுருக்கமாக எழுதி அனுப்ப வேண்டும். பிறந்த நாள் அல்லது வயது குறிப்பிட வேண்டும்.

21. அறிஞர் பெருமக்கள் தாங்களும் விண்ணப்பிக்கலாம். தங்கள் பணிகள் பற்றிய விவரங்களைத் தகுந்த சான்றுகளுடன் அனுப்ப வேண்டும்.

22. பெயர்களைப் பரிசீலனை செய்து, பரிசுக்குரிய ஒரு அறிஞரைத் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.

No comments: