Tuesday, June 10, 2008

தமிழ் பயிற்றுவிக்க மலையாள ஆசிரியர்கள்

பொதுவாக படுக்க போகும் முன் மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளை
பார்த்துவிட்டு போவது வழக்கம் என்று சொன்னால் அதுபொய். எப்போதாவது
பார்ப்பேன்.அப்படி நேற்றைய செய்தி பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு
அதிர்ச்சியான செய்தியை கேட்க நேர்ந்தது.

நீலகிரி மாவட்டம் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற பள்ளிகளில் ஆரம்ப
பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாக மலையாள ஆசிரியப் பெருமக்களை பணிக்கு
அமர்த்தி இருக்கிறார்களாம். தமிழ் எடுக்க தமிழ்நாட்டில் அதுவும் அஸ்திவாரம்
போடக்கூடிய ஆரம்ப பள்ளிகளில் தாய்மொழிக்கல்வி மலையாள ஆசிரியரைக்
கொண்டு... எங்கு போய்க் கொண்டிருக்கிறது தமிழகம்..?

குறிப்பாய் இரண்டு மழலையரை பேட்டிக் கண்டிருந்தனர் அந்த செய்தியிடையே..
அவர்கள் சொன்னதிலிருந்து ஒன்று புரிந்தது. தமிழ் கற்றுக் கொடுக்க அந்த ஆசிரியர்
முயன்றாலும் ( அது சுத்தமாகப் புரியவில்லை என்கின்றனர் குழந்தைகள்..) தொடர்பு
மொழி எல்லாம் மலையாளத்தில் தானாம்..

நானே கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன்

வாத்தியார் : எங்கே பற.. அ...ம்..மா அம்மே.. பறடா
==

இந்தோ இது பேர் என்ன..?

முந்திரிப்பருப்பு...

அதில்லடா அண்டிப் பருப்பாக்கும் (முந்திரிப்பருப்பு மலையாளத்தில் இப்படி அழைக்கப்படுகிறது)

அப்ப இது (திராட்சையைக் காட்டி..)

அது முந்திரியாக்கும்.

===

இன்னும் என்னவெல்லாம் என்று யோசித்துப் பார்க்க கொஞ்சம் திகிலாக இருந்தது.
நீலகிரி தமிழகத்தில் தானே இருக்கிறது. 23 மலையாள ஆசிரியர்கள் தமிழ்ச் சொல்லித்தர
நியமிக்கப்பட்டுள்ளதாய் வேறு உப செய்தி கேள்விப்பட்டேன்.. (என்ன கொடுமை ஸார் இது)

==
கவிக்கோஅப்துல் ரஹ்மானின் ஒரு கவிதை நினைவாடலில்

முத்தமிழிடம்
அதன் முகவரி
எதுவென்று விசாரித்தேன்
மேற்பார்வை
மு.கருணாநிதி என்றது...

மேற்பார்வைக்கு எட்டாமலா இருந்திருக்கும்..?



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.
__._,_.___

No comments: