Monday, July 7, 2008

உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்

உணர்வுகளைத் தூண்டி சிறைக்கனுப்பும் இயக்கமல்ல முஸ்லிம் லீக்! பேராசிரியர்



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்தின் சொத்து! ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்கு அழைக்கிறோம். இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிரவாதத்திற்கு இடமும் இல்லை@ உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு சிறைச்சாலைக்கு அனுப்பும் செயலும் இல்லை@ நாம் நாமாக இருப்போம். நம் கலாச்சார தனித்தன்மையைப் பாதுகாப்போம் என தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற கட்சிகளிலிருந்து, விலகி தாய்ச்சபையாம் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் ஏராளமானோர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி மாநில முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸில் - பரக்கத் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றபோது அவர்களை வரவேற்று பேசுகையில் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் சதுரங்கபட்டினம், மெய்யூர் புதுப்பட்டினம், கூவத்தூர், அடையாளச்சேரி, கருமாரப்பாக்கம், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்தவர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் செயலாளர் எஸ்.ஜாகீர், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் எம்.எச்.நியமத்துல்லாஹ் ஆகியோர் தலைமையில் கிளைகளின் நிர்வாகிகளை எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில், ஏ.ரஷீத் பாஷா, எம்.அமீர், ஜே.முஹம்மது கபீர், ஏ.சலீம், எம்.முஹம்மது இல்யாஸ், பி.முஹம்மது அலி, கே.அப்துல் ரஹ்மான் என்ற பாரூக், பி.இம்ரான், பி.ஆரிப், கே.நிஸார் அஹமது, ஜே.உசேன், ஜே.காதர் பாஷா, பிலால், எஸ்.சுலைமான், பஷீர், கபீரான், பாஷா, சபீர், சவுகர், சாகுல் ஹமீது, ஹயாத், அஸ்மத், அல்தாப் உள்ளிட்ட ஏராளமானோர் முஸ்லிம் லீகில் இணைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளர் கே.எஸ்.தாவூது இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

முஸ்லிம் லீகில் இணைந்தவர்களை வரவேற்று தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி. பேசியதாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தம்பிகள் ஜாஹீர், நியமதுல்லா உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் இணைகின்ற இந்த நிகழ்ச்சியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டிருக்கிறேன்.

இது தாய் வீடு. இங்கு வருகின்றவர்களை அரவணைத்து ஆதரிப்பது என் கடமை. இங்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். இந்த வரவேற்பு சடங்குக்காக அல்ல. ஒரு வரலாற்றுப் பேரியக்கத்தில் இணைந்து சேவையாற்ற வந்துள்ளவர்களை வாழ்த்துவது சம்பிரதாயத்திற்காகவும் அல்ல.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாய பேரியக்கம். இதில் ஊழியர்களாக இருந்து சமுதாய சேவை செய்வதே ஒரு பெருமை.

ஒரு காலத்தில் அகில இந்திய முஸ்லிம் லீகாக இருந்தது. 1948இல் காயிதெ மில்லத் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீகாக உருவாக்கித் தரப்பட்டது. இன்று 18 மாநிலங்களில் செயல்படுகிறது. சில மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில இடங்களில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர்.

இது தமிழ்நாட்டு இயக்கம் அல்ல. தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் பெயரை இணைத்து பல பேர் பல இயக்கங்களை வைத்துள்ளனர். அவைகள் பெயரளவில் உள்ளன. தி.மு.க. பெயரை பயன்படுத்தி பல இயக்கங்கள் உள்ளன. சட்டத்தால் அதை தடுக்க முடியவில்லை.

பெயரை ஒட்டு போட்டதுபோல் கொடியையும் ஒட்டு போட்டு பயன்படுத்துகின்றனர். நட்சத்திரம் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக்கொடி பிரபலமானது. அது வரலாற்று பெருமைமிக்கது. அந்த கொடியையும் விட்டு வைக்கவில்லை.

முஸ்லிம்களில் பல இயக்கங்களாக இருக்கும் இயக்கங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து செயல்பட வைக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் 56 இயக்கங்கள் இருந்தன. அவைகள் எல்லாம் அழைத்துப் பேசப்பட்டன., அந்த கூட்டத்தில் பங்கேற்ற நான் கூறினேன்: இந்திய யூனியன் முஸ்லிம் லீகை நான் உருவாக்கவில்லை@ எனக்கு முன்பே உருவாக்கப்பட்ட இயக்கம் அது. எனக்கு முன்பிருந்தவர்கள் உருவாக்கிய அமைப்பிற்கு இப்போது நான் தலைவர். எனக்கு முன்பே பலர் தலைவர்களாக இருந்துள்ளனர். எனக்குப்பின் இன்னொருவர் தலைவராக வருவார். ஆனால் மற்ற இயக்கங்கள் அப்படி அல்ல. அவைகள் முன்பு உருவாகி இருந்திருக்கவில்லை.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை தவிர, வேறு எந்த முஸ்லிம் இயக்கத்திற்கும் கடந்த கால வரலாறு இல்லை. முஸ்லிம் லீகை விட சிறந்த ஒன்றை வேறு யாராலும் உருவாக்கித் தர இயலாது. நாங்கள் செய்வதை சொல்வதில்லை. எங்களை விட வேறு யாரும் எதுவும் செய்து விட முடியாது. ஆகவேதான் எல்லோரையும் இந்த இயக்கத்திற்காக அழைக்கிறோம்.

இந்த இயக்கத்திற்காக தலைமைப் பொறுப்பேற்றவர்கள் அந்த பதவியை அலங்கரித்துள்ளனர்., தாய்ச்சபையின் தலைவராக, பனாத்வாலா அவர்கள் இருந்தார்கள். உலகின் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என பிரிட்டிஷ் நாடாளுமன்றமே அவரைப் பாராட்டி கவுரவித்தது. இப்படிப்பட்ட இயக்கத்தில் இணைந்து சமுதாயத்தை பாதுகாக்க பொறுப்பேற்க முன்வர வேண்டும்.

ஏனெனில் நேற்று போல் இன்று இல்லை@ இன்று சூழ்நிலை நன்றாக இல்லை@ என்றைக்கும் ஏதாவது பிரச்சினை வராதா என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

கஷ்மீர் - அமர்நாத் கோவில் நில விவகாரத்தை காரணமாக வைத்து இன்று இந்தியா முழுவதும் பிரச்சினையாக்குகின்றனர். கஷ்மீரில் ஏதாவது நடந்தால் மதவெறியை தூண்டிவிட்டு இந்தியா முழுவதும், முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட தயாராக உள்ளனர்.

இந்த நேரத்தில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஒற்றுமையாக ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டு நடந்து கொள்ளவேண்டும். நாம் அனைவரிடமும் சமமாக பழக வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் தொடர்பு வைக்காதே என்று சொல்பவர்களை புறக்கணிக்க வேண்டும்.

நாம் யாருடனும் சண்டை போட வேண்டாம். தெய்வங்களாக நினைத்து வழிபடுகின்ற எதையும் திட்ட வேண்டாம். அவர்களின் தெய்வங்களை திட்டினால் அவர்கள் நமது இறைவனை திட்டுவார்கள். இதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும் இல்லை@ இங்கே தீவிர வாதத்திற்கு இடமும் இல்லை@ நாம் நாமாக இருப்போம்@ நம் கலாச்சார தனித்தன்மையை பாதுகாப்போம். உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் இருப்பதாக இங்கே காயல் மஹப+ப் குறிப்பிட்டார். அந்த நிலை இனி தொடரக்கூடாது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளராக இருக்கும் கே.எஸ்.தாவூது இன்று சிறப்பாக செயல்படுகிறார். முஸ்லிம் லீகே இல்லாமல் இருந்த இடங்களில் முஸ்லிம் லீகை உருவாக்கி வருகிறார்.

அவருடைய முயற்சியில் இன்று நீங்கள் எல்லாம் தாய்ச்சபையில் இணைகின்றீர்கள். உங்களுக்கு உரிய பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளுக்கு தகுதியானவர்களாக உங்கள் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

முஸ்லிம் லீக் வளர்ந்தால் சமுதாயம் வளரும்@ முஸ்லிம் லீக் சிறந்தால் சமுதாயம் சிறக்கும்@ முஸ்லிம் லீக் உயர்ந்தால் சமுதாயம் உயரும்.

-இவ்வாறு தலைவர் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் எம்.பி. பேசினார்.

நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.ஏ.செய்யது அஹமது, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹபூப், மாநில தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியை முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் எஸ்.பி.இஸ்மாயில், வட சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தென் சென்னை மாவட்டச் செயலாளர் கே.பி.இஸ்மத் பாட்சா, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.முஹம்மது ய+னுஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.எம்.யஹ்யா சித்தீக், பனையூர் கிளை தலைவர் ஏ.அப்துல் காதர், செயலாளர் ஏ.ஜே.உசேன் ஆகியோர் பங்கேற்றனர்.

http://www.muslimleaguetn.com/news.asp?id=86

No comments: