முஸ்லிம் எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு ஆதரவு
புதுடெல்லி, ஜுலை. 17-
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை இந்திய முஸ்லிம்கள் பெரும் பாலானவர்கள் எதிர்க்கிறார்கள்.
இது பாராளுமன்றத்தில் வரும் 22-ந் தேதி நடக்க உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிரொலிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பாராளுமன்றத்தில் மொத் தம் உள்ள 543 எம்.பி.க்களில் 37 எம்.பி.க்கள் முஸ்லிம்கள். இதில் 26 எம்.பி.க்கள் காங் கிரஸ் கூட்டணிக் கட்சி களைச் சேர்ந்தவர்கள்.
மீதமுள்ள 11 எம்.பி.க் களும், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் மற்றும் மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிரணியைச் சேர்ந்தவர்கள். இந்த 11 எம்.பி.க்களும் மத்திய அரசை எதிர்த்து ஓட்டுப் போடுவது உறுதி.
காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 26 முஸ்லிம் எம்.பி.க் களும் மத்திய அரசுக்கு ஆதர வாக இருப்பார்களா என்ப தில் தொடக்கத்தில் சந்தேகம் நிலவியது. தற்போது இந்த 26 எம்.பி.க்களும் தங்கள் கட்சி கொறடா உத்தரவை ஏற்று மத்திய அரசை ஆதரித்து ஓட்டுப் போடுவார்கள் என்று தெரியவந்துள்ளது.
முஸ்லிம் லீக் மற்றும் காஷ்மீர் முஸ்லிம் கட்சி கள் மத்திய அரசுக்கு ஆத ரவு கொடுப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment